Thursday 14 July 2011

குரங்குகள் சிரித்தன (உருவகக் கதை - Parable)

2011-07-14


ஞானி ஆன குரங்குகள் குரங்குகளாகவே தொடர்ந்தன. மற்றவை மனிதர்களாக மாறின. மரத்திலிருந்து இறங்கினர். மனதிற்குள் விழுந்தனர். வெளிவால் மறைந்து உள்வால் நீண்டது.

அன்பு வெளிப்பட்டது. அதை அறிய ஆணவம் உதவியது. அற்புதம் நிகழ்ந்தது. அவலம் உடன் பிறந்தது. அழகு விரிந்தது. அலங்கோலம் அதை வரையறுத்தது.

மரத்தில் ஆடிய உடல் மனதில் ஆடியது. உடல் உறங்கியது. உள்ளம் அலைந்தது. மகிழ்ச்சியும் துயரமும் மனதால் எழுந்தன. மனச்சுவர் காலச் சிறையைக் கட்டியது.

மனிதர் சிலர் கவனித்தனர். ஆனால் மனதைக் கொண்டு. குரங்குகள் ஓயாமல் தாவுகின்றன. மனமும் ஓயாமல் தாவுகின்றது. எனவே மனம் ஒரு குரங்கு என்றான் மனிதன்.

கேட்ட குரங்குகள் தாவித் தாவிச் சிரித்தன.

No comments:

Post a Comment