Thursday 7 April 2011

எல்லாம் பிரம்மம் 3/5

2009-01-30

தமிழில் matter-க்கும் meaning-க்கும் பொருள் என்ற ஒரே சொல் இருப்பது அதன் ஒன்றிய நிலையைக் குறிக்கிறதோ? இந்தப் பார்வையில் 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு (25. அருளுடைமை: 247)' என்ற வரி பல கருத்துகளைப் பொதிந்து உள்ளதாகப் படும்.

  1. செல்வம் இல்லாதவருக்கு இவ்வுலகத்தில் வாழ்க்கை கிடையாது.
  2. பொருளாக (வெறுமையை / பிரம்மத்தை) பார்க்கும் மாயை இல்லாதவருக்கு இவ்வுலகம் என்பதே கிடையாது.
  3. பொருள் பொதிந்த (meaningful) பார்வை இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை (ஏனெனில் பொருள் இல்லாமல் - without meaning - இவ்வுலகம் இல்லை)
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளாணாம் மாணாப் பிறப்பு (36. மெய்யுணர்தல்: 351)

"பொருளாக இல்லாததைப் பொருளாக உணருவதால் மாயை (மருள்) பிறக்கிறது" என்று நாம் புரிந்து கொள்ளலாம். திருவள்ளுவர் சரியாக இதே கருத்தை எண்ணி எழுதியிருப்பாரா என்று யாரும் உறுதி கூற முடியாது.

எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு பிரச்னை யாருக்கு என்று விசாரித்து அறிவது தான்.
            - ரமணர்

தேடல் தான் (எல்லா விதமான தேடல்களும்) விளையாட்டும் விலங்கும். மனச் சிறையில் எந்த அறையில் இருந்தாலும் அது சிறை தான். அதைத் தாண்டி எதுவும் இல்லை. உண்மையில் சிறையே இல்லை. சிறையான தோற்றமே உள்ளது. எனவே அதை உடைத்து வெளியே செல்ல 'வெளியே' என்று எதுவும் இல்லை. தேடல் தான் சிறையின் தோற்றம். அதன் உண்மை புரிந்து விட்டால் தேடல் நின்றாலும் நிற்கா விட்டாலும் மகிழ்ச்சியோ கவலையோ இருக்காது. அப்படியே மகிழ்ச்சியோ கவலையோ எழுந்தாலும் அதன் போக்கில் எழும், பிறகு விழும். விலங்கு(விலாங்கு) விளையாட்டாக விளங்கி விடும்.

எத்தனைச் சுற்று சுற்றினாலும் எங்கெல்லாம் சுற்றினாலும் எவ்வளவு காலம் சுற்றினாலும் புதிதாகச் சென்று (வந்து) சேர வேண்டிய இடம் இப்போது இருக்கும் இடமே.

We shall not cease from exploration
And the end of all our exploring
Will be to arrive where we started
And know the place for the first time.
            - T.S.Eliot (English poet)

"...great poetry reaches into a well of understanding that logic cannot trap"
            - Darryl Reanney (Author of 'The Music of Mind')

ஜெயமோகன் பிரம்மம் அத்வைதப் போலியைக் கிண்டல் செய்தாலும் அத்வதைத நகலை (சட்டை, பேண்ட், கர்சிப் எல்லாம் துணி; யானை, யானைப் பாகன் எல்லாம் பிரம்மம்) சுட்டிக் காட்டாமல் இல்லை. என்ன செய்வது? போலிகள் எங்கு தான் இல்லை? கோபால் பல்பொடியிலிருந்து அத்வைதம் வரை போலிகளின் கும்மாளத்திற்குக் குறைவில்லை. எல்லாம் பிரம்மம்!

உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு
எதுவும் நடக்குமா?
அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை
நிறுத்த முடியுமா?

No comments:

Post a Comment