Wednesday, 6 July 2022

மனமே நோய்தான்

 2022-07-06

மனமே நோய்தான்



இவை போன்ற மேற்கோள்கள் எந்த சூழ்நிலையில் எந்தக் கேள்விக்கு யாருக்குச் சொல்லப்பட்டது என்பதுடன் சேர்த்துப் பார்க்காவிடில் தவறாகப் புரிந்து கொள்ள நேரிடும்.

மனம் (mind) என்றும் அறிவுணர்வு (consciousness) என்றும் இரண்டு இருப்பன போல் இந்த வாக்கியம் உள்ளது. மனம் அறிவுணர்வில் இயங்கும் ஒரு நச்சுக் கிருமி (virus) என்றும் சொல்கிறது.

இப்படிச் சொல்வது யார், எது? மனம் தானே? மனமே மனதை நச்சுக் கிருமி என்றால் அந்நச்சுக் கிருமி சொல்வதை எப்படி நம்புவது?

இது பரிணாம வளர்ச்சி அறிவியலில் (Evolutionary science) நம் உடல் / மூளை / சிந்திக்கும் தன்மை எல்லாம் தற்செயலாக (random) குருட்டுத்தனமான (blind) செயல்முறையால் (process) வந்தவை என்று சொல்வது போல் இருக்கிறது.

இப்படிச் சொல்வது நம் சிந்திக்கும் ஆற்றல்தானே. ஒரு நோக்கமும் (உயிர்பிழைப்புக்கு அப்பால்) இன்றித் தற்செயலாக வந்த மூளை, சிந்திக்கும் ஆற்றல் எப்படித் தன்னைப் புரிந்து கொள்ள முடியும்? அது அப்படிச் சொல்வதைக் கேட்பது யார்? ஒத்துக் கொள்வது யார்? ஒத்துக் கொள்ளாதது யார்?

Alan Watts said 'right and wrong are sickness of the mind'.

சரி தவறு என்பது மனதைப் பிடித்த நோய் என்றார் அலன் வாட்ஸ்.

'திருட்டுச் சொத்து' என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் எல்லாச் சொத்துகளுமே திருடியவைதான், நேரடியாகவோ மறைமுகமாகவோ.

அது போல் மனநோய் என்று சொல்லத் தேவையில்லை. மனமே நோய்தான்.

ஆனால் அதுவே அதைப் புரிந்து கொள்ள முடியுமா?

இவை போன்ற ஆய்வுகள் பூனை தன் வாலைப் பிடிக்க முயல்வது போன்றததுதான்.

எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு பிரச்னை யாருக்கு என்று விசாரித்து அறிவது தான்.
            - ரமணர்

இந்த ஒரு தேடல், கேள்வி, ஆய்வைத் தவிர மற்றவை எல்லாம் திசை திருப்பும் கவர்ச்சிகளே, போதைகளே.


No comments:

Post a Comment