Thursday 7 April 2011

எல்லாம் பிரம்மம் 4/5

2009-01-30

ஒன்னாயிருக்கக் கத்துக்கனும் - அந்த‌
உண்மையச் சொன்ன ஒத்துக்கனும் (திரைப்படப் பாடல்)

Being ONE (ஒன்னாயிருக்க‌) is remembering ONENESS.

சினிமா பார்க்கும் போது அதில் ஈர்க்கப்பட்டு நம் உடல் மனம் அதனால் பாதிக்கப் படுகிறது. சட்டென்று இது நடிப்பு, போலி என்ற நினைவு வருகிறது. மீண்டும் காட்சிகள் (நடிப்பு, வசனம், பாடல், இசை...) நம்மை மறக்கடிக்கின்றன. இரண்டும் மாறி மாறி வந்து போகின்றன.

நனவு வாழ்க்கையிலும் அன்றாடம் அப்பா, மகன் (அம்மா, மகள்), நண்பர், ஊழியர் எனப் பல வேடங்களில் மாறி மாறி அவ்வவ்வேடத்திற்கு ஏற்ப இயங்குகிறோம். எந்த ஒரு வேடத்தையும் மறுத்து / மறந்து அடுத்த வேடம் பூணுவதில்லை.

இயற்கையே எல்லாம் என்றால் நான் இயற்கையே. வேடங்கள் மாறுகின்றன. கல், மண், மரம், செடி, கொடி, புல், பூண்டு, விலங்கு, மனிதன்... ஒன்றை மறுத்து மற்றொன்று இல்லை. அப்பா, மகன், நண்பன், ஊழியன் என வேடங்கள் விரைவாக மாறுகின்றன. கல், மண், புல், பூண்டு, விலங்கு, மனிதன் என வேடங்கள் மெதுவாக மாறுகின்றன.


அத்வைதத்தால் அடங்கலாம். அறிவியலால் ஆய்வு செய்யலாம். பொது அறிவால் புரிந்து கொள்ளலாம். அனுபவத்தால் எய்தலாம். எப்படி வந்தாலும் உண்மை ஒன்று தான்.

அத்வைதம்: நான் யார் என்று விசாரணை செய்து அப்படிக் கேட்கும் / பார்க்கும் ஒன்று தான் நிலைத்த உண்மை, மற்றவையெல்லாம் அதன் / அதில் தோற்றங்களே. அது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட, பெயர், வடிவம், குணம், நிறத்திற்கு அப்பாற்பட்டத் தன்னைத் தானே அறியும் 'அறிவுணர்வு' ஆகும். அது இல்லாத போது மற்றெதுவும் இருக்கிறது, இல்லை என்று வரையறை செய்ய முடியாது, வெறும் நம்பிக்கையாகவே இருக்க முடியும். அந்நம்பிக்கையும் ஒரு தோற்றமே.

அறிவியல்: தற்செயல் மரபணு மூட்டேஷன் (random genetic mutation) + இயற்கைத் தேர்வால் (natural selection) எல்லா உயிர்களும் அதன் பண்புகளும் வந்தன என்றால் இன்றைய உலக, உயிரின நிலைக்கும் நினைப்புக்கும் அதுவே காரணம். 'நான்', 'எனது' என்று சொல்லிக் கொள்வதும் அதன் இயக்கமே. இதை எழுதுவதும் அதுவே. இந்த 'நான்' என்பதே அதன் விளைவு என்று 'நான்' முடிவு செய்ய முடியுமா? அப்படி முடிவு செய்ய முடியும் / முடியாது என்பதும் அதன் விளைவாகவே இருக்க முடியும். பரிணாம வளர்ச்சி என்பதை நம்புவதும் மறுப்பதும் கடவுளை நம்புவதும் மறுப்பதும் அதன் விளைவாகவே இருக்க முடியும். இதில் எந்த இடத்தில் / கட்டத்தில் மூட்டேஷன் + இயற்கைத் தேர்வு அல்லாத, மீறிய ஒரு கூறு எப்படி வர முடியும்?

இதற்கு மூட்+இதே (அறிவியல் வழி) தரும் பதில் emergence phenomena. என்றாலும் வேதியல் விதிகள் இயல்பியல் விதிகளுக்குக் கட்டுப்பட்டதே (மீறியவை அல்ல). உயிரியல் விதிகள் (கோட்பாடுகள்) வேதியல் விதிகளுக்குக் கட்டுப்பட்டதே (மகிழ்ச்சி, சோகம் என்பவை அடிப்படையில் வேதியியல் வினைகளே). சமூகவியல் உயிரியலுக்குக் கட்டுப்பட்டதே. Physics --> Chemistry --> Biology --> Psychology --> Sociology என்று நாம் (மூட்+இதே) கட்டிய கோட்டையிலிருந்து 'நான்' தப்ப வழியே இல்லை. அல்லது 'நான்' என்பதே இல்லை. அல்லது அந்தக் கோட்டையே 'நான்' தான். மூட்டேஷன்+இயற்கைத் தேர்வே நான். நானே மூட்+இதே.

பொது அறிவு: எல்லாம் இயற்கையே என்றால் நான் என்ற உணர்வும் செயலும் இயற்கையே. இன்ப துன்பங்கள் நம் கருத்தே. உடல் வலி / வேதனை (உயிர்த் துறப்பு) என்பது கூட எதற்காக என்பதைப் (நாம் கொண்டிருக்கும் கருத்தைப்) பொறுத்து இன்ப துன்பமாக உணரப்படுகிறது. தன்னுடைய நிலையாமையைத் தெரிந்து இருந்தும் மயக்கத்தில் ஆட்டம் போடும் 'நான்' என்று பழிப்பதும் இயற்கையே. அப்படித் தன்னைத் தானே உணர்ந்து தன் அழியா இருப்பைக் காண்பதும் அதுவே.

No comments:

Post a Comment