Monday 26 October 2020

பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி

பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி

2020-10-25

குழந்தைகளுக்கான தாத்தா/மாமாவின் பாடல்:

பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி
        பறந்து செல்வோம் வா
ஒட்டைச் சிவிங்கி ஒட்டைச் சிவிங்கி
        உயர்ந்து நிற்போம் வா
குட்டி முயலே குட்டி முயலே
        குதித்து ஓடுவோம் வா
சிட்டுக் குருவி சிட்டுக் குருவி
        சிரித்துப் பேசுவோம் வா


தொல்லானந்தாவின் ஆத்திச் சூடியும் அயோக்கியச் சூடியும்

2020-10-25

தொல்லானந்தாவின் ஆத்திச் சூடியும் அயோக்கியச் சூடியும்

ஆத்திச்சூடி

அமைதி கொள்
ஆளுமை பெறு
இலவசம் இழிவு
ஈட்டி வாழ்
உன்னை அறி
ஊரை உயர்த்து
எண்ணிச் செய்
ஏய்ப்பைத் தடு
ஐயம் தேவை
ஒத்து வாழ்
ஓய்ந்து உழை

நல்லவன் வாழ்வான்
நடிப்பவன் தாழ்வான்

============================

அயோக்கியச் சூடி

அடுத்துக் கெடு
ஆசைப் படு
இரக்கம் விடு
ஈதல் தடு
உண்மை இல்லை
ஊட்டம் கொள்ளை
எடுப்பது நியாயம்
ஏய்ப்பது நீதி
ஐயம் பரப்பு
ஒற்றுமை நடிப்பு
ஓரவஞ்சம் நடப்பு

நல்லவன் பிழைப்பான்
நடிப்பவன் தழைப்பான்

================================
2020-10-26

Shan:
நன்று.
இலவசம் இழிவு, ஈதல் தடு முரண்.
திருக்குறளில் கூட இந்த முரண் உண்டு. ஆத்திச்சூடியிலும் உண்டு.
ஏற்பது இகழ்ச்சி; ஐயமிட்டு உண்.

Thol:
சரி. Good spot.

Poetic licence to flout!

"திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா உன்
விருப்பம் கூடுமடா'

'ஓர் திருப்பம்' என்பது இலக்கணப் படி பிழை. 'ஒரு திருப்பம்' என்றுதான் வர வேண்டும். ஆனால், கவிஞர்களுக்கும் புலவர்களுக்கும் தனி இலக்கண உரிமம் தந்து விடுகின்றோம். 

'மாஞ்சோலை கிளிதானோ மான் தானோ' - 'மாந்தோப்பு' என்பது தான் வழக்கு. (நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவன் மாம்பழம் வேண்டும் என்றான், ஒன்று கொடுத்தாலும் வாங்கவில்லை இந்தக் கன்னம் வேண்டுமென்றான்...).

Having said that to justify, another justification follows from a different angle:

When scientist Neils Bohr visited Moscow University, he was asked to say something to mark his visit and he worte on the blackboard:

"Opposites are not contradictory but complimentary" (of course, he worte in Latin).

Example: Man and woman (by the way 'wo-man' is man with womb'); Life and death...

எதிரும் புதிருமானவை ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல; அவை ஒன்றையொன்று நிறைவு செய்பவை. ஆத்திச் சூடியும் அயோக்கியச் சூடியும் ஒன்றையொன்று நிறைவு செய்பவை.

Now this is to tease Shan!
உண்மையான (எ.டு.: ரமண மகரிஷி) ஞானிகள் (போலிகள் கோபால் பல்பொடியிலிருந்து ஞானிகள் வரை உண்டு), தனக்குள் தான் நிறைந்து இருப்பதால் (ஆண்/பெண் என்ற உடல் அடையாளம் இருந்தாலும், தன் சுய இருப்பை உணர்ந்து, அந்த உளவியல் அடையாளம் நீங்கியதால்), ஆண்/பெண் complimentary part(ner) - ஐத் தேடுவதில்லை என்பதை விடத் தேவைப்படுவதில்லை.‌ Externally for others it may look like the person has renounced certain things but from the person's view point, he didn't renounce anything; he didn't need them (anymore) at all.

இது (இஃது என்று வர வேண்டும், இலக்கணப்படி) ஒன்றும் மறைபொருள் புதிர் (mystical mystery) அல்ல (ஒருமைக்கு 'அன்று' என்பதுதான் இலக்கணப்படி சரி).

நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விஷயங்களில் அனுபவித்துள்ள ஒன்றே. நம்மில் யாரும், ஒரு நாள் உட்கார்ந்து அலசி முடிவு செய்து, இனிமேல் 'கோலி குண்டு' விளையாட வேண்டாம் என்று அதைத் 'துறக்க'வில்லை. அவ்விளையாட்டு தானாக வந்தது, தானாக ஒரு நாள் நம்மை விட்டு நீங்கியது (dropped off). Clinging is suffering; letting go is liberation!

APOLOGY-NOTE: This week I am on staycation (stay-at-home-vacation); so, expect more dross and bear with me!