Sunday 18 September 2022

மனிதர்களின் கடைசி அகந்தை என்ன? What is the last conceit of human beings?

 2022-09-18

மனிதர்களின் கடைசி அகந்தை என்ன? What is the last conceit of human beings?

மனிதர்கள் ஒரு காலத்தில் பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்றும் சூரியன், மற்ற கோள்கள், நட்சத்திரங்கள் பூமியைச் சுற்றி வருகின்றன என்றும் நம்பினார்கள். அது கலிலீயோவால் குலைந்தது.

அதே போல் கடவுள் மற்ற விலங்குகளைப் படைத்ததிலிருந்து வேறுபட்டுத் தன்னுடைய பிம்பத்தில் மனிதர்களைச் சிறப்பாக‌ப் படைத்தார் என்று நம்பியது சார்ல்ஸ் டார்வினால் சரிந்தது.

இந்த இரண்டு அகந்தைகளும் ஆட்டம் கண்டது போல் நம்மிடம் கடைசியாக வேறு எந்த அகந்தையாவது இன்னமும் உள்ளதா என்று அறிவியல் அறிஞர் கார்ல் சாகனிடம் கீழ்க்கண்ட காணொளியின் கடைசி சில நிமிடங்களில் (9:40 மணித்துளியில் இருந்து) கேட்கப்படுகிறது. அதற்கு அவர் 'இயற்கையிலிருந்த மனிதர்கள் தங்களைப் பிரித்து நினைத்துக் கொள்வது' என்று பதில் சொல்கிறார்.

(மேலும் மதத்தைப் பற்றி அவர் எது சரி, எது தவறு என்று சொல்லும் கருத்துகளும் கேட்கத்தக்கன. அவருடைய மென்மையான முறை எதிர்க்கருத்து உள்ள மதவாதிகளையும் சிந்திக்க வைக்கலாம்.)


https://www.youtube.com/watch?v=ADqBLaTpAKM


அவர் சொல்வது கிறித்து மதவாதிகள் கடவுள் மனிதர்களைப் படைத்து இயற்கையை அனுபவித்துக் கொள்ள அனுமதித்தார் என்று சொல்வதை அடிப்படையாகக் கொண்டதாகும். அவர் அதை அத்வைத நோக்கில் மறுக்கவில்லை. அறிவியல் நோக்கில் தான் மறுக்கிறார். இவை எப்படி வேறுபடுகின்றன என்பதைப் பின்னால் பார்ப்போம்.

அவர் நம்முடைய கடைசி அகந்தை எது என்று அடையாளம் கண்டது என்பது முக்கியம். அந்த அகந்தையை நாம் மத அடிப்படையில் கொண்டிருந்தாலும் அறிவியல், தொழில்நுட்பவியல், அரசியல், சமுதாயவியல் அடிப்படையில் கொண்டிருந்தாலும் அகந்தை அகந்தையே; மடமை மடமையே; மாயை மாயையே.

'நான்' என்ற அகந்தை மதம் வழியாக வந்தால் என்ன, அறிவியல், அரசியல், பொருளியல், சமுதாய‌வியல், தொழில்நுட்பவியல் வழியாக வந்தால் என்ன? அது ஒரு பொய்யான கருத்துதான். 

From the email exchanges with Shan on 18-Mar-2021:

One has nothing but senses to perceive and interpret. We both agree that we interpret the sensory inputs. You give them both sensory inputs and interpretations primary status. I see them as stories appearing / arising in awareness and as such they are nothing but awareness. 


Then you build another story that I am doing this because somehow I want to reclaim the lost importance of my-self. Whereas I see that (apart from as another story arising in awareness) actually I am losing any remaining importance (sense-of-separation) and appreciate it as the natural progression of the first two steps (earth is not the centre of the solar system and human beings are not a special creation of God).


The sense-of-separation is the last conceit. It is encouraging that Carl Sagan identified it more than 20 years ago. 

There is a subtle difference. What Carl Sagan meant is most probably human beings as a whole (or believers of God-created-human story) thinking they are separate from nature. It is likely that he didn't mean the individual sense-of-separation. 

But, it is just a simple next step. Whether we understand it via science or spiritualism, it doesn't matter. But, there is an important difference.

கடவுள் அவதாரம் வந்து நம்மைக் காப்பாற்றும் (மீட்பர் / மீட்சிமை / மோட்சம் redemption) என்பதற்கும் அறிவியல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் நம்மைக் காப்பாற்றும் என்பதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டுமே நாம் இயற்கையிலிருந்து, இருப்பிலிருந்து வேறுபட்டவர்கள், அதை வெல்லவும் பயன்படுத்திக் கொள்ளவும் அதன் மீது ஆதிக்கம் செலுத்தவுமான‌ மனப்பான்மைக்கு வழிவகுக்கிறது.

இருப்பிலிருந்து (existence) நம்மைப் பிரித்துத் தனியாக (sense of separation) நினைத்துக் கொள்வது சரியன்று என்று பெரும்பாலான அறிவியல் அறிஞர்கள் ஒப்புக் கொள்வார்கள். அவர்களில் சிலரோ, பலரோ மதத்தில் ஈடுபாட்டோடு கூட‌ இருக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் மதம் சொல்லும், 'கடவுள் பிரபஞ்சத்தையும் உயிர்களையும் படைத்தார்' என்ற கதையை நம்பாமல் இருக்கலாம். 

பகுத்தறிவுவாதிகளும் அறிவியல் அறிஞர்களும் இருப்பை ஏற்று கொள்கிறார்கள். அத்வைதியும் இருப்பை (existence) ஏற்றுக் கொள்கிறார். 

அத்வைதிகள் பிரபஞ்சத்திற்கு முழு இருப்பைக் கொடுக்கிறார்கள் என்பதை ரமணர் விளக்கியுள்ளதை ஏற்கனவே பகிர்ந்து கொண்டுள்ளோம்.

22:10 Robert G. Ingersoll - Squeeze world like an orange - Swami Vivekananda's reply 

Robert Ingersoll to Vivekananda: Only thing we are sure about is this world. So, I believe in squeezing the orange dry, every drop of the orange of this world!

Vivekananda to Ingersoll: I also believe in the same thing. But I know a better way to squeeze the orange. I know I will not die. So, I am in no hurry. I have no fear. I see God in everyone and love everyone. Imagine living like this. You can squeeze 10,000 times more juice in this way.

இருப்பிற்கு அத்வைதிகள் மூன்று பண்புகளைக் கொடுக்கின்றனர் சத் (existence) சித் (knowledge) ஆனந்தம் (bliss). ஆனால் பிறர் வெறும் சத் (dead existence) மட்டுமே என்கிறார்கள். அந்த வெறும் சத்-லிருந்து பரிணாம வளர்ச்சி சித் (knowing / thinking / self-consciousness) வந்தது என்கிறார்கள். அவர்கள் ஆனந்தம் என்பதைப் பற்றிப் பேசுவதே இல்லை. இதுதான் முக்கியமான வேறுபாடு.

இந்த வேறுபாட்டை நாம் இப்போது ஒதுக்கி விடுவோம். ஏனெனில் இந்த வேறுபாடு மனிதரின் இயற்கையிலிருந்த பிரிவினை உணர்ச்சியை, அதன் பொய்மை (கருத்து மட்டுமே; உண்மை இருப்பில் இல்லை), அது எல்லாவிதப் பிரச்னைகளுக்கும் மூலமாக இருப்பதை அறியத் தடையாக இல்லை.

உண்மையில் 'நான்' என்பது மனிதனின் கடைசி அகந்தை அன்று. அதுவே முதல் அகந்தை. அதிலிருந்தே மற்ற எல்லாக் கோளாறுகளும் எழுகின்றன.

Sustained effective true social care cannot be possible without being spiritual (seeing through the sense-of-separation conceptual falsity). One may not name such a character as 'spiritual'. Naming is not important. Being is what makes the difference.

https://www.youtube.com/watch?v=su5ISL8zeSY - What Happens After Enlightenment | Swami Sarvapriyananda (13 minutes)

10:00
The pessimist sees the long dark tunnel.
The optimist sees the light at the end of the long dark tunnel.
The realist see the long dark tunnel, the light at the end of the tunnel and the next dark tunnel and so on.

10:56
We don't really care. We just make arguments for caring for the world in order to escape being spiritual. Be spiritual, you will care much more for the world.

No comments:

Post a Comment