2022-06-28
உண்மையின் வகைகள்
பரிசோதனை அறிவியலில் சான்றுகளுடன் நிரூபிக்கப்படும் உண்மை என்பது ஒரு வகை.
நீதிமன்றத்தில் சான்றுகளுடன் நிரூபிக்கப்படும் உண்மை என்பது ஒரு வகை.
நெருங்கிய உறவு, நட்பில் ஒருவருக்கு ஒருவர் ஒரு விஷயத்தின் உண்மைத் தன்மையை நம்பிக்கையின் அடிப்படையில் ஒப்புக் கொள்வது ஒரு வகை.
ஒருவருக்குக் கத்திரிக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். மற்றொருவருக்குக் கத்திரிக்காய் என்றால் அலர்ஜி, அரிப்புத் தொல்லை. இது ஒரு வகை உண்மை.
கலை, இலக்கியத்தில் தத்ரூபமாக (உண்மையின் உருவமாக) இருக்கிறது என்று சொல்வது ஒரு வகை உண்மை.
மெய்யுணர்வில் (ஆன்மீகம்) தற்சான்றாகத் (self-evident) தனக்குத் தானே நிரூபித்துக் கொள்ளும் உண்மை ஒரு வகை.
ஒரு வகை உண்மைக்கு மறு வகைக்குரிய சான்று, நிரூபணத்தைத் தேடுவது பயனளிக்காது.
No comments:
Post a Comment