Friday 18 February 2022

பிரபஞ்சத்தின் நகைச்சுவை

 2022-02-18

பிரபஞ்சத்தின் நகைச்சுவை - Universal Joke


2022-02-05

தேவா:

 

இன்று படித்ததில்   பிடித்தது

பவுத்தர் ஆன்மா இல்லை என்பர். எல்லாம் சூனியமே. உலகத்தில் யாதொரு பொருளும் இல்லை. எல்லாம் சூனியமே. ஆன்மா என்பதும் சூனியமே.


சூனியான்மை வாதம் கூறுவோர் பொறி, மனம் முதலியவற்றை ஒவ்வென்றாக காட்டி இது ஆன்மாவா, இது ஆன்மாவா என கேட்டு, இல்லை என்ற பதிலைப் பெற்று ஆன்மா இல்லை என கூறுவர்.  

 

ஆனால் ஆன்மா இல்லை என மறுப்பதே உண்டு என உணர்த்தும் ...  எப்படி?

 

உடல், மனம் மற்றும் பொறி முதலியவற்றை எடுத்து ஆராய்ந்து, இது ஆன்மா அன்று என்று கழித்த அறிவு உள்ளதே, அவ்வறிவே ஆன்மா.


2022-02-05

தொல்:

ஆன்மா = அறிவுணர்வு = அறிதல் + அறிவதை உணர்தல். This is not the ‘soul’ of any individual person. This is the one impersonal field of awareness.

 

இது நம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உள்ளதாகச் சொல்லப்படும் நம்பப்படும் 'ஆவி' / 'ஆன்மா' என்பதைக் குறிக்கவில்லை. இது எல்லாவற்றிற்கும் ஆதாரமாய், பின்புலமாய் உள்ள ஒரே அறிவுணர்வுப் புலத்தைக் குறிக்கிறது.

 

Even current physicalist scientists and philosophers (Daniel Dannett) claim free-will and self-consciousness are illusions, based on their version of interpretation of experimental results without realising the irony - who is saying this, who is self-conscious of saying this? Is this saying out of free will or predetermined?


இன்று பௌதீகவாதிகளாக உள்ள அறிவியல் அறிஞர்கள், தத்துவவாதிகள் (டேனியல் டென்னட்) கூட இச்சா சுதந்திரம், தன்னுணர்வு போன்றவை மாயை என்று அறிவியல் பரிசோதனை முடிவுகளுக்கு அவர்கள் பாணியில் பொருள் கொண்டு சொல்கிறார்கள். ஆனால் அப்படிச் சொல்வதில் உள்ள முரண்பாட்டை அவர்கள் அறிந்துள்ளார்களா? இவை மாயை என்று யார் சொல்வது? அப்படிச் சொல்வதை யார் அறிந்து கொள்வது? அப்படிச் சொல்லப்படுவது இச்சா சுதந்திரத்திலா அல்லது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாலா?



First you create a false separation of I and the rest and then split the ‘I’ into body and mind (physical and non-physical) and ask all sorts of unanswerable and unnecessary questions (do we have free will, is self-consciousness real, where did we come from…) and produce contradicting and conflicting answers and above all feel that you are doing a very intelligent work and progressing science / mankind, if not improving the universe. We cannot but laugh at ourselves! Maybe that is the idea! Universal joke!!


முதலில் நான் பிற என்று இருப்பைப் பிரிப்பது, பின் நான் என்பதை உடல் மனம் என்று பிரித்து கொள்வது பிறகு தேவையற்ற விடை காண முடியாத கேள்விகளைக் (இச்சா சுதந்திரம், தன்னுணர்வு உண்டா, நாம் எங்கிருந்து வந்தோம்...) கேட்டு அவற்றிற்கு முரண்பாடான, பொருந்தாத விடைகளைச் சொல்வது, இப்படிச் செய்வதை எல்லாவற்றிற்கும் மேலாக அறிவுக் கூர்மையான ஆய்வு என்றும் அவ்வழி அறிவியலை, மனித குலத்தை, ஏன் பிரபஞ்சத்தையே முன்னேற்றுவதாக நினைத்துக் கொள்வது... வேடிக்கை தான், நம்மை நினைத்து நாமே சிரித்துக் கொள்ள வேண்டியதுதான். ஒரு வேளை அது தான் பிரபஞ்சத்தின் அர்த்தமோ? பிரபஞ்சத்தின் நகைச்சுவை!


Similar contradiction is in saying that evolution doesn’t have any goal (progress) and then talking about human beings accumulating knowledge and making progress (stone age, bronze age, agricultural age, industrial age, information age…). Have human beings somehow risen above evolution (natural process)? If this is not a belief in the supernatural, what is it? I am not making this up. Richard Dawkins (Author of Selfish Gene book) mentioned that ‘we humans alone have the capability to rise above our genes’. This is nothing but the religious concept of redemption hiding in rationality. Scientific blabberings are no less crazy than religious! 


இது போன்ற இன்னொரு முரண்பாடு என்னவென்றால் பரிணாம வளர்ச்சிக்கு எந்த நோக்கமும் இலக்கும் இல்லை என்று சொல்லிக் கொண்டே மனிதர்கள் அறிவைச் சேகரித்துப் படிப்படியாக (கற்காலம், உலோகக் காலம், விவசாயக் காலம், தொழிற்ப்புரட்சிக் காலம், தகவல் புரட்சிக் காலம்...) முன்னேறி வருவதாகவும் நம்புவது. மனித விலங்கு இயற்கை செயல்முறையைத் தப்பித் தாண்டி சென்று விட்டதா? இப்படி நம்புவது இயற்கை மீறிய அற்புதத்தை நம்புவதைப் போன்ற‌தல்லாமல் வேறு என்ன? இதை நாம் இட்டுக் கட்டவில்லை. மிகப் பிரபலமான உயிரியல் விஞ்ஞானி ரிச்சார்ட் டாக்கின்ஸ் (சுயநல மரபணு என்ற நூலின் ஆசிரியர்), 'மனிதர்கள் மட்டுமே மரபணு ஆதிக்கத்தை வெல்லக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள்' என்று சொல்லியுள்ளார். மதங்கள் மனிதர்க்குச் சொல்லும் மீட்பு, இரட்சிப்பைப் (ஏசு மீட்பார், இரட்சிப்பார், கலியுக அவதாரம் மனித குலச் சீரழிவைத் தடுத்து மீட்டு எடுக்கும்...) போன்றதே இது; ஒரே வேறுபாடு இது பகுத்தறிவு, அறிவியல் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டுள்ளது. இவை போன்ற அறிவியல் உளறல்கள் மத உளறல்களுக்கு சற்றும் சளைத்தவை அல்ல.

 


Science is an expression of nature and much more consistent, structured, intellectually exciting (albeit the underlying assumptions which cannot be proved) and useful but that is not the only valid domain of knowledge. Other domains (religion, spiritual, arts, literature, philosophy, metaphysics, politics, economics…) all have equal validity and usefulness as they are all expressions of the same nature/existence.


இயற்கையின் வெளிப்பாடான அறிவியல் (அத‌ன் அடிமட்டத்தில் நீரூப்பிக்கவோ பொய்பிக்கவோ இயலாத அனுமானங்களைக் கொண்டிருந்தாலும்) நன்கு கட்டமைக்கப்பட்ட, பெரும்பாலும் ஒன்றொடு ஒன்று ஒத்து பொருந்தி வருகின்ற, பெரும் உற்சாகத்தை, வியப்பை வழங்கக் கூடிய அதே நேரத்தில் அன்றாட வாழ்வுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். ஆனால் அது மட்டுமே செல்லுபடியான அறிவுத்துறை அன்று. மற்ற அறிவுத்துறைகளும் (மதம், ஆன்மீகம், கலை, இலக்கியம், தத்துவம், மீமெய்யியல், அரசியல், பொருளியல்...) செல்லுபடியானவையே; பயனுள்ளவை. ஏனெனில் அவையும் இயற்கையின் இருப்பின் வெளிப்பாடுகளே.

 

Validity and truth (right value) are not the same. Say in a database record of a person, in the field for date-of-birth a valid date (syntactically correct) may be stored but it may not be the correct value (semantically correct) of (DOB of) that person. Similarly science provides the right value in some context and other domains provide right values in other contexts. No frame of reference is absolute.

 

செல்லுபடியாவதும் சரியானதும் ஒன்று ஆகி விடாது. ஒருவரின் பிறந்த நாளைக் டேடாபேஸ்ஸில் (தரவுத்தளம்) பதிவு செய்யும் அட்டவணைப் புலத்தில் (டேபிள் பீல்ட்) நாள்காட்டியில் உள்ள எந்த நாளும் செல்லுபடியானதாக இருக்கலாம். ஆனால் அது சரியான பிறந்த நாளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதை ஒப்பிட்டுச் சரிபார்க்கும் போது தவறு தெரிய வரலாம். எடுத்துக்காட்டாக ஒருவர் வேலையில் சேர்ந்த நாளை விட அவரின் பிறந்த நாள் பின்னதாக இருக்க முடியாது. அதே போல் அறிவியல் ஒரு சூழலில் சரியான அறிவைத் / புரிதலைத் தரலாம்; பிற அறிவுத்துறைகளும் பிற சூழல்களில் சரியான அறிவைத் / புரிதலைத் தரலாம். எந்த ஒரு அறிவுத்துறைக்கும் முற்றான முழுமையான பார்வை, இருப்பு இல்லை. 


2022-02-06


ஒருவர்:


ஆன்மாவும் இல்லை;  ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. நமது உடலில் ஒரு இயக்கத்தின் வெளிப்பாடே உயிர் என கொள்ளலாம். அஃறிணையான ஒரு பொருளின் இயக்கம் ஏதாவது காரணத்தினால் தடைப்பட்டால் அது நின்று விடுகிறது. பின்னர் அதை சரி செய்தால் அது இயங்குகிறது.

உதாரணமாக கார் ஏதோ ஒரு கோளாறினால் நின்று விட்டால் அதன் காரணத்தை கண்டு பிடித்து சரி செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவது போல உயிரையும் எதிர்காலத்தில் சில மர்ம முடிச்சுகளை அதாவது முதுமையை அடையவைக்கும் செல்களால் ஆன உடல்கூறுகளை அதன் நிலையை மருத்துவரீதியாக மாற்ற விஞ்ஞானிகள் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அது வெற்றி பெற்று விட்டால் இறப்பை அதாவது உடல் இயக்கத்தை நீட்டிக்க வைப்பது சாத்தியமே! எனவே உடல் இயக்கம் நின்று விடும் முன் உயிர்ப்பிக்க அறிவிலை நாடலாம்; இல்லையேல் அது நின்று விட்டால் அது இயற்கையின் இறுதி கட்டம்.

அவ்வளவு தான்! இதில் ஆன்மா இல்லை! இல்லை! இல்லவே இல்லை!!!!!


தொல்:

பதிவில் சொல்லப்பட்டதாகக் கருதிக் கொண்டு (அதாவது நம் ஒவ்வொருவருக்கும் தனித் தனியான ஆன்மா உள்ளதாக) நீங்கள் மறுத்துள்ளதை, அப்பதிவிலியே மறுக்கப் பட்டுள்ளது: ஆன்மா = அறிவுணர்வு = அறிதல் + அறிவதை உணர்தல். This is not the ‘soul’ of any individual person. This is the one impersonal field of awareness. அதனால் உங்கள் கருத்து சரியே. ஆனால் பதிவில் சொல்லப் பட்டுள்ள கருத்து சற்று மாறுபாடானது; ஒரு வகையில் மிக எளிமையானது.


ஆன்மா, ஆன்மீகம் என்ற வார்த்தைகளைக் கேட்டவுடனே அவற்றிற்கு நடப்பில் உள்ள அர்த்தங்கள் நம்மை ஆதரவு, எதிர் நிலைகளை எடுக்கத் தள்ளுகின்றன. பகுத்தறிவுவாதியான ஒரு நண்பர், இந்த ஆன்மா, ஆன்மீகம் என்ற சொற்களைத் தவிர்த்து விடலாமே என்று சொன்னார். அது மேற்கண்ட‌ வகையில் சரியே.



அதனால் தான் ஆன்மா = அறிவுணர்வு என்ற மாற்றுச் சொற்றொடர் பயன்படுத்தப் பட்டு அதன் விளக்கமும் (அறிதல் + அறிதலை உணர்தல் knowing + knowing that knowing) தரப்பட்டுள்ளது.


அதே நேரத்தில் நாம் சொல்ல வருவது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்ற நோக்கிலும் வார்த்தைகளின் குறியீட்டுத் தன்மையைப் புரிந்து கொள்ளும் நோக்கிலும் நடைமுறை வார்த்தைகளில் நாம் புரிந்து கொண்டுள்ள விதத்தில் உள்ள தவறைச் சுட்டிக் காட்டும் நோக்கிலும் அவற்றைப் பயன்படுத்துவது தேவைப்படுகிறது.


நடிகர் ரஜினியின் ரசிகர் ஆக இருந்து இப்போது பகுத்தறிவு, பெரியார்வாதியாக மாறி விட்டார் என்று அப்பா மறைமலை நகரில் ஒரு இளைஞரை அறிமுகப்படுத்தினார். அவரிடம், முன்பு ரஜினியின் நடிகராக இருந்தது சரியில்லை, முட்டாள்தனம் (திரைப்படத்தை ரசிப்பது வேறு; அது பலருடை கூட்டு முயற்சி) என்று புரிந்து கொண்டு இப்போது பெரியார் கருத்துகளே சரி என்ற முடிவுக்கு வந்துள்ளீர்கள், இல்லையா என்று கேட்டேன். ஆமாம் என்றார். அப்படியானால் பெரியார் கருத்துகள் சரியில்லை என்று எதிர்காலத்தில் நினைக்க வாய்ப்பு இருக்கலாம் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு அவர் திகைத்தார். கேட்ட போது அப்பாவும் பக்கத்தில் இருந்தார்கள். பெரியார்வாதி என்பது ஒரு அறிவுத் தேடலின் தொடக்கமே, அதுவே முடிவன்று. பெரியாரும் தன்னைப் போன்ற பிற்போக்குவாதி இருந்தான் என்று சொல்லும் படியாக அறிவு, சிந்தனை வளர்ச்சி எதிர்காலத்தில் வர வேண்டும் என்றே சொல்லியுள்ளார் என்று குறிப்பிட்டேன்.


எல்லா அறிவும் (கருத்துகளும்) தற்காலிகமானதே என்று புத்தர் சொல்லியுள்ளார். இதையே ஆதிசங்கரின் ரமணரின் அத்வைதமும் சொல்கிறது என்பது நமக்கு (அதை அப்படி யாரும் சொல்லாததால், அதைப் படிக்காததால்) புதிதாக இருக்கலாம். மேலும் அதை அவர்கள் கடவுள், பிரம்மம், ஆன்மா என்ற சொற்களோடு சேர்த்து சொல்லும் போது கசப்பாகவும் இருக்கலாம்.


நமக்கு ஏற்கனவே தெரிந்தவை நம் சிந்தனையை வழி நடத்தவும் செய்யும்; வழி தவறவும் செய்யும். அதைப் பிரித்து அறிய ஏற்கனவே தெரிந்தவைகளுக்கு நாம் அடிமை ஆகாமல் அவற்றை மறு ஆய்வு தொடர்ந்து செய்ய வேண்டியுள்ளது. அதுவே அறிவு விடுதலைக்குத் தருவதாகும். இதற்கு ஒருவர் எந்த வாதியாகவும் (ஆன்மீகவாதி, பெரியார்வாதி...) இருக்கலாம்; இல்லாமலும் செய்யலாம்.

No comments:

Post a Comment