Saturday, 11 February 2023

குன்றாச் செல்வம் - பலமான ஆயுதம் - ஆழ்ந்த பதில் - சிந்திக்காச் சுதந்திரம்

2023-02-02

குன்றாச் செல்வம் - பலமான ஆயுதம் - ஆழ்ந்த பதில் - சிந்திக்காச் சுதந்திரம்


நண்பர் செல்வநாதன் பிப்ரவரி 2, 2023 அன்று அனுப்பியது:

எளிமை ஒரு வகைச் செல்வம்
பொறுமை ஒரு வகை ஆயுதம்

இன்று (பிப்ரவரி 11, 2023) அதிகாலை அது செம்மையுற்றது:

எளிமை ஒரு வகையில் குன்றாச் செல்வம் (குறையா)

பொறுமை ஒரு வகையில் பலமான ஆயுதம் (வலிவான)

மெளனம் ஒரு வகையில் ஆழ்ந்த பதில் (பொதிந்த / செறிந்த / பொறுப்பான)

ஆன்ம விழிப்பு (மெய்யுணர்வு) ஒரு வகையில் உறங்கா உறக்கம் (தூங்காத் தூக்கம் / போரிடா விடுதலை / சிந்திக்காச் சுதந்திரம்)

இவை அனைத்தும் அவற்றிற்கு எதிரானவை இல்லாமல் இயலா.

எளிமை x பகட்டு / செழிப்பு
பொறுமை x சீற்றம்
மெளனம் x வாதம் / வழக்குரை 
ஆன்மீக விழிப்பு (மெய்யுணர்வு) x லௌகீக லயிப்பு

No comments:

Post a Comment