28-May-2019
ஞான மார்க்கம், யோக மார்க்கம், பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம் என்பனவற்றில் ஏதாவது ஒன்றைத் தான் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட, ஏன் நான்கு வழிகளிலும் இணையாகப் பயிற்சி செய்யலாம்.நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு மார்க்கம் முதன்மையாக இருக்கலாம், நம் இயல்புக்கு அதிக அளவில் ஒத்து வருவதால். அதே சமயம் நம் ஒவ்வொருவரும் நான்கு குண இயல்புகளையும் வெவ்வேறு விகித அளவில் கொண்டவர்களே. யாரும் வெறும் ஒற்றை இயல்பு கொண்டிருப்பதில்லை என்பது வெளிப்படை.எனவே,
- யோக மார்க்கத்தில் மூச்சைக் கவனித்துக் கொண்டு தியானம் செய்யலாம்;
- பக்தி மார்க்கத்தில் இறைவனை/இயற்கையை நேசித்து உருகலாம்; திருவாசகம், தேவராம், திருஅருட்பா (வள்ளலார்), பாராபரக்கண்ணி (தாயுமானவர்), பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், திரைப்படப் பாடல்கள்... போன்றவற்றைப் பாடி மெய்மறக்கலாம்.
- கர்ம மார்க்கத்தில் குடும்ப, அலுவலக, சமுதாயக் கடமைகளைப் பற்றற்ற பொறுப்புணர்ச்சியுடன், நன்றி, பாராட்டு, புகழ், பிரதிபலன் இவற்றை எதிர்பாராமல் 'தவமாகப்' புரியலாம்;
- ஞான மார்க்கத்தில் தன்னையறிதல், அறிவுணர்வை ஆழ்ந்து நோக்குதல் (உள்ளே செல்லுதல்), எழும் வினாக்களுக்கு விடை தேடல் போன்றவற்றில் ஈடுபடலாம்.
இவை அனைத்தையும் தனியாகவும் குழுவாகவும் வாய்ப்புக்கு ஏற்ப மேற்கொள்ளலாம்.யோக மார்க்கம்எல்லாவித உடற் பயிற்சிகளும் அன்றாட வேலைகளும் முழு உணர்வுடன் அதில் தோய்ந்து (ஒன்றி; யோகம் = ஒன்றுதல்) ஈடுபடும் போது அவை யோகப் பயிற்சி ஆகிவிடும்.பக்தி மார்க்கம்"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவதுநாதன் நாமம் நமசிவாயவே" என்றும் பாடலாம்.('தான்' - தன் முனைப்பு - கசிந்து கரைந்து கண்ணீர் மல்காவிடில் பக்தி மார்க்கமும் பயன் தாராது; அன்றாட நடைமுறை வாழ்க்கையும் பண்படாது.)The science revealed 'awe' - about from atom to universe - can also do the same thing. For the illusion-mist of sense of separation to melt away, anything and everything can shine light on it.அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் ஆர்வலர்புன்கண்ணீர் பூசல் தரும் (71)"கடவுள் இல்லை கடவுள் இல்லை இல்லவே இல்லைகண்டிப்பாகச் சொல்லுகிறேன் கடவுளே இல்லை" (இத்திரைப்படப் பாடலின் முழு வரிகளைத் தேடிக் கொண்டுள்ளேன். கிடைத்தால் பகிர்ந்து கொள்ளவும்)(குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கேகுவிந்ததம்மா பெண்கள் எல்லாம் வண்டாட்டம், வண்டாட்டம்...மெட்டு) என்றும் பாடலாம்."பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போதுஅழுதால் கொஞ்சம் நிம்மதிபேச மறந்து சிலையாய் இருந்தால்அதுதான் தெய்வத்தின் சன்னதிஅதுதான் காதல் சன்னதி" (காதல் சிறகைக் காற்றினில் விரித்து..) என்று திரைப்படப் பாடலும் பாடி ஒருமையுறலாம்."திருப்பதி சென்று திரும்பி வந்தால்ஓர் திருப்பம் நேருமடா உன்விருப்பம் கூடுமடாநீ திறந்திட நினைக்கும் கதவுகள்எல்லாம் தானே திறக்குமடா உன்னைத்தர்மம் அனைக்குமடா" என்று சீர்காழியின் கணீர் குரலில் பாடுவதாக கற்பனை செய்து கொண்டு பாடலாம்.திருப்பதி என்பதை 'உள் திருப்பதி' என்று நினைத்து கொள்ளலாம்.தர்மம் = உண்மை = மெய்['ஓர் திருப்பம்' என்பது இலக்கணப் படி பிழை. 'ஒரு திருப்பம்' என்றுதான் வர வேண்டும். ஆனால், கவிஞர்களுக்கும் புலவர்களுக்கும் தனி இலக்கண உரிமம் தந்து விடுகின்றோம். 'மாஞ்சோலை கிளிதானோ மான் தானோ' - 'மாந்தோப்பு' என்பது தான் வழக்கு. (நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவன் மாம்பழம் வேண்டும் என்றான், ஒன்று கொடுத்தாலும் வாங்கவில்லை இந்தக் கன்னம் வேண்டுமென்றான்...); கன்றுக் 'குட்டி' ஆனால் 'கோழிக் 'குஞ்சு'. .]"மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்." (கண்ணம்மா என் காதலி) என்ற பாரதியார் பாடலை 'தன்னை மறந்த லயத்தில்' பாடலாம்.கோடாலிக்காரன்வெய்யில் தாழ வரச் சொல்லடி-இந்தத்தையல் சொன்னதாகச் சொல்லடிவெய்யில் தாழ வரச்சொல்லடிகையில் கோடாலி கொண்டுகட்டைப் பிளப் பாரைக் கண்டுகொய்யாக் கனியை இன்றுகொய்து போக லாகும் என்றுவெய்யில்தாழ வரச் சொல்லடிகூரைக்குப் பின்னால் இருக்கும் தென்னை-அதன்கூட இருக்கும் வளர்ந்த புன்னைநேரினிலே காத்திருப்பேன்! என்னைநிந்திப்பதில் என்ன பயன் பின்னை?வெய்யில் தாழவரச் சொல்லடிதாய் அயலூர் சென்று விட்டாள் நாளை-சென்றுதான் வருவாள் இன்று நல்ல வேளைவாய் மணக்கக் கள்ளொழுகும் பாளை-நாள்மாறி விட்டால் ஆசை எல்லாம் தூளேவெய்யில் தாழவரச் சொல்லடி - என்ற பாரதிதாசன் பாடலை இசைத்து மகிழலாம்; மறக்கலாம்.பக்தி மார்க்கம், நம் பக்கத்தில் இருப்போரைக் கொஞ்சிக் கொண்டாட விட்டால் (குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே) முழுமை பெறாது."உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலேகொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே"குடும்பத்தில் இருப்போரிடம் உள்ள குறைகளை, குற்றங்களை மன்னித்து, ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, கொஞ்சல் நம்மால் செய்ய முடியவில்லை என்றால், அவர்கள் உருவில் நாம் கடவுளைக் காண இயலவில்லை என்றால் பக்தி மார்க்கம் மற்றுமொரு 'தன்முனைப்பு ஆணவப்' பயணமே (ego trip); பக்குவமான, பண்பான வாழ்க்கைக்கும் அது வழி வகுக்காது.“The weak can never forgive. Forgiveness is the attribute of the strong.”― Mahatma Gandhiஇதை, நாம் சற்று விலகி இருக்க (விலக்கி வைக்க) விரும்பும் உறவுகளை அப்படி நடைமுறைப் படுத்தும் வாழ்வியல் 'ஒட்ட ஒழுகலு'டன் சமப்படுத்த வேண்டும்.நாம் கலந்து கொண்டவாறு எந்த 'கருத்தும்' (concept) 'பிம்பமும்' (self-image) நம்மை சிறைப்படுத்தி விடக் கூடாது.கர்ம மார்க்கம்'செய்யும் தொழிலே தெய்வம்' (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்) என்பது திரைப்பாடல் வழியான 'கர்ம மார்க்கக்' கருத்து 'மந்திரம்'.அது குற்றவாளிகளைத் தூக்கில் போடும் தொழிலாகக் கூட இருக்கலாம். அதுவும் கடவுளின் பணியே.நாம் எதைச் செய்கின்றோம் என்பதை விட எந்த மனநிலையில் அதைச் செய்கின்றோம் என்பதே ஒரு செயலைத் 'தவமாகவோ' அல்லது 'அவமாகவே' ஆக்குகின்றது.தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்அவம்செய்வார் ஆசையுள் பட்டு (266)இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர் (270)"கண்னில் காண்பதுன் காட்சி கையால் தொழில்பண்ணல் பூசை பகர்வது மந்திரம்மண்ணொடு ஐந்தும் வழங்குயிர் யாவுமேஅண்ணலே நின் அருள் வடிவாகுமே"கர்ம மார்க்கத்திற்கு நாம் பொதுப்பணி செய்யத் தேடி திரிய வேண்டியதில்லை. நம் குடும்ப, அலுவலக, வாழ்விட அண்மைச் சுற்றுப்புறக் கடமைகளே போதும்."இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடிஎங்கேங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமேஅவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே""குடும்பத்தில் இருப்போரிடம் உள்ள குறைகளை, குற்றங்களை மன்னித்து, ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, கொஞ்சல் நம்மால் செய்ய முடியவில்லை என்றால்..." என்பது போல் நம் பணியிடத்தில் அண்மையில் உள்ளவர்களிடம் நம்மால் ஒத்துப் போக இயல்வில்லை என்றால் 'கர்ம மார்க்கம்' போலித் தனமே.அப்படி ஒத்துப் போக இயலாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் நாம் இறுக்கமாக இருப்பதுதான்."காற்றடித்தால் சாய்வதில்லை...கனிந்த மனம் வீழ்வதில்லை" (திரைப் படப் பாடல்).நாம் (நம் பண்பு) தண்ணீர் போல் இளக்கமாக இருந்தால் எந்த இடத்திலும் (பாத்திரத்திலும்) நிரம்பலாம்; நிறைவடையலாம்; ஒத்துப் போகலாம்.கல்லாக இருக்கும் நம்மைத் தண்ணீராக மாற்றக் 'கர்ம மார்க்கம்' பயன்படும் படியாக அதைச் (தவமாக) செய்ய வேண்டும்.'ஒரு செம்பு பாலுக்கு ஒரு துளி விஷம் போதும்' என்பது எப்படியோ அது போல் ஒரு குழுவுக்கு (குடும்பத்திற்கு) ஒரு கனிந்த மனம் போதும்'. அது அக்குழுவின் இயக்கத்தன்மையை (team dynamics) ஒழுங்கமைதியாக ஆற்றொழுக்காக (harmonise) மாற்றி விடும்.அன்றாடமே அற்புதம்.'கனிந்த மனம்' என்பது கோழைத் தனமோ, உறுதியின்மையோ அன்று. மேற்கண்டதைக் கீழ்கண்டதையும் கணக்கில் கொண்டு சமப்படுத்த வேண்டும்.சொல்லப் பயன்படுவோர் சான்றோர்; கரும்பு போல்கொல்லப் பயன்படும் கீழ் (1078)அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்அவாஉண்டேல் உண்டாம் சிறிது (1075)தண்ணீர் வெள்ளமாக வீழ்ச்சியாக அடித்துச் சிதைக்கவும் செய்யும்; கற்களையும் பிளக்கும்; பாறைகளையும் உருட்டும்; மலைகளையும் கரைக்கும். அப்படி இருக்கவும் தயங்கக் கூடாது.இவற்றை 'தன்முனைப்பு' நிலையில் செய்கின்றோமா 'வினைத் தூய்மை, வினைத் திட்பம்' நிலையில் செய்கின்றோமா என்பதே வேறுபாடு.ஞான மார்க்கம்"எல்லா நதிகளும் கலக்கும் இடம் கடலாகும்." (தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே...). எல்லா மார்க்கங்களும் ஞான மார்க்கப் புரிதலை (understanding) அடைந்து கலந்து ஆக வேண்டும். இல்லையெனில் கப்பல் அங்கங்கே கரை தட்டி விட்டது என்று ஆகும்.Whatever you are aware of, you are NOT that; YOU ARE AWARE(ness)!. That's all. Full stop.We can understand what we truly are only by understanding what we are NOT.முள்ளை (தன்முனைப்பு false sense of separation) மூச்சைப் பிடித்து முக்கியே (யோக மார்க்கம்) வெளியே தள்ளி விட முடியாது. முள்ளைக் கொஞ்சிக் குழைந்து (பக்தி மார்க்கம்) 'வெளிய வந்து விடு' என்றால் வராது. முள்ளை வேறு வேலையில் ஈடுபட்டு (கர்ம மார்க்கம்) மறந்து மயக்கித் தள்ளி விடலாம் என்றால் குத்திக் குத்திக் (சாதனை, பாராட்டு, பதவி, பெருமை, புகழ்...) குடைந்து கொண்டே இருக்கும். ஆனால் முள்ளை எடுக்க மற்று ஒரு முள்ளை எடுத்தால் (ஞான மார்க்கம்) முள் (தன்முனைப்பு false sense of separation) நடுங்கிப் புதைந்து ஒளிந்து கொள்ள முயன்றாலும் அது பலிக்காது. முள்ளை முள்ளால் தான் முழுமையாக வெளியேற்ற முடியும். அதன் பின் எல்லா முற்களையும் தூக்கி எறிந்து விட வேண்டும்.
-----------------------------------------------------------We need to use a concept of 'oneness' to go beyond concepts. We need to use a split of 'what you are and what you are not' to clear the false 'sense of separation'.A lot has been written about this path - how to watch that our thoughts, actions, feelings, emotions are rising spontaneously; nobody is doing anything; there is no one to do anything but everything gets done by the oneness flow of reality.Suffering is not due to the incidents but because of 'I'dentification.We never really delved into 'I' so far (who will do it?).Like there is a higher level 'planet' harmony of earth quakes, volcanic explosion, rain, river supporting life... in human society too, there is a higher level 'harmony' irrespective of the ups and downs. To feel / understand this is the final resolution (liberation / enlightenment / self-realisation / reason-existence-bliss..)."Communism is the return of man himself as a social, i.e. really human being, a complete and conscious return which assimilates all the wealth of previous development. Communism, as a fully developed naturalism, is humanism, and, as a fully developed humanism, is naturalism. It is the DEFINITIVE resolution of the antagonism between man and nature, and between man and man. It is the true solution of the conflict between existence and essence, between objectification and self-affirmation, between freedom and necessity, between individual and species. It is the solution of the riddle of history and knows itself to be this solution." —Karl Marx(from the book 'Questions of Freedom and People Emancipation by Kobad Ghandy).The above quote we can replace 'Communism' with 'Nondual Spiritualism' or even by the root word 'commune' we can understand 'communing' with nature/reality and transcending the 'false' sense of separation.Socialism and Spiritualismசோசலிசத்திற்கும் (முடிந்த அளவுக்கு சமூக நீதியான சம நிலையான சமுதாயம்) மெய்யுர்ணதலுக்கும் நம்மைப் பற்றிய 'தன்னுணர்வை' மீள்மதிப்பீடு, ஆய்வு செய்து ஒரு புதிய அகண்ட 'தன்னுணர்வையும்' வாழ்வதன் பயன் - பொருளையும் கண்டுணர்ந்து பின்பற்றுவது தான் தேவையாகும்.For both socialism (which is reasonably fair and balanced society) and spiritualism need reevaluation and research of our sense of 'self' (who we are) and finding and following a new expanded sense of 'self' and purpose - meaning of living.
28-May-2019
Dear Thol
For the sake of completion, please add chemical approaches to altered states of consciousness (Huxley's Doors of Perception and Carlos Castaneda's books are a good introduction) as well as Tantra (while a branch of Yoga, it stands apart in its approach). Obviously I do not recommend these!
Regards/Shan
-----------------------------------------------------------
28-May-2019
Dear Shan,
I too don't recommend those approaches; there is no need for such distractions to a real seeker.
Regards,
Thol
-----------------------------------------------------------
28 May 2019
Dear Shan,
Our focus is very much mundane and down to earth for day to day living; nothing esoteric. We are not after some different / rare flavour of illusion.
If this is not clear from the text, this note is that correction.
Regards,
Thol
-----------------------------------------------------------
30 May 2019
We are not even interested in self-improvement which is another form of egoism (can be explicit to subtle) - I am more cultured than you; I am smarter than you; I am more civilised than you; I am more tolerant than you; I am more environmentally conscious than you; I am more humble than you; I am holier than you and so on.
It is like - as simple as - we eat because we are hungry. We don't eat (in order) to grow; to be strong; to be healthy; to be beautiful and so on; they may or may not result (consequences) because of the food we eat. But the primary reason for eating is we are hungry (we cannot even enjoy the food properly if we are not hungry). So, the primary reason for seeking is hunger for Truth. Similar to the consequences of eating, there may or may not be consequences of understanding the Truth, which can include self-actualisation, acceptance, magnanimity, magnificence, why even some powers (nothing but clear seeing).
Realising the false sense of separation has got nothing to do with religion, science (though we may use them or anything to help see through the illusion) or gaining some occult (sic!) power but it has everything to do with, as already said, day to day living in a harmonious way with the whole of existence. The clue is glaring in the title of the email (socialism and spiritualism) as well as spread throughout.
Religion promises post-death redemption by atoning for our sins (of birth...); in that view science (promising pre or prolonged death redemption by means of technology) is a form of religion hiding under the cloak of mathematics, logic and repeatable experiments with the fundamental 'axiomatic' assumption of objective reality. Science is (human beings leaning on science and technology) so blind (or willingly ignore) as not to be able to see through it. This is just one view of science but science viewed as a feature, expression, manifestation of nature / reality is a very exciting adventure (as would be anything when the sense of separation is seen through).
Regards,
Thol