Saturday 3 September 2022

தேசியம் என்ற கட்டுக்கதை - Do we need a national story?

 2202-09-03

தேசியம் என்ற கட்டுக்கதை - Do we need a national story?

"அந்தந்த காலத்து முரண்பாடுகளுக்குள் நாம் உயிர் பிழைக்கவும் வேண்டும்; அதே சமயம் அம்முரண்பாடுகளுக்குப் பலியாகி விடாமல் அவற்றைத் தாண்டிச் சிந்தித்துச் செயல்படவும் வேண்டும்."

இந்தியா பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு முன்பு எப்போதும் ஒரே நாடாக இருந்தது இல்லை. எனவே இந்திய தேசியம் என்பது பொய், கற்பனை.

சரி தான். அப்படி என்றால் தமிழ்நாடும் வரலாற்றில் முன்பு எப்போதாவது ஒரே நாடாக இருந்துள்ளதா? எனவே தமிழ்த் தேசியமும் பொய் தானே, கற்பனை தானே.

ஆம், இரண்டும் பொய்க‌ள் தான், கட்டுக் கதைக‌ள்தான்.

நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லைகள் வேறு. அதற்கும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற ஒன்றே இல்லை. அதேபோல் இன்றிலிருந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்பது எப்படி இருக்கும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது.

இது தமிழ்நாடு என்பதற்கும் பொருந்தும். உலகில் இன்றுள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். 

ஆனால் மக்களை ஒன்று படுத்த ஒரு தேசியக் கதை தேவைப்படுகிறது. அது ஆளும் வர்க்கத்தால் அவர்கள் ஆதிக்கத்திற்கு ஏற்ற கதையாகத் திணிக்கப்பட்டாலும் ஆளப்படும் குடிமக்களுக்கும் அத்தகைய பொய், கற்பனை, மயக்கம், போதை அவசியமாக உள்ளது. காப்பி, சிகரெட், மதுபானம், போதை மருந்துகள் உடலுக்கு என்பது போல் இது உள்ளத்திற்கு.

தனிமனித வாழ்க்கைக்குப் பெற்றோர், உறவுகள், ஊர் என ஒரு வரலாறு உள்ளது. அதே போல் சமூக வாழ்க்கைக்கும் நிலம், வளம், பருவம், பாதிப்புகள் போன்ற‌ பொதுவான கூறுகளைக் கொண்ட வரலாறு உள்ளது.

ஆனால் எல்லாத் தேசியக் கட்டுக்கதைகளும் இப்படியான பொதுவான கூறுகளின் (வரலாறு) மேல் திரிக்கப்படும் கற்பனை.

இந்திய தேசியம் என்ற பொய், கட்டுக்கதை போல் உலகெங்கும் எல்லா நாடுகளும் தங்களைப் பற்றி தமக்கே சொல்லி மக்களை மேய்த்து வருகின்றன. கட்டுக்கதை என்பதாலேயே அது எதிர்க்கப்படுவதில்லை. அதன் அம்சங்கள் என்ன, தத்துவம் என்ன‌, அவற்றின் அடிப்படையில் என்ன செய்யப்படுகிறது என்பதே முக்கியம்.

இந்திய தேசியக் கட்டுக்கதை பெரும்பாலோருக்கான வளமான வாழ்வு தரும் வகையில் கற்பனை செய்து பரப்பப்பட்டு அதன் வழி நாணயமான, நியாயமான, நீதியான தீர்வுகள் பொறுப்புணர்ச்சியுடன் உண்மையாக‌ நேர்மையாக‌ நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழ்த் தேசியம் என்ற பொய்க்குத் தேவை இருக்காது. 

தமிழ்மொழி, கலை, பண்பாடு, மரபு, தமிழ்நாட்டின், தமிழர்களின் வளம், முன்னேற்றத்திற்குப் பாதிப்பு இல்லாத (அதே போல் எல்லா மாநிலத்திற்கும்) இந்திய தேசியக் கட்டுக்கதையை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. 

அந்தச் சூழலில் தமிழ்த் தேசியம் என்பது பெயரளவில் இன்று தமிழ்நாட்டிற்குள் சென்னைக்காரன், தஞ்சைக்காரன், மதுரைக்காரன்... என்று சொல்வது போலாகி விடும். நாளடைவில் இன்று எப்படித் தமிழ்நாட்டிற்குள் யாரும் தன்னைச் சேரன், சோழன், பாண்டியன்... என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்லையோ அப்படித் தமிழ்த் தேசிய அடையாளமும் வரலாறாகி விடும்.

ஆனால் இன்று திரிக்கப்படும் திணிக்கப்படும் இந்திய தேசியம் இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பல மொழி, மரபு, பண்பாட்டுக் குழுக்களுக்கிடையே உள்ள மேலோட்டமான சில பொதுத் தன்மைகளை மட்டும் கணக்கில் கொண்டு, 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதற்கு மாறாக, இந்தி, இந்துத்துவ திணிப்பாக, அதன் பேரில் பெரும்பாலோருக்கு உரிமையும் வாய்ப்புகளும் தந்திரமாக மறைமுகமாக மறுக்கப்படுவதாக உள்ளது; குறிப்பிட்ட மேல்சாதிகள் மட்டும் எல்லாத் தொழில், வேலை வாய்ப்புகளையும் ஆக்கிரமித்துக் கொள்ளவும் அது தொடர்வதாகவும் உள்ளது.

அவர்களுக்கு உண்மையில் இந்தி மொழி வளர்ச்சி பற்றிய ஆர்வம், அடிப்படையான இந்து மதத் தத்துவம், வேதாந்தம், உபநிட உண்மைகள் மீது தெளிவோ உறுதியோ இருப்பதாகத் தெரியவில்லை. இந்தி பேசும் மாநிலங்களின் மோசமான எழுத்தறிவு விகிதத்தைப் பார்த்தாலே இந்தி மொழி ஓர் ஆதிக்க ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவது தெரிகிறது.

எனவே இந்தப் போலி இந்திய தேசியம் தோலுரிக்கப்பட வேண்டியுள்ளது. அதை எதிர்த்துப் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (திருக்குறள்: 98 பெருமை 972)', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பன போன்ற சமத்துவ, முற்போக்குக் கூறுகளை மிகைப்படுத்தித் தமிழ் தேசியம் என்ற ஒரு பொய்யைக் கட்டிப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

[திருவள்ளுவர் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொல்லியுள்ளதை நாம் 'பிறப்பொக்கும் எல்லா மனிதர்க்கும்' என்றுதான் நினைத்துக் கொள்கிறோம்; 'எல்லா உயிர்களும் சமம்' என்று புரிந்து கொண்டால் அதற்கேற்ப நம் வாழ்வு இருக்கும்.]

நாம் இலக்கியங்கள், சில வரலாற்று ஊகங்கள் அடிப்படையில் நம் தென்னிந்தியப் பூகோளப் பகுதியில் வாழ்ந்த பெரும்பாலான மனிதர்கள் தங்களைத் தமிழர்கள் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக அடையாளப்படுத்திக் கொண்டு உயர்ந்த பண்புகளைப் பரவலாகப் பின்பற்றி, பண்பான, ஒற்றுமையான, ஏற்றத்தாழ்வற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக நாம் கற்பனை செய்து கொள்கிறோம்.

ஆனால் உண்மை எதுவாக இருக்க வாய்ப்பு என்றால் அந்தந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் அப்போது நிலவிய அரசியல், பொருளியல் நெருக்கடிகளுக்கிடையே உயிர் பிழைக்கத் தேவையான அடையாளத்தைத் தாமாக முன்வந்தோ அல்லது ஆட்சி செய்தவர்களால் வலிந்து திணிக்கப்பட்டோ மேற்கொண்டு வாழ்ந்திருப்பர்.

மேற்கண்ட ஊகத்திற்குச் சான்றாக இன்றைய தமிழ்நாட்டையே எடுத்துக் கொள்ளலாம். கடந்த தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்த வெற்றியை வெற்றி பெற்ற சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு தமிழ்நாட்டில் பெரும்பாலோர் பெரியாரின் வழியில் சிந்திப்பதாகக் கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் கிடைத்த ஒட்டு மொத்த வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் அப்படிச் சொல்ல முடியாது. திருக்குறளையும் பெரியாரையும் தெரியாத பல இலட்சக்கணக்கான தமிழர்கள் இருக்கலாம்.

காஞ்சிமடத்தில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் மட்டும் பிரபலமான‌, மற்ற நான்கு சங்கராச்சாரியர் மடங்களால் ங்கீகரிக்கப்படாத நிலையில், 'லோககுரு' என்று சொல்லிக் கொள்வதற்கு இணையாக, பெரியாரை நாம் எல்லாத் தமிழர்களுக்கும் தந்தையாகப் பெருமை அடித்துக் கொள்கிறோம். இரண்டும் மிக மிக மிகைப்படுத்தப் பட்டவை. ஆனால் அதுதான் மனிதர்களின் இயல்பு.

நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் கதை மாறலாம். அதன் அடிப்படை (மொழி, கொள்கை, தத்துவம், மதம், பூகோளம்...) மாறலாம். ஆனால் ஏதோ ஒரு கதை இல்லாமல் நம்மால் ஒருங்கிணைய முடியாது.

தேசியக் கதை போல், நாம் எப்படி வாழ்கிறோம் என்பதற்குப் பல பிற துறைக் கதைகள் அடிப்படையாக உள்ளன. கதைகளின் போதையில் இருப்பவர்கள் மோதிக் கொண்டே தான் இருப்பார்கள். கதைகளின் போதையைக் கண்டு, உணர்ந்து, ஒப்புக் கொண்டு தங்கள் சிந்தனை, செயலை, வாழ்வை மாற்றிக் கொள்பவர்கள் இன்று மிகச் சிறுபான்மையினராக இருக்கலாம். 

It is time to grow up!

Nationalism is an infantile disease. It is the measles of mankind.


Highlighted by the sender:



The big idea: do we need a national story?

Patriotic tales are easy enough to debunk. That doesn’t make them irrelevant

Mon 13 Dec 2021 09.00 GMT
We’ve heard much about the importance of stories in recent years. It has been said that Vote Leave won the Brexit referendum because they told a better story than Remain; that Donald Trump won the US election in 2016 because he told a better story than Hillary Clinton, and lost in 2020 because his story fell apart. Some think the Labour party has struggled to turn the tide decisively against a corrupt, chaotic government because it doesn’t have a clear story to tell.

Stories have been central to community organisation for as long as communities have been organised. As Nesrine Malik writes in her insightful collection of essays, We Need New Stories: “Every social unit, from the family to the nation state, functions on the basis of mythology, stories that set them apart from others.” National stories can support any viewpoint: left or rightwing, liberal or authoritarian. They are integral to nationalism and represent a form of identity politics. While many across the political spectrum dislike nationalism and identity politics, the world is mostly made up of nation states. Unless that changes, those nations will continue to be part of how we identify ourselves – whether or not we embrace or reject their dominant values. Politicians of all stripes ignore the power of national stories at their cost.
National stories may encompass science, the arts and religion, yet they are rooted in history: they create a narrative of how a nation, uniquely, was formed. These stories are always exceptionalist, suggesting that “our” nation is different from (and usually superior to) others. They are intended to exclude as much as they are intended to unite.

In Britain, there have been many attempts to construct national mythologies from a complex and chequered history. Our Island Story by HE Marshall, first published in 1905, is still often referenced today; in 2010, the then prime minister David Cameron named it his favourite childhood book.

Marshall emphasised that Our Island Story “is not a history lesson, but a storybook”. She advised her young readers: “I hope you will not put this beside your school books, but quite at the other end of the shelf, beside Robinson Crusoe and A Noah’s Ark Geography.” Whether or not this advice was effective, many of them internalised her depiction of an exceptional ascent to greatness.

National stories are not set in stone. In fact, comparing different versions written decades or centuries apart can reveal dramatic shifts. In 1746, the Duke of Cumberland, son of George II, defeated Bonnie Prince Charlie’s Jacobite rebels at Culloden. Cumberland ordered “no quarter” be given to Jacobite survivors. Slaughter ensued. In the immediate aftermath of his bloody triumph, Cumberland was hailed as a “Hero-God” in England (and in much of lowland Scotland). He was burnished as an icon of progressive British liberty against the regressive, superstitious authoritarianism of the Catholic Stuarts. The Highlanders and Jacobites who had fought him were represented, in the words of historian Murray Pittock, “as savages to be tamed”. Handel wrote his famous oratorio chorus “See, the conqu’ring hero comes!” in Cumberland’s honour.


A century later, everything had changed. Queen Victoria was then on the throne: she adored Scotland, and Highlanders particularly. The truth about Culloden was now well known. Victoria’s great-grand-uncle, the Duke of Cumberland, was no longer seen as the “godlike youth” of Handel’s chorus, but as the “Butcher of Culloden”: a monster, a villain, an embarrassment.

The national story changed to accommodate this. Cumberland’s statue in London was removed in 1868. Victoria herself is thought to have ordered the erasure of the word “Culloden” from his memorial obelisk in Windsor Great Park. In 1856, a popular history book, The Comprehensive History of England, claimed that Cumberland “left behind him in Scotland the name of the Butcher, and the people of England, disgusted sooner than any other with cruelty, confirmed this title to the hero of Culloden”. The story continued to be one of British and English exceptionalism, modernity and unity. The difference was that in 1746 these values had been demonstrated by the English people celebrating Cumberland, whereas by 1856 they were demonstrated by their rejecting him.

So, while national stories may be rooted in history, they are not history. As the historian Richard Evans has said: “History isn’t a myth-making discipline, it’s a myth-busting discipline.” The process of historical inquiry inevitably challenges national stories. It is, therefore, often seen as a threat by their proponents: witness the recent attacks on the National Trust for stating some discomfiting facts about the links of some of its properties to colonialism and historic slavery in an academically rigorous report.

National stories are propaganda, fairytales, superhero origin stories. They are supposed to unite, and exclude, through belief. As with all forms of faith, true believers will defend them vigorously. In repressive societies, this defence of faith often prevails over historical research and analysis. Societies that are more at ease with themselves are generally much less anxious about the truth coming out.

It is possible to tell national stories that are sober and restrained; that speak of shared liberal values, democracy, artistic and scientific achievement, diversity of views or identities. Fundamentally, they are still fictions. Those who tell them will pride themselves on the unique sophistication of their own grown-up national stories compared to everyone else’s absurd delusions, thus neatly reinforcing the paradigm of exceptionalism yet again.

Perhaps one day someone will find a more compelling story to tell beyond nationalism, and national stories will cease to have such a hold on us. For the moment, they are with us, whether we feel we “need” them or not. So long as this holds true, it is important to recognise that the prejudices within them are never fixed. Every generation interrogates and questions what it is told: the stories must adapt. The enduring popularity of myths may frustrate historians, but we can comfort ourselves that those myths are always in flux. It’s a sign of health if our societies are open to change; if we never entirely agree.


Alex von Tunzelmann’s Fallen Idols: Twelve Statues That Made History is published by Headline. To support the Guardian and the Observer buy a copy at guardianbookshop.com. Delivery charges may apply.

Further reading

Britons Forging the Nation 1707-1837 by Linda Colley (Yale, £16.99)

We Need New Stories: Challenging the Toxic Myths Behind Our Age of Discontent by Nesrine Malik (W&N, £8.99)

Imperial Nostalgia: How the British Conquered Themselves by PDK Mitchell (Manchester, £14.99)


No comments:

Post a Comment