Friday, 18 February 2022

நிலையில்லாக் காட்சியைக் காட்டும் / காணும் / காட்சியாகத் தோன்றும் நிலையானது எது?

 2022-02-18

நிலையில்லாக் காட்சியைக் காட்டும் / காணும் / காட்சியாகத் தோன்றும் நிலையானது எது?


  • காலம், இடம் என்பதன் பொய்மை (அதாவது இக்கணத்தில் தோன்றுவதல்லாமல் வேறு இருப்பு இல்லை; கனவிலும் காலம், இடம் வருகின்றது என்பதுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்)
  • மாறும் காட்சிகளுக்கு ஆதாரமாக இருக்கும் மாறா ஒன்று (என்ன பெயர் வேண்டுமென்றாலும் அதற்கு வைத்துக் கொள்ளலாம்)
  • அம்மாறும் காட்சிகளுக்குள் இந்த (நம்) உடல், மனம் என்பனவும் அடங்கும்.
  • பிறப்பு, வாழ்வு, இறப்பு, இன்பம், துன்பம் என்பன நம் உண்மை இருப்பு அல்ல‌
  • மாறா அவ்வொன்றே நம்மின் உண்மையான‌ இருப்பு (அறிவுணர்வு)
  • நான் இந்த உடல் மனம் மட்டுமே என்ற தனித்த ஒன்று என்பது கருத்துச் சிறை.
  • நானும் இருப்பும் ஒன்றே என்ற புரிதலில் நான் இந்த உடல் மனமும் தான் என்ற முழுமையில் சிறையும் (தளையும்) இல்லை; விடுதலை (மோட்சம்) என்பதும் இல்லை.
  • காண்பான், காணுதல், காட்சி மூன்று (திரிபுடி trio) ஒரு சேர எழுந்து மறைகின்றன
  • அம்மாறா ஆதாரமே (ஆன்மாவே) எல்லாத் தோற்றமாகவும் உள்ளது.
  • அம்மாறா ஆதாரம் இருப்பாகவும் (சத்), அறிவாகவும் (சித்) பேரின்பமாகவும் (ஆனந்தம்) உள்ளது. இப்பேரின்பம் என்பது இன்பம் துன்பம் என்ற இரட்டைகளுக்கு (துவைதம், duality) அப்பாற்பட்டது.
  • அம்மாறா ஆதாரமே எல்லையற்ற கட்டற்ற சுதந்திரம் (விடுதலை, வீடுபேறு, நிர்வாணம், மோட்சம்...); அதுவே நம் இயல்பு இப்போதே...
  • அவ்வியல்பு மறக்கப் படலாம்; மறைக்கப் படலாம். ஆனால் நீக்க முடியாது; விலக்க முடியாது; துறக்க முடியாது..


இப்படியான அம்சங்களை ஒவ்வொன்றாகத் தனித்தனியாகப் புரிந்து கொள்ள முயல்வது எல்லா ஐயங்களையும் (மறத்தல், மறைத்தல்) தீர்க்காது. ஆனால் முழுமையை நோக்கித் தள்ளும்.


இப்படியான புரிதல்கள் எல்லாமே ஒரே சமயத்தில் பொருந்தும் போதே முழுமை / உண்மை / வாக்கு மனம் கடந்த இருப்பு தெளிவாகிறது. 

No comments:

Post a Comment