2010-09-19
- While sleeping, do you dream or you see the 'dream'?
- What is the difference? Is there a difference?
- You seeing a movie and you doing (making) a movie are different. Aren’t they?
- So, are you seeing the dream or dreaming? What is your part in the dream? Watcher or maker?
- Within the dream, often there is a ‘you’ dream-character who suffers, enjoys etc. That ‘you’ dream-character is neither watcher nor maker but a ‘role’. Isn’t so?
- If that ‘you’ dream-character is a role who is the actor playing that role? Is he/she anybody else other than the dream-watcher? Same applies to all other roles in the dream.
- If yes, now, are you seeing the dream or dreaming? What is your part in the dream? Watcher or maker or player (actor)?
- It is not getting any simpler, isn’t it?
- But, it is so simple if we drop our conditioning and just observe.
- Watcher, maker, player are all the same one. The moment this is realized the dream may or may not continue but it can not ‘hold/bind’ you. If you are not bound at all, there is no question (need) of being free.
- If this dream-reality (sleep) is understood so, is the reality-dream (awake) any different?
- You may think dream and reality cannot be same. But, as long as sleep-dream lasted, it was ‘real’. Awake-dream can be so too.
- Anything appearing (objects and actions) in sleep-dream is sensed so. Anything appearing (objects and actions) in awake-dream is also sensed so.
- Is there anything (solid, concrete) apart from ‘sensing so’ in both dreams?
- Are you reading this text or are you aware of reading this text? Are you the watcher or the reader or both?
- Is there a separation between watcher (one who is aware) and reader?
- Is there a separation between watching and reading?
- Can there be reading with out watching (being aware of reading / sensing of reading)?
- Is the conceptual (false / illusion) split (reading and watching) clear?
- Now extend this understanding to other senses (touch, sight, smell, hearing, taste).
- Then extend this understanding to sensing, feeling, emotions, thinking, actions…
- Is there anything separate from ‘awareness’ of any-thing (objects, actions, sensing, feeling, emotions, thinking…)?
- Every thing is awareness and only awareness either in sleep-dream or awake-dream.
- You may say, ‘Sounds true, but I still feel the separation of me and other’.
- Yes, that is another thought or awareness of it. Is it anything else?
===================================================
- தூக்கத்தில், நீ கனவு காண்கிறாயா அல்லது கனவைக் காண்கிறாயா?
- என்ன வேறுபாடு? உண்டா வேறுபாடு?
- நீ திரைப்படம் பார்ப்பதும் திரைப்படம் எடுப்பதும் வேறுவேறு தானே? இல்லையா?
- எனவே, நீ கனவு காண்கிறாயா அல்லது கனவைக் காண்கிறாயா? கனவில் உன் பங்கு என்ன? பார்ப்பவரா அல்லது ஆக்குபவரா?
- கனவுக்குள் 'நீ' என்கிற ஒரு கனவு நபர் தோன்றுவதும் அது இன்ப துன்பங்களை அனுபவிப்பதும் நடக்கிறதல்லவா? அந்த 'நீ' கனவு நபர், கனவைப் பார்ப்பவரோ அல்லது ஆக்குபவரோ அல்ல. அது ஒரு கதைப் பாத்திரம். அல்லவா?
- அந்த 'நீ' கனவு நபர் என்ற கதைப் பாத்திரத்தை நடிப்பவர் யார்? அது கனவைப் பார்ப்பவர் அன்றி வேறு யார்? இது மற்ற கனவு நபர்களுக்கும் பொருந்தும்.
- இப்போது சொல்லும். நீ கனவு காண்கிறாயா அல்லது கனவைக் காண்கிறாயா? கனவில் உன் பங்கு என்ன? நீ (கனவு) பார்ப்பவரா, ஆக்குபவரா அல்லது நடிப்பவரா?
- சிக்கலாக இருக்கிறதோ? குழப்பமோ?
- நமக்குக் கற்பிக்கப்பட்டனவற்றை ஒதுக்கி விட்டு உன்னிப்பாகக் கவனித்தால் இது மிகவும் எளிமையாக விளங்கி விடும்.
- பார்ப்பவர், ஆக்குபவர், நடிப்பவர் எல்லாம் ஒருவரே. இது புரிந்த பின் கனவு நீடிக்கலாம் அல்லது கலையலாம், எப்படி ஆனாலும் கனவு உன்னைக் கட்டிப் போட முடியாது. கட்டியே போடவில்லை என்றால் விடுதலைக்குத் தேவையோ பொருளோ உண்டா?
- இந்தக் கனவு-நனவை (தூக்கம்) இவ்விதம் புரிந்து கொண்டால், நனவுக் கனவு (விழிப்பு) வேறு விதமோ?
- நீ கனவும் நனவும் ஒன்றாகுமா என்று நினைக்கலாம். தூக்கக் கனவு நீடித்த வரை அது 'நனவாகவே' இருக்கவில்லையா? விழிப்புக் கனவும் அது போல் தானே.
- தூக்கக் கனவில் தோன்றியவை (பொருள்கள், செயல்கள்) எல்லாம் அவ்விதம் 'உணரப்பட்டன'. அதே போல் விழிப்புக் கனவில் தோன்றுபவை (பொருள்கள், செயல்கள்) எல்லாம் அவ்விதம் 'உணரப்படுபவையே'.
- இரண்டு கனவுகளிலும் உணரப்படுவதற்கு அப்பால், வெளியே தனியாக, திடமாக எதுவும் உள்ளதா?
- நீ இந்த வாக்கியங்களைப் படிக்கிறாயா அல்லது படிப்பதை அறிகிறாயா? நீ படிப்பவரா அல்லது அறிபவரா அல்லது இரண்டுமா?
- படிப்பவருக்கும் அறிபவருக்கும் இடைவெளி / பிரிவு உண்டா?
- படிப்பதற்கும் அறிவதற்கும் இடைவெளி / பிரிவு உண்டா?
- அறியாமல் படிக்க முடியுமா?
- கருத்தளவில் உள்ள (படிப்பவர், அறிபவர் என்ற) பிளவு (பொய், மாயை) புரிகிறதா?
- இப்போது இந்தப் புரிதலை மற்ற புலனுணர்வுகளுக்கும் (தொடுதல், பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல்) செலுத்துங்கள்.
- பிறகு இந்தப் புரிதலை உணர்வு, உணர்ச்சி, மனவெழுச்சி, சிந்தனை, செயல்கள்... எல்லாவற்றிற்கும் பொருத்திப் பாருங்கள்.
- அறிவுணர்வுக்கு அப்பாற்பட்டு எந்த ஒன்றும் தனித்து உள்ளதா?
- ஆக, தூக்கக் கனவிலும் விழிப்புக் கனவிலும், எல்லாம் அறிவுணர்வே.
- 'சரி என்றே படுகிறது. ஆனால் இன்னமும் நான் - பிற என்ற பிரிவினையை உணர்ந்தபடியே இருக்கிறேனே' என்று நீ கூறலாம்.
- ஆமாம், அதுவும் ஓர் எண்ணமே அல்லது எண்ணம் என்ற அறிவுணர்வே. அல்லாது வேறு எதுவுமில்லையே.
No comments:
Post a Comment