Saturday 6 August 2011

கடவுள் திறந்த மனம்

2011-08-06

'கடவுள் இருக்கிறது இல்லை என்ற வரையறைக்கு அப்பாற்பட்டது/வர்' என்று தெளிந்தால் 'கடவுள் இருக்கிறது' என்ற நம்பிக்கைக்கும் இடமில்லை, 'கடவுள் இல்லை' என்ற நம்பிக்கைக்கும் இடம் இல்லை.

"வானாகி மண்ணாகி... உண்மையுமாய் இன்மையுமாய்..." (திருவாசகம்)

அதே சமயம் 'கடவுள்' என்பதற்கு இன்றைய முருகன், சிவன்... போன்ற மதம் சார்ந்த விருப்பு வெறுப்பு உடைய உருவங்கள் என்ற பார்வையில் 'அத்தகையக் கடவுள்(கள்) இல்லை' என்பதில் ஐயமில்லை.

அதே சமயம் 'எல்லாம் இறைவன் / எல்லாம் இறைவன் செயல்' என்ற பார்வையில் முருகன், சிவன்... போன்ற உருவங்கள் நம் (அதை நம்புவோர்) மனதில் உள்ள உண்மைகள் (subjective reality / truth) ஆகும். அதனால் அதை மறுப்பது மற்ற உளம் சார்ந்த உண்மைகளான சுதந்திரம், நியாயம், சமத்துவம், நீதி, நேர்மை, அறிவியல் கோட்பாடுகள், விதிகள்.... போன்ற உண்மைகளையும் மறுப்பதாகும்.

உளம் சார்ந்த உண்மை என்றாலும் அந்தக் கடவுள் பெயரால் நடக்கும் சுரண்டல்களை, மோசடிகளை வெளிப்படுத்த அப்படியான கடவுள் எங்கே என்று வாதம், பரப்புரை செய்வதும் சிலைகளைப் போட்டு உடைத்துச் சிந்திக்கத் தூண்டுவதும் தேவைப்படுகின்றன.

மேற்கண்டது 'கடவுள் இருக்கிறாரா' என்பது பற்றித் திறந்த மனதுடன் சிந்திப்பதற்கு எடுத்துக் காட்டு ஆகும். இதைச் செய்ய, செய்பவர் எந்த கருத்திலும் சார்ந்து, பற்று கொண்டு இல்லாமல் இருந்தால் தான் இயலும். அதற்குக் கடவுள் அருள் இல்லாமல் இயலாது!

No comments:

Post a Comment