தூய விழிப்புணர்வே நாம்
2022-08-13 / 14
Shared by Devaraj on 2022-08-12 in WhatsApp.
தூய விழிப்புணர்வாக எனக்குள் இருக்கும் இந்த வாழ்க்கையின் சாராம்சத்தை நான் அறிவேனா?
எனவே வாழ்க்கை உண்மையில் ஆத்மத்திற்கான தேடலாகும் - சுயம், ஒரு முனையில், ஈஷ்வர - முழுமையான உண்மை, மறுமுனையில். இந்த முழுமையான யதார்த்தம் பெயரற்றது, உருவமற்றது. சுயம் பெயரற்றது, உருவமற்றது. ஆனால், ஈஸ்வரனும் ஆத்மாவும் சாரத்தைக் கொடுக்கிறார்கள், வெளிப்பாட்டைக் கொடுக்கிறார்கள், தங்கள் ஒளியைக் கொடுக்கிறார்கள், தங்கள் உண்மையைக் கொடுக்கிறார்கள், பெயர் மற்றும் வடிவம் கொண்ட அனைத்திலும் தங்கள் ஆற்றலை வலுப்படுத்துகிறார்கள்.
நாம் பாத்திரங்களை ஏற்று வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கையில், நாம் ஆழமான ஏதோவொன்றுடன் தொடர்பில் இருக்கிறோம். நான் ஆத்மா என்று அழைக்கும் (என்னுள்) உள்ளே இருக்கும் ஒன்று - சுயம். ஆத்மா என்பது - எல்லையற்றது.
மேலும், உண்மையில் ஆத்மா இணைவது - ஈஸ்வரன் என்று அழைக்கப்படுகிறது. ஈஸ்வரன் என்றால் எல்லாவற்றிலும், எல்லா உயிர்களிலும் வாழும் ஒளி என்று பொருள். ஈசுவரர் என்பது தெய்வீக அனைத்தின், உலகளாவிய புத்தியின் பெயர். ஒரு கடவுள் அவசியம் இல்லை, ஆனால் ஒரு கடவுள் இருப்பு, ஒரு கடவுள் கொள்கை.
எனவே வாழ்க்கை உண்மையில் ஆத்மத்திற்கான தேடலாகும் - சுயம், ஒரு முனையில், ஈஷ்வர - முழுமையான உண்மை, மறுமுனையில். இந்த முழுமையான யதார்த்தம் பெயரற்றது, உருவமற்றது. சுயம் பெயரற்றது, உருவமற்றது. ஆனால், ஈஸ்வரனும் ஆத்மாவும் சாரத்தைக் கொடுக்கிறார்கள், வெளிப்பாட்டைக் கொடுக்கிறார்கள், தங்கள் ஒளியைக் கொடுக்கிறார்கள், தங்கள் உண்மையைக் கொடுக்கிறார்கள், பெயர் மற்றும் வடிவம் கொண்ட அனைத்திலும் தங்கள் ஆற்றலை வலுப்படுத்துகிறார்கள்.
நமக்குள் இருக்கும் ஆத்மாவைக் கண்டுபிடிக்க முயலும் போது, வாழ்க்கைக்கு அர்த்தம் உண்டு என்று நான் நம்புகிறேன். நமக்கு வெளியே உள்ள தெய்வங்களை நாம் பார்த்து வணங்குகிறோம், ஆனால் பின்னர் நமக்குள் இருக்கும் ஆன்மா ஈஸ்வரன் என்பதைக் காண்கிறோம். அந்த மகத்தான தெய்வீக முழுமையான உண்மை இங்கேயே நம் சொந்த இதயத்தில் பிரகாசிக்கிறது.
எனவே, மோட்சத்தைத் தேடுபவரிடமிருந்து வாழ்க்கையின் பொருள் வருகிறது. மோட்சம் என்பது உபநிடதங்களிலிருந்து வரும் மற்றொரு சமஸ்கிருத வார்த்தையாகும், இதன் பொருள் - அனைத்து மறதியின் முடிவு, அனைத்து அறியாமையின் முடிவு, அனைத்து மாயைகளின் முடிவு, இது நம்மை மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சிறியதாக வைத்திருக்கிறது.
நாம் இந்த ஆத்மா, ஐந்து அடி ஒரு உடலால் ஆன ஒன்று என்று நம்புவது, நாம் இந்த வரையறுக்கப்பட்ட அளவு, கதைகள் மற்றும் நினைவுகள் மற்றும் நம்பிக்கைகள் மற்றும் வரம்புகளில் பிணைக்கப்பட்டுள்ள இந்த துண்டு துண்டான நுண்ணறிவு. அதற்குப் பதிலாக நாமே வாழ்க்கை என்பதை உணர்கிறோம். நாம் எல்லையற்ற தூய உணர்வு, நாம் அந்த விழிப்புணர்வு.
ஆனால் அறிவார்ந்த புரிதலுக்கு அப்பால் அது அனுபவப்பூர்வமானதாக மாற வேண்டும், அது உண்மையாக மாற வேண்டும். எனவே நான் உண்மையில் யார் என்பதை அறியும் தேடல் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிக்கிறது.
நானும், எல்லா இருப்புகளின் தெய்வீக உண்மையும் ஒரு உறவைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை நாம் அங்கீகரித்தபோது - நாம் ஒருவரே.
Thol:
தூய விழிப்புணர்வே நாம். அத்தூய விழிப்புணர்வு யார் ஒருவருக்கும் தனிப்பட்ட சொந்தமானதன்று; அது எல்லோருக்கும் பொதுவானது. அது ஒன்றே. அத்தூய விழிப்புணர்வைத் தவிர வேறு எதுவும் இல்லை; இருப்பதாகத் தோற்றமே உள்ளது. அத்தூய விழிப்புணர்வு தன்னில் தோன்றும் தோற்றத்தில் ஆழ்ந்து தன்னை மறந்து பிறகு தன் சுயத்தைத் தேடுவதும் அத்தோற்றத்தின் ஒரு பகுதியே. இவ்வுண்மை அறிவுபூர்வமாகத் தெரிகிறது, அது அனுபவபூர்வமாக ஆக வேண்டும் என்ற தேடலும் ஒரு தோற்றமே.
தோற்றத்தில் கவர்ந்திழுக்கப்பட்டு அறிவு, செல்வம், உறவு, புகழ், தூயவிழிப்புணர்வு என்று எதைத் தேடினாலும் அத்தனைக்கும் சாட்சியாக, பின்புலமாகத் தூயவிழிப்புணர்வு எப்போதும் இருக்கிறது. தேடலை நிறுத்த வேண்டியதும் இல்லை; தொடர வேண்டியதும் இல்லை. அப்படி முடிவு செய்து செயல்படுத்த முயல்வதும் தூயவிழிப்புணர்வின் ஒளியால்தான் வெளிப்படுகின்றது.
Shared the below with Freeians on 05-Oct-2021.
சூரியன் எந்தவிதமான மூட்டமும் இல்லாமல் பிரகாசிக்கிறது = ஆத்ம சொருபம் (நம்மின் உண்மை இருப்பு) எந்தப் பிரிவினை உணர்வும் இன்றிச் சுயமாக ஒளிர்கின்றது.
சூரியனை மேகங்கள் மூடுகின்றன. சூரியனின் பிரகாசம் குன்றுகிறது. இது ஆத்ம சொருபத்தைப் பலவித தோற்றங்கள் (எண்ணங்கள்) மூடுவதைப் போன்றது.
சூரியனை மூடும் மேகங்களை உருவாக்குவதும் (நீரைத் தன் வெப்பத்தால் ஆவியாக்கி) சூரியனே.
சூரியனை மேகங்கள் மூடினாலும் அப்படி அவை மூட்டமாக இருக்கின்றன என்பதை உணரச் செய்வது எது? அதே சூரிய ஒளிதான். அதுவே மேகத்தையும் அது மூடுவதையும் காணச் செய்கிறது. சூரிய ஒளி இன்றி மேகத்தையோ அது சூரியனை மூடுவதையோ காண இயலாது. மேகங்களை ஊடுருவிக் கொண்டு வரும் சூரிய ஒளியால் தான் மேகங்களைக் காண்கிறோம்.
அதே போல் ஆத்ம சொருபத்தை மறைப்பதாகத் தோன்றும் எண்ணங்களைக் காட்டுவதும் (தோற்றங்களைப் பார்ப்பதும்) அதே ஆத்ம சொருபப் பிரகாசமே.
இதைத் தெளிந்த பின் சூரியனை மேகம் மூடினாலும் மூடாவிட்டாலும் சூரியனே எல்லாக் காட்சிகளுக்கும் ஆதாரம் என்று அறிவதைப் போல் ஆத்ம சொருபத்தை எண்ணங்கள் மூடினாலும் மூடா விட்டாலும் எல்லாவற்றையும் காண்பது, எல்லாவுமாக இருப்பது எல்லாவற்றையும் உருவாக்குவது (தாங்குவது) ஆத்ம சொருபமே என்று எப்போதும் எங்கும் விளங்கும்.
இக்கணமே, ஒவ்வொரு கணமுமே உண்மை இருப்பால் தான் ஒளிர்கின்றது.
போய்ச் சேர வேண்டியது இப்போது இருக்கும் இடமே / கணமே.
We are already / always home!
இது பூன்ஜாஜி என்பவர் சொன்னது. அவர் பாபாஜி என்றும் அழைக்கப்பட்டார்.
இவர் தனக்குப் பாலப் பருவத்தில் நேர்ந்த மெய்யியல் அனுபவங்களைத் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டு ரமணரைச் சந்தித்து முடிவாகத் தெளிவடைந்து தேடலை முடித்தார்.
மேற்கண்ட ஒப்பிட்டை அவருடைய பேட்டியில் படித்துள்ளேன்.
அதில் ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டேன்.
அதாவது, மேகம் கலைந்து சூரியன் மீண்டும் முழுப்பிரகாசதுடன் ஒளிர, சூரியனே தன் வெப்பத்தால் காற்றழுத்த ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, காற்று வீசுவதால் மேகம் கலைகின்றது. எனவே ஆத்ம சொருபத்தைத் தேடும் முயற்சியும் ஆத்ம சொருபத்தின் ஆற்றலில் இருந்தே வெளிப்படுகின்றது.
மேலே அவர் சொன்னதைத் தொடர்ந்து நாம் கீழ்க்கண்டவாறு புரிந்து கொள்ளலாம்.
அதே போல் சூரியனை மறைக்க அதே காற்று, மேகங்களை மறு திசையில் நகர்த்தி மூடுகின்றது. அவ்வண்ணமே ஆத்ம சொருபத்தை மறைக்கும் எண்ணங்களின் தோற்றுவாயும் ஆத்ம சொருபமே.
இதை எழுதுவதும் படிப்பதும் அதுவே.
எல்லாம் இறை / இயற்கை ஆற்றலே; அதன் வெளிப்பாடே.
இதனால் தேடலுக்கு முன்பு இருந்த எல்லாத் தோற்றங்களும் தேடல் முடிந்த பின்பும் (உண்மை புரிந்த பின்பும்) அப்படியே தோன்றும். ஆனால் அதன் தன்மை, பண்பு முற்றிலும் முழுமையாக மாறி இருக்கும்.
பழைய எண்ணங்கள் வழக்கம் போல் வரும், போகும். ஆனால் அவை நம்மைச் சிறைப் படுத்தா; அடிமைப் படுத்தா. படிப்படியாக அவை நீர்த்துப் போகும். அவ்விடத்தில் புதிய எண்ண்ங்களும் செயல்களும், என்னுடையவை என்று மேலோட்டமாக இருந்தாலும் ஆழத்தில் பற்றற்று, விளங்கும்; பிரிவினை உணர்ச்சியும் மேலோட்டமாக இருந்து வரும், ஆழத்தில் தேய்ந்து வரும்.
2022-08-14
Thol:
"நமக்குள் இருக்கும் ஆத்மாவைக் கண்டுபிடிக்க முயலும் போது, வாழ்க்கைக்கு அர்த்தம் உண்டு..."
நான் ஒரு தனித்த உயிருள்ள பொருள், என்னைப் போல் பிற தனித்த உயிருள்ள பொருள்கள் உள்ளன, மேலும் உயிரற்ற பொருள்கள் உள்ளன என்ற அனுமானத்தில் 'நமக்குள் இருக்கும் ஆத்மாவை உணர்வது' என்பது வாழ்க்கைக்கு அர்த்தம் தரலாம். ஆனால் அதுவும் ஆத்மாவின், ஆத்மாவுக்குள், ஆத்மாவால் தோன்றும் ஒரு தோற்றமே.
அதே போல் கடந்த, நிகழ், எதிர்காலங்கள் உள்ளன என்ற அனுமானத்தில் வாழ்க்கை ஓட்டமும் அதற்கு அர்த்தம் என்ன என்ற தேடுதலும் இருக்கலாம். ஆனால் கால ஓட்டமும் வாழ்க்கை ஓட்டமும் அதே தோற்றத்தின் பகுதிகளே.
நான் பிற என்ற பிரிவினை உணர்ச்சியே ஒரு தோற்றமாக இருக்க (அனுமானத் தோற்றமாக), அதற்கு என்ன வாழ்க்கை, அவ்வாழ்க்கைக்கு அர்த்தம் என்பன இருக்க முடியும்?
நாம் எப்போதுமே ஆத்மாகவே இருக்கிறோம். வேறு எதுவாகவும் இருக்க வழியில்லை. எனவே இது தெளிவான பின்னும் வழக்கம் போல் அர்த்தம் தேடலும், ஆத்மாவைத் தேடுதலும் தொடரும். ஆனால் அவை மற்ற எல்லாத் தேடல்களைப் போலத் தோற்றங்களே. இத்தெளிவிற்குப் பின் எதுவும் செய்ய வேண்டியதும் இல்லை; செய்து வருவதை நிறுத்தவோ மாற்றவோ வேண்டியதும் இல்லை; ஆனால் தானாக, அதுவாக அவை நடக்கலாம்.
நாம் கோலி, கிட்டிப்புள், கிரிக்கெட் போன்றவற்றை விளையாடுவதை ஒரு நாள் தீவிரமாக யோசித்து தீர்மானம் செய்து நிறுத்தி விடவில்லை. அவை தாமாக நம்மிடமிருந்து விலகி விட்டன. அதே போல் தான் மற்ற எல்லா ஆர்வங்களும். அவை பொருள், உறவு, புகழ், மொழி, இலக்கியம், அரசியல், சமூக சீர்திருத்தம், சமூக நீதி, மோட்சம், வீடுபேறு ஆர்வம் எனப் பலவாறாகத் தாமாக வந்து தாமாக விலகும். அதற்கான சூழல்களும் தூண்டுதல்களும் தாமாக அமையும்.
இவை அனைத்தும் தோற்றத்தின் பகுதிகளே. உண்மையில் இவை எவையும் இல்லை; நடக்கவும் இல்லை. தூய விழிப்புணர்வு மட்டுமே உள்ளது, அது இவை அனைத்தையும் தன்னில் அறிந்துணர்கிறது. காட்சியில் (தோற்றத்தில்) ஈர்க்கப் பட்டு மகிழ்ச்சி, துயரம், பயம், அமைதி, ஆரவாரம்... என உழலலாம். ஆனால் அவை திரைப்படத்தைப் பார்க்கும் போது திரையில் தோன்றும் ஒளி ஆட்டங்களில் ஈர்க்கப்பட்டு எல்லா உணர்ச்சிகளையும் அனுபவிப்பது போலவே ஆகும்.
திரையில் தோன்றும் எப்பேர்ப்பட்ட தீவிரமான நிகழ்வுகளில் (காதல், கொலை, பாசம், பயம், வெறுப்பு, தியாகம், பெருந்தன்மை...) ஈர்க்கப்பட்டாலும் அவ்வுணர்ச்சிகளை அனுபவித்தாலும் ஒரு வினாடி கூட நாம் அது திரையில் தோன்றும் காட்சியே என்பதை மறப்பதில்லை. ஒவ்வொரு கணமும் நாம் 'இது திரைப்படம், வெறும் காட்சி, எல்லாம் நடிப்பு, உண்மையில் எதுவும் நடக்கவில்லை' என்று நாம் வாய் வார்த்தையாக நினைவுபடுத்திக் கொள்வதில்லை; ஆனால் வார்த்தை, சிந்தனைக்கு அப்பாற்பட்ட உள்ளுணர்வாக அறிவோம்.
அதே போல் இந்நனவு மற்றும் கனவுக் காட்சிகளும் ஆகும். அவற்றில் நாம் (நம் சுயம்) மூழ்கித் திளைக்கலாம். ஆனால் நாம் (நம் சுயம்) 'இது வெறும் காட்சி, உண்மையில் எதுவும் நடக்கவில்லை' என்று வாய் வார்த்தையாக நினைவுபடுத்திக் கொள்ளத் தேவையில்லாமல் வார்த்தை, சிந்தனைக்கு அப்பாற்பட்ட உள்ளுணர்வாக அறிவோம்.
இந்த உள்ளுணர்வு அறிதலை, எப்போதும் உள்ள உண்மையைப் பற்றிப் பேசப் போனால், தேடினால், அடைய முயன்றால் அதுவும் காட்சியின் ஒரு பகுதி ஆகி விடும்.
எடுத்துக்காட்டாக, ஒரு திரைப்படத்தில் ஒரு கதைப் பாத்திரம் மற்றொரு கதைப் பாத்திரத்திடம், 'நம் உண்மை இருப்பு இந்த உடல், மனத் தோற்றம் அல்ல; நாம் இவை அனைத்தையும் வெளிப்படுத்தும் ஒளியாக எப்போதும் இருக்கிறோம். அவ்வொளி ஒன்றே. அது நம் அனைவருக்கும் பொதுவானது. அது நாம் பார்க்கும் உயிர், உயிரற்றவை எல்லாவற்றையும் வெளிப்படுத்திக் கொண்டு ஆனால் அவற்றால் பாதிக்கப்படாமல் எப்போதும் போலவே இருக்கிறது. அதுவே சாசுவதமான உண்மை; மற்றவை அனைத்தும் நிலைக்காதவை; தோன்றி மறைபவை. அவ்வுண்மையை நாம் தேடி உணர வேண்டும். அதுவே நம் வாழ்க்கைக்கு அர்த்தம்' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். அப்படிப் பேசிக் கேட்கும் நிகழ்வும் அத்திரைப்படத்தின் ஒரு காட்சியே. அந்தக் காட்சியை வெளிப்படுத்துவதும் அதே ஒளிதான்.