Sunday 29 May 2022

இஸ்லாமுக்கு முந்திய பாரசீகத்தின் (ஈரான்) தொன்மை மதம் ‍- தமிழ்த் தேசிய மனசாட்சி

2022-05-29

இஸ்லாமுக்கு முந்திய பாரசீகத்தின் (ஈரான்) தொன்மை மதம் ‍- தமிழ்த் தேசிய மனசாட்சி - Tamil National Conscience


சில நாள்களுக்கு முன் பிபிசி 4 (BBC 4) இன் The Art of Persia என்ற‌ ஆவணப்படம் பார்த்தேன்.

https://www.bbc.co.uk/iplayer/episodes/m000k48j/art-of-persia

http://www.samiraahmed.co.uk/ (TV Presenter)

இங்கிலாந்துக்கு வெளியே உள்ளவர்கள் BBC World இல் இப்படம் வெளியிடப்படும் போது அவசியம் பார்க்க வேண்டியது. மூன்று பாகங்களாக, ஒவ்வொன்றும் 1 மணி நேர அளவில், தலைப்பு 'பாரசீகத்தின் கலை' என்று இருந்தாலும் பாரசீகத்தின் வரலாறு, இலக்கியம், பண்பாடு, மொழி இவற்றையும் சேர்த்து தரப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளாக (கிமு 600 கிபி 650) மக்களாலும் அரசர்களாலும் பின்பற்றப் பட்டு வந்த ஷோராஷ்ட்ரிய மதம் கிபி 7 ஆம் நூற்றாண்டில் அராபிய முகமதியர்களின் படையெடுப்பு, அரசாட்சியால் அழிந்து ஒழிந்து போய் இன்று வெறும் 25,000 பேர் பின்பற்றுவதாக உள்ளது.

====================





Zoroastrianism or Mazdayasna is an Iranian religion and one of the world's oldest organized faiths, based on the teachings of the Iranian-speaking prophet Zoroaster (also known as Zaraθuštra in Avestan or as Zartosht in Persian).[1][2] It has a dualistic cosmology of good and evil within the framework of a monotheistic ontology and an eschatology which predicts the ultimate conquest of evil by good.[3] Zoroastrianism exalts an uncreated and benevolent deity of wisdom known as Ahura Mazda (lit.'Lord of Wisdom') as its supreme being.[4] Historically, the unique features of Zoroastrianism, such as its monotheism,[5] messianism, belief in free will and judgement after death, conception of heavenhellangels, and demons, among other concepts, may have influenced other religious and philosophical systems, including the Abrahamic religions and Gnosticism,[6][7][8] Northern Buddhism,[7] and Greek philosophy.[9]

====================

சில தலைமுறைகள் வலிந்து புகுத்தப்பட்டால் எதுவும் மக்களிடம் பரவி நிலை கொண்டு விடுகின்றது.

அதே சமயம் ஈரானில் இஸ்லாம் பாராசீகத்தின் தொன்மை மதம், கலை, பண்பாடுகளை வரித்துக் கொண்டதும் ஒரு காரணமாகும்.

இஃது இஸ்லாத்துக்கு மட்டுமன்று கிறித்துவம் பரவியதற்கும் காரணமாகும்.

அதே போல் தமிழ்நாட்டில் புத்தமதம் நிலை கொண்டதும் பிறகு வைதீக மதம் அதை அணைத்து விழுங்கி இன்றுவரை நிலை கொண்டுள்ளதும் நடந்துள்ளது.

ஈரான் மீது படையெடுப்பு ஆக்கிரமிப்பு செய்த ஒவ்வொரு இனத்தினரும் (அராபியர்கள், மங்கோலியர்கள்...) பாரசீகத்தின் இதிகாசங்களைத் திருத்தி எழுதித் தங்களை அதற்குள் புகுத்திக் கொண்டு மக்களைத் தாங்கள் ஆள உரிமை கோரிக் கொண்டனர்.

இவ்வண்ணமே தமிழர்களின் தொன்மை, மதம், கடவுளர்களை வைதீக மதத்தினர் வைதீக சாயலில் திருத்தி எழுதிப் பரப்பி விட்டனர். பல தலைமுறைகளுக்குப் பிறகு, இன்று மக்களுக்குத் தங்களின் தொன்மையான மதம் பற்றிச் சொன்னாலும் அத்தோடு தொடர்பில்லாததால் அஃது அந்நியமாக உள்ளது.

நம்மைப் போன்ற சிலர் ஆங்காங்கே பேசிக் கொண்டு இருப்பதற்கு அப்பால் (நம் குடும்பங்களிலும் பெண்கள் வைதீக இந்து மதத்தையே சார்ந்துள்ளார்கள்) வைதீக மதம் 'இந்து' என்ற பெயரில் நிலை கொண்டு விட்டது என்பதுதான் உண்மை நிலையாகும்.

ஆக்கிரமிப்பு செய்தவர்களின் அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இன்று இறையாண்மையுள்ள நாடாக ஈரான் இருந்தாலும் அதன் தொன்மை மதத்திற்குத் திரும்ப இயலாது. ஆனால் இஸ்லாத்தைத் தங்கள் பாரசீகச் சாயலாக மாற்றிக் கொண்டு தங்கள் தனித்தன்மையைக் காப்பாற்றி வளர்த்து வருகிறார்கள்.

(அதே சமயம் இஸ்லாத்தின் படையெடுப்பு, ஆட்சியால் பாரசீக மொழி அராபிய வரிவடிவத்தை மேற்கொண்டது. அது அதன் வளர்ச்சிக்குப் பெரிய பங்களிப்பாக அமைந்தது.)

தமிழ்நாடு தனிநாடாக ஆனாலும் அதே போல் தான் ஆகும். அப்படித் தனிநாடாக ஆகவில்லை என்றாலும் அதே முறையைப் பின்பற்றித் தான் தமிழர்கள் தங்கள் தனித் தன்மையைக்  (Tamil National Conscience) காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இது தமிழர்களின் பரவலான சமூகநீதி அடிப்படையிலான‌ அன்றாட பிழைப்பு, தழைப்பிற்கு அவசிமான தனித்தன்மை ஆகும்.

இன்று ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் 'திமுக வில் இருப்போரில் பெரும்பான்மையினர் இந்துக்கள்' என்று சொல்ல வேண்டியுள்ளது. முருகனின் வேலைத் தூக்கிப் பிடித்து நாடகமாட வேண்டியுள்ளது.

இது பெரியாரின் (திராவிட இயக்க) கொள்கைகளுக்கும் பொருந்தும்.

தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடிக்க, ஆட்சி செய்ய 'இந்து' வேடம் எப்படித் தேவைப்படுகிறதோ அதே போல் பெரியார் / திராவிட இயக்க / சமூகநீதிப் போர்வையும் தேவைப்படுகிறது. இவற்றில் நம்பிக்கை இல்லாத எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் கூட‌ அப்போர்வையைத் தூக்கி எறிய முடியவில்லை.

புத்த, சமண மதங்களை அணைத்து ஒழித்து வைதீக மதம் வெற்றி கண்டு நிலை கொண்டு விட்டது போல் நீதிக்கட்சி தொடக்கம் பெரியார் திராவிட இயக்க சமுகநீதிப் பரப்புரைகள் தமிழ்நாட்டில் பெரியாரின் நாத்திகக் கருத்துகளை மீறித் தமிழர்களின் மனதில் நிலை கொண்டுள்ளது.

பெரியாரை / திராவிடத்தை எதிர்க்கும் மணியரசன், சீமான் போன்றோரும் சமூகநீதியை எதிர்க்க முடியாது.

'ஆரியம் (வைதீகம்) ஒரு நடமாடும் நாசம்' என்றார் அறிஞர் அண்ணா. அதை எதிர் கொள்ளும் தத்துவமும் நடைமுறையும் அதே போல் உருவ‌ம், பெயர் மாறினாலும் உள்ளடக்கம் அதுவாகவே (சமூகநீதியாக) இருந்தால் தான் வாழும், வளரும். 

மக்களுக்கு, குறிப்பாக வளரும் தலைமுறையினருக்கு, அவ்விழிப்புணர்ச்சி ஏற்பட நம்மால் இயன்றதைத் தொடர்ந்து பல வழிகளிலும் வகைகளிலும் வடிவங்களிலும் செய்வதே சமூகநீதிக்கு நம் பங்களிப்பாகும்.

No comments:

Post a Comment