2021-02-17
*உன்னுடைய புழுதியைக் கொண்டு வா*
கடவுளிடம் ஓர் அறிவியல் அறிஞர் சொன்னார், "இறைவா, இனி எங்களுக்கு நீ தேவையில்லை. நாங்கள் அறிவியல் மூலம் வெறுமையிலிருந்து எப்படி உயிரை உருவாக்குவது என்பதைக் கண்டு பிடித்து விட்டோம். நீ இப்பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் செய்ததை நாங்கள் இப்போது செய்ய முடியும்".
"அப்படியா, எப்படி என்று சொல்" என்றார் கடவுள்.
"முதலில் கொஞ்சம் புழுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை உன்னைப் போல் வடிவமைக்க வேண்டும். பின் அவ்வடிவத்திற்குள் உயிர் மூச்சை ஊதி, மனிதனை உருவாக்க வேண்டும்"
"நல்லது, சுவராசியமாக இருக்கிறது. எங்கே அதைச் செய்து காட்டு"
அறிவியல் அறிஞர் குனிந்து கொஞ்சம் புழுதியை எடுத்து அதை வடிவமைக்க ஆரம்பித்தார்.
"நிறுத்து, நிறுத்து" என்றார் கடவுள், "முதலில் உன்னுடைய புழுதியைக் கொண்டு வா".
(வேறு வலைதளத்தில் ஆங்கிலத்தில் உள்ளதன் மொழிபெயர்ப்பு)