2022-05-30
அஹூரா மஸ்டா - ஷோராஷ்ட்ரிய மதக் கடவுள் (நெருப்பு) - நான்காவது நாள் - துப்பறியும் கதை
இன்று காலை மின்னஞ்சலில் திருவள்ளுவன் கீழ்க்கண்ட துப்பறியும் கதையைப் படிக்கும் படி சொல்லியிருந்தான்.
read this . some interesting things are there in the story
உடனே புத்தகத்தை அமேசான் கிண்டிலில் வாங்கிப் படித்து முடித்தேன்.
115 பக்கங்களில் விறுவிறுப்பான துப்பறியும் கதை. மதுரை, குஜராத், அர்மேனியா, சென்னை என்று முக்கியமாகப் பாரசீக ஷோராஷ்ட்ரிய மதத்தை மையமாக வைத்து, அதே சமயம் குஜராத்தில் நடந்த முஸ்லீம்கள் மீதான வன்முறை, இடஒதுக்கீடு பிரச்னை, திருக்குறள் எனப் பலவற்றைப் பின்னிப் பிணைத்துக் கடைசியில் அறிஞர் அண்ணாவின் அணையா விளக்குக் கல்லறையில் கொண்டு வந்து முடித்துள்ளார்.
ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக மத்தியா ஆசியாவிலிருந்து இந்தியாவிற்குள் வர நேர்ந்ததை 'வரலாறாக' வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சொல்லியுள்ளது சிறப்பு, நல்ல சுவைப்பு!
இறந்தவர்களை எரிக்கவோ புதைக்கவோ செய்யாமல் உயரமான இடத்தில் பிணம் இயற்கையாக சிதைந்து (excarnation) போக (கழுகு, பருந்து போன்ற பறவைகளுக்கும் புழுக்களுக்கும் உணவாக) விடுவது என்பது ஷோராஷ்ட்ரிய மதத்தினர் இன்றும் பின்பற்றும் இறுதிச் சடங்கு.
https://www.theguardian.com/cities/2015/jan/26/death-city-lack-vultures-threatens-mumbai-towers-of-silence (Mumbai Malabar Hill)
இக்கதை அம்மரபை மையமாக வைத்து புனையப் பட்டுள்ளது.
படித்துப் பாருங்கள்!
amazon.co.uk
துப்பறிவாளன் கார்த்திக் ஆல்டோ தொடரின் நான்காம் பாகமாக “நான்காவது நாள்” வெளிவந்துள்ளது.ஒரு மலை மீது கிடைக்கும் எலும்புக்கூட்டைப் பற்றி கார்த்திக் ஆல்டோ விசாரிக்கச் செல்லும் போது விரியும் உலகமே நான்காவது நாள்.விறுவிறுப்பில் முந்தைய பாகங்களோடு போட்டி போட்டுச் செல்லும் கதைக்களம். வழக்கம் போல கார்த்திக் ஆல்டோவின் துப்பறிதல் இப்பாகத்திலும் அனைவரின் மனதைக் கவரும் என்பதில் ஐயமில்லை.
நூலாசிரியர் பற்றி:சென் பாலன், அடிப்டையில் மருத்துவரான இவர் த்ரில்லர், துப்பறியும் வகை நாவலை தனது தளமாகக் கொண்டவர். இவரது இரண்டாவது நாவலான "பரங்கிமலை இரயில் நிலையம்" KDP pen to publish 2018 போட்டியில் முதல் பரிசை வென்றது. இந்த நாவல் கிண்டிலில் அதிக எண்ணிக்கையில் படிக்கப்பட்ட தமிழ் நாவல்களில் ஒன்றாக உள்ளது. மூன்றாவது நாவலான “மாயப் பெருநிலம்” Pen to Publish போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தேர்வானது. தமிழின் வாசகர் ரிவ்யூக்களின் அடிப்படையில் முதல் இடத்தில் உள்ள புத்தகமாகவும் சாதனை படைத்தது.
No comments:
Post a Comment