Wednesday, 23 March 2011

ஆண்மை பெண்மை

2011-01-05

அடித்துச் சாதிப்பது ஆண்மை
அரித்துச் சாதிப்பது பெண்மை

ஆண்டு சாதிப்பது ஆண்மை
அடங்கிச் சாதிப்பது பெண்மை

வலிந்து சாதிப்பது ஆண்மை
வளைந்து சாதிப்பது பெண்மை

இடித்துச் சாதிப்பது ஆண்மை
இணங்கிச் சாதிப்பது பெண்மை

எடுத்துச் சாதிப்பது ஆண்மை
கொடுத்துச் சாதிப்பது பெண்மை

பிரிந்து சாதிப்பது ஆண்மை
பிணைந்து சாதிப்பது பெண்மை

கூடிக் குமிறிச் சாதிப்பது ஆண்மை
நாடி நயந்து சாதிப்பது பெண்மை

வெறுத்துச் சாதிப்பது ஆண்மை
பொறுத்துச் சாதிப்பது பெண்மை

முரண்டுச் சாதிப்பது ஆண்மை
முணங்கிச் சாதிப்பது பெண்மை

கடிந்து சாதிப்பது ஆண்மை
கனிந்து சாதிப்பது பெண்மை

இங்கு ஆண்மை, பெண்மை என்பன தனி நபர், பாலினரைக் குறிப்பதை விடப் பண்புகளைக் குறிக்கிறது என்று கொள்ள வேண்டும். இரண்டு பண்புகளுமே இரு பாலினருக்கும் தேவை.

No comments:

Post a Comment