2022-03-15
மயிரிழையில் உயிர் தப்பினேன் - ஊழே நமக்கு நல்ல உதவியாகும்!
14 மார்ச் 2022 காலை 09:30 மணி போல் - ஹவுன்ஸ்லோ, இலண்டன்
Blue Dot - Thol about to cross the road (back from morning walk)
Blue arrow - Thol would have crossed in a few seconds
Green line-arrow - A car coming in Barrack Road should have, indicated right turn, slowed down, checked the oncoming traffic and any pedestrians about to cross Corporation
Avenue (from one side to other side) and turned right slowly.
Red line-arrow - Instead the car (driving about 30 mph - actual speed limit is 20 mph) without slowing down drove into the wrong lane and sped away.
In a second or two I would have (only checking the traffic from Corporation Avenue in the lane towards Barrack Road) stepped into the lane.
If not fatal, I would have been injured very badly.
I escaped but one day the same driver (getting into this habit) will definitely hit somebody.
Nothing special about me. Today thousands of people all over the world would have died in road accidents or horribly injured or escaped by a hair width.
That is Life and Death!
Take care!
Shan:
I'm glad you are Ok. Probably an American or French (or some other country which drives on the right side) driver.
Pillai:
Take care.In driving there is " defensive driving" for safety.Pedestrians too should follow the " defensive walking", particularly in countries where rules are followed strictly.In India rules are followed scantily; that way we are ingrained with expecting the worst.
Thillai:
I’m glad you’re ok.
Bala:
Hope you're ok. Saw your email; Glad to know you escaped. Probability of such a thing happening again is low? That's another good news.
Thol:
Thanks Bala, I am fine. It seems that we have to look all around before crossing a road, to be on the safe side.
Valluvan:
Good You are alive and safe!
May be. But I think that GOD has sent a warning that "you are talking about me too much, more than I know about myself"
Thol:
Likely...
Man as God doesn’t think but knows.
God as man thinks but doesn’t know.
மனிதன் கடவுளாய்ச் சிந்திப்பதில்லை; அறிவான்.
கடவுள் மனிதனாய்ச் சிந்திக்கிறான்; அறியான்.
Know (raw consciousness) - knowing without self-reflection
கடவுள் மனிதன் பாட்டைப் (அறிவதை அறிந்து அவலப்படுவது) படுவதில்லை.
மனிதன் கடவுள் பாட்டைப் (அறிவாக இருப்பதை அறியாமை) படுவதில்லை.
இது போல் அதிகப்பிரசங்கியாக உளறினால் கடவுளுக்குக் கோபம் வரத்தானே செய்யும்.
In fact, before the escape, while walking in the nature reserve (about 9:00 am) my mental chattering (narrative; story-spinning; talking-to-myself) suddenly stopped and for a few minutes there was great peace and silence (it was not a trance - one can achieve this peace/silence by taking anti-depressant tablets) and I was fully aware / awake to it (the world or my body didn't disappear!). Then the usual mental chattering resumed.
Looks like since God failed to kill my ego (for good) in the first attempt, he made a second attempt to kill the ego-container (body)!
எமன் எட்டிப் பார்த்து விட்டுப் போய் விட்டான், இன்று!
Ha ha!
ITV:
மகிழ்ச்சி, தொல்!
இம்மாதிரி எனக்கு (இங்கிலாந்தில்) நேர்ந்த இரண்டு நிகழ்வுகள் மனதில் பதிந்துள்ளன. இம்மாதிரி சமயஙகளில் ஊழ்விதி என ஒன்று இருக்கிறது என்பது மட்டுமே மனதில் தோன்றுகிறது.
Thol:
தனி ஒவ்வொருவருக்குமான ஊழ் இருக்கிறது என்பதற்கு, நாம் அப்படி நினைத்துக் கொள்வதைத் தவிர, வேறு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அப்படி நினைத்துக் கொள்வது (துயர நிகழ்வுகளை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையைத் தொடர்வதற்கு) மனிதர்களுக்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது என்று சொல்லலாம்.
பொதுவாக வெற்றி, ஏற்றம், நல்வாய்ப்புகள் அமையும் போது மனிதர்கள் அதை ஊழ் என்று நினைத்துக் கொள்வதில்லை. அவற்றிற்குத் தங்களுடைய விடா முயற்சி, அறிவுத் திறன், ஒத்துழைப்பு போன்றவைதான் காரணங்கள் என்று எண்ணிக் கொள்கிறோம்.
துயரம், தோல்வி, தீயவாய்ப்புகள் அமையும் போதே மனிதர்கள் அதை ஏற்றுக் கொள்ள ஊழ் / விதி / கடவுள் செயல் இவற்றைச் சொல்லிக் கொள்கிறார்கள்.
மற்ற விலங்குகளின் வாழ்க்கையில் நடப்பனவற்றிற்கு ஊழ், விதியை நாம் காரணம் சொல்வதில்லை.
நிலநடுக்கம், புயல், எரிமலை வெடிப்பு, வெள்ளம்... போன்ற இயற்கை நிகழ்வுகளுக்கு ஊழ், விதியை நாம் காரணம் சொல்வதில்லை.
மனிதர்களின் தன்னுணர்வால் (self-consciousness / self-reflection) வரும் சாதக, பாதக விளைவுகள் இவை.
கலிலீயோவால் பிரபஞ்சத்திற்கு, சூரியக் குடும்பத்திற்கு உலகமே மையம் என்பது வீழ்ந்தது.
மனிதன் கடவுளின் தனிச்சிறப்பான படைப்பு என்பது டார்வினால் வீழ்ந்தது.
என்றாலும் அறிவியலின் பெயரில் மனிதர்கள் தங்கள் முக்கியத்துவத்தை (we are higher animals / we are intelligent / we are dominant species) மறைமுகமாகப் புகுத்தியும் போற்றியும் மனப்பால் குடித்து வருகிறார்கள். அதனால் தன்-மையச் (self-centred / self-obsessed) சிந்தனைகள், போக்குகள் மேலும் மேலும் வளர்ந்து வருகின்றன. அதன் சாதகங்களை விடப் பாதகங்கள் அதிகமாக வந்து மனித குல, மற்ற உயிரினப் பேரழிவுக்கு இழுத்துச் செல்வதைப் பார்க்கிறோம்.
எனக்கு என்று (இறைவனாலோ, இயற்கையாகவோ) தனி ஏற்பாடு (நன்மை, தீமை) இருக்கிறது என்பது சூரியன் உலகைச் சுற்றி வருகிறது என்பதை விட, மனிதன் தனிச்சிறப்பான படைப்பு (கடவுளாலோ அல்லது பரிணாம வளர்ச்சியாலோ) என்பதை விடப் பேதைமையும் புல்லறிவாண்மையும் ஆகும் (folly and conceit).
எல்லாம் காரண காரிய (cause and effect) அடிப்படையில் நடக்கிறது என்றால் ஊழ், விதி என்பது வெறும் காரண காரியத்திற்கு மறு பெயராகவே இருக்க முடியும். அச்சங்கிலித் தொடர் (casual chain) நம்மால் விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு சிக்கலானதாக (complex) இருக்கலாம். அதை நம்மல் விரித்துச் சொல்ல முடியாத போது ஊழ், விதி என்று நினைத்துக் கொள்கிறோம் என்று சொல்லலாம்.
மனிதர் மன இயல்பில் விடை, காரணம் தெரியாத நிலையில் ஒரு வினாவை, நிகழ்வை அப்படியே தொங்க விடுவது (open ended) கடினமாக உள்ளது. எப்படியோ அதற்கு ஒரு காரணத்தை (ஊழ், விதி, முன்வினை...) அது தெளிவற்றதாக இருந்தாலும் சொல்லி அதை முடிக்கவும் மூடவும் செய்கின்றது.
இது அறிவியல் மனப்பான்மையிலும் பெருங்குழப்பம் (chaos) என்று வெளிப்படுகிறது.
காரண காரிய கருத்தை ஆய்வு செய்யப் போனால்,
காலம் (time) பொய்த்து (disappear) விடும்!
இடம் (space) காலியாகி (collapse) விடும்!
அதனால் இப்போதைக்கு ஊழே நமக்கு நல்ல உதவி(தி)யாகும்!
No comments:
Post a Comment