Sunday 3 March 2024

மனதைக் கவனி - இப்படி எளிமையாகவும் புரிந்து கொள்ளலாம் - 2

 03-Mar-2024

மனதைக் கவனி - இப்படி எளிமையாகவும் புரிந்து கொள்ளலாம் - 2

மனம் ஒரு கண்ணாடி

நம்முடைய காலைத் தொடைக்குப் பின்பக்கம் மடிக்க முடிகிறது. ஆனால் காலை முன்பக்கம் மடிக்க முடியமா? முடியாது. தொடை, காலை இணக்கும் முட்டியின் அமைப்பு அப்படிச் செய்ய முடியாத படி அமைந்துள்ளது. இதை நாம் புரிந்து கொள்கிறோம். புத்தகத்தில் படித்து அன்று. நம் உடலைப் பற்றிய நம் சுய அறிவால். அதனால் காலைத் தொடைக்கு முன்பக்கம் மடிக்க முயல்வதில்லை.

இதை நம் மனதிற்கும் பொருத்திப் பார்ப்பதுதான் மெய்யுணர்வு. மனதால் புரிந்து கொள்ளக் கூடியதையும் புரிந்து கொள்ள முடியாததையும் பிரித்து ஆய்ந்து அறிந்து, ஒப்புக் கொண்டு, மனம் தன்னால் இயலாததில் இயலும் என்று மயங்குவதை அடையாளம் கண்டு தவிர்த்துக் கொள்வதே 'மனம் இற்றுப்' போதல். 

மனதை எங்கு பயன்படுத்த வேண்டுமோ, எப்படிப் பயன்படுத்த வேண்டுமோ அப்படி அளவாகப் பயன்படுத்திக் கொள்ளப் பழகுவதுதான் மெய்யுணர்வு. இதை விரிவாகப் பார்க்கும் போது அதில் கடவுள் நம்பிக்கை ஓர் உத்தியாகப் பயன்படலாம். கடவுள் நம்பிக்கை இல்லாமலும் பழகிக் கொள்ள முடியும். அதனால் கடவுள் நம்பிக்கை அவசியமில்லை.

காலைப் பின்பக்கம் மடிக்க எந்த முட்டி இணைப்பு உதவுகிறதோ அதே முட்டி இணைப்புதான் காலை முன்பக்கம் மடிக்க விடாமல் தடுக்கிறது. அதே போல் மேற்கண்டவாறு மனதைப் புரிந்து கொள்வதும் அதைப் பயன்படுத்துவதும் தவிர்ப்பதும் மனமே தான். மனம் அப்படிப் பக்குவப்படுவதை, முதிர்ச்சி அடைவதை நாம் 'தன்னை அறிதல்', 'ஞானம் பிறந்தது', 'மனத்தூய்மை', 'மனத்திட்பம்', 'தவம்' என்று பலவாறு சொல்கிறோம்.

மு.வ. இதையே 'மனம் ஒரு கண்ணாடி. அதில் மாசு படிந்திருந்தால் தன்னையும் தெளிவாகக் காட்டாது, தன்னில் பிரதிபலிப்பவற்றையும் தெளிவாகக் காட்டது' என்று சொல்லியுள்ளார்.

தன்னிலை விளக்கம் - 1

 20-Feb-2024

தன்னிலை விளக்கம் - 1

குடும்ப வளர்ப்பு, சூழலால் முதலில் மு.வ. நூல்கள் மூலம் தன்னை அறிதல் என்பது மேலோட்டமாக இருந்தது. பிறகு நாத்திக, பகுத்தறிவு சிந்தனைகளில் என் கவனக்குவிப்பு இருந்தது.

என்றாலும் பள்ளிப் பருவத்திலேயே ஆழமாகப் புரியாத வகையில் 'தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே, ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே' என்ற வள்ளலார் பாடல் என்னை ஈர்த்தது, அதைப் பாடிக் கொண்டிருந்தது நினைவில் உள்ளது.

ஓசூரில் வாழ்ந்த காலத்தில் பெரியார் படிப்பக‌த்தில் வரும் தோழர்களிடம் பிறருக்குப் பகுத்தறிவைப் பரப்புவதை விட நாம் முதலில் அதைச் சரியாகப் புரிந்து கொள்வதும் வளர்த்துக் கொள்வதும் அதன்படி வாழ்வதும் முக்கியம் என்று வலியுறுத்திப் பேசி வந்துள்ளேன். நண்பர் தென்னை கணேசன் இதை நன்றாக அறிவார்.

ஒருமுறை மா.லெ.கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஓசூரில் என் இல்லத்தில் வந்து உரையாடிக் கொண்டிருந்து விட்டு, நீங்கள் வழமையா தி.க.காரர் போல் பேசவில்லை என்று சொல்லிச் சென்றார். என் கருத்துகளைச் சொல்வதிலும் திறந்த மனதுடன் மாற்றுக் கருத்துகளை அணுகுவதிலும் உள்ள பக்குவத்தையே அவர் குறிப்பிட்டார் என்று அனுமானித்தேன்.

அதே சமயம் சண்முகசுந்தரத்தின் நண்பர் சந்திரசேகர் என்னைக் குறித்து சண்முகசுந்தரத்திடம் ‘he has more heat than light’ என்று சொன்னார் என்பதைச் சண்முகசுந்தரம் மூலம் அறிந்தேன். அதுவும் ஒரு வகையில் உண்மை. உணர்ச்சிதான் இயக்கும். வெறும் அறிவு மட்டும் வினைக்குத் தூண்டாது.

நானும் நண்பன் ஆறுமுகப் பெருமாள் பிள்ளையுமாக பெங்களூர் சென்று அறிவியல் நூல்கள் வாங்கிப் படித்து வந்ததால் பகுத்தறிவு மட்டும் போதாது என்றும் அறிவியல் மனப்பான்மையின், உலகையும் நம்மையும் அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொள்வதன் முக்கியத்துவ‌ம் விளங்கியது. இதில் நண்பர்கள் சண்முகசுந்தரம், தில்லைக்குமரன் வழியாக அறிமுகமான சில‌ நூல்களுக்கும் பங்குண்டு.

பிறகு, நண்பர் பேராசிரியர் வீரபாண்டியன் மூலம் மார்க்சிய பெரியாரியல் சிந்தனைகள் வந்து சேர்ந்தன. முன்பு இருந்த நாத்திகம், பகுத்தறிவு என்பது பெரியாரியலின் ஒரு அம்சமே. ஆனால் வீரபாண்டியன் மூலம் பெரியாரியலை விரிவாகப் புரிந்து கொள்ள வழி கிடைத்தது.

தம்பி திருவள்ளுவன் மூலம் வந்த ஓமியோபதி அடிப்படைகள் குறிந்த கருத்துகளும் இவற்றிற்கிடையில் வளம் சேர்த்தன.

ஓசூர் பெரியார் படிப்பகத்தில் வெறும் பகுத்தறிவு என்று இல்லாமல் அறிவியல் கண்ணோட்ட விளக்கங்களும் நடத்தினோம். சண்முகசுந்தரத்தின் துணைவியார் அவ்விதம் உயிரியல் அறிவியல் வகுப்பு வழங்கினார்.

தென்னை.கணேசன் மூலம் அறிமுகமான புலவர் நாகூரான் சைவசித்தாந்த  வகுப்பு எடுத்தார்.

பெரியார் படிப்பகம் ஆரம்பிக்கும் முன்னரே, நண்பர்கள் நாங்கள் தங்கியிருந்த அறைக் கூடத்திலேயே கு.வெ.ஆசான், குடந்தை கதிர். தமிழ்வாணன் போன்றோரின் வரலாறு, தமிழ் இன்பம், இலக்கண‌ம் பற்றிய‌ வகுப்புகள் நடத்தினோம். அறிவுப் பணி, நல்ல, முற்போக்கு சிந்தனைகளைப் படிப்பதும் பகிர்வதும் பிறரிடமிருந்து பெறுவதும் தொடர்ந்து நடந்து வந்தன.

அடுத்து பதின்கவனகர் கனகசுப்புரத்தினம் அவர்கள் தொடர்பால் மெய்யுணர்வுப் பார்வை கிடைத்தது. ஆனால் அதை அப்போது மெய்யுணர்வு என்று நான் உணரவில்லை. பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, பெரியாரியல் உடன் அப்பார்வை சில புதிய, ஒன்றை ஒன்று நிறைவு செய்யும், கோணங்களைத் தந்தது. நான் அறிவியல் பார்வையில் அவருடன் பகிர்ந்து கொண்டதை அவர் மேடைப் பேச்சில் குறிப்பிட்டும் வந்தார்.

என்றாலுமே திருக்குறளில் அறத்துப்பாலில் துறவறவியலின் அதிகாரங்களில் என் கவனம் திரும்பவில்லை. பாயிரம் அதிகாரங்கள் மனப்பாடமாய் இருந்தாலும் மனதை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

அதன் பின் தேடியவற்றையும் கிடைத்தவற்றையும் சுருக்கிச் சொன்னால் இன்று பகுத்தறிவு, அறிவியல், சமுதாய சிந்தனைகள் சரியான திசையில் செல்ல ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றிய, தான் யார் என்பது பற்றிய தெளிவு அவசியம் என்று புரிகிறது. அதை மெய்யுணர்வு என்று சொல்வதில் அல்லது வழக்கத்திலுள்ள ஆன்மீகம் என்று அழைப்பதில் எனக்குத் தயக்கமில்லை.

ஆனால் இதில் வளர்ந்து வரும் தெளிவு, உறுதி அப்படியான பெயர்களுக்குள் அடைப்பட்டுக் கொள்ளாமலேயே புரிந்து கொள்ள முடியும் என்று புலப்படுகிறது. அதை அவ்வப்போது பகிர்ந்து கொண்டு வருகிறேன். சில என் எழுத்தாக இருக்கலாம். சில அலன் வாட்ஸ் போன்றோரின் பேச்சாக இருக்கலாம். மற்றும் சில அறிவியல் தளத்தில் உள்ளவர்களின் கட்டுரை, பேட்டியாக இருக்கலாம். சில ஆன்மீக, குறிப்பாக ஞான மார்க்க, உரைகளாக இருக்கலாம்.

பகுத்தறிவு, அறிவியல், சமுதாய நலன் என்பவை தேவையில்லாமல் போய் விடவில்லை. அவை இன்றும் என்றும் அவசியம். அறிவியல் மனிதர் வந்தடைந்துள்ள, வளர்த்தெடுத்துள்ள ஒப்பற்ற கருவி. ஆனால வழக்கம் போல், அதாவது மதத்தின் உண்மையான அடிப்படை போல் அறிவியலும் சீர்கெட்டு வருகிறது. 

மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு அப்பால் மதம் என்று எதுவும் உள்ளதா?

இங்கு மதம், மெய்யுணர்வு இரண்டும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

அறிவியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அப்பால் அறிவியல் என்றும் எதுவும் உள்ளதா?

இரண்டுக்குமே இல்லை என்றும் இருக்கிறது என்றும் சொல்லலாம்.

பின்பற்றுபவர்களின் பண்பைத் தவிர்த்து பின்பற்றப்படும் கொள்கை என்பது வெறும் மனக்கோட்டையே என்ற பார்வையில் இல்லை.

பின்பற்றுதல் என்பது என்றுமே 100 விழுக்காடு சரியாக இருக்க முடியாது, கொள்கை என்பது ஒரு செம்மையான முழுமையான ஒரு வகையில் அடையா இயலாத‌ நிலையைச் சுட்டுவது என்ற பார்வையில் இருக்கிறது.

---

இது என் மனப்போக்கு வளர்ந்து வந்தது பற்றி ஒரு மேலோட்டமான சுருக்கம். இதில் பல நெளிவு, சுளிவு, வளைவு, வழி தவறுதல்கள் எல்லாம் கொடுக்கப்படவில்லை. 

இது ஒரு வகையில் எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் கதை. இது போல் ஒவ்வொருவருக்கும் கதை இருக்கும். நம் பெயரே நம் கதையின் பெயர்தான்.

எல்லோருடைய‌ வாழ்க்கைக் கதையும் முக்கியம். எதுவும் உயர்வு தாழ்வு கிடையாது.

ஒரு வகையில் நம் கதைகள் என்பது இருப்பின் கதைகளே. 

(தொடரும்...)

மனதைக் கவனி - இப்படி எளிமையாகவும் புரிந்து கொள்ளலாம் - 1

 20-Feb-2024

மனதைக் கவனி - இப்படி எளிமையாகவும் புரிந்து கொள்ளலாம் - 1

"மனம் ஓடுவதைத் தடுத்து நிறுத்த முயல வேண்டாம். மனம் உயரப் பழகுவோம்." - டாக்டர் மு.வ.

"மனதைத் தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்கக் கற்றுக் கொள்வோம்." - டாக்டர் மு.வ.

உடலை நாம் எப்படி அணுகுகிறோமோ அதே போல் மனதையும் அணுகுவதே மெய்யுணர்வின் சாரம் (the essence of spirituality) என்று சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக, உடலுக்குள் என்ன உணவு போகிறது என்பதில் நமக்கு விழிப்புணர்வு உள்ளது. முழுமையாக இல்லாவிட்டாலும் குறைந்த அளவாவது உள்ளது. ஆனால் அதே போன்ற விழிப்புணர்வு நம் மனதுக்குள் என்ன போகின்றது என்பதில் உள்ளதா? பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.

உடலை மனதைக் கொண்டு ஆளுகிறோம். முறையான உணவு கட்டுப்பாட்டிலோ, உடற்பயிற்சி செய்வதிலோ, பல் விளக்குவதிலிருந்து குளிப்பது, நோய் வராமல் தடுக்க முயல்வது, வந்தால் அதற்கு உரிய மருத்துவம், ஓய்வு கொடுப்பது என்று உடலைப் பராமரிப்பதிலோ நாம் மனதைப் பயன்படுத்துகிறோம்.

ஆனால் மனதை ஆள எதைப் பயன்படுத்துவது? மனதையே தான் பயன்படுத்த வேண்டும். வேறு வழியில்லை. வேறு கருவி இல்லை.

உடலை ஆள மனதைப் பயன்படுத்துவதே பெரிய சவாலாக உள்ளது.

ஆங்கிலத்தில் "The spirit is willing but the flesh is weak" என்ற சொல்வழக்கு உள்ளது.

என்றால் மனதை ஆள மனதைப் பயன்படுத்துவது மாபெரும் சவால்தானே.

சினம் இறக்க கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் 
மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே தாயுமானவர்

இங்கு 'மனம் இறக்க' என்பதை 'மனதை ஆள' என்று புரிந்து கொள்வது தான் சரி. மனதை அதாவது எண்ண ஓட்டத்தை முற்றிலும் நிறுத்தி விடுவது சமாதி. அதைச் சாதிக்க முடிந்தாலும் அப்படியே இருந்து விட முடியாது. அதிலிருந்து வெளிவந்துதான் ஆக வேண்டும். எண்ண ஓட்டம் முன்பு போல் ஆரம்பித்து விடும்.

மனதைக் கவனிப்பது என்பது நமக்குத் தெரியாத புதிய வித்தை அன்று. எனக்கு கடுங் கோபம் வந்து விட்டது. எனக்கு அவமானமாகப் போய் விட்டது. நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன். அவர்கள் பாராட்டியது எனக்குப் பெருமையாக இருந்தது. அதைச் செய்து முடித்தது எனக்குப் பெருமிதமாக இருந்தது. எனக்கு இருமனமாக இருக்கிறது. ஒரே குழப்பமாக இருக்கிறது. இப்படி எல்லாம் நாம் சொல்வது எதைக் காட்டுகிறது? நம் மனதை நம்மால் கவனிக்க முடிகிறது என்பதைத்தானே.

ஆனால் அப்படிக் கவனிப்பது உடனுக்குடன் இல்லாமல் பொதுவாக அம்மனநிலையைக் கடந்த பின்பே தெரிவதாக உள்ளது. குழப்பம், தயக்கம் போன்றவற்றை அவை இருக்கும் போதே நம்மால் கவனிக்க முடிகிறது.

இப்படித் தானியக்கமாக (automatically / involuntarily)  மனதைக் கவனிப்பதைச் சுய உணர்வுடன் (conscious attention) அவ்வப்போதே கவனிக்க முடியமா?

முயற்சி செய்தால் தானே முடியும் முடியாது என்பது தெரியும். அதிலும் எந்த அளவுக்குத் தெளிவு, உறுதியுடன் முயற்சி செய்கிறோம் என்பதும் முக்கியமல்லவா? ஏனோ தானோ என்று முயற்சி செய்து விட்டு இதெல்லாம் புரட்டு, ஏமாற்று வேலை, யாராலும் முடியாது என்று தீர்ப்பு சொல்லலாம். அது அவரவர் இயல்பு. 

அவர்களைக் குறை சொல்வதோ அவர்களை எடை போடுவதோ அவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதோ நமக்கு அவசியமில்லை. அவர்கள் சொல்வதை வைத்து, இது போன்றவற்றில், நாம் முடிவு செய்வது நம் சுய மரியாதை அன்று.

இதை எழுதுவதால் மனதைத் தொடர்ந்து கவனிப்பதில் முழு நேர வெற்றி பெற்று விட்டேன் என்று நினைத்து விடக் கூடாது. ஆனால் இதை எழுத எனக்குத் தகுதி இருக்கிறதா?

நிச்சயமாக இதை உபதேசிக்க எனக்குத் தகுதி இல்லை. ஆனால் பின்பற்றி ஓரளவு பலன் கண்டவன் என்பதால் நட்பு முறையில் பகிர்ந்து கொள்ளத் தகுதியுள்ளது.

பிறர் படிக்க வேண்டும், பின்னூட்டம் தர வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. அது அவரவர் உரிமை. ஒரு வகையில் இவை போன்றவற்றை அவர்கள் மனதிற்குள் அனுமதிப்பதா என்று முடிவு செய்வதே இப்பகிர்வின் படியாகும், படித்து விட்டோ அல்லது படிக்காமலோ.

சுய உணர்வுடன் மனதைக் கவனிப்பது என்றால் என்ன?

இரண்டு மணி நேரம் போல் திரைப்படம் பார்க்கிறோம். அதில் வரும் காட்சிகளில் மனதைப் பறி கொடுக்கிறோம். ஆடல், பாடல், மகிழ்ச்சி, சோகம், நகைச்சுவை, காதல், பாசம், வேதனை, அச்சம், ஆபத்து என எல்லா உணர்ச்சிகளிலும் திளைக்கிறோம். ஆனால் ஒரு விநாடி கூட நாம் பார்ப்பவை அத்தனையும் உண்மையல்ல என்பதை நாம் மறப்பதில்லை. அதே சமயம் நினைப்பதும் இல்லை, அதாவது 'நான் திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன், இவை எல்லாம் நடிப்பு, உண்மையல்ல' என்று வாய் வார்த்தையாக, எண்ணமாக மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருப்பதில்லை, நமக்கு நாமே மனதிற்குள் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. ஆனால் அவ்வுண்மையை, அதாவது அது திரைப்படமே, நிஜமன்று என்ற உண்மையை மறப்பதும் இல்லை.

நினைப்பதும் இல்லை. மறப்பதும் இல்லை. இது என்ன புதுக் கரடி என்று என்று கேட்கலாம். புதுக் கரடியோ பழைய கரடியோ, இது சரியா என்று அவரவர் யோசித்து முடிவு செய்து கொள்ளலாமே.

இதே போல் மனதைக் 'கவனிக்காமல்' கவனிக்க முடியுமா? அதாவது ஓர் எண்ணம் தோன்றும் போது, இந்த எண்ணம் எனக்குத் தோன்றுகிறது என்று அதைப் பற்றி நினைக்காமல் கவனிக்க முடியுமா? அப்படித் தோன்றும் அந்த எண்ணத்தையும் கவனிக்க முடியுமா?

(தொடரும்...)

Sunday 21 January 2024

எண்ணப்புலம் - அறிவுணர்வு

21-Jan-2024

எண்ணப்புலம் - அறிவுணர்வு


எண்ணங்கள் தாமாக எழுந்து மறைகின்றன‌


என்னுடைய அடுத்த எண்ணம் (எந்த சிந்தனை வரும்) என்ன என்று என்னால் கூற முடியுமா? முடியாது.

எண்ணங்கள் எழுகின்றன (வருகின்றன / தோன்றுகின்றன). அவை என்னுடையவை என்று அடையாளப் படுத்திக் கொள்கிறேன். உண்மையில் அவற்றை நான் உருவாக்கியதற்கான சான்று (எப்படி உருவாக்கினேன். என்னென்ன படிநிலைகளில் அவை உருவாக்கம் பெற்றன) எதுவும் எனக்குத் தெரியாது.

நான் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் மூச்சு இயங்கிக் கொண்டுள்ளது. அதே போல்தான் எண்ணம், சொல், செயல்களும். அவற்றை என்னுடையவை என்று அடையாளப் படுத்திக் கொள்வதும் தன்னிச்சையாக எழும் மற்றோர் எண்ணமே.

நம் மனதைச் சற்று நேரம் வேடிக்கை பார்த்தாலே, நம்முடைய முயற்சி எதுவும் இல்லாமல் மூச்சு இயங்குவது போல் எண்ணங்களும் தோன்றி மறைவதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளலாம்.

எண்ணங்களின் எங்கிருந்து தோன்றுகின்றன?


இதை நாம் நன்கு கூர்ந்து கவனித்து உறுதிப்படுத்திக் கொண்டோமென்றால் எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்ற கேள்வி எழும். காற்று மண்டலம், கதிர்ப் புலம் (field) போல் எண்ணங்களின் மண்டலம் (எண்ணப் புலம்) இருப்பதாகக் கொள்ளலாம். இன்னும் கவனமாகப் பார்த்தால் காற்று மண்டலம், கதிர்ப் புலம் (ex. electromagnetic field) போன்றவை எண்ணங்கள் இல்லாமல் (எண்ணங்களாகத் தோன்றாமல்) இருக்கும் என்றோ இருக்காது என்றோ சொல்ல வழியில்லை.

எண்ணப் புலம் என்பது மின்காந்தப் புலம் போல் அலைகளாக, அதிர்வுகளாக இருக்கலாம். அவை நம் மூளையின் வழியாக எண்ணங்களாக அறியப்படலாம். மின்காந்த (ஒளி) அலைகள் நம் கண்கள் வழியே மூளையால் நிறமாக அறியப்படுவது போல். ஒலி அலைகள் நம் காதுகளின் வழியே மூளையால் ஓசையாக அறியப்படுவது போல்.

பிரபஞ்சத்தில் எந்த ஒன்றும் (நம் உடல்கள் உள்பட) ஓர் உயிரியின் (மனிதனின்) அறிவுணர்வில் (awareness / consciousness / mind-field) தான் தோன்றுகிறது. மனிதர்கள் இல்லாத காலம், அப்போது நடந்தவை என்பன எல்லாம் இன்று இப்போது நம் எண்ணங்களாகவே உள்ளன. 

அதனால் எண்ணப் புலம் என்பது ஒரு கருதுகோள் (hypothesis) என்பதிலிருந்து மறுக்க முடியாத இருப்பாகத் (reality) தெளிவாகிறது. 

இன்னுஞ் சொல்லப் போனால் எண்ணப் புலத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. எவை தோன்றினாலும் அவை எண்ணப் புலத்தில் தான் தோன்றுகின்றன. இங்கு எண்ணப் புலம் என்பது அறிவுணர்வைக் குறிக்கிறது. ஐம்புலன்களால் உணர்பவை கூட எண்ணப் புலத்தில் தான் தோன்றுகின்றன. 

எடுத்துக் காட்டாக, நம் கண்முன் உள்ள சாவியைப் பலமுறை தேடி விட்டு எங்கே வைத்தோம் என்று கவலைப் பட்டு, திடீரென்று அது இருப்பதைப் பார்க்கிறோம். முன்பும் சாவியின் மீது பட்ட ஒளி நம் கண்களின் வழி விழித்திரையில் விழுந்து மூளைக்குச் சென்றிருக்கும். ஆனால் உண்மையில் பார்ப்பது கண்கள் இல்லை; மூளையும் இல்லை; அறிவுணர்வே (கவனமே / attention which is directed awareness).

இதே போல் மற்ற புலன்களுக்கும் நாம் யோசித்துப் புரிந்து கொள்ளலாம்.

நான் பார்க்கிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத பார்த்தல் இல்லை.
நான் கேட்கிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத கேட்ட‌ல் இல்லை.
நான் தொடுகிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத தொடுதல் இல்லை.
நான் சுவைக்கிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத சுவைத்தல் இல்லை.
நான் முகர்கிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத முகர்தல் இல்லை.
நான் நினைக்கிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத நினைத்தல் இல்லை.

நான் இல்லாத அறிவுணர்வு இல்லை.
அறிவுணர்வு இல்லாத நான் இல்லை.

எனவே நான் = அறிவுணர்வு.

அறிவுணர்வே நான். நானே அறிவுணர்வு.


மேற்கண்ட தர்க்கத்தை உற்றுச் சிந்தித்தால், இந்த உடலையும் நான் அறிவுணர்வால் தான் அறிகிறேன். அதனால் அறிவுணர்வே என் முதன்மையான இருப்பு / அடையாளம். மற்றவை, இந்த உடல், பெயர், மொழி, இனம், பால், படிப்பு, பதவி, சொத்து, உறவு எல்லாம் இரண்டாம் பட்சமே, அறிவுணர்வுக்கு அடுத்தே.

இப்போது இருக்கும் இந்த உடல் சம்பந்தப்பட்ட அடையாளங்களில் கூட நாம் எது முதல் (ஆண் / பெண்), எது அடுத்து (தமிழன்) எது அதற்கு அடுத்து (இந்தியன்)... என வரிசை வைத்துள்ளோம். அதன்படி நடந்து கொள்கிறோம்.

இப்போது இவை எல்லாவற்றிற்கும் மூலமான, இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய, இவை எல்லாவற்றையும் கடந்த, எது இல்லாவிடில் இவை எதுவும் இருக்க இயலாதோ, அத்தகைய அடையாளத்தை, அறிவுணர்வை (எப்போதும் இருந்து வருவதை) கண்டு கொண்டோம். இதுவே ஆன்மீகம். இதுவே ஞானம். இதுவே மோட்சம். இதுவே விடுதலை. இதுவே வீடுபேறு. இதுவே பிறப்பு இறப்பு அறுத்தல். இதுவே நிர்வாணம். இதுவே பகுத்தறிவின் (ஞானம்) உச்சம். இதுவே ஆன்ம விசாரணையின் (ஆன்ம நம்பிக்கை இல்லை) முடிவு. இதுவே வள்ளலாரின் மரணமிலாப் பெருவாழ்வு. இதுவே தூங்காமல் தூங்குவது.

இந்தத் தெளிவு என்பது நம் அன்றாட வாழ்க்கை ஒத்திசைவாக, ஒழுங்கமைதியாக நடக்க மிக அவசியம்.

எப்படி?

ஓர் எடுத்துக்காட்டு. ஒரு பணக்காரனின் தூக்கத்திற்கும் (கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கம்) ஒரு பரம ஏழையின் தூக்கத்திற்கும் என்ன வேறுபாடு? எந்த வேறுபாடும் உண்டா? அந்த கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கத்தில் பணக்காரன் என்னவாக இருந்தான்? அதே போல் ஏழை என்னவாக இருந்தான்? 

ஆழ்ந்த தூக்கத்தில் இருவரும் இல்லாது போய் விடவில்லை. தூக்கத்திலிருந்து எழுந்ததும் இருவரும் நன்றாக நிம்மதியாக ஆழ்ந்து தூங்கினேன் என்று ஒப்புக் கொள்கிறார்கள். ஆக அவர்கள் அந்த ஆழ்ந்த தூக்கத்திலும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் உடல் மனங்களாக (பணக்கார, ஏழை) இல்லை. வெறும் அறிவுணர்வாக இருந்தார்கள். தங்களுக்கு அத்தூக்கத்தில் உடல் மன உணர்வு இல்லை என்பதை விழித்ததும் சொன்னார்கள் (மரக்கட்டை போலத் தூங்கினேன்). எது அதை அறிந்தது? அதுவே அறிவுணர்வு.

அடுத்து. இருவரின் ஆழ்ந்த அத்தகையத் தூக்கத்திற்கு இடையே எந்த வகையிலும் வித்தியாசம் இல்லை. அவை ஒன்றே. அறிவாளியின் ஆழ்ந்த தூக்கமும் அடிமுட்டாளின் ஆழ்ந்த தூக்கமும் ஒன்றே. ஆழ்ந்த தூக்கத்தில் அனைவரின் இருப்பு, அடையாளம் ஒன்றே.

அதே போல் என்னுடைய அறிவுணர்வுக்கும் பிறருடைய அறிவுணர்வுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டிற்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்றால் இரண்டும் ஒன்றே. என்னுடைய உடலில் உள்ள ஹைட்ரஜன், கார்பன் அணுகளுக்கும் பிறர் உடல்களில் உள்ளதற்கும் உயிரற்றவற்றில் உள்ளதற்கும் எந்த வேறுபாடு இல்லை என்பதைப் போல்.

அறிவுணர்வு ஆணா பெண்ணா? அறிவுணர்வு மரமா, பூச்சியா, விலங்கா? அறிவுணர்வு தூய அறிவுணர்வே. வேறு எல்லாம் (ஆண் / பெண், மரம், செடி, கொடி, மலை, பூமி, சூரியன், கோள்கள் ...) அவ்வறிவுணர்வில் தோன்றுவனவே.

அதாவது ஒரே அறிவுணர்வில் (எண்ணப் புலத்தில்) உயிருள்ளவை, உயிரற்றவை எல்லாமே தோன்றுகின்றன. அதே புலத்தில் ஒவ்வொரு உடல் மனதோடு அவ்வறிவுணர்வு அடையாளப் படுத்திக் கொள்வதும் தோன்றுகிறது. ஒரே நீர் ஓட்டத்தில் பல அலைகள் (அவையும் நீரே) தோன்றுவதைப் போல. ஒரே நீர் ஓட்டத்தில் பல நீர்ச்சுழல்கள் (whirlpools - அவையும் நீரே) தோன்றுவதைப் போல.

எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் தோற்றுவாயாக ஒரே அறிவுணர்வு உள்ளது. அறிவுணர்வு என்பதை இறைவன், கடவுள், சிவம் என்று எந்த பெயரிட்டு அழைத்தாலும் முடிவான உண்மை இதுதான். மற்றபடி முருகன், சிவன் போன்ற கடவுளர்கள் வெறும் எண்ண அளவிலான தோற்றங்களே (கற்பனைகளே). அதே சமயம் நம் உடல் போன்றவையும் எண்ண அளவிலான தோற்றங்களே. முருகன், நீதி, நேர்மை, உரிமை போன்ற எண்ணங்களுக்கு வடிவம், நிறம், எடை, மணம், குணம் போன்ற பிற கூறுகள் (அவையும் முடிவில் அறிவுணர்வின் தோற்றங்களே) இல்லை. நம் உடல் போன்றவற்றிற்கு உண்டு.

இத்தகைய ஆய்வு எண்ணங்களும் அதே அறிவுணர்வின் தோற்றங்களே.

ஓடும் நீர் சுழலும் போது அதற்கு ஒரு வடிவம் அமைந்து விடுகிறது. சுழல்வதையும் வடிவத்தையும் பிரிக்க முடியாது. அவை ஒன்றே. அதே போல் எண்ணங்கள் எழும் போது அது உடல் மன வடிவத்தில் அமைந்து விடுகிறது. எண்ணங்களையும் (கருத்து) உடலையும் (பொருள்) பிரிக்க முடியாது. அவை ஒன்றே.

கருத்து முதல் வாதம் / பொருள் முதல் வாதம் என்ற வழக்கு (விளையாட்டு) கருத்தும் பொருளும் (அவையும் முடிவில் அறிவுணர்வின் தோற்றங்களே) இல்லாமல் இருக்க (நடக்க‌) முடியாது.

எல்லாப் பொருள்களும் வெளியில் (space) உள்ளன. வெளி எங்கே உள்ளது? எங்கும் உள்ளது. அந்த வெளியுமே அறிவுணர்வில் தான் தோன்றுகிறது. அதே போல் அறிவுணர்வு எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது (கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார்). Space is non-local. Similarly awareness is non-local.

இந்த வகை விளக்கத்தில் அறிவுணர்வு என்பதும் ஒரு கருத்தே (concept). ஆனால் அது அறிவுணர்வு என்ற இருப்பைச் (existence) சுட்டும் (pointer) கருத்து. நீர் என்ற கருத்து மெய்யான‌ (நிஜமான) நீரைச் சுட்டுவது போல. அதனால் அறிவுணர்வு என்ற கருத்து எதைச் சுட்டுகிறதோ அது கருத்து, பொருள் இரண்டிற்கும் அப்பாற்பட்ட அடிப்படை, மூலம் ஆகும்.

ஆக, நாம் அடைந்த முக்கிய முடிவுகள்


  • ஒரே அறிவுணர்வு உள்ளது.
  • அது மட்டுமே உள்ளது. மற்றவை எல்லாம் அதில் தோன்றுபவையே. அதன் தோற்றமே.
  • அதுவே எல்லாவுமாகத் தோன்றுகிறது.
  • அதுவே தோற்றத்தின் ஒவ்வொரு பகுதிகளுடன் (உடல் மனங்கள்) தனித்தனியாக அடையாளப் படுத்திக் கொள்கிறது. ஒரே சூரியன் பல நீர் நிலைகளில் பல பாத்திரங்களில் உள்ள நீரில் பிரதிபலிப்பதைப் போல.
  • இந்த உடல் மனம் நம்முடைய தற்காலிக அடையாளம்.
  • அறிவுணர்வே நம் பிறப்பு இறப்பற்ற நிரந்தர அடையாளம்.
  • நம் எண்ணம், பேச்சு, செயல் என்று சொந்தம் கொள்பவை இவ்வுடல் மனத்தின் உருவாக்கங்கள் அல்ல. ஏனெனில் நம் உடல் மனம் என்பதே மற்றவை போல் ஒரு தோற்றம்.
  • நம்முடைய தனித்த (பிறவற்றிலிருந்து பிரிந்த - sense of separation) உணர்வு என்பது தோற்றம், கருத்தளவில் உண்மை. ஆனால் மெய்யான‌ (நிஜத்தில்) உண்மையில்லை.

நீர்ச்சுழல் என்பது நீர் ஓட்டத்திலிருந்து தனித்துத் தோன்றுகிறது. அந்த அளவில் அது உண்மை. ஆனால் அது நீரிலிருந்து வேறுபட்டது, பிரிந்து தனித்து நிற்பது என்றால் அது உண்மையில்லை. நீர்ச்சுழலாக (தோன்றி / பிறந்து, சுழன்று, மறைந்து / இறந்து) இருக்கும் போதும் அது நீரே அன்றி வேறில்லை. அது போல் நாம் இந்த உடல் மனமாக இருக்கும் போதும் இல்லாத போதும் அறிவுணர்வே அன்றி வேறில்லை.

அறிவுணர்வைக் கடவுள் என்று அழைத்தால் நாம் ஒவ்வொருவரும் கடவுளே. ஆனால் அது நம்மை அறிவுணர்வோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் போதே சரி. அதிலிருந்து பிரிந்து தனித்து துண்டித்து நிற்பதாகத் தோன்றும் இவ்வுடல் மனம் அடையாளத்தின் படி சரியில்லை.

அறிவுணர்வு = நான் = இயற்கை = இறைவன் = இருப்பு.


சில கேள்விகள்


நான் அறிவுணர்வு என்ற அடையாளத்தில் எல்லாம் வல்ல கடவுள் என்றால் நான் ஏன் நினைத்தபடி செய்ய முடியவில்லை?

இது பாதி கிணறு தாண்டிய புரிதல் ஆகும்.

அறிவுணர்வு என்ற நிலையில் இச்சா சுதந்திரம் (free will) உண்டு. ஆனால் அதற்கு அங்கு பொருள் (meaning) இல்லை; தேவை (need) இல்லை. ஏனெனில் அது இச்சைகளைக் (விருப்பு வெறுப்புகளைக்) கடந்த நிலை. அதே சமயம் எல்லா விருப்பு வெறுப்புகளுக்கும் ஆதாரமான நிலை.

திரைப்படத் திரைச்சீலை தோன்றும் எல்லாக் காட்சிகளுக்கும் (வெள்ளம், புயல், தீ, காதல், சண்டை, சோகம்...) ஆதாரமாக இருக்கிறது. ஆனால் அந்தக் காட்சிகளைக் கடந்து நிற்கிறது. எந்த வகைக் காட்சியாலும் பாதிக்கப்படுவதில்லை. திரைச்சீலை இல்லாமல் எந்தக் காட்சியும் (பொருளும்) தோன்ற முடியாது.


நான் பிறர் என்ற பிரிவினை வெறும் தோற்றமே என்றால், எல்லாம் நானே (ஒன்றே) என்றால் நான் யாருக்கு என்ன (தீங்கு) செய்தால் என்ன, எப்படி நடந்து (அவமரியாதை, கடுமை, கொடுமை) கொண்டால் என்ன? எல்லாம் எனக்கு நானே செய்து கொள்வது தானே?

கறாராகப் பார்த்தால் ஆம், நான் பிறருக்கு என்ன செய்தாலும், மெய்யுணர்வின் படி, எனக்கு நானே செய்து கொள்வதுதான். ஆனால் அது எல்லோருக்கும் பொருந்தும். பிறர் எனக்கு என்ன செய்தாலும் அது எனக்கு நானே செய்து கொண்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதிலும் பாதி கிணறு தாண்டினால் மீண்டும் மாயைக் (பற்று / இன்ப துன்பம்) கிணற்றிலேயே விழுந்து விடுவோம்.

"நாம் பிறருக்கு உதவும் போது நமக்கு நாமே உதவிக் கொள்கிறோம்"
                - ரமண மகரிஷி

“It is one of the most beautiful compensations of life that no man can sincerely try to help another without helping himself.” – Ralph Waldo Emerson
"வாழ்க்கையின் அற்புதமான சமச்சீர் என்னவென்றால் நாம் பிறருக்கு உதவுவதன் மூலம் நாமும் பயனடைவது தான்."
                - ரால்ப் வால்டோ எமர்சன்

இதன் மறுதலையும் உண்மை. அதாவது பிறருக்குத் தீங்கு (எண்ணத்தால், சொல்லால், செயலால்) இழைக்கும் போது நமக்கு நாமே அதைச் செய்து கொள்கிறோம்.

அதே போல் இதன் எதிர்த்தலையும் உண்மை. பிறர் நமக்கு நன்மை செய்யும் போதும் தீங்கு செய்யும் போதும் அவர் அவருக்கே செய்து கொள்கிறார்.

இதை எழுதும் போது எனக்கு நானே உதவிக் கொள்கிறேன்.

உண்மையின் இரு கோணங்கள்


அறிவுணர்வு என்ற அடையாளத்தில் நாம் நின்றால் எல்லாம் (நாம் விரும்புகின்றவை, வெறுக்கின்றவை) நம் செயல்களே, நம் வெளிப்பாடுகளே. யாரையும் எதையும் புகழவோ, இகழவோ, விரும்பவோ, வெறுக்கவோ வழியில்லை.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (திருக்குறள்: 4 1. கடவுள் வாழ்த்து)

கடவுளுக்கு இலக்கணமே விருப்பு வெறுப்பற்றவர் என்பதுதானே.

இந்த உடல் மனம் என்ற அடையாளத்தில் நாம் நின்றால் நமக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை (பிறப்பு முதல் இறப்பு வரை பல விருப்பு வெறுப்புகளுடன்) இருப்பது போல் தோன்றுகிறது.

எது உண்மை? இரண்டும் உண்மை.

இரண்டையும் நாம் எந்த விகிதத்தில் (ratio) வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் பொருத்திப் பார்த்துச் சமப்படுத்திச் (balancing) செயல் படுகிறோம் என்பதே நாம் நம்முடன் விளையாடும் வாழ்க்கை விளையாட்டு!

ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு மலர்ச்சி!
ஒவ்வொரு நாளும்
ஒருபடி உயர்ச்சி!

உடல் மன அடையாளத்தை மட்டும் உண்மை என்று நினைத்துக் கொண்டு இருக்கும் கட்டத்தில் அதிலிருந்து விடுபட நீ இந்த உடல் மனம் இல்லை, இவ்வுலகம் வெறும் தோற்றமே / மாயை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த முதல் பாடத்தை மட்டும் வைத்துக் கொண்டு எடை போடுவது சரியில்லை. முழுமையான பாடப் படிநிலைகளைப் புரிந்து கொண்டால் தான் உண்மை விளங்கும்.

வானவில்லைப் பார்த்து ரசிக்கிறோம். ஆனால் அப்படி உண்மையில் வானத்தில் பல வண்ண வில் ஒன்றும் இல்லை. அது ஒரு தோற்றமே என்பதை மறந்து விடுவதில்லை.

அதே போல் வாழ்க்கையை (இன்ப துன்பங்கள் மாறி மாறி வருவதை) ரசிக்கலாம். ஆனால் அப்படி உண்மையில் இன்பமோ துன்பமோ இல்லை. அவை வெறும் தோற்றங்களே என்பதை மறந்து விடக் கூடாது.

விவேகானந்தர், வேதாந்தம் இந்த உலகை வெறுக்கச் சொல்லவில்லை, இந்த உலகைச் சரியாகப் புரிந்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றே சொல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்ட எதையும் நம்பக் கூடாது. அவரவர்கள் திறந்த மனதுடன், எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் யோசித்து, சுய ஆய்வு (ஆன்ம விசாரணை) செய்து உண்மைதானா என்று உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

============

மேற்கண்ட பத்திகளில் பகிர்ந்து கொண்டபடி, நம்மை வெறுத்து, குற்றஞ்சாட்டிப் பிறர் பேசியவை எல்லாமே 'அறிவுணர்வு' என்ற அடையாளத்தில் நமக்கு நாமே சொல்லிக் கொண்டவை தான்!

இது அவர்கள் ஒவ்வொருவர் பார்வையிலும் அவர்கள் அவர்கள் மீதே வைத்த குற்றச்சாட்டுகள் தான் என்றாலும் அவர்களுக்கு அப்புரிதல் வருவது அவர்கள் விருப்பமில்லை.

அதே போல் நமக்கு இப்புரிதல் வருவதும் நம் விருப்பமோ முயற்சியோ இல்லை.

எல்லாம் தானாக நடக்கின்றன. மற்ற இயற்கை நிகழ்வுகளும் நம் உடல் இயங்கங்களும் தானாக (on their own accord) நிகழ்வது போல் எல்லோருடைய எண்ணம், சொல், செயல்களும் தானாக நிகழ்கின்றன. அவை தங்கள் தங்களுடைய எண்ணம், சொல், செயல் என்ற எண்ணங்களும் (attachment thoughts) தானாக எழுகின்றன.

இது தெளிவாக, தெளிவாக 'மனத்திருள் குறையும்', 'மனத்தொளி பெருகும்'. This is what is enlightenment! ஞானப்பிரகாசம் (அறிவு ஒளி)!

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு (திருக்குறள்: 352 / 36. மெய்யுணர்தல்)

இந்த ஒளியில் பார்க்கும் போது நமக்குப் பெருமை / மானம் இல்லை; சிறுமை / அவமானம் இல்லை. வெறுப்புகள் நீர்த்துப் போகும். அதனால் விருப்புகளும் நீர்த்துப் போகும். இன்பமும் நீடிக்காது, துன்பமும் நீடிக்காது என்பது உறுதியாகும். பற்றற்ற பொறுப்புணர்ச்சியில் மகிழ்ச்சியுடன் கடமைகளைச் செய்வோம்.

நம்முடைய கருத்துகள், கொள்கைகள், விழுமியங்கள், மதிப்பீடுகள், உறவுகள், உடல், உலக நலம் பற்றிய கவலைகள்... என எல்லாமே இவ்வொளியில் மாறிவிடும், செம்மையுறும்.

மன அலைவு குறைவதால் பசி குறையும். குறைந்த தூக்கத்திலேயே முழுப்புத்துணர்ச்சி வரும். வெகுநாள் இருந்து வரும் சில உடல் உபாதைகள் கூடச் சரியாகலாம்.

அதே சமயம் இந்த ஒளியோடு நம்முடைய உடல்-மனம் அடையாளத்தில் நின்று பார்ப்பதையும் சமப்படுத்த வேண்டும்.

'எல்லாம் நானே' என்பதால் பிறர் உண்டு நான் பசியாற முடியது. அதே சமயம் நான் - பிறர் (sense of separation) என்ற கருத்து, தோற்ற அளவிலான, வாழ்க்கை நாடகத்திற்கான, பிரிவினையைத் தீவிரமாக எடுத்துக் கொண்டால் 'மனத்திருள் கவ்வும், மனத்துயர் பெருகும்'.

மனம் போல் வாழ்வு

"அதே சமயம் இந்த ஒளியோடு நம்முடைய உடல்-மனம் அடையாளத்தில் நின்று பார்ப்பதையும் சமப்படுத்த வேண்டும்." என்பதின் நடைமுறை என்ன?

குறிப்பாக, நம்முடைய, பிறரின் குறைகளை, பலகீனங்களை மறக்காமல் (அப்போதுதான் மீண்டும் அதே தவறைச் செய்யாமல் இருப்போம்) ஆனால் அதற்காக வெறுப்பு, கோபம், ஆற்றாமை போன்ற சிந்தனைகள் நம் மனதை ஆக்கிரமித்து விடாமல் அவற்றைப் புறக்கணித்து நம்முடைய, பிறரின் நற்குணங்கள், பலங்களைப் பற்றிய சிந்தனைகளுக்கு ஊக்கம் கொடுத்து அவற்றை நம் மனதில் நிரப்ப வேண்டும்.

இதை நான் பின்பற்றிப் பலன் கண்டு வருவதால் தான் பகிர்ந்து கொள்கிறேன். அதே சமயம் இவை எப்பொழுதும் என் இயல்பாக இருக்கும் அளவுக்கு மாறிவிடவில்லை. வழக்குதலும் மீண்டு எழுந்து நினைவுபடுத்திக் கொண்டு பின்பற்றலும் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

எண்ணப் புலம் என்பது எங்கும் பரவியுள்ளது (non-local = universal) என்று மேற்கண்ட கட்டுரையில் பார்த்தோம். அப்படி என்றால் நம் சிந்தனை யாரை நோக்கி, யாரைப் பற்றி, எந்தவிதமாக உள்ளதோ அதற்கு ஒரு விளைவு இருக்கும்.

அதனால் தான் நம்முடைய எண்ணங்கள் பிறரின் குறைகளைப் பற்றி, அவர்களின் சுடுசொற்களைப் பற்றி அதிகம் இருக்கக் கூடாது.

வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு (திருக்குறள்: 595 - 60. ஊக்கமுடைமை)

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (திருக்குறள்: 706 - 71. குறிப்பறிதல்)

பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின் (திருக்குறள்: 709 - 71. குறிப்பறிதல்)

பிறரைப் பற்றிய நம் எண்ணம் உடன்பாடாக இருந்தால் அது நம் முகம், உடல் அசைவு எல்லாவற்றிலும் (பணிவான பேச்சுக்கு அப்பாற்பட்டு) வெளிப்படும்.

தகவல் பரிமாற்றத்தில் முகம், உடலசைவுகள் (body language) பேச்சை (குரல் மென்மை/வலிமை, உச்சரிப்பு...) விடப் பெரும்பங்கு வகிப்பதை அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டவை குறித்து கருத்துகள், கேள்விகள், ஐயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

வாழ்நாள் சிறியது; வாழ்க்கையோ பெரிது! 

(கனிச்சாறு 2 ஆம் பகுதி பக்கம் 87,88 - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1973)

என்றும் நினைத்திரு;
இந்நிலம் பெரிது!
குன்றமும் வானும்
கோடி ஆண்டுகள்
நின்று நிலைப்பன!
நீயோ அழிபவன்!
என்றும் இருப்பதாய் 
இறுமாந்து விடாதே!

ஒருநாள் நம்முடல்
உலகினில் அழியும்!
திருநாள் போலத்
திரிந்த வாழ்வெலாம்
இருளுள் மூழ்கும்
இல்லாமற் போவோம்!
அருமை உறவினர்
அழ அழ அழிவோம்!

பிறப்பன எல்லாம்
பின்னொரு நாளில்
இறப்பதும் உறுதி!
இதுவே இயற்கை!
மறப்பிலா இந்நிலை
மனத்தினுள் இருத்திச்
சிறப்புற எண்ணவும்
செய்யவும் முனைக!

உன்புது வாழ்வை
உவப்புடன் நடத்து!
அன்பும் அறமுமே
அனைத்தினும் உயர்வாம்!
இன்பம் வருகையில்
எக்களிப் புறாதே!
துன்புற நேரினும்
துவண்டு விடாதே!

ஒருநலம் பெறுகையில்
உலக நலம் நினை!
வருநலம் யாவும்
வகுத்துண்டு வாழ்வாய்!
பெருநிலம், விளைவுகள்
பிறவெலாம் பொதுவே!
மருவிலா உள்ளமும்
வாழ்வுமே மகிழ்ச்சி!

வாழ்நாள் சிறியது!
வாழ்க்கையோ பெரிது!
வீழ்நாள் வரினும்
வீழாது நற்செயல்!
தாழ்வும் உயர்வும்
தம்தம் செயல்களே!
சூழ்வன மீறிச்
சுடர்வன செய்வாய்!

எவ்வழி நினைவோ, அவ்வழி நிகழ்ச்சி!

பெருஞ்சித்திரனார் பாடல்கள் - கனிச்சாறு தொகுதி 3 பாடல் 66

உனக்கு முன்னும், இவ்
வுலகம் இருந்தது!
உனக்குப் பின்னும், இவ்
வுலகம் இருக்கும்!
ஊழியிற் சுழலும், இவ்
வுலக வண்டியில்
நாழியே ஏறிடும்
நல்வழிப் போக்கன், நீ!

தொடங்கிய தெங்கே?
தொடர்வது மெங்கே?
அடங்கா முடிவினில்
அடைவது மென்ன?
என்பவை எல்லாம்
எண்ணினும் விளங்கா!
மன்பதைக் கடலுள்
மண்துகள் அசைவு, நீ!

எந்த இடத்தினில்
இறங்கிடு வாயோ?
அந்த நொடிவரை
ஆர்ப்பரிக் கின்றாய்!
சொந்தமும் சுற்றமும்
சுழன்றிடும் அணுக்கள்!
சிந்துகண் ணீரும்
சிரிப்பும் கனவுகள்!

வந்தது நினையாய்!
வழிதடு மாறுவாய்!
வெந்தது தின்றிட‌
வீணிற் பேசுவாய்;
மந்தையில் ஆடுபோல்
மனத்தைச் சுழற்றுவாய்!
முந்தையர் விட்ட‌
முழுமை தொடருவாய்!

நினைத்தவை எல்லாம்
நிலைத்தவை ஆகா!
அனைத்து முயற்சியும்
அரைகுறை முயற்சியே!
மனத்திருள் குறைந்தால்
மனத்துயர் குறையும்!
மனத்தொளி பெறுதலே
வாழ்க்கையின் மலர்ச்சி!

ஒளிபெற எண்ணுவாய்;
ஒளித்துவை யாதே!
வெளிவான் விரிவுபோல்
விரியட்டும் நினைவுகள்!
துளியே யாயினும்
தூய்மையே வாழ்க்கை!
களிசேர்ப் பதுவும்
கசடிலா எண்ணமே!

ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு மலர்ச்சி!
ஒவ்வொரு நாளும்
ஒருபடி உயர்ச்சி!
எவ்வழி நினைவோ
அவ்வழி நிகழ்ச்சி!
செவ்விய மனமே
செவ்விய வாழ்க்கையாம்!

நற்செயல் நற்சொல் நல்லெண்ணம்

முதலில் நற்செயலைச் செய்வதில் நம் கவனம் இருக்கும். ஆனால் இனிய சொற்களைப் பயன்படுத்துவதில் அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. நற்செயல் மட்டும் போதாது, எதையும் நல்லவிதமாகச் சொல்லாவிடில் பயன் அதிகம் இருக்காது என்று வாழ்க்கை அனுபவம் கற்றுக் கொடுக்கும். ஆனால் பிறர் இல்லாத போது அவர்களைப் பற்றிக் குறை சொல்வது நீடிக்கும். 

அடுத்த கட்டம் எண்ணங்களையே தூய்மையாக, உடன்பாடாக ஆக்குவது. அதாவது எதிர்மறை எண்ணங்களைப் புறக்கணிப்பது. அந்த‌ பழக்கத்தால் எதிர்மறை எண்ணங்கள் வலிவிழக்கும்; வருவது குறையும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற (திருக்குறள்: 34 / 4. அறன்வலியுறுத்தல்)

பயனில எண்ணாமை

எண்ணங்களை நாம் உருவாக்காததால் அவை எழுவதை நிறுத்த முடியாது. கனவுளற்ற ஆழ்ந்த தூக்கம் போல் ஒருவர் ஆழ்ந்த தியானத்தில் நினைவுகள் எழுவதை நிறுத்த முடியலாம். ஆனால் அந்த‌ நிலையில் நீடிக்க முடியாது. தூக்கத்திலிருந்து எப்படியும் ஒருவர் எழுந்து விடுவார். எழாமல் (விழிக்காமல்) இருக்க முடியாது.

அதே போல் ஆழ்ந்த தியானத்திலிருந்து ஒருவர் எப்படியும் வெளியே வந்து விடுவார். மேலும் சிந்தனைகள் அற்ற ஆழ்ந்த தியானத்தில் வேறு எதையும் (சொல், செயல்...) செய்ய வாய்ப்பே இல்லை. அது ஒரு பெரும் தளர்ச்சியான ஓய்வு. வெளியே வந்த பின் அதற்குப் பயன் இருக்கும்.

ஆழ்ந்த தியானத்திலிருந்து வெளியே வராமல் இருந்தால் அது சமாதி ஆகி உயிர் துறக்க (வடக்கிருந்து உயிர் துறத்தல், சாகும் வரை உண்ணா விரதம்) நேரிடும். சமாதியிலேயே இருந்து உயிர் விடுதலைக் கௌரவத் தற்கொலை என்று சொல்லலாம்.

எண்ணங்கள் எழுவதை நிறுத்த முடியாது. ஆனால் அவற்றைப் புறக்கணிக்கலாம் அல்லது முக்கியத்துவம் கொடுக்கலாம்.

மூச்சு விடுவதை நிறுத்த முடியாது (சில நிமிடங்களுக்கு மேல்). ஆனால் மூச்சு வேகத்தைத் தற்காலிகமாகக் குறிப்பிட்ட மணித்துளிகள் கூட்டவோ குறைக்கவோ முடியும்.

அதே போல் இதயத்துடிப்பை நிறுத்த முடியாது. ஆனால் இதயத் துடிப்பு வேகத்தைத் தற்காலிகமாகக் குறிப்பிட்ட மணித்துளிகள் கூட்டவோ குறைக்கவோ முடியும்.

இவை இரண்டும் நம் நேரடி அனுபவ உண்மைகள்.

அதே போல் நம் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவோ புறக்கணிக்கவோ முடியும் என்பதும் நம் நேரடி அனுபவ உண்மை.

நம் வாழ்க்கையின் படிப்படியான உலகியலான சாதனைகள் (படிப்பு, வேலை, குடும்பப் பொறுப்பு...) நம்மால் எந்த சமயத்தில் எவ்வித எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்ற திறமை இல்லாமல் நடந்திருக்காது.

ஏற்கனவே நம்மிடம் உள்ள இந்தத் திறனை இப்போது மேலும் கூர்மைப்படுத்த முனைகிறோம்..

"The highest possible stage in moral culture is when we recognize that we ought to control our thoughts".  - Charles Darwin
நம்முடைய சிந்தனைகளை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று புரிந்து கொள்ளும் நிலை தான் நம் பண்பின் உச்சக் கட்ட வளர்ச்சிப் படியாகும்.

டார்வினின் மேற்கோளில் 'சிந்தனைகளைக் கட்டுப்படுத்துதல்' என்பதை விரும்பாத‌ சிந்தனைகளை வராமல் தடுத்து நிறுத்துதல் என்று எடுத்துக் கொள்ளாமல் அவை வருவதைத் தவிர்க்க முடியாது ஆனால் புறக்கணிக்க முடியும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இவை எதுவும் என்னுடைய கண்டுபிடிப்புகள் அல்ல. ஆனால் படித்துச் சிந்தித்து உணர்ந்து தெளிந்த உண்மைகள். ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல் இவை என் முழுமையான இயல்பாகி விடவில்லை. அப்படியான முழுமைச் செம்மை (perfect) நிலை இவ்விருமைக்குள் (duality) இருக்க முடியாது. ஆனால் அதை நோக்கி படிப்படியான முன்னேற்றம் பெற வாய்ப்புள்ளது. எப்போதும் எங்கும் உள்ளதைக் காணவில்லை என்று தேடித் திரிந்து, தேடுவதே அதுதான் என்று தெளிவதே வாழ்க்கை!
=============



Wednesday 11 October 2023

சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் நாத்திகம்

 

2023-Oct-11

சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் நாத்திகம் 

பரிதி:  (தொல் முன்பு எழுதியது குறித்துப் பின்னூட்டம்)

>>>
இவ்வுலகில் நாம் காணும் இன்ப துன்பங்களை எப்படி அணுகுகிறோம் என்பதே மாற வேண்டும். அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு ஒரு உணர்ச்சியும் செயலும் இல்லாமல் யாராலும் விலங்குகள் போல் வாழ முடியாது.
<<<
👌🏽

>>>
கடவுள் நமக்கு சிந்திக்கும் திறனைக் கொடுத்துள்ளார் என்றால் அதைப் பயன்படுத்தத்தான். அதைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் நாத்திகம் ஆகும்.
<<<
🤔

தொல்:

இங்கு கடவுள் என்பது இயற்கையையே குறிக்கும், என் கருத்தில். இயற்கையும் இறைவனும் ஒன்றே.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தக்கவாறு நான் அச்சொல்லைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை.

ஆத்திகர்கள் அனைவரும் கடவுள் என்றால் என்ன என்று ஒரே கருத்தைக் கொண்டிருக்கவில்லை. சிலர் முருகன், சிவன்... போன்ற உருவத்தில் கடவுள்(கள்) இருப்பதாக நினைக்கிறார்கள். சிலர் அவை நாம் உருவாக்கிய உருவங்களே என்றும் அவை அடையாளங்களே, குறியீடுகளே என்றும் ஒப்புக் கொள்கிறார்கள்.

நம் கருத்தைப் பிறர் சிந்திக்க வைக்க உதவக் கூடிய‌ எந்த உபாயத்தையும் பயன்படுத்தலாம். ஆனால் அதைத் தந்திரமாகவோ, மேதாவித்தனமாக இல்லாது பிறர் நம் திறந்த மனத்தை, நம் கருத்துகளிலும் தவறுகள் இருக்கலாம் என்று நாம் உண்மையில் நினைப்பதை உணரும் வகையில் இருந்தால் தான் பயன் விளையும்.

பெரியார் கூட வறட்டுப் பிடிவாதமாக இல்லாமல், கடவுள் நேரில் வந்தால், ஒப்புக் கொள்கிறேன் என்றே சொன்னார்.

ஆனால் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், தன்னுடைய சமன்பாட்டிற்கும் கடவுளுக்கும் போட்டி என்றால், தன் சமன்பாடே சரி என்றார். அதாவது ஒரு வகையில் பிடிவாதம் செய்தார்,அவர் அறிவியல் என்பது பல தவறுகளைச் செய்து ஒப்புக் கொண்டு மாறி வருவது என்பதையும் அறிந்திருந்தும் கூட.

பரிதி:

இந்தக் கருத்துடன் நான் உடன்படுகிறேன். ஆனால் என் ஐயம் இதுவன்று. (நான் விளக்கியிருக்கவேண்டும். மன்னிக்கவும்!)

எனக்கு இது என்னவென்று புரியவில்லை:
"சிந்திக்கும் திறனை...ப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் நாத்திகம் ஆகும்"


தொல்:

கடவுள் தந்த கைகளை, கால்களைப் பயன்படுத்தாவிட்டால் வாழ முடியுமா? 

கைகளையும் கால்களையும் பயன்படுத்தி, வளர்த்து, பலமுள்ளதாக ஆக்கிக் கொள்கிறோமே.

கடவுள் நம்மைப் படைத்தார் என்று எண்ணுபவர்கள் நமக்கு சிந்திக்கும் தன்மையையும், ஆய்வு செய்யும் ஆர்வத்தையும் அவற்றை அதே போல் பயன்படுத்தி, வளர்த்துக் கொள்ளத்தான் கொடுத்துள்ளார் என்று உணரலாமே. அதை விடுத்து, சொல்வதை அப்படியே நம்பினால் போதும் என்றால் அந்தத் தன்மைகளை (குணங்களை) நமக்குக் கொடுத்திருப்பாரா?

கைகளை முறுக்குவது போல் உடல் உள்ளுறுப்புகளை முறுக்க முடியுமா? ஆக, நம்மால் செய்யக் கூடியதையும் செய்ய இயலாததையும் இயற்கை / இறைவன் வகுத்து உள்ளது அவற்றை அப்படி அப்படிப் பயன்படுத்தத்தானே?

செய்யும் தொழிலே தெய்வம்
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு (கர்ம யோகம்)

எனவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் சிந்தனையைக் கிளறுவ‌தற்கு, நான் நாத்திகம் என்பதற்குப் புது வரையறை கொடுக்கின்றேன். அதே போல் பகுத்தறிவாளர், சமத்துவ நோக்குடையவர்களிடம் மெய்யுணர்தல் என்பதைப் பயன்படுத்துகிறேன்.

கடவுளின் படைப்பைச் சரியாக வளர்த்துக் கொண்டு பயன்படுத்துவதே உண்மையான ஆத்திகம் (கடவுளை வழிபடுதல்). அதைப் புறக்கணிப்பது தான் 'கடவுளை நம்பாத' நாத்திகத்தை விட மோசமான நாத்திகம் (கடவுளை அவமதித்தல்).

நான் ஆன்மீகத்தைப் (அதாவது மெய்யுணர்வு, நிறுவன மதங்கள் அல்ல) படித்துக் கேட்டுப் புரிந்து கொண்ட அளவில், அது ஆன்ம விசாரணை (வினா எழுப்பி விசாரித்தல், ஆய்வு செய்தல்) என்று தான் எல்லா இடங்களிலும் (ஆன்மீக வணிகர்களைத் தவிர்த்து) சொல்லப் பட்டுள்ளதே தவிர ஆன்ம நம்பிக்கை என்று சொல்லப்படவில்லை.

இறை வழிபாடு இறை ஆராய்ச்சிக்கு (மெய்யுணர்தல்) வளர வேண்டும். ஆனால் இறை வழிபாடு வெறும் சடங்கு, விழா... போன்ற நிலைகளில் முடங்கி விடுகிறது.

அதே போல் பகுத்தறிவு என்பது இறை மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு... போன்ற நிலைகளில் முடங்கி விடுகிறது. அதற்குப் பதிலாக அது மேலும் வளர்ந்து உள்ளதை உள்ளபடி உணரும் மெய்யுணர்வாக முதிர்ச்சி அடைய வேண்டும். 

இரண்டிற்குமே கேள்வி கேட்பதைப் பாதியில் (நமக்கு ஏற்கனவே உள்ள கருத்துகளுக்கு முரண்படும் போது) நிறுத்தி விடக் கூடாது.

மெய்யுணர்வு என்பது மிக எளிமை. உள்ளதை உள்ளபடி உணர்தல். அதாவது எந்தக் கருத்துக் கண்ணாடியும் (conceptual lens) இல்லாமல் இருப்பை உணர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை ஆய்வு செய்து, ஊகித்து, உள்ளுர்ணதல். இதற்குப் பொது அறிவு, அறிவியல், அனுபவம், தத்துவம்... எல்லாம் பயன்படும்.

அதற்குக் கடவுளை நம்புவதும் தேவையில்லை. நம்பாமையும் அவசியமில்லை. அவை இரண்டும் மற்றவை போன்ற‌ கருத்துக் கண்ணாடிளே என்பதை விசாரணையின் ஒரு கட்டத்தில் தெரிந்து கொள்ளும் வரை. 

ஒத்த கருத்துடைவர்களே ஒவ்வொரு பக்கத்திலும் (பகுத்தறிவாளர்கள், மதவாதிகள், சாதிப் பற்றாளர்கள், சமத்துவ விரும்பிகள்...) அவரவர்களுக்குள் பேசிக் கொண்டு இருந்து என்ன பயன்? 

நாம் மாற்றுக் கருத்துள்ளவர்களிடம் எப்படி நம் கருத்துகளைக் கொண்டு சேர்ப்பது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். அதற்கு நாம் முதலில் மாற வேண்டும். பிறர் கருத்துகளையும் பொறுமையுடன் கேட்டுப் பழக வேண்டும். ஆனால் ஒத்த கொள்கையுடைவர்களிடையே கூட அக்கொள்கை சார்ந்த சிற்சில கருத்து வேறுபாடுகளைச் சகித்துக் கொள்ளும் பண்பு ஊறவில்லை. ஆக, நல்ல கொள்கைகள் மட்டும் போதாது. நல்ல பண்புகள் அவற்றை விட அவசியம், முக்கியம். இதையும் பிறர் சிந்திக்க வேண்டிப் பகிர்ந்து கொள்கிறேன். நான் நினைப்பதே சரி என்று அன்று.

பரிதி:

இப்போது புரிகிறது. நன்றி!

ஆம், ஒத்த கருத்துள்ளவர்கள் தமக்குள் பேசி உடன்பட்டுக்கொள்வது போதாது; மாற்றுக் கருத்து உள்ளவர்களுடன் பேச வேண்டும்.

Monday 12 June 2023

TREASURE YOUR FRIENDS THE TOP OF YOUR LOVE HIERARCHY

 2021-08-29

TREASURE YOUR FRIENDS THE TOP OF YOUR LOVE HIERARCHY

https://aeon.co/essays/treasure-your-friends-the-top-of-your-love-hierarchy

Excerpts:

  • Being within a supportive social network reduced the risk of mortality by 50 percent.
  • There’s a powerful relationship between the characteristics of your social network and your mental and physical health, your longevity and your general life satisfaction.
  • study after study has reinforced this conclusion, to the extent that we can now argue that the nature of your social network, and the strength and health of the relationships within it, is the biggest single factor influencing your health, happiness and longevity. They are your survival.
  • It’s clear that, in opposition to the accepted order of things, for many of us, it’s our friendships that need to be at the top of our love hierarchy if we want to live long and happy lives. Friends can be our sources of intimacy and nonjudgmental support, they can be our life’s companions, they can be our family and our co-parent. Put bluntly, they’re our survival. But this means that we must decide to actively nurture and invest in them to benefit from their many rewards. Our unique ability to love many beings in many ways means that we all have the opportunity for love in our lives. We just have to lift our eyes to the horizon and broaden our perspective to see all the love that is on offer. And for many of us that will mean celebrating, treasuring and reasserting the love we have for our friends.

Dunbar's Number - 150 (5 + 10 + 135)

On average the maximum number of social network for each human being is approx. 150 (persons). This is called Dunbar's number named after the evolutionary psychologist Robin Dunbar who discovered it. 

This can be imagined as three concentric circles. In the inner most we will have approx. 5 people with whom we will spend 40% of our time. In the next circle we will have approx. 10 people. Outermost is the rest of our contacts about 135 people.


திருக்குறளில் நட்பு

திருக்குறளில் 13 இயல்களில் 'நட்பியல்' என்ற இயல்தான் நான்காவது அதிகமான அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

அறத்துப்பால் (38 அதிகாரங்கள்)
பாயிரம் (4)
இல்லறவியல் (20)
துறவறவியல் (13)
ஊழியல் (1)

பொருட்பால் (70 அதிகாரங்கள்)
அரசியல் (25)
அமைச்சியல் (10)
அரணியல் (2)
கூழியல் (1)
படையியல் (2)
நட்பியல் (17)
குடியியல் (13)

இன்பத்துப்பால் (25 அதிகாரங்கள்)
களவியல் (7)
கற்பியல் (18)







Anna Machin

is an evolutionary anthropologist, writer and broadcaster whose work has appeared in the New Scientist and The Guardian, among others. She is the author of The Life of Dad: The Making of the Modern Father (2018) and Why We Love: The New Science Behind our Closest Relationships (forthcoming, 2022). She lives in Oxford.

4,000 words

Sunday 19 February 2023

கதை - ‍‍கருத்து - செயல்

2023-02-18

கதை - ‍‍கருத்து - செயல்

'என்ன கதை விடுறே' என்று கேட்போம், ஒருவர் சொல்வதில் உள்ள நம்ப முடியாத் தன்மையைக் குறித்து!

ஆனால் நமக்கு நாமே தனி மனிதனாக, குடும்பமாக, குழுவாக, நிறுவனமாக, கட்சி, சங்கம், இயக்கமாக‌, சமுதாயமாக, தேசமாக‌, மனித உயிரினமாக... சொல்பவை எல்லாமே கதைகள் தாம்! அறிவியல் உள்பட! மதம், கலை, இலக்கியம், புராணம், இதிகாசம், பண்பாடு, மரபு, நாகரிகம், வரலாறு மட்டுமல்ல, அறிவியலும் ஒருவகைக் கதைதான்!

கதையில் நல்ல கதை என்று நாம் சொல்வதில்லையா? எந்த அடிப்படையில்? அதுபோல் தான், அறிவியல் ஒரு நல்ல கதை,  அதாவது கதையின் பல பிரிவுகள் ஒன்றொன்று ஒன்று நன்கு பொருந்தி வருகின்றன என்ற பொருளில், எப்போதும் நன்மைக்கு வழிவகுக்கும் என்ற பொருளில் அன்று.

அதே போல் கதைகளில் பல வகை உண்டு. காதல் கதை, துப்பறியும் கதை, மர்மக் கதை, திகில் கதை, அறிவியல் கதை (science fiction)....

ஒவ்வொரு கதை வகையையும் எடை போட, அளவிட‌ நாம் வெவ்வேறு வரையறைகள், அலகுகள், பரிமாணங்கள், எதிர்பார்ப்புகள் வைத்துள்ளோம். அதே போல் கலை, இலக்கியம், புராணத்தில் நாம் ஏற்றுக் கொள்வதை வரலாறு, அறிவியலில் ஒப்புக் கொள்ள மாட்டோம்.

கதைகளிலும் பொறுப்பானவை,பொருந்தி வருகின்றவை, பெரும்பாலோர் நலத்துக்கு உகந்தவை இவற்றிற்கு எதிரானவை என்பன உண்டு. ஆனால் எல்லாம் கதைகளே! கதைகள் என்ற அளவில் அவை உண்மை. உண்மை என்ற அளவில் அவை வெறும் கதைகள். அதாவது அவற்றை பொறுப்புணர்ச்சியோடு (sincere) அணுக வேண்டும்; தீவிரமாக  (serious) எடுத்துக் கொள்ளக் கூடாது. இது கதைகளை மாறும் சவால்களுக்கு ஏற்ப‌ப் புதுப்பிக்கத் தேவையான சுதந்திரத்தை நமக்கு வழங்கும்.

இந்த முகப்புரையும் கதைக‌ள் பற்றிய கதைதான்! இதை வேறுவிதமாக அளப்போம் (இரு பொருளில்)!

நாம் ஏற்கனவே பகிர்ந்து கொண்டதே: இந்தியா, இந்திய தேசியம் என்பது ஒரு கட்டுக் கதை. தமிழ்நாடு, தமிழ் தேசியம் என்பதும் கட்டுக் கதையே. பெரும்பாலும் ஒரு கதையை ஏற்றுக் கொண்டவர்கள் மறு கதையை அதே போல் ஏற்றுக் கொள்வதில்லை. ஏன் என்றால் அவர்களுக்குப் பிடித்த ஒரு கதையே முழு உண்மை என்று நம்புவதுதான்.

நோக்கம், பயன் இல்லாத கதை இல்லை. என்ன நோக்கம், யாருக்குப் பயன் என்பதைப் புரிந்து கொள்வதே முக்கியம்.

"But what (i.e., energy derived from fossil fuels) drives our machines won’t change until we change what drives our ideas." (from the below article)

இந்திய தேசியக் கதை உண்மையில் பெரும்பாலோர் நலங்களை (மதம், மொழி, மாநிலம், பண்பாடு, மரபு, சமுதாய நிலை, பொருள்நிலை...) ஒருங்கிணைக்கப் பயன்பட்டால், அதை எதிர்த்து தமிழ் தேசியம் போன்றவை இல்லாமல் அதை ஒத்து (வேற்றுமையில் ஒற்றுமை) இயங்கும். 

'உண்மையில்' என்பது முக்கியம். அப்படியாகச் சொல்லப் படலாம்; பரப்பப் படலாம். ஆனால் நடைமுறையில் ஏமாற்று வேலையாக இருக்கலாம். அது தமிழ் தேசியத்திற்கும் பொருந்தும்.

எந்தக் கதையும் தனியாக உருவாகவோ நிற்வோ இயலாது. கதைகள் மேல் பிற கதைகள் கட்டப்படும்.

இந்தப் புரிதலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த நூறு ஆண்டுகளாக நமக்கு நாமே பழந்தமிழர் வரலாற்றுச் சிறப்பு, சனாதன வர்ண ஏற்றத் தாழ்வு எதிர்ப்பு அடிப்படையில் சொல்லிக் கொண்ட தமிழ், தமிழர் மறுமலர்ச்சிக் கதை என்பது பரவலான பெரும்பாலோர் சமுதாய நிலை, பொருள் நிலை வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. அதனால் பல புதிய சிக்கல்கள், சவால்கள் எழுந்துள்ளன என்பதையும் காண்கிறோம்.

இது போன்ற நன்மை தீமை சாதக பாதகங்கள் எல்லா சமுதாயம், நாட்டிலும் நிகழ்ந்துள்ளன, நிகழ்ந்து வருகின்றன.

கதைகள் நிலையாக இருக்க முடியா. அவை புதிய சூழல், சவால்களுக்கு ஏற்பத் தொடர்ந்து புதுப்பிக்கப் பட வேண்டும்.

இத்தகைய கதைகள் தொன்மைவியல் (mythology) எனப்படுகின்றன. When we say it is a myth in day-to-day parlance we mean it is a lie, illusion, false, not-real etc. But myth has a different, deeper meaning. Myth is an image by which we make sense of ourselves and the world.

தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாய். தமிழ்க்குடி உலகின் மூத்தகுடி என்பன நம் myths.

கதைகள் (myths) என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் அவற்றை விட்டு நாம் நீங்க முடியாது. இதை எழுதுகிறவர், படிப்பவர் எவரும் இக்கதைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். நாம் உருவானதே, வாழ்வதே இக்கதைகளின் வழியாகத்தான். நம்மையும் நாம் விரும்பும் வெறுக்கும் கதைகளையும் பிரிக்க முடியாது.

இத்தகைய கதைகள் வெற்று வெட்டுகள் அல்ல. அவை ஆற்றலுடையவை. அவற்றால், அவற்றிற்காக‌ நாம் எத்தகைய தியாகங்களைச் செய்யவும் எத்தகையக் கொடுமைகளைப் புரியவும் ஆளாகிறோம்; செய்கிறோம், புரிகிறோம் என்பதற்கும் செய்யவும் புரியவும் ஆளாகிறோம் என்பதற்கும் ஆழமான வேறுபாடு உள்ளது.

கதைகள் நம்மை உந்தி எழுச்சி பெற வைக்கலாம் அல்லது அழுத்தி அடிமை ஆக்கலாம்.

இன்று தமிழர்களாக, இந்தியர்களாக, ஆசியர்களாக‌, மனிதர்களாக...நம்மை நோக்கியுள்ள சவால்களுக்குக்கேற்ப நம் கதைகளை நாம் புதுப்பிக்க வேண்டும்.

"புத்தர்பிரான் சொன்னதுபோல் எல்லாமே அழியக்கூடியவை. சாசுவதமானவை அல்ல. மனிதனும், சமுதாயமும், கோட்பாடுகளும் பரம்பரை மரபுகளும், மார்க்கங்களும் மாறிக் கொண்டே இருக்கும். முந்தியது அழிந்து புதியதற்கு வழிகாட்டும். வருங்கால‌ சந்ததி என் பணிகளைத் திருத்தும், தொடரும், வளர்க்கும். இது ஜீவன யாத்திரை. இதுதான் தலை சிறந்த மதம், சமயம், சமத்துவ சித்தாந்தம். நிலை கொள்ளாத தொடர் பயணத்தால்தான் வாழ்க்கை நெறியாக்கப்பட முடியும்" ‍ ராகுல சாங்கிருத்தியாயன்

'வால்காவிலிருந்து கங்கை வரை' ‍(இந்தியில் ராகுல சாங்கிருத்தியாயன். தமிழில் டாக்டர் என்.ஸ்ரீதரன்) - பதிப்புரையிலிருந்து (கவிதா பப்ளிகேஷன், சென்னை 17 26/01/2016)

தொடர் பயணம் என்பது கதைகள் தொடர்ந்து புதுபிக்கப்படுதலால் மட்டுமே சாத்தியமாகும்.

கீழ்க்கண்ட கட்டுரை சற்று நீளமானதுதான். ஆனால் நம்மை நோக்கியுள்ள ஆபத்துகளை புறக்கணிக்காமல் மறைக்காமல் நாம் கடந்த சில பத்தாண்டுகளில் அடைந்துள்ள, அடைந்து வருகின்ற ஆரோக்கியமான மாற்றங்களை நாம் எப்படி கவனிக்கத் தவறுகிறோம்; எப்படி அவற்றை நம் கதைகளில் சேர்க்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

Before we can reach the new future we should imagine and tell ourselves new stories! Whatever we achieved as human beings we achieved only via the stories we told ourselves.

In one sense, based on our emotional baggage, we are not any different from our prehistoric ancestors, but in another sense, based on our rule of law, basic human rights, women's liberation, education, health system, production and distribution, checks and controls, local and global government (all of them are not perfect and go up and down) we are totally different; we are modern and that journey continues; we are all part of it; the journey is created by our lives.

https://www.theguardian.com/news/2023/jan/12/rebecca-solnit-climate-crisis-popular-imagination-why-we-need-new-stories

So much is happening, both wonderful and terrible – and it matters how we tell it. We can’t erase the bad news, but to ignore the good is the route to indifference or despair

Thu 12 Jan 2023 06.00 GMT

Every crisis is in part a storytelling crisis. This is as true of climate chaos as anything else. We are hemmed in by stories that prevent us from seeing, or believing in, or acting on the possibilities for change. Some are habits of mind, some are industry propaganda. Sometimes, the situation has changed but the stories haven’t, and people follow the old versions, like outdated maps, into dead ends.

We need to leave the age of fossil fuel behind, swiftly and decisively. But what drives our machines won’t change until we change what drives our ideas. The visionary organiser adrienne maree brown wrote not long ago that there is an element of science fiction in climate action: “We are shaping the future we long for and have not yet experienced. I believe that we are in an imagination battle.”

In order to do what the climate crisis demands of us, we have to find stories of a livable future, stories of popular power, stories that motivate people to do what it takes to make the world we need. Perhaps we also need to become better critics and listeners, more careful about what we take in and who’s telling it, and what we believe and repeat, because stories can give power – or they can take it away.

To change our relationship to the physical world – to end an era of profligate consumption by the few that has consequences for the many – means changing how we think about pretty much everything: wealth, power, joy, time, space, nature, value, what constitutes a good life, what matters, how change itself happens. As the climate journalist Mary Heglar writes, we are not short on innovation. “We’ve got loads of ideas for solar panels and microgrids. While we have all of these pieces, we don’t have a picture of how they come together to build a new world. For too long, the climate fight has been limited to scientists and policy experts. While we need their skills, we also need so much more. When I survey the field, it’s clear that what we desperately need is more artists.”

....

...

(read the full article using above link)