Thursday, 15 September 2022

மதம் மறையுமா? Do we still need religion?

 2022-09-15

மதம் மறையுமா? Do we still need religion?

"அந்தந்த காலத்து முரண்பாடுகளுக்குள் நாம் உயிர் பிழைக்கவும் வேண்டும்; அதே சமயம் அம்முரண்பாடுகளுக்குப் பலியாகி விடாமல் அவற்றைத் தாண்டிச் சிந்தித்துச் செயல்படவும் வேண்டும்."

மதம் மறையுமா? Do we still need religion?

மதம் இல்லாமல் பரிசோதனை அறிவியல் (empirical science) மட்டும் கொண்ட மனித சமுதாயம் இருக்க முடியுமா? அதே போல் பரிசோதனை அறிவியல் இல்லாமல் மதம் மட்டும் கொண்ட மனித சமுதாயம் இருக்க முடியுமா? இயலாது என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மனித இயல் பரிணாம வளர்ச்சியியல் பேராரசிரியர்.

மனித உயிரினத்திற்கு மத மனப்பான்மை அவசியம் தேவைப்படுகிறது. அதனால் பல நன்மைகள் உள்ளன. மதத்தை எதிர்ப்பதாக எழுந்த இயக்கங்களின் செயல்பாடுகளிலும் அம்மதத்தன்மை, சிந்தனைப் போக்கு, சடங்கு, நம்பிக்கை வந்து விடுகின்றன‌. இதை நாம் முன்பு சுருக்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறோம் (தலைவர்களுக்குச் சிலை, பிறந்த நாள் கொண்டாடுதல், சமாதி அமைத்தல், பிரேதத்தைப் பாதுகாத்தல், கொடி ஏற்றுதல், குறிப்பிட்ட சட்டை, சின்னங்கள் அணிதல்...).

மதம் ஏன் மறையாது என்பதற்கு பேராரசிரியர் இரண்டு காரணங்களைச் சொல்கிறார். (1) சராசரியாகப் பார்க்கும் போது மத நம்பிக்கை உள்ளவர்கள் ஒப்பிட்டளவில் மகிழ்ச்சியாக உள்ளார்கள், உடல், உள நலத்தோடு உள்ளார்கள், அதிக ஆண்டுகள் வாழ்கிறார்கள். அவர்கள் குறைவாக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். வாழ்க்கைக்கு நல்ல அர்த்தம் இருப்பதாக நினைக்கிறார்கள். (2) தங்கள் சுற்றுப்புற சமூகத்தோடு அதிகம் உறவு கொள்கிறார்கள். பிற மனிதர்கள் மீது அவர்களுக்கு நன்னம்பிக்கை உள்ளது. இறப்பையும் இயல்பாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

அவர் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில் இதை அறிந்ததாகச் சொல்கிறார்.

என் மதமே சிறந்தது, என் கடவுளே உண்மை என்ற காழ்ப்புணர்ச்சி, வெறுப்புணர்ச்சி அடிப்படையிலான மத நம்பிக்கை இங்கு சொல்லப்படவில்லை என்று நாம் ஊகிக்கலாம். எல்லாம் இறைவனின் படைப்பு, உள்ள ஏற்றத்தாழ்வுகள், துன்பங்கள் நம்மைப் பக்குப்படுத்த இறைவன் கொடுத்த வாய்ப்புகள் என்பது போன்ற மனப்பான்மையில் உள்ளவர்கள் தான் இத்தகைய நன்மைகளை அடைய முடியும்.

மதத்தில் மனதைச் செலுத்த முடியாதவர்களை அவ்விடத்தில் கால்பந்து, கிரிக்கெட் போன்றவை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ஏனென்றால் மதத்திற்குக் கடவுள் நம்பிக்கையை விட சடங்குகள் அதில் எழும் கூட்டுணர்ச்சி முக்கியமாகும். இதை இங்கிலாந்தின் தத்துவ அறிஞர் ஜான் கெரே (John Gray நாத்திகர்) என்பவரும் சொல்கிறார்.

மத மனப்பான்மைக்குத் தேவையாக வளர்ந்த உளவியல் கூறுகளே பின்னால் பரிசோதனை அறிவியலின் வளர்ச்சி வழிவகுத்தது. இதையும் பல விஞ்ஞானிகள் சொல்லப் படித்திருக்கிறேன்.

இப்படிச் சொல்வதால் மதத்தின் பெயரால் நடப்பவை, சொல்லப்படுபவை (அற்புதங்கள்,...)... எல்லாம் சரி என்றோ ஏற்றுக் கொள்ளத் தக்கவை அன்றோ ஆகி விடாது.

எந்த மதமும் தோற்றுவிக்கப் பட்ட காலத்திலிருந்து அப்படியே இருக்கவில்லை. பலவகையில் மாறியும் பிளவுபட்டும் மோதிக் கொண்டும் வருகின்றன. ஒரு காலத்தில் சைவமும் வைணவமும் மோதிக் கொள்ளவில்லையா?

அறிவியல் பார்வையில் மனித வாழ்க்கையில் மதத்தின் பங்கை நாம் நன்கு புரிந்து கொண்டால் தேவையான, ஆரோக்கியமான மாற்றங்களை நடைமுறைப் படுத்த வழிவகுக்கும். அதில் பொருள்களை வீணடிக்கும் சடங்குகள் மாறும். பிறருக்கு இடைஞ்சலான‌ (தெரு ஒலிபெருக்கிகள்) வழக்கங்கள் மாறும். இன்னும் பல நல்ல மாற்றங்கள் வரும்.

மதங்களில் கடவுளை விட, கடவுளின் படைப்புகளான எல்லா உயிர்களையும் உயிரற்றவையும் போற்றப்படும் தன்மை முக்கியத்துவம் பெறும்.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
   தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
   யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
   இடம்எனநான் தெரிந்தேன் (வள்ளலார்)

படிப்பதை, அது பற்றிச் சிந்திப்பதைப் பகிர்ந்து கொள்கிறேன். அவை சரியாக இருக்கவோ ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவோ வேண்டிய அவசியமில்லை. மாறுபட்ட கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதை வரவேற்கிறேன். அவை நம் அனைவர் சிந்தனைகளையும் செழுமைப்படுத்தும்.


Highlighted by the sender.



The big idea: do we still need religion?

Mon 28 Mar 2022 12.30 BST

In 2018, archaeologists moving bodies for reburial from a 19th-century cemetery in Birmingham to make way for the new HS2 station were puzzled to find several that had plates on their laps. Then someone remembered a curious custom from the nearby Welsh Marches – that of the village “sin-eater”. A plate of bread and salt would be placed on the deceased’s lap while they were lying in repose. Just before the coffin was closed and the funeral cortege set off for the church, the village sin-eater arrived, ate the bread and was given some coins and a glass of ale for their trouble. The belief was that the deceased’s sins were absorbed by the salt and transferred into the bread, and then into the sin-eater.

Sin-eaters were usually elderly and destitute, and glad to have the money – not to mention the free food and drink. The price they paid was to be shunned by their community because of their macabre associations. The last known sin-eater was Richard Munslow, who died aged 73 in 1906. Sin-eating reminds us that, more than anything else, even the most staid of religions – in this case, Anglicanism – can be associated with surprisingly curious beliefs and rituals.

Perhaps because of this, it has often been claimed that religious belief arises from ignorance and superstition. If that were the case, you might expect religion to gradually fade away as societies became better educated and more scientifically oriented.

There are at least two reasons, however, why religions persist. One is the fact that, on average, religious people are generally happier, healthier and live longer. For better or for worse, they also have easier deaths when the time comes. The other is that religious people are more likely to feel that they belong to a community. In a survey I ran, those who reported attending religious services were depressed less frequently, felt their lives were more worthwhile, were more engaged with their local community, and felt greater trust towards others. These enormous benefits mean not only that religion has enduring appeal, but that religious practices make you “fit” in the evolutionary sense – and thus they tend to stick around.

Part of the reason people are attracted to religion is that its rituals – the standing, sitting and kneeling in unison, the singing, the listening to emotionally rousing sermons – trigger the brain’s endorphin system. This is the mechanism that underpins social bonding in all primates, including humans. Like opiates, endorphins produce a sense of bliss bordering on ecstasy, calmness and warmth, relaxation and trust, while elevating pain thresholds. In addition to these hedonic benefits, endorphins trigger the release of natural killer cells (part of the body’s immune system).

Endorphins also underpin the bonding of friendships and, through that, allow us to create supportive groups of like-minded individuals. This effect seems to be especially strong in the context of rituals, as has been shown experimentally in religious services in the UK and Brazil. It seems, therefore, that religions evolved to reinforce a sense of community cohesion, something that’s extremely important to our wellbeing and survival.

A penchant for religion is part of our genetic inheritance


Our natural community size – the size of our personal social network, the number of friends we have on Facebook – is part of a relationship between group size and brain size in primates. Each species has a characteristic group size determined by the size of its brain. Ours is about 150. Not only is this the average size of personal social networks (the number of extended family and friends with whom you have meaningful relationships), but it also turns out to be the optimal size for religious congregations. If a congregation is smaller than about 100, it puts a heavy burden on the membership; if it is above about 200, it becomes increasingly prone to divisiveness. This seems to explain why big religions are so susceptible to fragmentation – constantly throwing up small sects (typically of a few hundred people at most) built round a charismatic leader whose wayward beliefs the hierarchy desperately tries to contain.

Social bonding is important, of course, to many species. But there’s an aspect of religion that seems to be peculiarly human. Being able to engage in religious discussion – and hence explain the significance of the rituals and why you should take part – depends on the kinds of mind-reading, or “mentalising”, skills that play a crucial role in managing our everyday relationships. These are the skills that allow us to understand what someone else is thinking, to grasp their intentions. They allow us to utter sentences such as, “I know that you realise that Freddie believes that …”

To be able to do this, I have to be able to step back from the immediacy of the physical world so as to imagine the possibility that you might or might not think this, that Freddie might or might not intend whatever you thought he did, and even whether the person Freddie had in mind did or did not think what Freddie thought they did. Apes can do the first two steps in this chain, but that’s the limit. For humans, it comes easily, bringing with it an ability to imagine parallel worlds inhabited by invisible beings. It’s a short step from there to religious ideas, which in turn lead to better bonding, which makes you more likely to survive. Survival means your superior mentalising skills will be passed on to a new generation, equally adept at religious thinking; a penchant for religion is therefore part of our genetic inheritance.

But that’s not all. The same cognitive abilities that give us religion also allow us to ask why the world has to be the way it is (giving us science) and to imagine entirely fictional worlds (giving us literature). Thus, you could no more have a world where religion was cast aside as superstition than you could have one without science or stories. And that would be a very different world indeed.

Robin Dunbar is emeritus professor of evolutionary psychology at the University of Oxford and author of How Religion Evolved and Why It Endures.

Further reading

A History of God by Karen Armstrong (Vintage, £11.99)

Religion Explained by Pascal Boyer (Basic Books, £14.35)

World Religions – The Great Faiths Explored and Explained by John Bowker (DK, £19.99)

ஆறுமுகப் பெருமாள்:

மனித இனம் அழியும் முன்பு , மதம் மறையுமா என்பது தெரியாது. ஆனால், மதம் மறைந்தால், மனித இனம் தழைத்தோங்க வாய்ப்புள்ளது என்று தோன்றுகிறது. கடவுளை ஒரு கருவியாக (பெரும்பாலும் பயமுறத்துவதற்காக ) கொண்டு, மனித கூட்டமைப்பை உருவாக்கி, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே மதம். தனி நபர்கள் , தேடலின் அடிப்படையில் ' கண்டதாக'   , பாடிச்சென்றதெல்லாம் அவர்கள் அனுபவம். மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி.ஒவ்வொருவரும் அவரவர்கள் தேட்டையும், பாட்டையும் பாடவேண்டும். அதுதான் வாழ்க்கை.இதற்கும் , மதத்துக்கும் சம்பந்தமில்லை. மதத்தால் பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன என்று கூறுவது கட்டுப்பாட்டு அடிப்படையில். சாக்ரடீஸின் ரொட்டியும், சர்க்கஸும் தான் மதம்.கோபர்னிகஸ்,கலிலியோ போன்றவர்களின் பங்களிப்புகளின் வீச்சு  மதங்களின் அடிப்படை கோட்பாடுகளை மாறச்செய்திருக்கிறது..

சாதாரண மக்களின் வாழ்க்கையில் மதம் முக்கிய பங்காற்றுகிறது என்பது , மனித வளர்ச்சியில் உள்ள குறைபாடு. உதாரணமாக, பாவ மன்னிப்பு  என்பது மேலும் பாவம் செய்யவும் தூண்டலாம்; திருத்தி நல்வழிப்படுத்தவும் செய்யலாம்; கோருபவரின் அறிவு , தெளிவைத் பொறுத்தது‌.

எங்கெல்லாம் அரசு, சட்டங்கள், தார்மீகம் சிதைவுறுகிறதோ, அங்கெல்லாம் மதம்/ போலிச் சாமியார்கள் வலுவுறுகிறார்கள்.

மதத்தை மறுப்பதால் ,முடிவு தெரியாத வாழ்க்கையில், மரண பயத்திற்கும், மயக்க நிலையில், இல்லாத முடிவை இருப்பதுபோல் நினைத்து தேற்றிக்கொள்ளவும் , பெரும்பாலோருக்கு மதம்  ஒரு convenient fix. That can be seen as refusal/ inability to take responsibility rather than  surrender.

But what about God?.He ,Himself is a victim of religions.

தொல்:


ஆம், உண்மைதான். மதத்தைப் பல கோணங்களில் பார்க்க இயலும். அதில் மானுட இயல் பரிணாம வளர்ச்சி அறிவியல் (Anthropological Evolutionary Science) பார்வை ஒன்று. அதுவே மேலே கொடுக்கப் பட்டுள்ளது.

ஓர் எடுத்துக்காட்டு: 

நம்மால் இனிப்பு, கொழுப்பு உண்பதைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது, ஏன்? நம் உயிரினத்தின் இன்று வரையிலான இருப்பில் 99% காலம நமக்கு இவை கிடைப்பது மிக அரிது. அதனால் கிடைக்கும் போது நிறைய உண்டு உடலில் சேர்த்து வைத்துக் கொள்ளும் படியாக நம் சுவை பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இது அறிவியலின் கணிப்பு.

ஆனால் அதே இயல்பு இன்று, இனிப்பும் கொழுப்பும் நினைத்த நேரத்தில் உண்ண இருக்கும் போது (உலகில் எல்லோருக்கும் அப்படி இல்லை), பாதகமாக உள்ளது.

அதற்காக இன்று இனிப்பும் கொழுப்பும் மனிதருக்குத் தேவையே இல்லை என்று சொல்ல முடியுமா? சரியான அளவில் இன்றும் தேவையே.

இதே போல் மதத்தையும் பார்க்கலாம்.  மதம் சொல்லும் கதை போன்றதே அறிவியல் சொல்லும் கதையும் என்று புரிந்து கொள்வதும் உதவும். நிச்சயமாகப் பரிசோதனை அறிவியல் கட்டும் கதை சிறப்பானது, பயனுள்ளது. அதே மதம் கட்டும் கதைக்கும் பயனுள்ளது. அது நேரடியானது அன்று.

மேலும் அறிவியல் தொழிநுட்பத்தால் விளைந்துள்ள தீமைகளையும் புறக்கணிக்காமல் (அதற்காக அறிவியலே வேண்டாம் என்று சொல்ல முடியாதல்லவா) சேர்த்து சிந்தித்தால் மதத்தை வேறு கோணத்தில் பார்க்க இயலும்.

ஒரு குறிப்பிட்ட சிலரின் வாழ்வில் 'மதம்' தேவைப்படாமல் போகலாம். ஆனால் அவர்களும் மத மனப்பான்மையைத் துறந்து விட முடியாது. மதம் என்கிற அமைப்பின் தீமைகளையும் மத மனப்பான்மையையும் பிரித்தறிய வேண்டும்.

மக்களுக்கு மதம் அவசியம் தேவை. நான் சொல்வது எந்த அடிப்படையில் என்றால் சமுதாயமாக வாழப் பொது ஒழுக்கம், கட்டுப்பாடு, கூட்டுணர்ச்சி தேவை, அதை நான் மதம் என்று சொல்கிறேன் என்று பெரியார் சொல்லியுள்ளார்.

No comments:

Post a Comment