Saturday, 2 April 2011

கத்தியைத் தொடாம‌ல் இறைச்சிக் கடை

2010-05-23

இவ‌ர் எதிரி, சுவர் தூரோகி. தரை, கூரை...?

பாம்பின் கால் பாம்பறியும். நாம் எப்படி இருக்கிறோமோ அப்படி மற்றவரைப் பார்க்கிறோம். அப்படித் தான் பார்க்க முடியும்.

இல்லை இல்லை இது திருடனுக்கும் போலீசுக்கும் உள்ள ஒரே திறமை போன்றது. திறமை எதற்குப் பயன்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்று சொல்லலாம். ஒரே கத்தி குத்திக் கொலை செய்யவும் அறுத்து அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றவும் பயன்படலாம். அப்படித் தான் முன்பும் நினைத்தோம் என்றால் நாம் வளரவில்லை என்று காட்டுகிறது. முன்பு அப்படி நினைக்காமல் ஏமாந்தோம் என்றால் இப்போது ஏமாறாமல் இருக்க என்ன செய்கிறோம் என்று யோசிக்க வேண்டும்.

நான் இறைச்சிக் கடைத் திறந்து விட்டு கத்தியைத் தொட மாட்டேன், உயிர்க் கொலை செய்ய மாட்டேன் என்றால் கடை எத்தனை நாள் இருக்கும் அல்லது என் உறுதி எத்தனை நாள் இருக்கும்?

தேர்தலில் நிற்கப் போகிறோம் ஆனால் உண்மையான கட்சியாக (கொள்கைக்காக) இருக்கப் போகிறோம் என்றால் கட்சி எத்தனை நாள் இருக்கும் அல்லது கொள்கைக்காக‌ எத்தனை நாள் இருக்கும்?

(Y)Our behaviour is defined and forced by others behaviours. We cannot escape this. So let us desire different behaviours not different persons because there is none. If certain behaviours are to be avoided, construct a different environment which will bring out desired behaviours. First evolve that structure and behaviour in your immediate environment - family, work-place, friend-circle, organization...

அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் (96)

எது தன்முனைப்பை வளர்க்கிறதோ அது தேய்க்கப் பட வேண்டும்.
எது தன்முனைப்பைத் தேய்க்கிறதோ அது வளர்க்கப் பட வேண்டும்.

தனி மனிதர்களைக் கண்டிப்பதும் போற்றுவதும் அவசியம். ஆனால் தனி மனிதர்களை அளவுக்கு மேல் புகழ்வதும் இகழ்வதும் 'தன் முனைப்பு' பண்பை வளர்க்கும். அதைச் செய்து கொண்டு இன ஒற்றுமை காணப் போகிறேன் என்று நினைத்து கொள்வது 'நீ போனால் சண்டை வந்து விடும். நீ போகாதே. நான் போய் அவனைச் செருப்பால் அடித்து விட்டு வருகிறேன்' என்று ஈ.வெ.ரா. எடுத்துக்காட்டாகச் சொன்னது போல் உள்ளது.

புகழ்ந்ததால் வந்த அதே விளைவு தூரோகி என்று இகழ்வதாலும் வரும். இது எந்த இயக்கம், தலைவருக்கும் பொருந்தும்.

No comments:

Post a Comment