Saturday, 27 August 2011

கீழிலிருந்து மேல் வரை பிச்சைக்கார மனிதர்கள்

2001-08-27


நான் வாழ்க்கைக்குத் தேவையான பொருளை ஈட்ட என்னை வைத்து (ஊதிய அடிமையாக என் உழைப்பு அல்லது என் தொழில் மூலம்) அடுத்தவன் பொருள் ஈட்ட நான் அனுமதித்தாலே முடியும்.

சமுதாயத்தில் நான் பெறும் உரிமைகளும் இதற்கு விதி விலக்கல்ல. என்னை வைத்து எனக்கு மேலுள்ளவர்கள் படிப் படியாக அதிக உரிமை பெறுவதை நான் அனுமதிக்கும் போதே எனக்கு எலும்புத் துண்டாகச் சில உரிமைகள் கிடைக்கின்றன.

இரண்டிலும் அதைத் தவிர வேறு வழியில்லை. எனவே 'அனுமதி' என்ற சொல் ஒரு தங்கக் கூண்டே.

மேற்கண்ட இரண்டையும் நான் விரும்பவில்லை; இப்படி இருப்பது நியாயம் நீதி அன்று என்று நினைக்கிறேன். ஆனால் உலக‌ நடப்பு இப்படித் தான் உள்ளது என்பதை மறுத்துப் பயனில்லை.

பலர் உயிர் பிழைக்க‌ச் சிலர் செழிக்க‌ வேண்டும். 
For many to just survive, a few have to flourish.
சிலர் செழிக்க‌ப் பலர் உயிர் பிழைக்க‌  வேண்டும். 
For a few to flourish, many have to just survive.

பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து அமெரிக்க விடுதலை, ருசிய, சீனப் புரட்சி, இந்திய விடுதலை என எல்லாத் தீவிர மாற்றங்களும் எல்லோருக்கும் பொதுவான சமமான உரிமைகளையும் கடமைகளையும் கொடுத்து விடவில்லை. இன்று நடக்கும் இனி நடக்கப் போகும் போராட்டங்களும் மாற்றங்களும் அவ்வாறே இருக்கும்; விதிவிலக்காக இருக்கத் தேவையான அகப் புறக் கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

அடுத்தவர் போராடி எனக்கு சம உரிமை கிடைக்காது. ஏன் சரியான உரிமை கூடக் கிடைக்காது. நடுத்தர மக்கள் போராட்டத்தால் ஏழை மக்களுக்குப் பயனில்லாது போகாது. ஆனால் சமமான பயன் கிட்டாது. வரலாற்றைப் பார்த்தால் சமமான உரிமைக்குப் போராட்டம் என்ற போர்வையில் தனக்குக் கீழ்ப் படியில் இருப்பவர்களை ஒப்பீட்டளவில் அதிகம் பலி கொடுத்துத் தன் சமுதாயத் தளத்தில் உள்ளவர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகப் பயன் பெற்றுக் கொள்வதே நடந்து வந்துள்ளது. Beggars cannot be choosers and everybody is a beggar to somebody above!

பிச்சை எடுத்துக் கொண்டு சமத்துவக் கனவில் வாழ்வதே மனிதனின் அற்புதம் / அவலம்!

No comments:

Post a Comment