Wednesday 23 March 2011

சரியார் நாள் கிறிப்பு (கிறுக்கல் குறிப்பு) சில

2010-09-19


சரியார் பொன்மொழி

அகக்கறை இருக்கும் மட்டும் அக்கரைப் பச்சை
அக்கறை நீங்கி விட்டால் எக்கரையும் பச்சை

சரியார் முழக்கம்

உணர்ந்த உண்மையை உளறி வைப்போம்
உளறிய உண்மையைப் பொதுவில் வைப்போம்

சரியார் (கண்ட) அறிப்பு (அதாவது அறிவினால் வரும் பரிதவிப்பு)

அறிவை அறியா தறிவே அறிப்பு
அறிவை அறிவ தறிவு (மறுக் குறள்)

அறிவதை (எது என்று) ஆய்ந்து அறியாத அறிவு வெறும் அறிப்பு (அதாவது அறிவினால் வரும் பரிதவிப்பு, மிதப்பு, சொதப்பு, ஆணவக் குதிப்பு...) ஆகும். அறிவது எது (நான் யார்?) என்று அறிவது தான் (மெய்யான) அறிவு.

சரியார் புலம்பல்

ஆரம்பமாவதும் அறிவாலே - மனிதன்
ஆடி அலைவதும் அறிவாலே
அறிவை அளந்திடு அறிவாலே
அறிப்பு அடங்கிடும் தெளிவாலே

No comments:

Post a Comment