Saturday 2 April 2011

அலகிலா விளையாட்டுடையான்

2010-05-02
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையான் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே (கம்பராமயணம் பாயிரம்)

'அலகிலா விளையாட்டுடையான்' திருவிளையாடலில் எல்லாவற்றிற்கும் இடம் உண்டு.

எந்தவிதக் கருத்துக் கண்ணாடியும் இல்லாமல் பார்த்தால் யாருக்கும் இங்கு எல்லாம் அனுமதிக்கப்படும் உண்மை புரியும். உண்மைக்கும் இடம் உண்டு. பொய்க்கும் இடம் உண்டு. அருங் கருணைக்கும் வாழ்வுண்டு. கடுங் கொடுமைக்கும் பங்குண்டு. மத மூட நம்பிக்கைகளும் பரவும். பகுத்தறியும் அறிவியலும் பெருகும். எரிமலைகளும் வெடிக்கும். மலையும் மருந்தாகும். நிலமும் நடுங்கும். மண்ணும் வளம் சேர்க்கும்.

நன்னம்பிக்கையும் நயவஞ்சகமும் நாள்தோறும் நல்கும். வாழ்வும் சாவும் அறிவும் அறியாமையும் கல்வியும் கல்லாமையும் ஒத்தும் எதிர்த்தும் ஆடியும் அடங்கியும் அனுதினமும் ஆற்றொழுக்காய் நடம் புரியும். அடிமையும் ஆள்வதுவும் அலகிலா விளையாட்டே.

இன எழுச்சி, இனப்படுகொலை, தமிழரா, திராவிடரா தடுமாற்றங்கள்... எல்லாம் இங்கு இலங்க அட்டியில்லை.

எது நடக்கலாம். எது நடக்கக் கூடாது என்பதற்கு எந்த விதக் கட்டுப்பாடும் கிடையாது. அறிவியலின் படி கூட தேவையான கால நீளத்தில் எதுவும் நடக்க வாய்ப்புள்ளது.

நம்முடைய அற்பமான வாழ்நாள் கால அளவில் கூட கனவிலும் காணாத முன்னேற்றங்கள் (வானொலி, தொலைக்காட்சி, பெரும் விமானப் போக்குவரத்து, விண்வெளிப் பயணங்கள், செயற்கைக் கோள்கள், தொலை பேசி, கைத்தொலை பேசி, இணைய தளம், மின்னஞ்சல், விண்வெளிக் கூடம்...மருத்துவ சாதனைகள்...) நடந்துள்ளன. 

அடுத்து ஆற்றல் உற்பத்தியில் பெரும் மாற்றங்கள் வரலாம். இங்கிலாந்தில் வீட்டில் கதிர் மின்சார‌ ஆக்கியைப் (Solar panels) பொருத்தி வீட்டின் தேவைக்கு மேல் உள்ள மின்சாரத்தைத் தேசிய மின்னோட்டத்தில் (National grid) அனுப்பிப் பணம் சம்பாதிப்பது நடைமுறையில் உள்ளது. வரும் ஆண்டுகளில் இது பெரிய அளவு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நுகர்வோர்  செய்யும் உற்பத்திக்குப் பணம் கொடுக்கும் கணினிச் செயலி (computer process) நான் செய்யும் வேலைகளில் ஒன்றாகும்.

அதே போல் உலகமயமாக்கல் கப்பல் விரைவில் தரை தட்டலாம். ஆற்றல் உற்பத்தியில் நிகழப் போகும் விரிவாக்கம் (decentralisation) வாழ்விடங்களிலும் நடக்கலாம். மக்கள் நகரங்களை நோக்கிக் குவிவது பல உடன்பாடு, எதிர்மறைக் காரணங்களால் தடைப் பட்டு பின் செல்லலாம் (reverse). 

தண்ணீர் தட்டுப் பாட்டுக்காகப் பல போர்கள் நிகழலாம். அடுத்த ஐஸ் ஏஜ் (ice age), சூப்பர் எரிமலை வெடிப்பு, பெருஞ் சுனாமி, விண்கல் (asteroid) மோதல் என்பன எல்லாம் நிகழ வேண்டிய நேரத்தில் (overdue) வாழ்கிறோம்.

ஆக்கல், நிலை பெறுத்தல் (காத்தல்), நீக்கல் சுழற்சிக்கு ஆளாகாதது உண்டா?

உண்டு.

அது எது?

அதுவே அறிவுணர்வு. ஆக்கல், காத்தல், அழித்தல் எங்கு நடக்கிறது? அறியாத ஆக்கல், காத்தல், அழித்தல் இருக்க முடியுமா?

நிலையானது எதுவும் இல்லாமல் நிலையாமையை உணர முடியுமா? நிலையாமையை உணர்த்தும் நிலையானது எது?

Which is the reference / datum? As per Einstein there is no special frame of reference. How is that determined? 'Theory of relativity' has to be relative to something. சார்பியல் தத்துவம் எதைச் சார்ந்துள்ளது?

அந்த அறிவுணர்வே நான் / நீ / நாம். இந்த உடல் மனம் மட்டுமே நாம் என்று நம்மைக் குறுக்கிக் கொள்வது நாமே (அதே அறிவுணர்வே). அதனால் அது சரியோ தவறோ அன்று.

"நான் எழுந்தால் சகலமும் எழும்.
நான் அடங்கினால் சகலமும் அடங்கும்" - ரமணர்
(நான் = அறிவுணர்வு)

எங்கள் பள்ளிப் பருவத்தில் வகுப்பில் வருகைப் பதிவு எடுக்கும் முன் ஆசிரியர் சொல்வார்: "இன்று யார் யார் வரவில்லையோ அவர்கள் எல்லாம் கையை உயர்த்துங்கள்". பாதி கேட்டதும் கேட்காததுமாக சிலர் கையை உயர்த்துவார்கள். "ஏ டும்மா (மாடு), வராதவனைத் தானே கையத் தூக்கச் சொன்னேன்" என்பார் ஆசிரியர்.

அது போன்றே (நாம்) அறியாத ஆக்கல், காத்தல், அழித்தல் நடந்தது என்பதும் ஆகும். 

பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருவதான கதையில் நம் உடல் மனம் எல்லாம் மாறிக் கொண்டே இருந்த போதிலும் தொடர்ந்து எது அவற்றை உணர்ந்து வருகிறது? அப்படி எது மாறாமல் இருந்து வருகிறது? எதன் பின்புலத்தில் மாற்றங்கள் உணரப்படுகின்றன? அது நிகழும் யாவற்றையும் விருப்பு வெறுப்பின்றி அறியும் உணர்வே.

அறிவுணர்வு என்பது ஒரு சுட்டுச் சொல் (pointer), கை காட்டி. அது காட்டுவது எங்கிருந்து காட்டப்படுகிறது என்பதை (it points to where from the pointing is done).

கண்ணாடியில் (பிரதிபலிப்பைப்) பார்க்காமல் கண்ணாடியைப் பார்க்க முடியுமா? என்னை (இயற்கை, இறைவன், அறிவுணர்வு...) நான் பார்ப்பது என் பிரதிபலிப்பைப் (பிரபஞ்சத்தைப்) பார்ப்பதாகவே முடியும்.

"The thinking of our mind, specially the intuition, like some of our unique personal experiences continue to be a challenge to modern science. The condition to repeat the experiment under same conditions to get the same result for scientific approval may itself a limitation to science to probe into this area." (S.A.Veerapandian)

நானே எனக்கு அற்புதம்
(நீயே உனக்கு அற்புதம்)
ஊனே உயிரே உற்சவம்

"Intuition & our unique personal experiences may be a kind of medium of interaction with aliens."
(S.A.Veerapandian)

I've seen a few TV documentaries wherein the (non-verbal) communication between owner and animal pets (particularly dogs) showed us the poverty of our (human) verbal communication.

கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல (திருக்குறள்: 1100)

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் (திருக்குறள்: 1106)

The above kuRaL explains how life flourishes by the sense of touch.

Already in one of the previous emails it was pointed out that the famous Hollywood director Steven Spielberg had used music (vibrations) in the film 'The close encounters of the third kind' as the medium of communication between humans and aliens.

A recent documentary about human beings (a couple) living with wild (untamed) wolves (in a zoo in England), showed how the wolves sense the fear of the women and come to her to comfort and give assurance.

We may be rich materially but are living a very poor life in terms of experience. Time to change channel, sorry, direction!

No comments:

Post a Comment