Monday 7 March 2022

அறிவியலும் ஆத்திகமும்

 2202-03-07

அறிவியலும் ஆத்திகமும்


ஆத்திகம்: எல்லாவற்றையும் படைத்த கடவுளைப் படைத்தது யார் அல்லது எது?

அறிவியல்: எல்லாம் உருவாகக் காரணமான விதிகள் எப்படி உருவாகின?

ஆத்திகத்தின் பார்வையில் கடவுளைச் சுயம்பு என்று சொல்வதன் மூலம் தப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால் அறிவியல் இயற்கை (இயல்பியல்) விதிகள் சுயம்பு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இயற்கை விதிகள் என்பன நாம் பார்க்கும் பிரபஞ்சத்தில் தோன்றும் ஒழுங்குகளை (regularities) பாங்குகளைக் (patterns) கொண்டு இயற்கையின் இருப்பின் மேல் நாம் கொடுக்கும் (conceptual layer) ஒரு மாதிரியாகும் (model). எனவே அவை வெறுமையில் (nothing / void) இருந்து தோன்ற வழியில்லை (such models / conceptual layers are also expressions of the existence).

மேலும் மாதிரி / விதிகள் (model / laws) எதையும் உருவாக்க (create) முடியாது என்பது பொது அறிவாகும். ஒரு மாமரத்தைப் பார்த்து நாம் உருவாக்கும் மாமரச் சிலை அல்லது ஓவியம் நல்ல மாதிரியாக (good model) இருக்கலாம். ஆனால் அது காய்க்காது.

ஆத்திகர்களின் நம்பிக்கையைக் கிண்டல் செய்யும் அறிவியல் அறிஞர்கள் தங்களின் அதை விட மோசமான நம்பிக்கையை உணர முடியவில்லை; உணர மறுக்கிறார்கள். என்றாலும் சில அறிவியல் அறிஞர்கள் உண்மையை (கீழ்க்கண்ட கட்டுரையில் உள்ளவாறு) ஒப்புக் கொள்கிறார்கள்.

இது பரிசோதனை அறிவியலுக்கு (empirical science) எதிரானதும் அன்று; அதை ஏற்றுக் கொள்ளாததும் அன்று. 

பரிசோதனை அறிவியலின் சாதனைகள் அதனால் வந்த தொழில் நுட்ப வளர்ச்சிகள் அதனால் வந்த மாற்றங்கள் உண்மையில் ஒட்டு மொத்தத்தில் முன்னேற்றமா பின்னேற்றமா என்பது தனி விவாதம். 

உண்மையில் அப்பரிசோதனை அறிவியலின் படி (முக்கியமாக பரிணாம வளர்ச்சி அறிவியலின் படி) முன்னேற்றம் (progress) என்பதற்கே பொருளோ இடமோ இல்லை என்பது அறிவியல் அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது.

ஆனால் பரிசோதனை அறிவியல் மனிதர்களின் அறிவாற்றலுக்கு ஆய்வுத் திறனுக்கு நல்ல எடுத்துக் காட்டு என்பதில் ஐயமில்லை. பெரும்பாலான அறிவியல் அறிஞர்கள் மாதிரியை உண்மை இருப்பு (model = reality) என்று எடுத்துக் கொள்வதிலும் அதை விட நிரூபிக்க முடியாத வெளியிருப்பை (objective external world) இருக்கிறது என்று நம்புவதிலும் குழம்பி நிற்கிறர்கள் அப்படியான குழப்பத்தையும் உணரவில்லை என்பதே இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது.

Yes, there is no need for a God to create the universe.

Because universe is not created. It IS. It appears to be created in our model of the universe. Only our model (our interpretation of our observations and calculations) suggests that the universe was created. Universe doesn't come to us and say that it was created in the direct experience.

We confuse the model with the reality.

One may say all we have is model; all we can have is model; all we can ever hope to have is model. That may be so. But, that doesn't make the model = reality.


Excerpts:

In his new book, Stephen Hawking reiterates that there is no big gap in the scientific account of the big bang. The laws of physics can explain, he says, how a universe of space, time and matter could emerge spontaneously, without the need for God. And most cosmologists agree: we don't need a god-of-the-gaps to make the big bang go bang. It can happen as part of a natural process. A much tougher problem now looms, however. What is the source of those ingenious laws that enable a universe to pop into being from nothing?

Traditionally, scientists have supposed that the laws of physics were simply imprinted on the universe at its birth, like a maker's mark. As to their origin, well, that was left unexplained.

...

Can the multiverse provide a complete and closed account of all physical existence? Not quite. The multiverse comes with a lot of baggage, such as an overarching space and time to host all those bangs, a universe-generating mechanism to trigger them, physical fields to populate the universes with material stuff, and a selection of forces to make things happen. Cosmologists embrace these features by envisaging sweeping "meta-laws" that pervade the multiverse and spawn specific bylaws on a universe-by-universe basis. The meta-laws themselves remain unexplained – eternal, immutable transcendent entities that just happen to exist and must simply be accepted as given. In that respect the meta-laws have a similar status to an unexplained transcendent god.

...

there is no compelling need for a supernatural being or prime mover to start the universe off. But when it comes to the laws that explain the big bang, we are in murkier waters.

No comments:

Post a Comment