Tuesday 5 April 2011

விளையாட்டுப் போர்

Anthropologically game is a substitute for war and hunting instincts of human animal. All animals are territorial and we are no different. We CANNOT be different. When the first cell formed its cell wall billions of years ago, private property and territoriality started along with that. The constant war/competition/conflict between pathogens and antigens in our bodies is propagating up the level (physics-->chemistry-->biology-->psychology-->sociology). This is same as the competition between various thought-streams to grab our attention. Cosmologically gravity and sub-atomic forces are trying to win over the other and enacting the universal drama.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உள்ளது.

கோயில் வாசல் பிச்சைக்காரனின் இடத்திற்குக் கூட அடிதடி உண்டு. எந்த வாசலில் எந்த‌ப் படியில் இருந்தால் எவ்வளவு வருமானம் இருக்கும் என்பதற்கும் கணக்கு உண்டு. அதனால் போட்டியும் உண்டு.

எனவே விளையாட்டுப் போட்டிகள் நிழல் யுத்தமாகப் பார்க்கப் படுவதைத் தவிர்க்க முடியாது. இங்கிலாந்திற்கும் ஜெர்மனிக்கும் கால்பந்து போட்டி நடந்தால் இரண்டாம் உலகப் போர் நினைவுகள், உணர்ச்சி அலைகள் மக்களையும் ஊடகங்களையும் தாக்குவதை இங்கு (இங்கிலாந்தில்) பார்க்கிறோம்.

ஐக்கிய இராச்சியத்திலிருந்து (United Kingdom) இன்றும் தனிநாடு கோரிக் கொண்டு இருக்கும் ஸ்காட்லாண்ட் தனியாகக் கால்பந்து அணி வைத்துள்ளது. உலகக் கால் பந்து போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான அணிக்கு ஆதரவளிக்கும் ஸ்காட்டிஷ் மக்களும் உண்டு. அரசியலும் விளையாட்டும் ஒட்டு உறவில்லாமல் தனித் தனியாக இல்லை.

போரில் விளையாட (வெற்றி பெற) முடியாதவர்கள் விளையாட்டில் போரிடப் பார்க்கிறார்கள்.போரிலேயே வெற்றி பெற்று விட்ட‌வர்கள் விளையாட்டில் வீழ்ந்து விட விரும்பவில்லை.

விளையாடத் தணியும் வேட்டை வேகம்
விளையாட்டுப் போரோ வெற்றி மோகம்
        - 'நம்மை அறிந்தால்'  - சரியார்
***

இது இப்படி இருக்க, விளையாட்டு என்பது போலி யுத்தம் மட்டுமன்று அது நீடித்த‌ சம்போகம் (extended orgasm) என்ற பார்வையும் உண்டு. அதாவது படுக்கையில் விளையாட இயலாதவர்கள் விளையாட்டில் (கிறங்கிப்) படுத்துக் கிடக்கிறார்கள். Sex is a strong force in terms of attraction but really a very weak force in terms of retention of attention. That is why human society has to invent so many ways of re-kindling ourselves of 'sex'. Even then sex is a fast-(e)motion. All said and done, it is done very quickly (except in porn movies). But we want more and more and games are there and there. Testosterone levels of football fans have been measured and confirmed to be comparable to the time of copulatory flooding. In England there is a joke that given the choice of having sex and watching a football match, men will always go for the football match. When he can have 90 minutes of orgasmic match, a puny few minutes with a women is no match!

All arts too, to some extend provide extended orgasm. There is nothing right or wrong about this. It is helpful to understand that the underlying neurological / chemical basis is same. In a way writing blogs like this is no different - a kind of trance (getting high) like state for me.
***

அதுவும் அப்படி இருக்க (சரியார் உளறக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடவதாய் இல்லை!) விளையாட்டு பெரும் வணிகம் என்று சொல்லத் தேவையே இல்லை. இங்கிலாந்தில் முக்கியமான கால்பந்து போட்டியின் போது விற்பனை ஆகும் மதுபான வகைகளின் வணிக இலாபம் விளையாட்டு விஷயமன்று. கொள்ளையென்றால் கொள்ளையோ கொள்ளை!

தொலைக்காட்சிகளுக்குக் கிடைக்கும் விளம்பரம், கடைகளில் ஆகும் விற்பனை, மக்கள் மறந்தும் போகும் பல பிரச்னைகள் என்று மந்தைகளின் மேயப்பர்களுக்குக் கொண்டாட்டம் தான். நமக்கோ நல்ல தேசிய போதை, மது போதை, வெற்றி/தோல்வி போதை, நீடித்த சம்போகம், நெடுங்கால அடிமைத் தனம்!
***

இதையெல்லாம் சீர்திருத்திச் செம்மையாக்கி புது உலகம் காணப் புறப்பட்டு நம்மைப் போன்றோர் ஆடும் 'சமுதாய முன்னேற்ற‌' விளையாட்டு இதற்கு எந்த விதத்திலும் வேறுபாடு இல்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா? 'கிரிக்கெட் போதை தேவையா' என்று கூடத்து சோபா கிரிக்கெட் வீரனைக் கேட்டால் அவன் ஏற்றுக் கொள்வானா? நம் போதை நமக்கு. அவன் போதை அவனுக்கு.

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 'விலங்குப் பண்ணை' கதையில் கடைசியில் என்ன ஆகும்? அவ‌ரே எழுதிய‌ '1984' புதின‌த்தின் மைய‌க் க‌ருத்து என்ன? ஆதிக்கவாதிகள் தேசிய எல்லைகளைக் கடந்து ஒன்று சேர்ந்து கொள்வார்கள். மனிதனும் பன்றியும் சமரசம் செய்து கொண்டு மற்ற மாக்களை (விலங்குகளை) மேய்ப்பார்கள். ஆனால் மாக்களைப் பிரித்து மேய்க்க வேண்டுமென்றால் அவை ஒன்று சேர்ந்து விடாமல் இருக்க பல‌ (தேசியம் உட்பட) போதைகளை ஊட்டிக் கொண்டே இருப்பார்கள்.

இதை ஏதோ ஒரு பிரிவினரின் திட்டமிட்ட சதி என்று பார்ப்பது புரியாதத் தனம். யார் மேயப்பர் ஆனாலும் அதைத் தான் செய்வார்கள் என்பது இப்போது புரிந்து கொள்ள வேண்டிய விதம்.

கிரிக்கெட் போதைக்குப் பதிலாகக் கபடி போதை இதே போல் இருந்தால் மகிழ்வோமா?

இங்கிலாந்தில் கால்பந்து கிட்டத்தட்ட ஒரு மதம் போல் ஆகி விட்டது. அதிலும் தனித்தனிக் கிளப் (Club) பற்று எல்லோருடைய ஓர் அடையாளம் போல் கருதப் படுகிறது. 'அவனா, அவன் இந்த கிளப் ஆதரவாளன், பிறகு எப்படி இருப்பான்?' என்ற கேலி, கிண்டல் இங்கு வழக்கமானது. அதற்கு கிறித்துவ மதப் பற்று வீழ்ச்சியும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

அதை விட முக்கியக் காரணம் என்னவென்றால் மனிதனால் 'மனிதனாக' மட்டும் இருக்க முடியாது. அவன் எந்த நிலையிலும் எங்கு இருந்தாலும் எப்படியாவது உட்குழு, வெளிக்குழு (in group, out group) பிரிவை உண்டாக்கி விடுவான். அது அவன் இயல்பு. அது அவன் இயக்கம். இதுவும் ஒரு மாந்த இயல் (anthropology) பார்வை ஆகும்.

ஒரு கடவுள் வணக்கத்தைக் கொண்ட மதங்கள் முதற்கொண்டு ஒரு வகுப்பறை, குடும்பம் வரை மனிதன் என் கட்சி, உன் கட்சி பிரிவினை 'நோயால்' பீடிக்கப்பட்டவன். அம்மாவும் அப்பாவும் குழந்தையைக் கொஞ்சம் போது கூட 'நீ யார் செல்லம், அம்மா செல்லமா, அப்பா செல்லமா?;', 'உனக்கு அம்மாவைப் பிடிக்குமா, அப்பாவைப் பிடிக்குமா?' என்று பிரித்தே பார்க்கிறோம், பழகுகிறோம்; பழக்குகிறோம். உள்ளே போடும் போது கற்களாய்ப் போட்டு விட்டு வெளியே எடுக்கும் போது கற்கண்டாய் வரும் என்று எதிர் பார்த்தால் எப்படி?

உலகின் பல நாடுகளிலிருந்து மக்கள் சென்று சேர்ந்து ஆரம்பித்த அமெரிக்க நாடு சில பத்தாண்டுகளுக்குள் மீண்டும் அதே 'தேசிய' நோயால் பீடிக்கப் பட்டு விட்டதே. ஏனெனில் மனித விலங்கின் இயல்பு அது. அதிலிருந்து தப்ப வழியில்லை. ஆனால் அதைச் சிலர் புரிந்து கொள்ள வழியுண்டு. அச்சிலர் புரிந்து கொண்டு சொல்லிக் கொண்டும் செய்து கொண்டும் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள்.

நாம் அப்படிப்பட்டவர்களே. தேசியத்தில் வீழ்ந்து விடாமல், தேசியத்தில் மயங்கி விடாமல், தேசியத்தை மறுத்து விடாமல், தேசியத்தின் தேவை, இயல்பைப் புரிந்து கொண்டு அதற்குப் பலியாகாமல் பயன்படுத்திக் கொண்டு செல்லும் பாதையை அமைத்துக் கொண்டு இருப்பவர்கள்.

எது நம்மை பிணைக்கிறதோ அதுவே நம்மைப் பிரிக்கவும் செய்கிறது என்று தெரிந்து கொண்டு, புரிந்துக் கொண்டு, உணர்ந்து கொண்டு, பின்பற்றி நடைமுறைப் படுத்திக் கொண்டு செல்வோமாக‌!

“What is necessary to change a person is to change his awareness of himself.”
        - Abraham Maslow (American Philosopher and Psychologist, 1908−1970)
***

No comments:

Post a Comment