Saturday, 9 November 2019

ஞான மார்க்கம், யோக மார்க்கம், பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம் - Socialism and Spiritualism

28-May-2019

ஞான மார்க்கம், யோக மார்க்கம், பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம் என்பனவற்றில் ஏதாவது ஒன்றைத் தான் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட, ஏன் நான்கு வழிகளிலும் இணையாகப் பயிற்சி செய்யலாம்.

நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு மார்க்கம் முதன்மையாக இருக்கலாம், நம் இயல்புக்கு அதிக அளவில் ஒத்து வருவதால். அதே சமயம் நம் ஒவ்வொருவரும் நான்கு குண இயல்புகளையும் வெவ்வேறு விகித அளவில் கொண்டவர்களே. யாரும் வெறும் ஒற்றை இயல்பு கொண்டிருப்பதில்லை என்பது வெளிப்படை.

எனவே,
  • யோக மார்க்கத்தில் மூச்சைக் கவனித்துக் கொண்டு தியானம் செய்யலாம்;
  • பக்தி மார்க்கத்தில் இறைவனை/இயற்கையை நேசித்து உருகலாம்;  திருவாசகம், தேவராம், திருஅருட்பா (வள்ளலார்), பாராபரக்கண்ணி (தாயுமானவர்), பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், திரைப்படப் பாடல்கள்... போன்றவற்றைப் பாடி மெய்மறக்கலாம்.
  • கர்ம மார்க்கத்தில் குடும்ப, அலுவலக, சமுதாயக் கடமைகளைப் பற்றற்ற பொறுப்புணர்ச்சியுடன், நன்றி, பாராட்டு, புகழ், பிரதிபலன் இவற்றை எதிர்பாராமல் 'தவமாகப்' புரியலாம்;
  • ஞான மார்க்கத்தில் தன்னையறிதல், அறிவுணர்வை ஆழ்ந்து நோக்குதல் (உள்ளே செல்லுதல்), எழும் வினாக்களுக்கு விடை தேடல் போன்றவற்றில் ஈடுபடலாம்.
இவை அனைத்தையும் தனியாகவும் குழுவாகவும் வாய்ப்புக்கு ஏற்ப‌ மேற்கொள்ளலாம்.

யோக மார்க்கம்

எல்லாவித உடற் பயிற்சிகளும் அன்றாட வேலைகளும் முழு உணர்வுட‌ன் அதில் தோய்ந்து (ஒன்றி; யோகம்‍ = ஒன்றுதல்) ஈடுபடும் போது அவை யோகப் பயிற்சி ஆகிவிடும். 

பக்தி மார்க்கம்

"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமசிவாயவே" என்றும் பாடலாம்.

('தான்' - தன் முனைப்பு - கசிந்து கரைந்து கண்ணீர் மல்காவிடில் பக்தி மார்க்கமும் பயன் தாராது; அன்றாட நடைமுறை வாழ்க்கையும் பண்படாது.)
The science revealed 'awe' - about from atom to universe - can also do the same thing. For the illusion-mist of sense of separation to melt away, anything and everything can shine light on it.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல் தரும் (71)

"கடவுள் இல்லை கடவுள் இல்லை இல்லவே இல்லை
கண்டிப்பாகச் சொல்லுகிறேன் கடவுளே இல்லை" (இத்திரைப்படப் பாடலின் முழு வரிகளைத் தேடிக் கொண்டுள்ளேன். கிடைத்தால் பகிர்ந்து கொள்ளவும்)
(குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்கள் எல்லாம் வண்டாட்டம், வண்டாட்டம்...மெட்டு) என்றும் பாடலாம்.

"பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது 
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி 
அதுதான் காதல் சன்னதி" (காதல் சிறகைக் காற்றினில் விரித்து..) என்று திரைப்படப் பாடலும் பாடி ஒருமையுறலாம்.

"திருப்பதி சென்று திரும்பி வந்தால்
ஓர் திருப்பம் நேருமடா உன்
விருப்பம் கூடுமடா

நீ திறந்திட நினைக்கும் கதவுகள்
எல்லாம் தானே திறக்குமடா உன்னைத் 
தர்மம் அனைக்குமடா" என்று சீர்காழியின் கணீர் குரலில் பாடுவதாக கற்பனை செய்து கொண்டு பாடலாம்.

திருப்பதி என்பதை 'உள் திருப்பதி' என்று நினைத்து கொள்ளலாம்.

தர்மம் = உண்மை = மெய்

['ஓர் திருப்பம்' என்பது இலக்கணப் படி பிழை. 'ஒரு திருப்பம்' என்றுதான் வர வேண்டும். ஆனால், கவிஞர்களுக்கும் புலவர்களுக்கும் தனி இலக்கண உரிமம் தந்து விடுகின்றோம். 'மாஞ்சோலை கிளிதானோ மான் தானோ' -  'மாந்தோப்பு' என்பது தான் வழக்கு. (நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவன் மாம்பழம் வேண்டும் என்றான், ஒன்று கொடுத்தாலும் வாங்கவில்லை இந்தக் கன்ம் வேண்டுமென்றான்...); கன்றுக் 'குட்டி' ஆனால் 'கோழிக் 'குஞ்சு'. .]

"மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்." (கண்ணம்மா என் காதலி) 
என்ற பாரதியார் பாடலை 'தன்னை மறந்த லயத்தில்' பாடலாம்.

கோடாலிக்காரன்

வெய்யில் தாழ வரச் சொல்லடி-இந்தத்
தையல் சொன்னதாகச் சொல்லடி
      வெய்யில் தாழ வரச்சொல்லடி

கையில் கோடாலி கொண்டு
கட்டைப் பிளப் பாரைக் கண்டு
கொய்யாக் கனியை இன்று
கொய்து போக லாகும் என்று 
      வெய்யில்தாழ வரச் சொல்லடி

கூரைக்குப் பின்னால் இருக்கும் தென்னை-அதன்
கூட இருக்கும் வளர்ந்த புன்னை 
நேரினிலே காத்திருப்பேன்! என்னை
நிந்திப்பதில் என்ன பயன் பின்னை?
      வெய்யில் தாழவரச் சொல்லடி

தாய் அயலூர் சென்று விட்டாள் நாளை-சென்று 
தான் வருவாள் இன்று நல்ல வேளை
வாய் மணக்கக் கள்ளொழுகும் பாளை-நாள்
மாறி விட்டால் ஆசை எல்லாம் தூளே
      வெய்யில் தாழவரச் சொல்லடி - என்ற பாரதிதாசன் பாடலை இசைத்து மகிழலாம்; மறக்கலாம்.

பக்தி மார்க்கம், நம் பக்கத்தில் இருப்போரைக் கொஞ்சிக் கொண்டாட விட்டால் (குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே) முழுமை பெறாது.

"உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே
கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே"

குடும்பத்தில் இருப்போரிடம் உள்ள குறைகளை, குற்றங்களை மன்னித்து, ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, கொஞ்சல் நம்மால் செய்ய முடியவில்லை என்றால், அவர்கள் உருவில் நாம் கடவுளைக் காண இயலவில்லை என்றால் பக்தி மார்க்கம் மற்றுமொரு 'தன்முனைப்பு ஆணவப்' பயணமே (ego trip); பக்குவமான, பண்பான வாழ்க்கைக்கும் அது வழி வகுக்காது.

“The weak can never forgive. Forgiveness is the attribute of the strong.” 
― Mahatma Gandhi

இதை, நாம் சற்று விலகி இருக்க (விலக்கி வைக்க) விரும்பும் உறவுகளை அப்படி நடைமுறைப் படுத்தும் வாழ்வியல் 'ஒட்ட ஒழுகலு'டன் சமப்படுத்த வேண்டும்.

நாம் கலந்து கொண்டவாறு எந்த 'கருத்தும்' (concept) 'பிம்பமும்' (self-image) நம்மை சிறைப்படுத்தி விடக் கூடாது.

கர்ம மார்க்கம்

'செய்யும் தொழிலே தெய்வம்' (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்) என்பது திரைப்பாடல் வழியான 'கர்ம மார்க்கக்' கருத்து 'மந்திரம்'. 

அது குற்றவாளிகளைத் தூக்கில் போடும் தொழிலாகக் கூட இருக்கலாம். அதுவும் கடவுளின் பணியே.

நாம் எதைச் செய்கின்றோம் என்பதை விட எந்த மனநிலையில் அதைச் செய்கின்றோம் என்பதே ஒரு செயலைத் 'தவமாகவோ' அல்லது 'அவமாகவே' ஆக்குகின்றது.

தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு (266)

இலர்பலர் ஆகிய‌ காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர் (270)

"கண்னில் காண்பதுன் காட்சி கையால் தொழில்
பண்ணல் பூசை பகர்வது மந்திரம்
மண்ணொடு ஐந்தும் வழங்குயிர் யாவுமே
அண்ணலே நின் அருள் வடிவாகுமே"

கர்ம மார்க்கத்திற்கு நாம் பொதுப்பணி செய்யத் தேடி திரிய வேண்டியதில்லை. நம் குடும்ப, அலுவலக, வாழ்விட அண்மைச் சுற்றுப்புறக் கடமைகளே போதும்.

"இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கேங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே"

"குடும்பத்தில் இருப்போரிடம் உள்ள குறைகளை, குற்றங்களை மன்னித்து, ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, கொஞ்சல் நம்மால் செய்ய முடியவில்லை என்றால்..." என்பது போல் நம் பணியிடத்தில் அண்மையில் உள்ளவர்களிடம் நம்மால் ஒத்துப் போக இயல்வில்லை என்றால் 'கர்ம மார்க்கம்' போலித் தனமே.

அப்படி ஒத்துப் போக இயலாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் நாம் இறுக்கமாக இருப்பதுதான்.

"காற்றடித்தால் சாய்வதில்லை...கனிந்த மனம் வீழ்வதில்லை" (திரைப் படப் பாடல்).

நாம் (நம் பண்பு) தண்ணீர் போல் இளக்கமாக இருந்தால் எந்த இடத்திலும் (பாத்திரத்திலும்) நிரம்பலாம்; நிறைவடையலாம்; ஒத்துப் போகலாம்.

கல்லாக இருக்கும் நம்மைத் தண்ணீராக மாற்றக் 'கர்ம மார்க்கம்' பயன்படும் படியாக அதைச் (தவமாக‌) செய்ய வேண்டும்.

'ஒரு செம்பு பாலுக்கு ஒரு துளி விஷம் போதும்' என்பது எப்படியோ அது போல் ஒரு குழுவுக்கு (குடும்பத்திற்கு) ஒரு கனிந்த மனம் போதும்'. அது அக்குழுவின் இயக்கத்தன்மையை (team dynamics) ஒழுங்கமைதியாக‌ ஆற்றொழுக்காக (harmonise) மாற்றி விடும்.

அன்றாடமே அற்புதம்.

'கனிந்த மனம்' என்பது கோழைத் தனமோ, உறுதியின்மையோ அன்று. மேற்கண்டதைக் கீழ்கண்டதையும் கணக்கில் கொண்டு சமப்படுத்த வேண்டும்.

சொல்லப் பயன்படுவோர் சான்றோர்; கரும்பு போல்
கொல்லப் பயன்படும் கீழ் (1078)

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது (1075)

தண்ணீர் வெள்ளமாக வீழ்ச்சியாக அடித்துச் சிதைக்கவும் செய்யும்; கற்களையும் பிளக்கும்; பாறைகளையும் உருட்டும்; மலைகளையும் கரைக்கும். அப்படி இருக்கவும் தயங்கக் கூடாது. 

இவற்றை 'தன்முனைப்பு' நிலையில் செய்கின்றோமா 'வினைத் தூய்மை, வினைத் திட்பம்' நிலையில் செய்கின்றோமா என்பதே வேறுபாடு.

ஞான மார்க்கம்

"எல்லா நதிகளும் கலக்கும் இடம் கடலாகும்." (தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே...). எல்லா மார்க்கங்களும் ஞான மார்க்கப் புரிதலை (understanding) அடைந்து கலந்து ஆக வேண்டும். இல்லையெனில் கப்பல் அங்கங்கே கரை தட்டி விட்டது என்று ஆகும்.

Whatever you are aware of, you are NOT that; YOU ARE AWARE(ness)!. That's all. Full stop.

We can understand what we truly are only by understanding what we are NOT.

முள்ளை (தன்முனைப்பு false sense of separation) மூச்சைப் பிடித்து முக்கியே (யோக மார்க்கம்) வெளியே தள்ளி விட முடியாது. முள்ளைக் கொஞ்சிக் குழைந்து (பக்தி மார்க்கம்) 'வெளிய வந்து விடு' என்றால் வராது. முள்ளை வேறு வேலையில் ஈடுபட்டு (கர்ம மார்க்கம்) மறந்து மயக்கித் தள்ளி விடலாம் என்றால் குத்திக் குத்திக் (சாதனை, பாராட்டு, பதவி, பெருமை, புகழ்...) குடைந்து கொண்டே இருக்கும். ஆனால் முள்ளை எடுக்க மற்று ஒரு முள்ளை எடுத்தால் (ஞான மார்க்கம்) முள் (தன்முனைப்பு false sense of separation) நடுங்கிப் புதைந்து ஒளிந்து கொள்ள முயன்றாலும் அது பலிக்காது. முள்ளை முள்ளால் தான் முழுமையாக வெளியேற்ற முடியும். அதன் பின் எல்லா முற்களையும் தூக்கி எறிந்து விட வேண்டும்.

We need to use a concept of 'oneness' to go beyond concepts. We need to use a split of 'what you are and what you are not' to clear the false 'sense of separation'.

A lot has been written about this path - how to watch that our thoughts, actions, feelings, emotions are rising spontaneously; nobody is doing anything; there is no one to do anything but everything gets done by the oneness flow of reality.

Suffering is not due to the incidents but because of 'I'dentification.

We never really delved into 'I' so far (who will do it?).

Like there is a higher level 'planet' harmony of earth quakes, volcanic explosion, rain, river supporting life... in human society too, there is a higher level 'harmony' irrespective of the ups and downs. To feel / understand this is the final resolution (liberation / enlightenment / self-realisation / reason-existence-bliss..).

"Communism is the return of man himself as a social, i.e. really human being, a complete and conscious return which assimilates all the wealth of previous development. Communism, as a fully developed naturalism, is humanism, and, as a fully developed humanism, is naturalismIt is the DEFINITIVE resolution of the antagonism between man and nature, and between man and man. It is the true solution of the conflict between existence and essence, between objectification and self-affirmation, between freedom and necessity, between individual and species. It is the solution of the riddle of history and knows itself to be this solution." —Karl Marx
        (from the book 'Questions of Freedom and People Emancipation by Kobad Ghandy).

The above quote we can replace 'Communism' with 'Nondual Spiritualism' or even by the root word 'commune' we can understand 'communing' with nature/reality and transcending the 'false' sense of separation.

Socialism and Spiritualism

சோசலிசத்திற்கும் (முடிந்த அளவுக்கு சமூக நீதியான சம நிலையான சமுதாயம்) மெய்யுர்ணதலுக்கும் நம்மைப் பற்றிய 'தன்னுணர்வை' மீள்மதிப்பீடு, ஆய்வு செய்து ஒரு புதிய அகண்ட 'தன்னுணர்வையும்' வாழ்வதன் பயன் - பொருளையும் கண்டுணர்ந்து பின்பற்றுவது தான் தேவையாகும்.

For both socialism (which is reasonably fair and balanced society) and spiritualism need reevaluation and research of our sense of 'self' (who we are) and finding and following a new expanded sense of 'self' and purpose - meaning of living.
-----------------------------------------------------------

28-May-2019

Dear Thol

For the sake of completion, please add chemical approaches to altered states of consciousness (Huxley's Doors of Perception and Carlos Castaneda's books are a good introduction) as well as Tantra (while a branch of Yoga, it stands apart in its approach). Obviously I do not recommend these!

Regards/Shan

-----------------------------------------------------------

28-May-2019

Dear Shan,

I too don't recommend those approaches; there is no need for such distractions to a real seeker.

Regards,
Thol

-----------------------------------------------------------

28 May 2019


Dear Shan,

Our focus is very much mundane and down to earth for day to day living; nothing esoteric. We are not after some different / rare flavour of illusion.

If this is not clear from the text, this note is that correction.

Regards,
Thol

-----------------------------------------------------------

30 May 2019

We are not even interested in self-improvement which is another form of egoism (can be explicit to subtle) - I am more cultured than you; I am smarter than you; I am more civilised than you; I am more tolerant than you; I am more environmentally conscious than you; I am more humble than you;  I am holier than you and so on.

It is like - as simple as - we eat because we are hungry. We don't eat (in order) to grow; to be strong; to be healthy; to be beautiful and so on; they may or may not result (consequences) because of the food we eat. But the primary reason for eating is we are hungry (we cannot even enjoy the food properly if we are not hungry). So, the primary reason for seeking is hunger for Truth. Similar to the consequences of eating, there may or may not be consequences of understanding the Truth, which can include self-actualisation, acceptance, magnanimity, magnificence, why even some powers (nothing but clear seeing).

Realising the false sense of separation has got nothing to do with religion, science (though we may use them or anything to help see through the illusion) or gaining some occult (sic!) power but it has everything to do with, as already said, day to day living in a harmonious way with the whole of existence. The clue is glaring in the title of the email (socialism and spiritualism) as well as spread throughout.

Religion promises post-death redemption by atoning for our sins (of birth...); in that view science (promising pre or prolonged death redemption by means of technology) is a form of religion hiding under the cloak of mathematics, logic and repeatable experiments with the fundamental 'axiomatic' assumption of objective reality. Science is (human beings leaning on science and technology) so blind (or willingly ignore) as not to be able to see through it. This is just one view of science but science viewed as a feature, expression, manifestation of nature / reality is a very exciting adventure (as would be anything when the sense of separation is seen through).

Regards,
Thol





Thursday, 6 September 2018

வெண்பாவுக்கு வெண்பா - பாப்பா காப்பு - வாழ்வின் வாகைக்கு வரையறை

தம்பி திருவள்ளுவன் ‍அவன் துணைவி அறிவுமதியின் மகள் அடவி - மருமகன் கார்த்திகேயனுக்கு பிறந்த முதல் பெண் குழந்தைக்கு 'வெண்பா' என்று பெயரிட்டதை வாழ்த்தி ஆகஸ்டு 16, 2014 இல் எழுதியது.

கார்த்தி அடவி கடைந்திட்ட பெண்பாவை
கீர்த்தி மிகுந்திடும் பண்பாவை - நேர்த்தியான
வார்த்தை வடிவை வளமான வாழ்வழியைப்
பூர்த்தியான வெண்பாவைப் போற்று.

வெண்பாவோடு கழித்த 2016 ஆகஸ்டில் எழுதியது.

பாப்பா காப்பு
பாப்பா பாப்பா
வெண்பா பாப்பா
காப்பா(ள்) காப்பா(ள்) – நம்மைக்
கட்டிக் காப்பா(ள்)
நேராய் நிறையாய்
நேரிசைப் பாவாய்
சீராய்ச் செழிப்பாய்
செப்புவாய்ச் சிரிப்பாய் (பாப்பா…)
1
கோவைப் பழமாய்
குவிந்த அறிவாய்
நாவற் கனியாய்
ஞானக் கதவாய் (பாப்பா…)
2
ஊராய் உறவாய்
உண்மையின் உருவாய்
தீர்வாய்த் திசையாய்
தெளிந்த திருவாய் (பாப்பா…)
3
இறையாய் மறையாய்
என்றும் உறைவாய்
பிறவா ஒளியாய்
பிறந்தாய் சிறந்தாய் (பாப்பா…)
4
நிலமாய் நெருப்பாய்
நெடுநீர்க் கடலாய்
வானாய் காற்றாய்
வளமிகு வாழ்வாய் (பாப்பா…)
5
கருத்தாய் உணர்வாய்
காலம் கடந்தாய்
மருந்தாய் தவமாய்
மகிழ்ந்து அருள்வாய் (பாப்பா…)
6
கனவாய் நனவாய்க்
காட்சிப் பொருளாய்
சினமாய்ச் செயலாய்
செறிந்த பண்பாய் (பாப்பா…)
7
அன்பாய்ப் பிடிப்பாய்
ஆசையாய்க் கடிப்பாய்
என்பாய் நரம்பாய்
இயக்கி வைப்பாய் (பாப்பா…)
8
எழுத்தாய்ச் சொல்லாய்
எட்டா நிலையாய்
வழியாய் வரமாய்
வருவாய் தருவாய் (பாப்பா…)
9
படிப்பாய் நடிப்பாய்
பாடம் புகல்வாய்
அடிப்பாய் அணைப்பாய்
அம்மா நீ, எங்கள் தாய்! (பாப்பா…)
10
பாப்பா காப்பு பத்து முற்றிற்று.
இடம் / நாள் / நேரம்        :         அணுப்புரம் / 08-08-2016 /     முற்பகல்
தூண்டல்                   :         ஊஞ்சலில் அடவி, பாப்பி, திருவள்ளுவனுடன் வெண்பா பாப்பாவின் கொஞ்சல்.
வந்ததைப் பிடித்தவர்        :         பெரிய தாத்தா (சளி, இருமல், காய்ச்சலுடன்)


இரண்டாம் பெண் குழந்தைக்குப் பெயர் வாகை (வெற்றி). எது வாழ்வின் வெற்றி (வாகை) என்பதைக் குறித்த சிந்தனைகளை வாகையை வாழ்த்தி ஆகஸ்டு 28, 2018 இல் எழுதியது.

வாகை

அடவி சூடிய வாகை
ஆற்றல் கார்த்திக் வாகை
விடையென வந்த வாகை
வெண்பா தங்கை வாகை

வெற்றி பெற்றாலும் வாகை
தோல்வி உற்றாலும் வாகை
ஒற்றி (ஒத்து) வாழ்வதே வாகை
உயர்ந்த உள்ளமே வாகை

கற்று அடங்கலே வாகை
கனவு கலைவதே வாகை
உற்று உணர்வதே வாகை
ஒளிரும் உண்மையே வாகை

பற்று கரைவதே வாகை
பல்லுயிர்ப் பேணலே வாகை
வெற்று விளங்கினால் வாகை
வேட்கை தணிதலே வாகை

சுற்றம் சூழ்வதே வாகை
சூழ்ந்து மீள்வதே வாகை
குற்றம் குறைவதே வாகை
கூடி மகிழ்வதே வாகை



Tuesday, 26 February 2013

'விஸ்வரூபம் – விளங்கும் உண்மைகள்' - கருத்துகள்

2013-02-26

http://siragu.com/?p=6401
விஸ்வரூபம் – விளங்கும் உண்மைகள்

கீழ்க்கண்ட கருத்தை மேலே உள்ள கட்டுரையின் மீது பதிவு செய்துள்ளேன்.

நடிப்பவர்கள் பிறரைப் போன்று ஒரு தொழில் செய்பவர்கள். அதிலும் அவர்கள் அட்டைக் கத்தி வீரர்கள். போலித் தனத்தைக் காசாக்குபவர்கள். நம் முட்டாள்தனத்தில், மயக்கத்தில் வணிகம் நடத்துபவர்கள். டாஸ்மார்க் போதைக்கும் சினிமா போதைக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறதா? ஆல்கஹால் மருந்தாகப் பயன்படுவது போல் சினிமாவைப் (கலை) பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. அதிலும் இன்றுள்ள அதி தொழில்நுட்பத்தில் நடிப்பவரின் திறமைக்கு எவ்வளவு பங்கு? எடுத்துக் காட்டாக, ஒருவர் பாட்டு எழுதி, இன்னொருவர் இசை அமைத்து, மற்றொருவர் பாடி இருக்க நடித்து உதடு அசைத்தவர் பெயரில் அப்பாடல் அழைக்கப்படும் பொய்மை நமக்குத் தெரியாமலா இருக்கிறது? என்றாலும் மயங்குகின்றோம்.


60, 70 ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பவர்கள் என்றால் கேவலமாகக் கருதப் பட்டதிலிருந்து இன்று நடிப்பவர்கள் அரசியலையும் ஆட்டுவிக்கும் வண்ணம் ஆகி உள்ளது சரியான வளர்ச்சியா? இந்தப் புற்றுநோய் வளர்ச்சியிலும் அதன் தீர்விலும் நம் ஒவ்வொருவரின் பங்கும் இருக்கின்றது.

ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த நாட்டில் 'தமிழ்ப்' பள்ளிகள் நடத்தி தாய்மொழியைப் பேணி வரும் சிறந்த ஆக்க வேலைக்கு எதிராக தமிழ்ச் சினிமாவையும் அதன் போலிகளையும் தூக்கிப் போற்றிப் பரப்பி வரும் இன அழிவு வேலையையும் முன்னின்று செய்து வருகிறார்கள்.

இந்தியத் துணைக்கண்டத்தில் சினிமா மோகம் குறைந்த இனங்களின் (குஜராத்தியர்) மனப்பான்மை வேறுவிதமாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். சினிமா போதை குறையாமல் தமிழர்களின் (ஈழத்தமிழர்கள் உள்பட) போக்கில் ஆரோக்கிய மாற்றம் வரும் என்று நினைப்பது பகற்கனவு.

கலை உணர்வற்ற கல்மனம் கொண்டவனின் புலம்பல் அன்று இது. நல்ல தமிழ்த் திரைப்படப் பாடல்களைப் போற்றுபவனே. திருக்குறளிலிருந்து கற்றுக் கொள்ளும் சில கருத்துகளைத் திரைப் படப் பாடலிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம் என்று சொல்லி வருபவனே. கலையைப் போற்றுவது போதையாகி விடக் கூடாது. போலித்தனத்தைப் போற்றும் வரை அடிமையாகத் தான் இருக்க முடியும். போலித்தனத்தில் பொருள் (அர்த்தம்) தேடி விமர்சிப்பது (அதன் முகத்திரையைக் கிழிப்பதற்கு அப்பால்) வீண் வேலை.

இன்றைய நிலையில் நாம் தமிழ் சினிமாவைப் பார்த்து ஆதரிக்காமல் இருந்தாலே போதும்; அதுவே தமிழ் இன, மொழி மறுமலர்ச்சிக்குச் செய்யும் நம்மளவிலான தொண்டாகும். 

***

“ஈழப்போர் என்பது இந்தியா அதிகாரவர்க்கத்திற்கு சவால் விடும் ஒரு வரலாற்று நிகழ்வு” என்பது எப்படி என்று கட்டுரையாளர் இன்னொரு கட்டுரையில் விளக்குவாரா? ஈழப்போர் பற்றிய படமெடுத்து எல்லாப் பக்க உண்மைகளையும் சொன்னால் படம் யாருக்குமே பிடிக்காது. அவரவர் அவரவருக்குப் பிடித்த ‘உண்மைகளை’ மட்டுமே கேட்கவும் பார்க்கவும் விரும்புகின்றோம். அதை நாம் தன்னுணர்வாகத் தாண்டி அடுத்தப் பக்கச் செய்திகளையும் தெரிந்து கொள்ளா விட்டால் மேற்கண்டது போன்ற ‘மாயை’யில் தான் உலவ நேரிடும். ‘இகலுக்கு எதிர் சாய்தல் ஆக்கம்’ (திருக்குறள்: 858) பற்றற்ற பொறுப்புணர்ச்சி தான் நம்மை சரியாக வழி நடத்திச் செல்லும்.


Saturday, 26 January 2013

Collective delusion / Group delusion - கூட்டு மயக்கம் / குழு மயக்கம்

2013-01-26

கூட்டு மயக்கம் / குழு மயக்கம்

ஒரு விஷயத்தை பலர் அலசும் போது ஒவ்வொருவரும் பிறரின் கருத்தை அறிந்து கொள்ளும் முன் தனித் தனியாக அலசி அவரவராக முடிவுக்கு வர வேண்டும்இல்லாவிடில் அடுத்தவரின் கருத்து கேட்பவரின் நடுநிலையைப் பாதித்து விடும்அப்படிப் பாதிக்கும் போது எல்லோருமாகச் சேர்ந்து கூட்டு மயக்கம் / குழு மயக்கம் அடைந்து ஒரே முடிவுக்கு வரும் படி அவர்களை அறியாமல் தள்ளப்படுவர்.

இது விரிவாக ஆராய்ச்சி செய்யப் பட்டுள்ளதுஇதைத் தவிர்க்கப் பல யோசனைகளும் திட்டங்களும் முன் வைக்கப் பட்டுள்ளனஎடுத்துக் காட்டாகஒரு விஷயத்தைப் பற்றிக் கலந்து பேசக் கூடும் போதுஅவ்விஷயத்தைப் பற்றிய சார்பற்ற வெளிப்படையான கருத்துகளை மட்டும் கூறி விட்டு ஒவ்வொருவரையும் அவர்களின் வாதப் பிரதிவாதக் கருத்துகளைத் தாளில் எழுதி மேசையின் மீது வைத்து விட்டு, பிறகு ஒவ்வொருவராக அவர்கள் கருத்துகளைப் படித்து விளக்க வேண்டும்இப்படிச் செய்யும் போது யாரும் அவர் தாளை எடுத்துத் திருத்தம் செய்யக் கூடாதுஅவரவர் முறை வரும் போது தாளில் எழுதியுள்ளதையே (கருத்து இப்போது மாறுபட்டு இருந்தாலும்படித்து விளக்க வேண்டும்கடைசியாக எல்லா உடன்பாட்டுஎதிர்மறைக் கருத்துகளையும் பட்டியல் இட்டு மதிப்பெண்கள் கொடுத்து முடிவுக்கு வரலாம்ஒவ்வொரு கருத்துக்கும் மதிப்பெண் கொடுப்பதை அனைவரும் வாக்களித்து முடிவு செய்யலாம்.

இப்படிச் செய்வதால் முடிவு செப்பமாக அமைய வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை விட நன்கு பேசத் தெரிந்த ஒருவரோ அல்லது முதலில் சொல்லப் படும் கருத்தோ முடிவைத் திரித்து விடுவதைத் தவிர்க்கலாம்அதே சமயம் எந்த ஒரு முறையும் அதில் பங்கேற்பவர்களின் பொறுப்புணர்ச்சிதன்னறிவுசிந்திக்கும் திறன் போன்றவற்றைப் பொறுத்தே பலன் தரும்.

Thursday, 17 January 2013

சுயநலம் சரணம் கச்சாமி

2013-01-17


'சிறகு' இணைய தள இதழின் பொங்கல் சிறப்பிதழில் 'சுயநலம் சரணம் கச்சாமி' என்ற உரையாடல் வெளிவந்துள்ளது.

Thursday, 3 January 2013

கடல் கடந்த மடல் 8

2013-01-03


கடல் கடந்த மடல் 8

தமிழ்நாட்டு நலம் நாடிகளே!

காலக் கவலை

மனிதனால் எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணிக்கவும் முடியவில்லை; எதிர்காலத்தை முற்றாக நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை. மற்ற விலங்குகளும் எதிர்கால அறிவைக் காட்டுகின்றன. அணில்கள் கொட்டைகளை நாளைக்குப் பயன்படும் என்று புதைத்து வைக்கின்றன. எலிகள் வளையில் எதிர்காலத்திற்கென்று நெல்கதிர்களைப் பதுக்குகின்றன. ஆனால் விலங்குகள் எதிர்காலத்தை நம்மைப் போல் உணர்கின்றனவா?

விலங்குகள் உணவைச் சேமிக்கின்றன. ஆனால் உணவு கிடைக்குமா என்று ஓயாமல் எண்ணிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. விலங்குகள் உயிர் ஆபத்திலிருந்து தப்பி ஓடுகின்றன. ஆனால் உயிர் ஆபத்தை அனுதினமும் நினைத்து, நினைத்துச் ‘சாவ’தாகத் தெரியவில்லை.

எதிர்கால நோக்கோடு செயல்படாதது உயிர் இல்லை. தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதல் என்பது உயிரியின் அடிப்படையான வரையறை. அதற்கு, ‘தனக்கு என்ன நடக்கும்’ என்ற எட்டப் பார்வை, புரிதல் தேவை. அது அறிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் செயல் வடிவில் எல்லா உயிர்களுக்கும் இருக்கின்றது.

மனிதனைத் தவிர்த்த மற்ற உயிரினங்கள் உணவைச் சேமிக்கலாம். ஆனால் சூழ்ச்சியாகச் சொத்தாக மாற்றிக் கொள்வதில்லை. அவை உயிர் ஆபத்திலிருந்து தப்பி ஓடலாம். ஆனால் உயிர் ஆபத்தை ஒரே அடியாக ஒழித்து விட முனைவதில்லை. இவை இரண்டும் மனிதனுக்கே உரிய கோணல்கள். இவை ஏன் கோணல்கள்? ஏனெனில் மனிதனின் கால அறிவும் மற்ற உயிரினங்களின் கால அறிவும் வேறுபடுகின்றன.

விலங்குகள் அடுத்த (குளிர்) பருவத்திற்கு உணவைச் சேமிக்கின்றன. மனிதன் அடுத்த தலைமுறைகளுக்கே சேர்த்தாலும் நிலைக்கப் போவதில்லை என்பதை (வரலாற்றின் வாயிலாக) அறிந்துள்ளான். விலங்குகள் உடனடி உயிர் ஆபத்திலிருந்து தப்ப முயல்கின்றன. மனிதனுக்குத் தான் எப்படியும் சாவிலிருந்து தப்ப முடியாது என்பது தெரிகின்றது. அதனால் தான் காலம் விழுங்கி விட்டது என்ற பொருளில் ‘காலமானார்’ என்று சொல்கின்றோம்.

அறிவா(ல்) மயக்கமா

அறிவு நிலையாமையைக் காட்டுகின்றது. ஆனால் உயிர் நிலைக்க விரும்புகின்றது. இந்த இழுபறியில் ‘ஆத்மா’, ‘மறு பிறப்பு’, ‘இறந்த பின் பரலோக வாழ்க்கை’ போன்ற மயக்கங்கள், மாயைகள் பிறக்கின்றன. இவை இல்லாவிடில் பயனுள்ள மனித  வாழ்க்கை (purposeful life) சாத்தியமில்லை. மேற்கண்ட மயக்கங்களின் சாயல்களே ‘புகழ்’, ‘சாதனை’ ‘தியாகம்’ போன்றவையும்.

‘எப்படியும் சாகப் போகின்றோம்’ என்று சிலர் உடல் நலத்தைப் புறக்கணிக்கின்றார்கள். ‘எப்படியும் சாகப் போகின்றோம்’ என்று சிலர் உடல் நலத்தை (உயிர் பிழைப்பதை) அளவுக்கு மேல் போற்றுகின்றார்கள். உயிரோடு இருப்பதும் உடல் நலத்தோடு இருப்பதும் ஒன்று போல் மயக்கம் நிலவுகின்றது. தான் இறந்த பின் விட்டுச் செல்லும் ‘எச்சங்கள்’ (சாதனை, தியாகம்) வழியாக வாழ நினைக்கின்றார்கள்.

இவை சரி / தவறு என்று இங்கு வாதிடப்படவில்லை. அறிவா, மயக்கமா, அறிவால் மயக்கமா, அறிவே மயக்கமா? அறிவால் எப்படி மயக்கம் விளைகின்றது; அறிவே மயக்கமா எப்படி இருக்கின்றது என்பதே சுட்டிக் காட்டப்படுகின்றது. ‘தன்நோய்க்கு தானே மருந்தாக’ (திருக்குறள்: 1102) அறிவே மருந்தாகவும் எப்படி இருக்க முடியும் என்பதையும் பார்க்கலாம்.

வாழ்நாளா நோய்நாளா

‘உலக அளவில் நோய்களின் சுமை’ (The Global Burden of Disease) என்ற ஓர் ஆய்வு, வாஷிங்டன் பல்கலைகழகத்தின் நல அளவீடு, மதிப்பீட்டுத் துறையால் (Institute for Health Metrics and Evaluation – IHME – Washington University - http://www.healthmetricsandevaluation.org/)  மேற்கொள்ளப்பட்டது. 50 நாடுகளில் 302 நிறுவனங்களுடன் 480 ஆய்வாளர்களை இணைத்து, பில் & மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை (Microsoft Bill Gates) நிதி உதவியுடன் இந்த ஐந்து ஆண்டு ஆய்வு நடந்து முடிந்து அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. ஆய்வில் வெளிவந்த சில முக்கியத் தகவல்கள்(1):

தொத்து நோய்களை ஒழிப்பதில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளதன் ஒரு விளைவாக நாம் இப்போது பல விதமான வலி, ஊனம், மன அழுத்த நோய்களுடன் நீண்ட நாள் வாழ்கின்றோம். வாழ்நாள் மட்டும் நீடிக்கவில்ல; அது நோய்நாளாகவும் நீடித்துள்ளது.

உணவுப் பற்றாக்குறையை விட, அதிகம் உண்ணுதல், குருதிச் சர்க்கரை மிகுதி என்பன நோய் ஆபத்துக் காரணங்களாக அதிகரித்துள்ளன. இது வளர்ந்து வரும் நாடுகளுக்கும்  பொருந்தும். மேலும் புகை, மது, கொழுப்பும் இனிப்பும் மிகுந்த உணவு, உடற்பயிற்சியின்மை (நடத்தல், வீட்டு வேலை செய்தல்…) போன்றவற்றால் வரும் நோய்களால்  இறப்போர் தொகை மிக அதிகரித்துள்ளது.

உன் பிள்ளைகளுக்குக் கொஞ்சம் குளிரையும் பசியையும் விட்டுச் செல்” என்று கன்பூசியஸ் சொல்லியதாகப் படித்த நினைவு. ஆனால் நாம் ‘எதிர்காலத்தைப் பற்றிய அதீத கவலையால்’ சேர்த்து வைப்பது சொத்து மட்டுமன்று; நோய்களும் தான்.

தன்நோய்க்கு தானே மருந்து


கத்தி, குத்திக் கொலை செய்யவும் அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காக்கவும் பயன்படுகின்றது. அறிவு எதிர்காலத்தை எண்ணிச் செயல்படவும் வைக்கின்றது. அது தறிகெட்டுப் போய், பொருள் பேராசையாகவும் உயிர்ப் பேராசையாகவும் அலைக்கழிக்கின்றது. இதைப் புரிந்து கொண்டு ‘அளவறிந்து’ செயல்பட உதவுவதும் அதே அறிவுதான்.

நம் வாழ்நாளுக்குள் நிகழ்ந்து வரும் மாற்றங்களைப் (அரசியல், சமுதாய, மதம், அறிவியல், கல்வி, பொழுது போக்கு, உணவு, உடை, வீடு, போக்குவரத்து, குடும்ப உறவுகள், தீவிரவாதம், போர்கள், பெரும் விபத்துகள்… கடற்கோள், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, வெள்ளம்…) பார்த்தால் அடுத்த வரும் (5, 10, 20…) ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்று யாரால் கணிக்க முடியும்? ஆரோக்கியமான சமுதாயமே நம் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான சொத்து. அதை விட ஆரோக்கியமான வாழ்க்கை முறை, வாழ்வு பற்றி சிந்தனை, மதிப்பீடு இவற்றை அவர்களிடம் உருவாக்குவதே அவர்கள் நிறைவான வாழ்க்கை வாழ உறுதியான வழி.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று நம் அறிவுக்குத் தெரியும். ‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவே (குமர குருபரர்)’ என்றும் அதற்குப் புரியும். ஆனால் கடைபிடிக்க முடியவில்லை. ஏன்? திருக்குறளைப் போற்றிக் கொண்டே, 'அவா அறுத்தல்', 'நிலையாமை', 'தவம்', 'மெய்யுணர்தல்'... போன்ற அதிகாரங்கள் திருக்குறளில் இல்லாதது போல் நடந்து கொள்கின்றோம்.  'பொருளில்லாருக்கு இவ்வுலகு இல்லை' என்பதைப் பிடித்துக் கொண்டு 'அருளில்லார்க்கு அவ்வுலகு இல்லை' (திருக்குறள்: 247) என்பதைப் புறக்கணிக்கிறோம்.

மேம்போக்காக, வெற்று அறிவாக, கட்டுரை எழுதவும் அடுத்தவருக்கு அறிவுரை சொல்லவும் சொற்பொழிவு செய்யவும் தெரிந்து வைத்துப் பயன்படுத்துகின்றோம். நம்மால் மாற்றக் கூடியதையும் மாற்ற முடியாததையும் பிரித்து அறிந்து தெளிவு படுத்திக் கொள்ளவில்லை; அதில் உறுதி அடையவில்லை.

ஊளைச் சதை உடலம், நல் உப்பிட்டு வைப்பினும் தப்பிடுங்காண்’ என்றார் பெருஞ்சித்திரனார். நாம் உயிர் தப்பிக் கொண்டே இருக்க முடியாது. அது மாற்ற முடியாதது. ஆனால் உயிர் வாழும் வரை ஆரோக்கியமாக வாழ நல்ல உணவு, உறக்கம், உடல், மன பயிற்சிகள், பழக்க வழக்கங்களைப் பின்பற்ற முடியும். அது மாற்றக் கூடியது. மரணம் நிச்சயம். அது மாற்ற முடியாதது. ஆனால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது என்ற மனப்பான்மையை நம்மால் மாற்ற முடியும். நிறைவான வாழ்க்கை பற்றிய தெளிவு இருப்பின் ‘உறங்குவது போலும் சாக்காடு’ (திருக்குறள்: 339) என்ற அமைதியை அடைய முடியும். மேற்குலகில் ‘அருளுடன் அடங்குதல்(Dying Gracefully) என்ற கருத்து பரவி வருகின்றது.

பொருளைத் தேடாமல் வாழ்க்கை இல்லை. அது மாற்ற முடியாதது. ஆனால் ‘உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்’ (திருக்குறள்: 592), ‘அச்சமுடையார்க்கு அரணில்லை’ (திருக்குறள்: 534) என்பன பொருளைப் புறக்கணிக்காது அளவோடு போற்ற வைக்க முடியும். இந்த மாற்றம் நம்மால் முடியக் கூடியது.

தேவைக்கு மேல் வைத்திருப்பதே திருட்டு’ என்றார் காந்தியடிகள். நாம் அந்த அளவுக்குப் போகத் தேவையில்லை. அடுத்த தலைமுறைக்குப் பெரும் சொத்து சேர்க்காமல் இருந்தாலே போதுமானது. வெறும் பொருளை வைத்துப் பிறரை மதிக்காமல் போற்றாமல் இருந்தாலே அதுவே ஒரு கிளர்ச்சி தான். அதிலும் சமுதாயத்திற்குத் தீங்கு விளைக்கும் வழிகளில் பொருள் சேர்த்தவரை அண்டாமல் இருந்தாலே அதுவே ஒரு புரட்சி தான். அதற்கு நமக்கு முதலில் ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’ (திருக்குறள்: 341) என்பதிலும் ‘தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் தம்தம் வினையான் வரும்’ (திருக்குறள்: 63) என்பதிலும் தெளிவு, உறுதி வேண்டும்.

இவற்றைச் சொல்வது எளிது; பின்பற்றுவது கடினம். நல்லவனாகவும் வல்லவனாகவும் இருப்பது வெறும் நல்லவனாகவோ வல்லவனாகவோ இருப்பதை விடப் பல மடங்கு கடினமானது; அரிதானது. இவற்றை ‘உலகத்தோடு ஒட்டி ஒழுகியும்’ (திருக்குறள்: 140)  ‘ஊழி பெயரினும் தாம் பெயராமலும்’ (திருக்குறள்: 989) கடைபிடிப்பது தான் நம் அறிவுக்கும் பண்புக்கும் ஆளுமைக்கும் உள்ள சவால்.

இவற்றை நம்மால் ‘காந்தி’ போல் தனியனாக முழு வீச்சில் செய்ய முடியாது. நமக்கு மேற்கண்ட ‘மனநலம்’ மட்டும் இருந்தால் போதாது. அதற்குத் துணையாக ‘இனநலமும்’ வேண்டும். ‘மனநலம் நன்குடையார் எனினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து’ (திருக்குறள்: 458) என்பதைக் காண்க. நம் பெரியோர்கள் நல்வழி காட்டவில்லை என்று குறை சொல்ல முடியாது; அவற்றைக் கொண்டு நம்மை நாம் நல்வழி நடத்திக் கொள்ளவில்லை என்பதே குறை.

Oh God, give me the courage to change the things that can be changed, the strength to accept the things that cannot be changed and the wisdom to differentiate the two.
இறைவனே, மாற்றக் கூடியதை மாற்றும் துணிவையும் மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் பலத்தையும் இரண்டையும் பிரித்தறியும் ஞானத்தையும் அருள்வாயாக!

தமிழ்நாடி,
மார்கழி 19 , திருவள்ளுவர் ஆண்டு 2043 (சனவரி 3, 2013)

(1)
http://www.healthmetricsandevaluation.org/gbd/news-events/news-release/massive-shifts-reshape-health-landscape-worldwid
===============================================
2013-01-04


Good read.

Technology generates many options, some with short term gain and long term pain. It is the wisdom (Info->data->knowledge ->science->technology->Wisdom) which helps one to make right choice amongst sheer abundance as opposites are embedded in same thing. If there is no death , I am sure all people will long for it.In the long term we all will become extinct ; difficult to believe?; I think we are no better than dinosaurs. Hence living today better by making right choices is crucial and that is the only thing needed rather than worrying and saving for future far beyond your need; no animal stores its food need beyond tiding over the next season.

-Thoughts of a wanderer.-



Pillai.RAP

===============================================
2013-01-04


எது கிடைக்கவில்லையோ அதற்கு ஏங்குவது மனதின் இயல்பு. 

அறிவியல் அறிஞரும் அறிவியல் நாவலாசிரியருமான ஐசக் அஸிமோவ் 'இரு நூற்றாண்டு மனிதன்'  (The Bicentennial Man) என்ற கதையில் வரும் அறிவுக்கூர்மையுள்ள ரோபாட் ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் போது, மனிதர்கள் இறப்பதையும் தான் இறக்காமல் நீடிப்பதையும் தொடர்ந்து பார்த்த பின், அதற்கு 'இறக்கும்' ஆசை வந்து விடுவதாக எழுதியிருப்பார். கடைசியில் ரோபாட்டின் விருப்பப் படி அது இறந்து போவதாகவும் (அஸிமோ எழுதிய ரோபாட்டின் முதல் விதிக்கு - தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் - எதிராக) கதையை முடித்திருப்பார். இக்கதை 1999-இல் The Bicentennial Man என்ற திரைப்படமாக வெளிவந்தது; பார்க்கத் தகுந்தது.

காதலர்கள் மனம் நிறைந்து ஒன்றி இருக்கும் போது 'தாங்கள் இப்படியே இக்கணமே இறந்து விட' விரும்புவதாக நாவல் / திரைப்படங்களில் பார்த்திருக்கின்றோம். அதே காதலர்கள் உறவினர், ஊர் எதிர்ப்பால் தங்கள் காதல் பூர்த்தியாகாத போது, எப்படியாவது தப்பிச் சென்று 'வாழத்' துடிப்பதாகவும் காட்டப்படுவது, மனம் 'ஆசை' ஏக்கத்தில் இருக்கும் வரை உயிர் வாழ விரும்புவதைச் சுட்டுகின்றது.

We LIVE in our desires not in our achievements!
நாம் நம் ஆசைகளில் வாழ்கின்றோம், சாதனைகளில் அன்று!

இதற்கு மாறாக, மகிழ்ச்சியாக இருக்கும் கணம் இப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்புவதும் ஆசை பூர்த்தியாகாத போது தற்கொலை செய்து கொள்வதும் நடக்கின்றது. விதிவிலக்குகள் இல்லாத விதி இல்லை! ஒரு கணம் அப்படியே (அதில் சம்பத்தப்பட்டவர்களுக்கு) நீடிக்க அவர்களை அப்படியே அக்கணத்தில் அதி விரைவில் ஆழ உறைய வைத்து (sudden rapid deep freezing) விட்டால் தான் (அதாவது செத்தால் தான்) முடியும்!

வாழ்வு விளையாட்டின் (life game) உண்மை உணர்ந்த ஞானிகள் சமாதி ஆவதும் 'அவா அறுபடும் போது' மேற்கொண்டு ஆட ஆர்வமில்லாமல் அடங்குவதாகக் கொள்ளலாம்.

சமாதியில் 'சகஜ சமாதி' என்ற நிலை உண்டு. அதாவது சாதாரண, அன்றாட வாழ்வே சமாதி போன்று இருப்பதாகும். 'ஆசை அற்று' இருப்பது என்பது 'நான்' என்ற கொக்கி, மையம் கழன்று விடுவதாகக் கொள்ளலாம். அல்லது ஆசைகளைக் கட்டி இணைத்திருக்கும் 'நான்' என்ற முடிச்சு அவிழ்ந்து விடுவதாகவும் கொள்ளலாம். அப்போது ஆசைகள் வந்து போகும். ஆனால் அவை 'பற்றித் தொங்க' ஒரு கொக்கி, மையம் (நான்) இருக்காது. காற்று போல், கடல்அலை போல் மேகங்கள் போல் ஆசைகள் ஆகும். அதனால் ரமண மகரிஷி 'ஆசையற்று' இருப்பது என்பது 'நான்' அற்று இருப்பதே என்றும் 'பொருள்களைத்' துறப்பது துறவு அன்று, 'நான்' என்ற பற்றைத் துறப்பதே துறவு என்றும் சொல்லியுள்ளார்.

'யான் (நான்) எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கும்
உயர்ந்த உலகம் புகும்' (திருக்குறள்: 346)

'நான் யார்?' என்ற ஆய்வு ஏதோ (உயிர்) போகிற நேரத்தில் புண்ணியத்திற்கு வழி தேடும் 'ஆன்மீக ஆசை' அன்று. அன்றாட வாழ்விற்கு அவசியமான அறிவியல் ஆய்வாகும்.

நடத்தை உளவியலில் (behaviour psychology) இது இன்று முக்கிய பங்கு வகிக்கின்றது. மனநல மருத்துவத்தில் (psycho therapy) இது பயன்படுகின்றது. தன் வளர்ச்சி (personal development) பயிற்சிகளில் இது வலியுறுத்தப்படுகின்றது. தொடக்கப் பள்ளிகள் முதல் தற்சோதனையாகக் (self-evaluation, self-examination, self-criticism) கற்பிக்கவும் பழக்கப்படுத்தவும் படுகின்றது. 'தன்னை' ஆய்வு செய்வதும் அப்படி செய்வதில் உள்ள வரையெல்லைகளை (limitations) அறிந்து கொள்ளவதும் மனித சமுதாயம் பக்குவப்படுவதில் முக்கியமாகும். இதை நடைமுறைப் படுத்தாத மனிதக் குழுக்கள் பின் தங்கி அடிமைப்படும்; அழிந்து போகும்.

தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு (திருக்குறள்: 436)

'நான்' என்பதைத் துறப்பதை எந்த நான் செய்வது? ரமண மகரிஷி சொல்வது போல் 'திருடனே போலீஸ் வேடம் போட்டுக் கொண்டு, திருடனைப் பிடிக்கக் கிளம்புவது போல்' அது நடக்குமா? அதை ஆய்ந்தால் 'நான்' என்ற பற்று படிப்படியாக வலிவிழப்பது, நீர்த்துப் போவது என்று விளங்கும். அதாவது 'நான்' என்ற உணர்வும் அலை போல், காற்று போல், இதயத்துடிப்பு போல் தானாக வந்து போவதைக் காண்பதாகும். அப்படிக் காண்பது யார் / எது என்ற கேள்வி அடுத்து பிறக்கும். அது அதுதான்! அது,

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றது!

வளி = காற்று
கோன் = அரசன்

If scientists say ultimately everything is fluctuation in quantum field, we believe. Below is the same in a different language / frame / point of view.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
     - திருவாசகம்:19 5.திருச்சதகம் 2.அறிவுறுத்தல்

அங்கு இங்கு எனாத படி எங்கும் பிரகாசமாய்

      ஆனந்த பூர்த்தி ஆகி
   அருளொடு நிறைந்தது எது? தன்னருள் வெளிக்குளே
      அகிலாண்ட கோடி எல்லாம்
தங்கும் படிக்கு இச்சை வைத்து உயிர்க்கு உயிராய்த்
      தழைத்தது எது? மனம் வாக்கினால்
   தட்டாமல் நின்றது எது? சமயம் கோடிகள் எல்லாம்
      தம் தெய்வம் தம் தெய்வம் என்று
எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது எது?
      எங்கணும் பெரு வழக்காய்
   யாதினும் வல்ல ஒரு சித்தி ஆகி இன்பமாய்
      என்றைக்கும் உள்ளது எது? அது
கங்குல் பகல் அற நின்ற எல்லை உளது எது? அது
      கருத்திற்கு இசைந்ததுவே
   கண்டன வெலாம் மோன உரு ஒளியது ஆகவும்
      கருதி அஞ்சலி செய்குவாம்!

ஊர் அனந்தம் பெற்ற பேர் அனந்தம் சுற்றும்

      உறவு அனந்தம் வினையினால்
   உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ
      அனந்தம் பெற்ற பேர்
சீர் அனந்தம் சொர்க்கம் நரகமும் அனந்தம் நல்
      தெய்வமும் அனந்தம் பேதம்
   திகழ்கின்ற சமயமும் அனந்தம் அதனால் ஞான
      சிற்சித்தியால் உணர்ந்து
கார் அனந்தம் கோடி வருஷித்த என அன்பர்
      கண்ணும் விண்ணும் தேக்கவே
   கருதரிய ஆனந்த மழை பொழியும் முகிலை நம்
      கடவுளைத் துரிய வடிவைப்
பேர் அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும்
      பெரிய மௌனத்தின் வைப்பைப்
   பேசரும் அனந்த பத ஞான ஆனந்தமாம்
      பெரிய பொருளைப் பணிகுவாம்!
             - தாயுமானவர் - திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்

Saturday, 24 November 2012

கற்றலும் படித்தலும்

2012-11-24

http://siragu.com/?p=4995#comment-1650

சொற்பொருள் தெளிவோம்: கற்றலும் படித்தலும்

பெரியண்ணன் சந்திரசேகரன் - அற்றுலான்றா, அமெரிக்கா 

கல், படி இரண்டையும் ஆழமாகப் புரிந்து கொள்ளச் செய்யும் நல்ல கட்டுரை. ‘அடியாத மாடு படியாது’ என்பதில் உள்ள ‘படி’ என்பதையும் ஒப்பிட்டு நோக்கலாம். தொடர்ந்து மீண்டும் மீண்டும் செய்வதால் நம்மிடம் படியும் பண்புகள் என்ற பயன்பாட்டையும் காண்க. படி = பணி (படிந்து செல். அதாவது பணிந்து செல்) என்ற பொருளும் உள்ளது. பெரியண்ணன் சந்திரசேகரன் இது போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து எழுத வேண்டும். மொழி ஓர் இன்பம் என்பதை நாம் அடுத்த தலைமுறையினருக்கும் நுகரப் பழக்க வேண்டும்.

சில‌ எடுத்துக் காட்டுகள்:

மண் என்றால் மண்டிக் கிடப்பது. ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கிடப்பது. எனவே களி மண் எனப்பட்டது. ஆனால் ஆற்று (அல்லது கடல்) மணல் என்ப்பட்டது. மண் + அல் = மணல். ‘மண்ணில் கயிறு திரிக்கிறான்’ என்று சொல்லாமல் ‘மணலில் கயிறு திரிக்கிறான்’ என்று சொல்லக் காரணம் மணல் ஒன்றோடு ஒன்று ஒட்டாத துகள்களைக் கொண்டது. எனவே மணலில் கயிறு திரிப்பது முடித்தால் பெரும் சாதனை, முடியாததற்குப் புரட்டு.

விலங்குகளின் குட்டிப் பெயர்களைப் போல் மரங்களின் தொகுதிக்கும் பலவிதமான பெயர்கள் உள்ளன. மாஞ்சோலை. ஆனால் தென்னந் தோப்பு. கரும்புத் தோட்டம். மூங்கில் புதர் / காடு.

குளமும் ஏரியும் அளவில் மட்டும் வேறு படவில்லை. குளிக்கப் பயன்பட்டது குளம். ஏர் உழவுக்குப் பயன்பட்டது ஏரி.