Saturday, 28 November 2020

வாழ வேண்டுமே வாழ வேண்டுமே

வாழ வேண்டுமே வாழ வேண்டுமே

2020.10.25

குழந்தைகளுக்கான தாத்தா/மாமாவின் பாடல்:

தாத்தா is regressing to childhood (of simple pleasures)! குழந்தைகளுக்கான தாத்தாவின் கோஷ்டி கானம்... குழந்தைகளுடன் பாட்டி தாத்தாக்களும் சேர்ந்து பாடலாம்!

வாழ வேண்டுமே வாழ வேண்டுமே

காற்று வேண்டுமே காற்று வேண்டுமே
காற்றைக் கண்ணால் பார்க்க முடியுமா?

நீர் வேண்டுமே நீர் வேண்டுமே
நீரைக் கையால் கட்ட முடியுமா?

நெருப்பு வேண்டுமே நெருப்பு வேண்டுமே
நெருப்பைத் தொட்டுக் கொள்ள முடியுமா?

நிலம் வேண்டுமே நிலம் வேண்டுமே
நிலத்தை நெம்பி நகர்த்த முடியுமா?

மரம் வேண்டுமே மரம் வேண்டுமே
மரத்தைக் கொன்றால் சுவாசம் இயலுமா?

வானம் வேண்டுமே வானம் வேண்டுமே
வானின் விளிம்பை நினைக்க முடியுமா?

உயிர்கள் வேண்டுமே உயிர்கள் வேண்டுமே
உயிர்கள் இன்றி உலகம் இருக்குமா?

வாழ வேண்டுமே வாழ வேண்டுமே
எல்லாம் வாழ வேண்டுமே
எல்லாம் வாழ எல்லாம் வேண்டுமே!

Children are capable of improving/improvising this by adding more similar lines