Monday, 28 March 2011

அறிதோறு அறியாமை கண்டற்றால்...(திருக்குறள்: 1110)

However hard we try we cannot be 100% objective / unbiased. What we see and how we see are all determined by the net result of what all we saw and how we saw them earlier. Accepting / rejecting this statement itself is subject to the 'truth' of this statement.

Some of us (by the same net result) realize this and don't take any statement as whole or absolute, including our own statements. The rest of us delimit 'some' by not having this realization.

The intelligence at some point recognizes its limitation. That is the end of old reality (view / interpretation...) and the beginning of new reality (view / interpretation...).

In the new view there is nothing to prove, nothing to establish beyond doubt...everything complements each other and be the whole. Without an opposing view to this, this view cannot exist, even be stated. A few moments this state (realization) prevails and then fades away as any other....

ஒன்றை நினைத்து ஒன்றை மறந்து ஓடும் மனம் எல்லாம் நீ
என்று அறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே

சொன்னதைச் சொல்லித் துடிக்கின்ற ஆணவப் பேய்க்
கின்னல் வருவதெந்நாள் எந்தாய் பராபரமே

நீர்க்குமிழி போலென் நினைவுவெளி யாக்கரையப்
பார்க்குமிடம் எல்லாம் என் பார்வை பராபரமே

எல்லாம் நினதுசெயல் என்றெண்ணும் எண்ணமும் நீ
அல்லால் எனக்குளதோ ஐயா பராபரமே
          (தாயுமானவர் பராபரக்கண்ணி)

It is not enough to know the truths. We need to apply them. The vigor of establishing/seeking the facts (past/present) is a truth of life. The realization as explained above is also a truth of life. Both can be simultaneously applied and held in balance. 

செல்வந்தன் தான் எளிமையாக இருக்க முடியும். அறிஞன் தான் அடக்கமாக இருக்க முடியும். அறிய அறிய அறியாமை தான் எழும்/மிகும் என்று அறிவது (தெரிந்து கொள்வது) அறிவாராய்ச்சி நிகழ்வதால் தான், தொடர்வதால் தான் முடியும்.

Sunday, 27 March 2011

சுக்கா மிளகா சுதந்தரம் கிளியே

2010-06-15


தித்திக்கும் பழம் தின்னக் கொடுப்பார்
மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு;
பொன்னே, மணியே, என்றுனைப் புகழ்வார்;
ஆயினும் பச்சைக் கிளியே அதோ பார்!
உன்னுடன் பிறந்த சின்ன அக்கா,
வான வீதியில் வந்து திரிந்து
தென்னங் கீற்றுப் பொன்னூசல் ஆடிச்
சோலை பயின்று சாலையில் மேய்ந்து
வானும் மண்ணுந்தன் வசத்திற் கொண்டாள்!
தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ?
அக்கா அக்கா என்று நீ அழைத்தாய்.
அக்கா வந்து கொடுக்கச்
சுக்கா மிளகா சுதந்தரம் கிளியே?
    - பாரதிதாசன்


"உரிமை, சுதந்திரம், விடுதலை என்றால் அதை நான் போராடிப் பெற வேண்டியதாகவோ காப்பாற்ற வேண்டியதாகவோ இருக்கக் கூடாது. அது நான் இழக்க முடியாததாக இருக்க வேண்டும். ஓயாது அதை நான் காத்து, தக்க வைத்துக் கொள்ள கூடியதாகவும் அப்படிச் செய்யாவிடில் இழந்து விடும் தன்மையினதாகவும் இருந்தால் அது வேண்டத் தக்கதோ விரும்பத் தக்கதோ அன்று. நான் மூச்சு விடுவது போன்று எனக்கு சுயாதீனமாகவும் இயல்பானதாகவும் சுதந்திரம் இருக்க வேண்டும். சுருக்கமாக நானும் சுதந்திரமும் வேறு வேறாக இருக்கக் கூடாது. இப்படிச் சொல்வதனால் சுதந்திரம் சுலபமானது என்றோ இலவசமானது என்றோ பொருள் அன்று. சுதந்திரம் பெறுவதன்று, வாழ்வது."
                                    - சரியார்.
2010-06-16

அது யார் சரியார்?
அன்புடன்,
- திருவேலன் 

2010-06-16

அது தான் எனக்கும் தெரியவில்லை. அவ்வப்போது என் காதில் வந்து ஏதாவது உளறி விட்டுப் போகிறார்.

சில நாள்கள் தலையணை பக்கத்தில் குறிப்பேடு பேனாவுடன் தூங்குவேன். தப்பித் தவறி உருப்படியான‌ சிந்தனை குறுக்கே வந்தால் அப்படியே போட்டு அமுக்கி எழுதி விடலாம் என்ற ஐடியாவுடன். ஆனால் ஐடியா வருமுன் அய்யாவுக்குத் தூக்கம் வந்து விடும்.

காலையில் எழுந்து பார்த்தால் குறிப்பேட்டில் கிறுக்கல்கள்! யார் செய்திருக்கக் கூடும்?

உளறல்களையும் கிறுக்கல்களையும் திருடி விடலாம் என்று தோன்றும். ஆனால் அவற்றை என்னுடையது என்று சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. எதற்கு வம்பு என்று பேசாமல் அவர் பெயரிலேயே போட்டு விடுகின்றேன். ஆனால் அது தான் அவர் பெயரா என்று தெரியவில்லை.

அவரிடம், "சொல்வது எழுதுவது கிடக்கட்டும், சரி நீர் யார் என்று சொல்லும்" என்றேன். அதற்கும் ஓரே உளறல். நான் சொன்னதையே மீண்டும் மீண்டும் 'சரி யார், சரி யார்' என்று என் காதில் சொல்லிக் கொண்டு இருந்தார். அப்படியே ஆகட்டும் என்று அதையே பெயராக அவருக்கு வைத்து விட்டேன்.

ஒரு வகையில் அது பொருத்தமானதும் கூட. அவர் பெரியாரோ சிறியாரோ தெரியவில்லை. ஆனால் எதற்கும் சரிப்பட்டு வரமாட்டார். சரிந்து விடவும் மாட்டார். அவர் பொல்லாதவர், புகழ் கொள்ளாதவர். அவர் உளறுவதை ஊன்றிப் பார்ப்பார் அவர் யாருக்கு உறவார் என்று அறிவார்.

சரியார் பற்றிச் சிரி குறிப்பு (அவரே எழுதிய கிறுக்கல்)

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், சரியார் என்று யாருக்கும் தெரியார். அதாவது யார் சரி (சரி யார்?) என்று யாருக்குமே தெரியாது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதென்றால், இவர் தான் முதன் முதலில் சக்கரத்தைக் கண்டு பிடித்தவர். அதாவது வாழ்க்கைச் சுழற்சிக்கும் மன உழற்சிக்கும் இவர் தான் காரணம். அது மட்டுமல்லாது இவர் இல்லாத இடம் இல்லை. பேசாத பேச்சில்லை. எழுதாத எழுத்தில்லை. செய்யாத செயல் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் இவரே இல்லை.

அவ‌ர் அடிக்க‌டி பாடும் திரைப்படப் பாட்டு:

நான் யார் நான் யார் நீ யார் 
நாலும் தெரிந்தவர் யார் யார்

தாய் யார் மகன் யார் தெரியார் 
தந்தை என்பார் அவர் யார் யார்

உறவார் ப‌கையார் உண்மையை உண‌ரார் 
உன‌க்கே நீ யாரோ

வ‌ருவார் இருப்பார் போவார் நிலையாய் 
வாழ்வார் யார் யாரோ

உள்ளார் புசிப்பார் இல்லார் ப‌சிப்பார் 
உத‌விக்கு யார் யாரோ

நல்லார் தீயார் உய‌ர்ந்தார் தாழ்ந்தார் 
ந‌ம‌க்குள் யார் யாரோ

அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார் 
தடுப்பார் யார் யாரோ

எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார் 
எதிர்ப்பார் யார் யாரோ

பிணியார் வ‌ருவார் ம‌ருந்தார் த‌ருவார் 
பிழைப்பார் யார் யாரோ

உயிரார் ப‌ற‌ப்பார் உட‌லார் கிட‌ப்பார் 
துணையார் வருவாரோ

நரியார் நாயார் கடிப்பார் முடிப்பார் 
நாளைக்கு யார் யாரோ

பிறந்தார் இறந்தார் நடந்தார் கிடந்தார்
முடிந்தார் யார் யாரோ

2010-06-17
சரியாரின் இன்றைய உளறல்

புலமைப்பித்தன் 'நான் யார் நான் யார்' பாட்டில் எழுத மறந்த வரிகளை என் காதில் ஓதி விட்டுச் சென்றார் சரியார்!

சரியார் தவறார் சாவினில் சரிவார்
சமருக்கு வேர் (வேறு) யாரோ?                            1

சரியார் தெரியார் சண்டைக்கு நிற்பார்
உண்மைக்கு உரியாரோ?                                    2

நடிப்பார் வடிப்பார் நாடகம் அடிப்பார்
நம்பிக் கெடுவாரோ?                                          3

பொய்யார் புல்லார் புலம்பித் திரிவார்
பே(போ)தைமை தொலையாரோ?                        4

இறந்தார் இழுப்பார் இருப்பதை மறப்பார்
என்றைக்கு எழுவாரோ?                                      5

ஆண்டார் அழிவார் அடியார் ஆள்வார்
அமைதிக்கு வழி யாரோ?                                    6

மாண்டார் மீண்டார் மறுபடிச் சுழன்றார்
மருண்டே உழன்றாரோ?                                    7

இனியார் இகலார் இக‌ழார் க‌னிந்தார்
இண‌ங்கிப் போகாரோ?                                      8

பெரியார் பிழையார் பிழைக‌ள் பொறுப்பார்
பிடித்தே உயர்வாரோ?                                        9

பகையார் சான்றார் பண்பார் நிறைந்தார்
பதவிக்கு யார் யாரோ?                                        10

கெஞ்சார் அஞ்சார் கொஞ்சும் நெஞ்சார்
குணத்திற்குக் குடியாரோ?                                  11

பொருளார் இழுக்கார் புகழார் மயக்கார்
புன்மைக்கு அலைவாரோ?                                  12

ஆன்றார் அன்பார் ஆவது அறிவார்
அவருக்கு நிகர் யாரோ?                                      13

மனத்தார் இனத்தார் மாண்பால் மணப்பார்
மறையிது மறப்பாரோ?                                      14

குறையார் மறையார் குணமார் கூறார்
கொடுத்தே பெறுவாரோ?                                  15

வெறுப்பார் வீழ்வார் விரிந்தார் வாழ்வார்
விளங்கிக் கொள்வாரோ?                                    16

தெரிந்தார் புரிந்தார் தெளிவால் சிறந்தார்
தேர்ந்தே அறிவாரோ?                                        17

அணைப்பார் பிணைப்பார் அகிலம் இணைப்பார்
அவர்வழி செல்வாரோ?                                      18

நான் யார் அறிந்தார் நாலும் கடந்தார்
ந‌டிப்ப‌தை முடிப்பாரோ?                                      19

தேடினார் அடைவார் திறந்தார் காண்பார்
தேவைகள் நிறைவாரே.                                      20

அபசகுனன்

 2010-07-20

அபசகுனன்
(உண்மைக்  கற்பனை   உரையாடல்)

சரியார், 'சகுனம் பார்ப்பது சரியா' என்று யோசித்துக் கொண்டு இருந்த வேளையில் அபசகுனமாக அங்கு ஒரு பெரியார் வந்து சேர்ந்தார். சரியார் மேல் அவருக்கு எப்போதும் ஒரு கண். இன்று எப்படியும் மடக்கி விடுவது என்று நினைத்துக் கொண்டு, 'சகுனத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்றார்.

சரியார் அதிர்ச்சியால் சரிந்து விழப் போய் சமாளித்துக் கொண்டார். இது தான் பெரியாருக்கு அடையாளமோ? நான் நினைப்பது இவருக்கு எப்படித் தெரிந்தது என்ற வியப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சொன்னார்.

"ஐயா, சகுனம் பார்ப்பது சரியா என்று நினைக்கிறேன்."

"நனைக்கிறது இருக்கட்டும். காயப் போட்டு என்ன முடிவுன்னு சொல்லுங்க.”

"ஐயா, நீங்க 'வெட்டு ஒன்று - துண்டு இரண்டு'  ஆள். நான் 'போட்டு உடை - சிதறல் நூறு'  ஆள்.”

"இந்த வழுக்கல் வெங்காயம் எல்லாம் எங்கிட்ட‌ வேண்டாம்.”

"ஐயா, உங்களுக்கு மூடநம்பிக்கை கிடையாது. எனக்கு 'எனக்கு மூடநம்பிக்கை கிடையாதுங்கற' மூடநம்பிக்கை கிடையாது"

"உங்க வழக்கம் போல் தவளைக்கள மாதிரி தரையிலும் தண்ணியிலும் மாறி மாறி ஓடி ஒளியாதீங்க. கேட்ட கேள்வியில நின்னு பதில் சொல்லுங்க.”

"சரி கேளுங்க. எனக்கு தெரிந்த ஒருத்தர் ரொம்ப சகுனம் பார்ப்பார். அவர் பெயர் சற்குணம். நாங்க அவரைச் 'சகுனம் சற்குணம்'ன்னு கிண்டல் பண்ணுவோம்....”

"சற்குணமோ பொற்குணமோ அவரை ஏன் இப்ப இழுக்கிறீங்க. உங்க கருத்தைச் சொல்லுங்கன்னா, கதை எல்லாம் எதுக்கு?"

"சுப்பிரமணியன் என்ற‌ பெரிய பெயரைச் சுருக்கிச் 'சுப்பு' என்றோ 'மணி' என்றோ வசதிக்குக் கூப்பிடுவது போல் பெரிய ஆராய்ச்சி சுருங்கிச் சகுனம் என்று ஆகி விட்டது. அதற்கு ஒரு பயனும் இல்லாமல் இயற்கையில் தோன்றியிருக்காதே. ஆனால் சுருக்கப் பெயர், செல்லப் பெயர் சட்டப் படி செல்லுபடி ஆகுமா? அது போல் சகுனம் செல்லக் கூடிய இடமும் செல்லாத இடமும் இருக்கலாமே."

"இந்த மலத்துல அரிசி பொறுக்குற வேலை தான் வேண்டாங்கிறது. சகுனத்திற்கு விஞ்ஞானப் பூச்சு, மெஞ்ஞானப் பூச்சு பூசி மொழுவாதீங்க."

"விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் நமக்கு அப்பாற்பட்டதில்லையே. மனிதனிடம் போட்டி, பொறாமை இருக்கு. அதே போல் விட்டுக் கொடுப்பது, ஒத்துழைப்பது, பொறுத்துப் போவது என்பதும் இருக்கு. ஆராய்ச்சி செய்து ஆர அமற முடிவும் எடுக்கிறோம். அவசரமாக உணர்ச்சிப் போக்குல முடிவும் எடுக்கிறோம். வாழ்க்கைக்கு இரண்டும் தேவைப்படுது. அது போல் எது எதை பாதிக்குது என்று யோசிப்பதில் மனிதன் பரிசோதனை செய்யிறான். “

"அதுக்குன்னு மொட்டைத் தலைக்கும் முழங்காலும் முடிச்சுப் போட்டா எப்படி?"

"ஏறத்தாழ மூனு, நாலு பௌர்ணமிக்கு முன்னாடி நடந்த ஒரு செயல் தான் இப்படி வயிறு பெரிசாப் போகக் காரணம்ன்னு எப்படிக் கண்டு பிடிச்சான்? அப்படிப் பத்து பௌர்ணமிக்கு முன் நடந்ததே இன்று குழந்தையா பிறக்கக் காரணம் என்று எப்படி முடிச்சு போட்டான்? முதல் முதல்ல அப்படிச் சொன்னவனுக்கு முட்டாள் பட்டம் தான் கிடைச்சு இருக்கும்.”

"முடிச்சுப் போட்டா மட்டும் போதுமா? உண்மையில் அப்படித் தொடர்பு இருக்கான்னு பார்க்கனுமில்ல.”

"பார்க்கனும். பார்ப்பாங்க. யாரும் வேணுமின்னா தவறான கருத்தைப் புடிச்சுக் கிட்டு இருப்பாங்க?"

"எவ்வளவு காலம்? முன்னேற்றம் தடைப்படுதில்ல?"

"என்ன காரணமின்னு சரியாப் புரிஞ்சுக்காம வேகமா முன்னேறி என்ன பயன்? ஒரு நம்பிக்கைக்குப் பதில் இன்னொரு நம்பிக்கையா இருந்தா அதே தவறு வேறு வடிவத்தில் திரும்பவும் வந்து விடவே வாய்ப்பு அதிகம்."

"சரி இப்ப என்னதான் சொல்றீங்க?"

"சகுனம் என்பது ஒரு நம்பிக்கை. நம்முடைய நம்பிக்கைகள் பெரும்பாலும் அடுத்த மனிதர் சொன்னது மேல் உள்ள நம்பிக்கைகளே. பிற மனிதருடைய அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் இவற்றின் மேல் உள்ள நம்பிக்கைகளே. பிறர் மேல் சாராத நம்முடைய நேரடி அனுபவங்கள் மேல் வரும் நம்பிக்கைகள் தவிர மற்ற எல்லாவற்றையும் நம்பிக்கைகளாக நாம் எடுத்துக்காமல் ஏதோ நாமே நேரடியாக அறிந்த அனுபவித்த‌ உண்மைகள் போல் எடுத்துக் கொள்வதால் தேவையற்ற பற்று, மனமூட்டம் வந்து விடுகிறது. நம்முடைய நேரடி அனுபவத்தில் கூட, நாம் சில சமயம் அதன் காரணங்களைத் தவறாகப் புரிந்து கொள்ள நேரிடுகிறது என்கிற‌ போது அடுத்தவர் சொன்னதை நம்புவது என்பதில் விழிப்பாக இருக்க வேண்டாமா?"

சரியார் நிறுத்துவதாக இல்லை. மேலும் தொடர்ந்தார்.

"அதே சமயம் எல்லாத்தையும் நாமே ஆராய்ச்சி செய்து நேரடியாக அறிந்து கொள்ள வாழ்நாள் பத்தாது. அதனால் அடுத்தவர் அறிந்து சொன்னதை நம்பி ஏற்றுக் கொண்டு போகவே வேண்டும். அவங்க அவங்க யாரை நம்புறது என்பதிலும் அதே பிரச்னை தான். மனிதன் ஒரு சமுதாய விலங்கு. அவனுக்குச் சகுனம் நம்பிக்கை வந்ததும் நமக்கு அதன் மேல் சந்தேகம் வந்ததும் சமுதாயத்தில் நடப்பனவற்றின் விளைவே தவிர யாருடைய சிந்தனையும் செயலும் தனியாக வானத்திலிருந்து வந்து குதித்து விடவில்லை.”

சரியாரின் சுவையான(!) பேச்சைக் கேட்டுப் பெரியார் சொக்கினார்(!). "ஆ...வ்" என்ற பெரிய‌ ஒரு கொட்டாவி (கெட்ட ஆவி) விட்டார்.

அது சரியாரைத் தொற்றிக் கொள்ள‌ அவரும் கொட்டாவி விட்டார்.

"ஐயா, நீங்க ஆவி இருக்குன்னு நம்புறீங்களா?"

"நான் நம்புற ஆவி நீராவி தான்" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் அந்தப் பெரியார்.

"இப்ப கொட்டாவி விட்டீங்களே. அதுக்கு எப்படி அடுத்தவங்களப் பாதிக்கிற சக்தி இருக்கு பாத்தீங்களா?"

"ஆமாம். அதுக்கென்ன‌. நீங்க பேய், பிசாசு ஆவி ப‌த்திக் கேட்கிறீங்க‌ளோன்னு நினைச்சேன்."

"தூக்க ஆவி (கொட்டாவி) இருந்தா தூங்காத ஆவியும் இருக்காதா?”

"சரி சரி. அது இருந்தா தான் இது இருக்கும், இது இருந்தா தான் அது இருக்கும்ற தத்துவ விளக்கெண்ணெய்யில‌ வழுக்கி விழுந்து அலுத்துப் போச்சு. அதனால அதை விடுங்க. ஏதோ நற்குணமோ கற்குணமோன்னு சொன்னீங்களே, அவன் கதையையாவது சொல்லுங்க கேட்போம்."
***
சகுனம் சற்குணத்தின் அபசகுனம் எப்படிப் பட்டதென்றால் 'இந்த மனுஷன் குறுக்கே போனால் நமக்கு ஆகாது' என்று குறுக்கே வந்த‌ பூனை நின்று இவன் போன பிறகு தான் போகும் என்றால் பாருங்களேன். அவன் ஸ்டாம்ப் வாங்கப் போனால் போஸ்ட் ஆபீஸிலேயே ஸ்டாம்ப் தீர்ந்து விடும். அவன் சீட்டு கட்டிய கம்பெனியின் லைசென்ஸ் சீட்டே கிழிந்து விட்டது. சைக்கிளில் ஏறினால் பங்சர். பஸ்ஸில் ஏறினால் பிரேக் டவுன். உப்பை ஸ்பூனில் எடுத்துத் தட்டினால் அத்தனையும் உணவில் கொட்டி விடும். வாழைப் பழத் தோலை உரித்தவுடன் பழம் நழுவிப் பாதையில் விழுந்து விடும். அபசகுனமே அஞ்சி நடுங்கும் அவன் சகுனத்தை என்னவென்று சொல்வது?

என்றாலும் இன்று எப்படியும் தன் அபசகுன கீர்த்தியைத் துறந்து விடுவது என்று முடிவு செய்து விட்டான். அவனா அபசகுனமா ஒரு கை பார்த்து விடுவது என்றே புறப்பட்டு விட்டான். உடனே சகுனம் சற்குணத்தைக் குறைத்து எடை போட்டு விடாதீர்கள். அபசகுனத்தை அறிவு பூர்வமாக வெல்ல‌ வேண்டுமே ஒழிய சகுனம் பார்க்கக் கூடாது என்று தவறாகப் புரிந்து கொண்டு விடலாமா?

வீட்டைச் சாத்திப் பூட்டிய பின் தான் உள்ளே விளக்கை அணைத்து விட்டது நினைவுக்கு வந்தது. மின்சாரம் மிச்சம். அபசகுனத்திற்கு அச்சம். தடவினான். மறக்கவில்லை. பேண்ட பாக்கெட்டில் பர்ஸ், பஸ் பாஸ். அபசகுனம் பெயில். பரவாயில்லை அபசகுனத்திற்கு அடுத்த வாய்ப்பு கிடைக்காமலா போய் விடும். படியிலிருந்து இறங்கும் போது எதிர்வீட்டுக்காரன், 'இன்னைக்குச் சீக்கிரமாக் கிளம்பிட்டீங்க?' என்றான். வழக்கமாக வேண்டுமென்றே 'எங்கே போறீங்க' என்று கேட்பவன் இன்று தவறி விட்டான். அவனுக்கு நேரம் சரியில்லை போலும்.

சாலையைக் கடக்கும் இடத்தில் இவன் கால் வைத்ததும் கடப்பதற்குப் பச்சை விளக்கு பளிச்சிட்டது. அபசகுனம் அடங்கி விட்டது. சாலைக் கடந்ததும் சொல்லி வைத்தாற் போல் கைத் தொலை பேசி ஒலித்தது. எடுத்துப் பேசினால் விண்ணப்பித்திருந்த வேலை சம்பந்தமாக ஏஜெண்ட். கேள்வி மேல் கேள்வி. கடைசியில் நல்ல செய்தி. வேலை கிடைத்து விட்டது. ஆச்சரியம். கைத் தொலை பேசி சார்ஜ் பாதியில் முடிந்து விடவில்லை. அபசகுனத்திற்கு இன்று வாய்ப்பு இல்லை போலும்.

இன்று காலை நரி முகத்தில் விழிக்காமலேயே எல்லாம் சாதகமாக நடக்கிறது என்பதும் ஆச்சரியம் தான். என்றாலும் காலை படுக்கையை விட்டு எழுந்த போது எந்தப் பக்கமாக எழுந்தான் என்று யோசித்துப் பார்த்து தினமும் அதே பக்கமாக எழ வேண்டும்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று புதன் கிழமையில் வேலை கிடைத்து அது உண்மையாகி விட்டது. நாளை தான் வேலையில் சேரப் போகிறான் என்றாலும் முதல் சம்பளம் வர இன்னும் மூன்று வாரங்களாகவது ஆகும் என்றாலும் வேலை கிடைத்த சேதியே பொன் கிடைத்தாற் போலத் தானே.

அபசகுன ஆமையை வீட்டுக்குக் கூடத்திற்கு இழுத்து வந்தாயிற்று. அப்படியே தம் பிடித்து ஆமையை வீட்டை விட்டு வெளியே தள்ளி விட வேண்டும் என்று நினைத்த படி மிடுக்காக நடந்தான். நாளை வேலையில் சேர வரச் சொல்லியுள்ளார்கள். அதனால் அலையாமல் அபசகுனத்திற்கு அதிக வாய்ப்பு கொடுக்காமல் வீடு திரும்பினான்.

அடுத்த நாள் வேலைக்குப் புறப்பட்ட போது வாசற் கதவு நிலையில் தலை இடித்துப் பல்லி தலை மேல் விழுந்தது. நிலை இடித்தால் புறப்பட்ட காரியம் சித்திக்காது. பல்லி தலையில் விழுந்தால் போகிற வேலை பழுக்கும். எந்த சகுனம் பலிக்கும் என்று பார்க்க இன்னொரு சகுனம் உதவி செய்யும். இல்லாவிடில் காரியம் எப்படி முடிகிறது என்று பார்த்துக் கொண்டால் பிறகு சகுனத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பல்லியா கதவு நிலையா? இரண்டும் ஒரு சேர நடந்தால் எதற்குப் பலம் / பலன் அதிகம் என்று தெரிந்து விடும். அதிலும் தேக்கு மர நிலையா பாக்கு மர நிலையா புள்ளி வைச்ச பல்லியா புள்ளி வைக்காத பல்லியா என்றும் கவனிக்க வேண்டும்.

சகுனம் பார்ப்பது சாதரண விஷயமல்ல. எல்லோரும் பார்த்து விட முடியுமா? மக்குப் பிளாஸ்திரிகள் எதைக் கண்டாலும் கேட்டாலும் நம்புவார்கள். புத்திசாலிகளால் தான் யோசித்து சகுனம் பார்க்க முடியும். சாமிக்குக் கோழி, ஆடு வெட்டிப் படைப்பது அநாகரிகம். பொங்கல், வடை, பாயசம், லட்டு படைப்பது நாகரிகம். இரண்டும் ஒன்றாகுமா? இரண்டிலும் கடவுள் வந்து சாப்பிடுவதில்லை, படைத்தவனே (இரு பொருள் உள்நோக்கமே) வயிற்றில் அடைத்துக் கொள்கிறான் என்பது வேறு விஷயம்.  அதற்காகக் கைரேகை நிபுணர் சொல்வதும் கண்மூடித் தனமாய்க் கிளி சீட்டு எடுப்பதும் ஒன்றாகி விடுமா?

நிலையில் தலை இடித்தாலும் நிலை குலையாது வெளியே வந்து சாலையில் இறங்கியதுமே பக்கத்துப் பெட்டிக் கடை விளம்பரத்தில் பெரிய யானையைப் பார்த்ததற்குப் பலன் இல்லாமலா போய் விடும்? நற்சகுனம்.வேலைக்குப் போகும் பஸ்ஸில் நெரிசல் இல்லை. அது பிரேக் டவுன் ஆகவும் இல்லை.

ஆனால் உட்கார்ந்திருத்த சீட்டில் இருந்த நகரத்து அழுக்கு ஆடையில் அட்டையாய் ஒட்டிக் கொண்டது. அலுவலகத்தில் முதல் சந்திப்பே இப்படி ஆக வேண்டுமா? என்றாலும் அவன் வலது கண் துடித்ததால் நிச்சயம் நல்லதே நடக்கும் என்று தெரிந்து கொண்டான். அதே போல் பஸ்ஸை விட்டு இறங்கியதும் அடித்த புழுதிக் காற்றில் ஆடை முழுவதுமே தூசி படிந்து ஒரே நிறமாக மாறி விட்டது. அழுக்கு என்று சொல்ல சுத்தம் என்று ஒன்று இருந்தால் தானே முடியும். என்னே சகுனத்தின் சக்தி.

வேலைக்குச் சேரும் கம்பெனியை நெருங்கியதும் தெருவில் கூட்டமாக இருந்தது. போலீஸ் வாகனங்களும் தலைகளும் தெரிந்தன. என்னடா இது சோதனை என்று நினைத்த வண்ணம் கதவு எண்ணைப் பார்த்துக் கொண்டு நடந்தான். சரியாக அவன் சேர இருந்த கம்பெனியின் கதவை இழுத்துப் பூட்டிச் சீல் வைத்துப் போலீஸ் காவல் இருந்தார்கள்.

பக்கத்தில் இருந்தவர்கள் பேசியதிலிருந்து மோசடி கேஸ்ஸில் கம்பெனி மூடல் என்று தெரிந்தது. அப்போது தான் காலையில் வேலைக்குக் கிளம்பும் போது தலை சீவும் அவசரத்தில் கண்ணாடி விழுந்து உடைந்தது நினைவுக்கு வந்தது. கண்ணாடி உடைந்த நாளில் செல்லும் காரியம் உருப்படுமா? அபசகுன ஆமையை வீட்டை விட்டு வெளியே தள்ளப் போனால் அது நமக்கு முன்னாடி நாம் சேர இருந்த கம்பெனியில் சென்று சேர்ந்து விட்டது. இனி ஒழிந்தது அபசகுனம். நமக்கு நல்ல காலம் தான் என்ற நிம்மதியுடன் நட‌ந்தான் சகுனம் சற்குணம்.
***
"உண்மைக் கற்பனை உளறல், மன்னிக்கனும், உரையாடல்ன்னு மேல போட்டிருக்கு. அது என்ன உண்மைக் கற்பனை?"

"பேச்சு கற்பனை. பேச்சின் பொருள் உண்மைன்னு ஒரு நினைப்பு தான்."

"பேச்சு கற்பனை. பேச்சின் பொருள் உளறல்ன்னா பொருத்தமா இருக்கும். புராணம், இலக்கியத்திலிருந்து சினிமா வரை கதை விட்டே நம்மள அடிமைப்படுத்திட்டாங்க. நீங்களுமா?” என்றார் பெரியார்.

"விஷத்தைக் கொடுத்தாலும் விஷயத்தைக் கொடுத்தாலும் கதைக்குள்ள வைச்சா தான் கவனிப்பாங்க. 'கஞ்சி ஊட்டினாலும் நஞ்சு ஊற்றினாலும் கொஞ்சம் கதை சொல்லி ஊட்டு' என்பது புது மொழி.”

"அது கிடக்கட்டும். இப்ப சொல்லுங்க. உங்களுக்கு சகுனத்தில் நம்பிக்கை உண்டா இல்லையா?”

"இவ்வளவு நேரம் விளக்கம், கதை எல்லாம் கேட்டு விட்டு என்ன இப்படி அபசகுனமா கேட்கிறீங்க?”

"அப்ப சகுனத்தை நம்புறீங்க.”

"நான் அப்படி சொல்லலையே.”

"அப்படின்னா சகுனத்தை நம்பலையா, குழப்புறீங்களே?”

"குழப்புறது மட்டும் நம்ம தொழில் இல்லை. உளறுவதும் நம்ம வழக்கம்.”

"சரி உங்க உளறல் தான் என்ன?”

"இந்த பாருங்க. சகுனத்தில் நம்பிக்கை இருக்குன்னு நான் சொன்னா, 'சகுனம்' நம் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ள இவரைக் கை விடலாமா என்று வந்து நம்மிடம் ஒட்டிக் கொள்ளும். வந்தா நற்சகுனம் மட்டும் வருமா? கூடவே தன் துணை அபசகுனத்தையும் சேர்த்தே கொண்டு வரும். சரி, 'சகுனத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை' என்று சொன்னால் அதுக்கு கோபம் வந்து, 'உன்னை என்ன செய்றேன் பாரு'ன்னு நம்மள ஒரு கைக்குப் பல கை பார்த்துரும். எதுக்கு வம்பு? சகுனத்தைக் குழப்பத்துலயே வைச்சிருந்தா அது தான் நமக்கு நற்சகுனம்!”

"வெறும் வெங்காயம்ன்னு நினைச்சேன். வெள்ளை வெங்காயமாத்தான் இருக்கு."

"வெங்காயம் தான் முதல் என்பதை மறந்து விடலாமா? அதை வைச்சுத்தானே பூண்டை வெள்ளை வெங்காயம்ன்னு சொல்றோம்"
(சரியாரின் திருஷ்டிப் பரிகாரப் பூனை)

சரியார்  பற்றிச்  சிரி  குறிப்பு  (அவரே எழுதிய கிறுக்கல்)

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், சரியார் என்று யாருக்கும் தெரியார். அதாவது யார் சரி (சரி யார்?) என்று யாருக்குமே தெரியாது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதென்றால், இவர் தான் முதன் முதலில் சக்கரத்தைக் கண்டு பிடித்தவர். அதாவது வாழ்க்கைச் சுழற்சிக்கும் மன உழற்சிக்கும் இவர் தான் காரணம். அது மட்டுமல்லாது இவர் இல்லாத இடம் இல்லை. பேசாத பேச்சில்லை. எழுதாத எழுத்தில்லை. செய்யாத செயல் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் இவரே இல்லை.

 

'நான்' பிம்பம் - சாட்சி ஆகவே உய் - அனைவருக்கும் எட்டும் அத்வைதம்

2010.07.22
 
'நான்' பிம்பம் - சாட்சி ஆகவே உய் - அனைவருக்கும் எட்டும் அத்வைதம்
    (சரியாரின் அத்வைதப் புலம்பல்)

கண்ணாடியில் தெரியும் என் பிம்பத்திடம் கேள்வி கேட்டால் பதில் கிடைக்குமா? அது போல் தான் 'நான் யார்' என்று நான் ஆன்ம விசாரணை செய்வதும் ஆகும். கண்ணாடியில் தெரியும் பிம்பம் எப்படி (என்னைத் தவிர்த்து) தனித்து இல்லையோ அது போல் 'நான்' என்பதே (என்னுடைய) பிம்பமாக இருக்க அது எப்படி 'நான் யார்' என்று கேட்கவோ விசாரணை செய்யவோ புரிந்து கொள்ளவோ முடியும்?

கண்ணாடியை நான் பார்க்காவிடில் எப்படி அங்கு என் பிம்பம் இருக்க முடியாதோ (இருக்கிறது, இல்லை என்று முடிவு செய்ய இயலாது) அது போல் 'நான்' என்பதைத் தொட்டுத் தொடர்ந்து வரும் சிந்தனைகள் இல்லாவிடில் 'நான்' என்பது இருக்க முடியாது (இருக்கிறது, இல்லை என்று முடிவு செய்ய இயலாது).

இதையும் புரிந்து கொள்வது 'நான்' இல்லை. இந்தப் புரிதலும் நானும் வேறல்ல. பிம்பம் என்னைத் தவிர்த்து இல்லை. 'புரிதல்' என்பதே ஒரு பிம்பம். ஒட்டு மொத்த பிரபஞ்ச பிம்பத்தின் ஒரு பகுதி.  ஓட்டு மொத்த பிம்பமே ஓர் எண்ணம், காட்சி.

'நான்' என்பது ஓர் எண்ணமே என்பது புரிவதும் (என்னைத் தவிர்த்த) மற்ற எல்லாப் பொருள்களும் (உயிருள்ளவை, உயிரற்றவை) எண்ணங்களே என்பது புரிவதும்  தோன்றுமானால், அப்படிப் புரிவதும் தோன்றுவதும் புரிவதான, தோன்றுவதான  எண்ணங்களே.

ஓர் எண்ணம் தோன்றுகிறது. அதற்கு அடுத்து அந்த ஓர் எண்ணம் தோன்றியதாக மற்றோர் எண்ணம் தோன்றுகிறது.  இது உண்மையா?

எண்ணம் 1. "நான் மனிதன்".

எண்ணம் 2: "'நான் மனிதன்' என்று ஓர் எண்ணம் சற்று முன்பு தோன்றியது".

எண்ணம் 1 க்கும் எண்ணம் 2 க்கும் தொடர்பு, எண்ணம் 2 இல் அன்றி, எங்கு உள்ளது? எண்ணம் 2, எண்ணம் 1 ஆல் வந்தது (காரண காரியம்) என்று முடிவு செய்ய எந்த ஆதாரமும் இல்லை. அப்படிக் காரண காரியம் கற்பிப்பதும்  ஒரு தனி எண்ணமே தவிர வேறு என்ன?

மேலும் எண்ணம் 1 இருந்தது, தோன்றியது என்பதற்கு எண்ணம் 2 ஐத் தவிர்த்து எந்தச் சான்றும் ஆதாரமும் நிரூபணமும் இல்லை. எண்ணம் 2 இல் தான் எண்ணம் 1 ம் தோன்றுகிறது என்பதே இக்கண அனுபவ அடிப்படையில் ஆன உண்மை.  அதாவது இக்கணத்தில் தோன்றும் இந்த ஒரே ஓர் எண்ணத்தைத் தவிர, அதற்கு வெளியே வேறு எதுவும் கிடையாது.

இது சட்டென்று விளங்கி விடுமானால், முழுப் பிரபஞ்சம் அதன் ஆக்கம், வளர்ச்சி, அழிவு முதல் பூமி, உயிர்கள் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு எல்லாம் இக்கணத்தில் தோன்றும் ஓர் (ஒரே ஓர்) எண்ணமே (காட்சியே) என்பது தெளிவாகி விடும். சென்ற நொடி (கணம்) என்பதும் வரும் நொடி என்பதும் இந்நொடியில் தோன்றும் ஒரே காட்சியின் பகுதிகளே. கால ஓட்டம் என்பது கருத்தே. இத்தகையப் புரிதலும் அதே காட்சியின் ஒரு பகுதியே தவிர அதைத் தாண்டியதன்று. இப்புரிதல் காட்சியைப் பாதிக்கிறதா இல்லையா ?  அப்படியான பாதிப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதுவும் காட்சியே, காட்சிக்குள் அடக்கமே.

ஞாலம் என்பதே பொய்
காலம் என்பதே பொய்
காட்சி காண்பதே மெய்
சாட்சி ஆகவே உய்
    - சரியார்

நல்லினமுடைமை

2010-07-01

ஒத்த கருத்துடையவர்கள் குழுவாகச் சேர்வது இயல்பானதே. அது விளையாட்டு விசிறிகளாக இருக்கலாம். கர்நாடக இசைப் பிரியர்களாக இருக்கலாம். இலக்கிய சுவைஞர்களாக இருக்கலாம். அரசியல் அரட்டை அடிப்பவர்களோ, அறிவியல் ஆர்வலர்களோ, ஆதிக்கப் பரவசம் நாடிகளோ (பஜனை மடம்), ஆன்மீக அனுபவம் தேடிகளோ (சத் சங்க‌ம்)... அவரவர் இனத்தோடு உறவைப் பேணுவது தேவைப் படுகின்றது.
இனம் இனத்தோடு சேர்வது இயற்கையே. அதில் தனி நபர் தன் நம்பிக்கை, ஆர்வம் மீது தொடர்ச்சியும் உறுதியும் துய்ப்பும் பெறுகிறார்.

வாழ்வின் ஒரு முக்கியத் திருப்பு முனை, நாம் அதுவரை தானியக்கமாகச் (automatic) செய்து வந்தனவற்றை தன்னுணர்வோடு  (conscious) செய்யத் துவங்குவது ஆகும்.

பசிக்கும் போது மட்டுமே தானியக்கமாகச் சாப்பிட்டு வந்த குழந்தை வளர வளர நேரம் (வேளை) பார்த்தும் ஆசைக்காகவும் (பசி இல்லாவிடிலும்) சாப்பிடத் துவங்கிப் பின் பெரியவராகி வறட்டு கவுரத்திற்காகச் சாப்பிடுவது (அ) சாப்பிடுவதைத் தவிர்ப்பது என்றெல்லாம் குழம்பி, ஒரு கட்டத்தில் மீண்டும் தன்னுணர்வோடு பசிக்கு மட்டுமே சாப்பிடுவது என்று ஆகலாம். இப்படிப் படிப்படியாக மாற வேண்டும் என்று விதியோ கட்டாயமோ இல்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் தட்டுப் பட்டு, முட்டிக் கொண்டு, சுழன்று கொண்டு நின்றும் விடலாம்.

அது போல் தன்னுணர்வோடு எண்ணங்களைத் தேர்வு செய்வதும் அவ்விதம் தேர்வு செய்த எண்ணங்களை வலிமைப் படுத்தவும் வாழ்வாக்கவும் தன்னுணர்வோடு, தன் உணர்வோடு ஒத்த‌ இனம் தேடிக் கண்டு உறவு கொள்வதும் முன்னேற்றத்தின், முதிர்ச்சியின் அறிகுறி.

திருக்குறளில் அதிகாரம் 45 பெரியாரைத் துணைக் கோடல், 46 சிற்றினம் சேராமை, 47 தெரிந்து செயல் வகை.

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல் (462) எனத் திருவள்ளுவர் இனத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லியுள்ளார். மேலும் நட்பியலில் வரும் பல அதிகாரங்களும் குறள்களும் இனத்தைக் குறித்து உள்ளன. அதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் திருக்குறளில் நட்பு/இனம் என்ற தலைப்பில்/பொருளில் தான் அதிகமான அதிகாரங்கள், குறள்கள் உள்ளன.

முக்கியமாகச் சிற்றினம் சேராமை அதிகாரத்தில் முதல் குறளைத் தவிர மற்ற ஒன்பது குறள்களும் நல்லினத்தின் சிறப்பைக் கூறுவனவே. அந்த அதிகாரத்திற்குச் 'சிற்றினம் சேராமை' என்று பெயர் இருப்பது எதிர்மறையாக இருக்கின்றது. 'நல்லினமுடைமை' என்று உடைமை அதிகாரங்களுள் ஒன்றாகப் பெயரிட்டு இருக்கலாம். அவ்வளவு முக்கியமானதாகும். சிற்றினம் சேராமை குறள்கள் பத்தும் கீழே பின் குறிப்பில் கொடுக்கப் பட்டுள்ளன.

[திருவள்ளுவர் 'உடைமை' (ஒருவர் தன்னுடைய உடைமைகளாகக் கொள்ள வேண்டியவை) என்று குறிப்பிட்ட குணங்கள்:

அறத்துப்பாலில்


8 அன்புடைமை
13 அடக்கமுடைமை
14 ஒழுக்கமுடைமை
16 பொறையுடைமை (பொறுமை)
25 அருளுடைமை


பொருட்பாலில்

43 அறிவுடைமை
60 ஊக்க‌முடைமை
62 ஆள்வினைஉடைமை
100 ப‌ண்புடைமை
101 நாணுடைமை]


அதிலும் குறள்
'மனத்து உளது போல் காட்டி ஒருவற்கு
இனத்து உளது ஆகும் அறிவு' (454) மிகவும் ஆழமானதாகும். அறிவு நம் மனத்தில் (மூளையில்) நம் தனியுடைமையாக இருப்பது போல் தோன்றும் (காட்டி). ஆனால் உண்மையில் அஃது இனத்தில் (collective consciousness/mind/awareness...) தான் உள்ளது.

இக்குறளுக்குச் சுத்தானந்த பாரதியாரின் மொழி பெயர்ப்பு பிரமாதம்!
Wisdom seems to come from mind
But it truly flows from the kind.

கணிதத்தில் ஒரு தேற்றத்தின் (theorem) மறுதலை எப்படி உண்மையாகுமோ அது போல் 

'மனதுளது போல் காட்டி ஒருவற்கு
இனதுளது ஆகும் வெளிறு' (புதுக்குறள்: சரியார்) என்பதும் நடப்பாகும்.
Ignorance may appear personal
When it really is social [மொழி பெயர்ப்பு: தொல்லானந்தா - அதாவது தொல்லையும் (துன்பமும்) ஆனந்தமும் (இன்பமும்) ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை வலியுறுத்த‌ வந்த மகான்!!!]

வெளிறு என்றால் என்ன? அதையும் ஒரு குறள் மூலம் அறிவோம்.

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு (503)
Though deep scholars of stainless sense
Rare is freedom from ignorance.

வெளிறு என்றால் அறியாமை. அறிவு மட்டுமன்று அறியாமையும் 'இன'த்தில் தான் உள்ளது. நம்முடையது என்று எண்ணி 'அறிவால்' செருக்கோ, 'அறியாமையால்' உள்ளக் குறுக்கமோ அடையத் தேவையில்லை. அறிவு நம்முடையது இல்லை என்றால் அறியாமை மட்டும் எப்படி நம்முடையாதாகும்? வெற்றி, கூட்டு முயற்சி என்றால் தோல்வியும் கூட்டு முயற்சியாலே ஆகும் இல்லையா?

என்றாலும் வள்ளுவர் இனத்தை வலியுறுத்தும் போது மனதைப் புறக்கணித்து விடாமல் அதையும் சமமாக உயர்த்திப் பிடித்துள்ளதை ஒவ்வொரு குறளிலும் காணலாம். ஏனெனில் இனம் என்று எதுவும் தனியாக இல்லை (மரங்கள் உண்டு. காடு இல்லை.). மனங்களின் தொகுப்பே இனம். எனினும் மனத்தில் இல்லை. இனத்தில் தான் உள்ளது. திருவள்ளுவர் இப்படியும் போக விடவில்லை. அப்படியும் போக விடவில்லை. ஒரு பக்கம் சாயாதே என்கின்றார். ஒன்றை மிகுத்து ஒன்றைப் புறக்கணிக்காதே என்று சுட்டுகின்றார்.

இதை நானே எழுதினேன் என்றாலும் தவறு (மண்டபத்தில் எவனாவது எழுதிக் கொடுத்ததை வாங்கி வந்தேன் என்றாலும் தவறு!). எழுதியதில் எனக்குப் பங்கே இல்லை என்றாலும் தவறு. எனில் 'நான்' எங்கே இருக்கிறது? எங்கும் இல்லை. எங்கும் இருக்கிறது. நான் தனியாகவும் இருக்கிறது. அதே சமயம் இனத்தில் (இறையில்) கரைந்து காணாமலும் போய் விடுகிறது. (This may sound like quantum mechanics. An electron passes through both holes simultaneously; proved many times in lab experiments).

சரி சரி, நேரம் ஆயிற்று.
இன்றைக்குப் போதுமே இவ்வுளறல், ஏக்கமேன்
என்றைக்கும் ஓதுமே ஊம் (புதுக்குறள்: சரியார்)

[உண்மையை ஓதினால் ஓம். உளறைலை ஓதினால் ஊம்.]

46 சிற்றினம் சேராமை - Avoiding mean company
(சுத்தானந்த பாரதியாரின் ஆங்கில மொழி பெயர்ப்பு)

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும் (451)
The ignoble the noble fear
The mean hold them as kinsmen dear.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு (452)
With soil changes water's taste
With mates changes the mental state.

ம‌ன‌த்தானாம் மாந்த‌ர்க் குண‌ர்ச்சி இன‌த்தான‌ம்
இன்னான் என‌ப்ப‌டுஞ் சொல் (453)
Wisdom depends upon the mind
The worth of man upon his friend.

ம‌ன‌த்துள‌து போல் காட்டி ஒருவ‌ற்கு
இன‌த்துள‌ தாகும் அறிவு (454)
Wisdom seems to come from mind
But it truly flows from the kind.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இர‌ண்டும்
இன‌ந்தூய்மை தூவா வ‌ரும் (455)
Purity of the thought and deed
Comes from good company indeed.

ம‌ன‌ந்தூயார்க்கு எச்ச‌ம் ந‌ன்றாகும் இன‌ந்தூயார்க்கு
இல்லை நன்றாக‌ வினை (456)
Pure-hearted get good progeny
Pure friendship acts with victory.

ம‌ன‌ந‌ல‌ம் ம‌ன்னுயிர்க்கு ஆக்க‌ம் இன‌ந‌ல‌ம்
எல்லாப் புக‌ழும் த‌ரும் (457)
Goodness of mind increases gain
Good friendship fosters fame again.

ம‌ன‌ந‌ல‌ம் ந‌ன்குடைய‌ர் ஆயினும் சான்றோர்க்கு
இன‌ந‌ல‌ம் ஏமாப்பு உடைத்து (458)
Men of wisdom, though good in mind
In friends of worth a new strength find.

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து (459)
Good mind decides the future bliss
Good company gains strength to this.

நல்லினத்தினூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல் (460)

No help good company exceeds;
The bad to untold anguish leads.

Provider and Waster

2010-12-26

What plants save as vegetables and fruits we steal and eat.
What animals save as flesh and blood (milk) we pilfer and feast.
What earth saved as minerals and oil we mine and waste.
What God provides as time and energy we squander and get lost.
(சரியார் அவ்வப்போது ஆங்கிலத்திலும் உளற ஆரம்பித்து விட்டார்.)

உடனடி உண்மை (Instant Truth)

2009-04-16

உண்மை மிக எளிது. உடனடியாக உணரக் கூடியது. எந்த நூலையும் படிக்க வேண்டிய அவசியமில்லை. எந்தப் பயிற்சியும் செய்யத் தேவையில்லை. அது மிக வெளிப்படையாக உள்ளதால் மடாதிபதிக்குப் புரியாமல் போகலாம், மாடு மேய்ப்பவனுக்குத் தெரிந்து விடலாம்.

(நம்முடைய) அன்றாட அறிவுணர்வு (awareness of every moment) ஒன்றே அவ்வுண்மை. அதைத் தவிர வேறு எதுவும் இருக்கிறது இல்லை என்று சொல்ல முடியாதவை. அவ்வறிவுணர்வு 'நான்' என்று சுடர்விடுகிறது. இந்த 'நான்' தனித்து நிற்காததாகும் (impersonal).

'நான் அடங்கினால் சகலமும் அடங்கும். நான் எழுந்தால் சகலமும் எழும்' - ரமணர்.

இந்த நான், உடன் எழும் காட்சியோடு ஒன்றி 'நான் மனிதன், ஆண், இந்தியன், தமிழன், இன்னது படித்தவன், இன்ன வேலை செய்கிறவன்...' என்று திரைப்படக் கதை, காட்சியோடு ஒன்றுவது போல் ஒன்றி நின்று இன்ப துன்பங்களில் மயங்கி உழல்கிறது.

திரைப்படத்தைப் பார்ப்பவன் கதையோடு ஒன்றும் நேரத்திலும் தான் அதனால் பாதிக்கப்படாத தனித்தவன் என்ற உணர்வு பின்னே இருந்து கொண்டே இருக்கிறது. அதே போல் தனித்திரா 'நான்' எப்போதும் உலகக் காட்சிகள் எதனாலும் பாதிக்கப் படாமல் சுடர் விட்டுக் கொண்டே இருக்கிறது.

எல்லா இடமும் காலமும் (இங்கு, அங்கு, இப்போது, அப்போது) அதன் நிகழ்வுகளும் இக்கணத்தில் அல்லாது வேறு எங்கும் எவ்விடத்தும் இல்லை. அதுவும் 'நான்' அறிவுணர்வு அல்லாது தோன்றுவதில்லை. இது தனக்குத் தானே சான்றாக உள்ள உண்மை.

கனவுகளற்ற‌ ஆழ்ந்த உறக்கத்தில் நான் என்ற கருத்து (ego) அடங்கி வெறும் 'நான்' ஆக மட்டும் இருப்பதால் உலகக் காட்சிகள் (தன் உடல், மனம் உள்பட) தோன்றுவதில்லை. இந்த வாக்கியம் வண்டியைக் குதிரைக்கு முன் கட்டியது போலாகும். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 'நான் அறிவுணர்வு' ஆழ்ந்த உறக்கம் வந்து போவதையும் உலகக் காட்சிகள் வந்து போவதையும் எப்போதும் அறிந்த வண்ணம் உள்ளது.

இது புதிர் போலத் தோன்றும். இன்னும் எளிமையாக்ச் சொன்னால் 'சிந்திப்பது எதுவோ அதைச் சிந்திக்க முடியாது; அறிவது எதுவோ அதை அறிய முடியாது'.

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை (குறள்: 331)

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணப் பிறப்பு (குறள்: 351)

உணர உள்ளது ஒருகணமே

2009-04-16

இக்கணத்தில் தோன்றும் காட்சியைத் தவிர்த்து, கடந்த கண (இறந்த காலம்), வரும் கணக் (எதிர் காலம்) காட்சிகள் அனைத்தும் நினைவுகளே. அவை வேறு எங்கும் இல்லை.

இதைக் கண்ட பின், புரிந்து கொண்ட பின் இக்கணத்தில் தோன்றும் காட்சியும் அப்படிப் பட்ட நினைவுகளே அன்றி வேறு அல்ல என்பது புரியும். அதுவும் புரிந்த பின் இக்கணக் காட்சி (நினைவு) என்பது சென்ற கணம் போன்ற‌ காட்சியையும் வரும் கணம் போன்ற‌ காட்சியையும் உள்ளடக்கிய ஒரே காட்சி (நினைவு) என்பது விளங்கும். இதுவும் விளங்கிய பின் எல்லா நடப்புகளும், நகர்வுகளும் நினைவுக்குள் (காட்சிக்குள்) தோன்றும் மாற்றங்களே என அறியலாம். அப்படியான மாற்றங்களைக் காண்பது காலத்தை உணர்த்துகிறதே (implies time movement) / உருவாக்குகிறதே அன்றி காலம் காட்சிக்கு வெளியேயும் இல்லை; உள்ளேயேயும் இல்லை.

காலமும் மாற்றமும் (time and change) ஒன்றின் இரு பக்கங்கள். மாற்றங்கள் பொய்த் தோற்றமே (ஏனெனில் இக்கணத்தில் தோன்றும் ஒரே காட்சி தான் உள்ளது) என்றால் காலமும் அதுவே. ஆக எதுவும் -பொருள், வினை- (objects, actions) இல்லை. எல்லாம் தோற்றமே, இதை எழுதுவதும் படிப்பதும் ஆனத் தோற்றம் (தோற்றங்கள் அல்ல. தோற்றம்!) உள்பட. இது தான் முடிந்த முடிவான உண்மை. இந்த உண்மையை ஒப்புக் கொள்வதும் மறுப்பதும் இந்த உண்மையின் (தோற்றத்தின்) அடக்கமே. 

இதயம் துடிப்பதை நினைப்பதற்கும் மறப்பதற்கும் இதயம் துடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதயம், நினைப்பது, மறப்பது என்பன எல்லாம் ஒரே காட்சியின் அடக்கமே என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

உணர உள்ளது ஒருகணமே
அக்கணம் உடனடி இக்கணமே
வேறு எக்கணமும் எண்ணமாய்
இக்கணத்தில் தோன்றும் சொப்பனமே
இக்கணத்தில் எல்லாம் நல்விதமே
இலங்குவ தறிவாய் அவ்விதமே

காலையில் பிறந்து ....(சரியார் கும்மி)

2010-12-11


காலையில் பிறந்து
            பகலில் பழகி
      மாலையில் பிரிந்து
            இரவில் இறப்போம்.
வேலையில் வெந்து
            வாழ்வில் நொந்து
      வாலைத் தேடி
            வட்டம் அடிப்போம்.
சாலையில் மேய்ந்து
            சந்திப்பில் குழம்பி
      பாலையில் தொலைந்து
            பயணம் முடிப்போம்
மூலையில் கிடந்து
            மோனத்தில் மூழ்கி
      கனவில் கலைந்து
            காலையில் பிறப்போம்.
                    சரியார்

Saturday, 26 March 2011

கதிரியக்கக் கழிவு காட்டும் அழிவு


2011-03-26


There are arguments for and against nuclear power generation. But there are no differing opinions on nuclear wastes. Everybody agrees that nobody (no country) has any idea how to dispose the nuclear waste safely and securely for 100,000 years it is supposed to take to become safe 'radioactive' material.

The Electricity company I work for is planning to build 4 new nuclear reactors in UK (as part of nuclear power revival in UK and to meet the cut in carbon emission targets of UK to counter the global warming). Just last week (after Japan's disaster) I attended an internal (company's) 'Nuclear Educational Session' in which also, the presenter confirmed that as of now no country knows how to dispose nuclear waste safely and everybody is hoping that we would find a way in the future.


It is like a car with out brakes. We are all jumping excitedly into it and driving crazy at top speed!

"Only two things are infinite, the universe and human stupidity, and I'm not sure about the former."
- Albert Einstein (1879-1955)
On average species last for 2 million years. As a species 'homo' has been around that time and may be we are on the path of our extinction. Our strength (intelligence) has turned to become our weakness. By comparison 'dumb' crocodiles and turtles have been around 300 million years and may survive us.

“The end of the human race will be that it will eventually die of civilization.”

        - Ralph Waldo Emerson quotes (American Poet, Lecturer and Essayist, 1803-1882)

Even if we stop all the nuclear reactors all over the world today, we already have around 250,000 tons of nuclear wastes to safe guard (24 hours, 365 days, with current method, in cooled water tanks) against natural and man made failures/intrusions and disasters for next 100,000 years. 100,000 years is the theoretical limit calculated by European scientists whereas in USA it is 1,000,000 years.


Just yesterday I watched this movie on the net about deep underground (500 meters) storage in hard bedrock being tunneled in Finland to store nuclear wastes which will require no maintenance.


http://www.intoeternitythemovie.com/

Onkalo – the world’s first permanent nuclear waste repository

Onkalo is a Finnish word for hiding place. It is situated at Olkiluoto in Finland - approx. 300 km northwest of Helsinki and it's the world's first attempt at a permanent repository. It is a huge system of underground tunnels hewn out of solid bedrock. Work on the concept behind the facility commenced in 1970s and the repository is expected to be backfilled and decommissioned in the 2100s – more than a century from now. No person working on the facility today will live to see it completed. The Finnish and Swedish Nuclear Authorities are collaborating on the project, and Sweden is planning a similar facility, but has not begun the actual construction of it. (from the above web site)

The documentary can be downloaded from here:


http://topdocumentaryfilms.com/into-eternity/


As usual I am not fond of blaming individuals and/or MNCs or Govts alone. Even though we claim (and delude ourselves) that we want to be free citizens, we actually (in practice) want to be ruled by a benevolent / strong / charming hero of fairy tales. Being free is possible only with being responsible. Being free is hard work - high energy state. Being ruled is easy - low energy state. Current model of life/economy.. is materially high energy and mentally low energy state.

"People demand freedom of speech to make up for the freedom of thought which they avoid."
- Soren Aabye Kierkegaard (1813-1855)
சுமையான சிந்தனை விடுதலையிலிருந்து தப்பிக்க‌ மக்கள் பேச்சு சுதந்திரத்தைக் கோருகிறார்கள்.
“It has become appallingly obvious that our technology has exceeded our humanity.”
    - Albert Einstein (1879-1955)

“We veneer civilization by doing unkind things in a kind way”

    - George Bernard Shaw quotes (Irish literary Critic, Playwright and Essayist. 1925 Nobel Prize for Literature, 1856-1950)

We delude ourselves (our stupidity) with 'progress' mask.

Individually we may be brilliant, selfless - Buddha, Einstein, Christ, Mohammad, Krishna, Gandhi.... but collectively whether we are intelligent, maturing, learning from our mistakes... is questionable and debatable. And unless we make progress collectively, does individual achievements matter? But history repeats which proves we are remaining same in essence.

We have to gradually switch to mentally high energy and materially low energy life view/style/living. Today we don't sing but we listen to singing (CDs, MP3 players...); we don't dance but we watch others dancing; majority don't play but watch others playing (cricket, football...); we don't play instruments, large majority don't grow food, don't live with animals (dogs, cats, cattle...); already we are not having enough time to bring up children (we have of become financiers - bank of dad and mum - rather than parents); we socialize less and watch more TV..... the list goes on and on....materially rich/high/active but mentally poor/low/passive...
We are quantitatively more (7 billions) but  (and because of that) our lives are qualitatively poor.

"Earth has enough for everybody's need but not for everyone's greed"
      - M.K.Gandhi

The above is true materially but not true mentally. It is possible to have mentally rich life with materially less things. Probably that is only way.

Are we ready to be active mentally more (free to think)? Otherwise we will only be radio-wave-activated (remote controlled).


Let us start making small changes now. Use car less. Use less energy. Travel less. Engage with immediate neighbours more. It may not work out from day one. You will be the odd (wo)man out. Many times we will look like an idiot. But do we value the freedom to think? Don't mistake me as preaching. All these applies to me as well and I am telling these to myself mainly. Of course, a few things I am practicing (otherwise I am not eligible to say these) but there are more things to put into practice and continue to practise.

This cannot be brought about by rules and laws. This is a cultural change and can only be done by common people like us. Rules, laws and systems can free us as well as enslave us depending on how alert we are. I am not an anarchist. Govt, rules, laws, police, justice, education systems... all are required but both too little or too much of them are bad.
 
Whatever we consider as the other side is also human nature. So it is not 'us' against 'them'. It is one human nature trying to balance the other human nature. Such an attitude will take the thorn out of the flower/fruit. 

"The highest possible stage in moral culture is when we recognize that we ought to control our thoughts".  - Charles Darwin
நம்முடைய சிந்தனைகளை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று புரிந்து கொள்ளும் நிலை தான் நம் பண்பின் உச்சக் கட்ட வளர்ச்சிப் படியாகும்.

"... As human beings, our greatness lies not so much in being able to remake the World, as in being able to remake ourselves. We must become the change we wish to see in the world...”.  - M.K.Gandhi
மனிதரின் வலிமை, பெருமை புற உலகை மாற்றி அமைப்பதில் இல்லை. நம்மை நாமே மாற்றிக் கொள்வதில் தான் உள்ளது. நாம் புற உலகில் காண விரும்பும் மாற்றத்தை நாம் நமக்குள் அடைய வேண்டும்.

இப்படிச் சொல்வதன் பொருள் தனியாக உட்கார்ந்து தியானம் செய்து கொண்டு ஒதுங்கி வாழ்வது போதும் என்பதன்று. நம் சிந்தனை அடிப்படையில் மாறாமல் செய்யப் படும் செயல் எதிர்பார்க்கும் பயனைத் தராது என்பதே சரியான பொருள் ஆகும்.
“We can't solve problems by using the same kind of thinking we used when we created them.”
      - Albert Einstein (1879-1955)

Friday, 25 March 2011

எத்தனை நாள் நம் காட்சி

2004-01-20 / 2008-04-24

உலகம் முழுதும் இருட்டு
        ஓட்டிடும் கதிர்த் திரட்டு
இலகுவாய் உயிர் எழுச்சி
        எப்படி அந்த நிகழ்ச்சி .....(1)
சூரியக் குடும்பத்தின் பிறப்பு. பூமிக் கோளத்தின் உருவாக்கம். எனினும் பூமி தோன்றிய பின் விரைவாக (பூமியின் வயது 4.5 பில்லியன் ஆண்டுகள். ஆனால் உயிர் கிட்டத்தட்ட 4 பில்லியன் ஆண்டுகளாக உள்ளது.) எப்படிச் சுலபமாக உயிர் தோன்றியது என்பது அறிவியலருக்கும் வியப்பை அளிக்கிறது.

தொண்ணூ றணைய தனிமம்
        தொகுக்க முடியா உருவம்
என்னே இயற்கை மாட்சி
        எத்தனை நாள் நம் காட்சி .....(2)
தனிமங்கள் 90+ தான் உள்ளன. ஆனால் அவற்றால் அமைந்த தோற்றங்கள் (உருவங்கள்) எண்ணில் அடங்கா. இயற்கையின் மாட்சி தான் என்னே! நம் தோற்றமும் மறைவும் அதன் விதிகளுக்கு உட்பட்டது தான். எனவே எத்தனை நாள் மனிதரின் காட்சி இங்கு நடக்கும்?

விண்மீன் கொடுத்த அணுக்கள்
        விரிந்த நமது உலகம்
எண்ணிட முடியா தொலைவு
        எங்கும் வெடிப்பின் அலைவு .....(3)
அணுக்கள் விண்மீன்கள் (stars) என்ற அணு உலையில் வார்த்தெடுக்கப் பட்டவை. அவற்றால் நம் உலகம் விரிந்து பரந்து விளங்குகிறது. கார்ல் சாகன் (Carl Sagan) சொன்னது போல் விண்மீன் துகள் விண்மீன்களைப் பற்றி எண்ணி வியக்கிறது (We are star stuff pondering the stars). எண்ணிப் பார்க்க முடியாத தொலைவு பிரபஞ்சமாக இருப்பினும் எங்கும் ஆதி வெடிப்பின் (big bang) கதிரிய‌க்க அலைவு (cosmic background radiation) காணப்படுகின்றது.

செல்லின் யுகமே மொத்தம்
        சேர்ந்த வளர்ச்சி சொச்சம்
புல்லை உண்டு பிழைப்பு
        நுண்புழுவால் நமது செரிப்பு .....(4)
உயிர் கிட்டதட்ட 3 பில்லியன் ஆண்டுகள் செல் வடிவத்திலேயே இருந்தது. பல செல் உயிரி போன்ற படிப்படி வளர்ச்சி குறுகிய காலத் தோற்றமே. நாம் உண்பது புல் தான் (நெல், கோதுமை போன்றவை புல் வகையே. மேலும் தாவரங்கள் உணவுக் கோபுரத்தில் அடிப்படையாக உள்ளன.) நம் குடலில் இருக்கும் நுண்ணுயிரிகள் (பாக்ட்ரீயாக்கள்) தான் உணவைச் செரிக்க உதவுகின்றன.

மண்ணுக் கில்லை கருணை
        விண்ணுக் கில்லை கொடுமை
எண்ணிப் பார்த்தால் இதனை
        எப்படி எழுந்த தியற்கை .....(5)
கருணையும் கொடுமையும் மண்ணிலும் விண்ணிலும் காணப்படவில்லை. எனினும் அவை இயற்கையின் எழுச்சிதான். எப்படி இவ்வியற்கை அமைந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பரிணாம வளர்ச்சி விதிகளும் மரபணுக்களின் கூட்டுச் செயலும் நம் சிந்தனைக்கும் ஆய்வுக்கும் உரியன.

பொருள் ஈர்ப்பு விசையே
        புடவி தோற்றிய இறையே
அருள் இல்லா இறைக்கு
        அணு ஆற்ற‌ல் துணையே .....(6)
பொருள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை (gravity) தான் இந்தப் புடவி (பிரபஞ்சம்) தோன்றக் காரணம் ஆகும். ஆதலால் அவ்விசையை இறை என்றழைக்கலாம். ஆனால் அஃது அருள் (விருப்பு, வெறுப்பு) இல்லாத இறை. அது மட்டுமே போதாது. அதற்கு அணுக்களின் உள்ளே இயங்கும் ஆற்றல் (strong and weal nuclear forces) துணையாக அமைந்து இவ்வியக்கத்தகு வேறுபாடுகளைத் தோற்றுவித்துள்ளது.

அமுதைப் பொழியும் நிலவு
        அருகில் வந்தால் கூற்றம்
மெதுவாய்த் தள்ளிச் செல்ல‌
        மேவும் உறவு மாற்றம் .....(7)
அழகிய நிலவு எப்படித் தோன்றியது? இன்றைய அளவில் பெரும்பாலோரால் (அறிவியல் அறிஞர்கள்) ஏற்றுக் கொள்ளப் பட்ட கருதுகோள்: பூமியின் மீது செவ்வாய் கிரகம் அளவில் ஆன ஒரு கோள் வந்து மோதிய போது சிதறிய துண்டுகள் ஒன்று சேர்ந்து நிலா உருவாயிற்று. பூமியின் ஈர்ப்பை விட்டுப் போகும் அளவுக்குப் பெரியதாக இல்லாததாலும் பூமியின் மீது விழுந்து விடும் அளவுக்குச் சிறியதாக இல்லாததாலும் அது பூமியைச் சுற்றிக் கொண்டு உள்ளது. என்றாலும் அது மிக மெதுவாகப் பூமியை விட்டு விலகிச் சென்று கொண்டுள்ளது. அது அருகில் வந்தால் பூமியின் தட்பவெப்பங்கள் மாறிப் பெரும் அழிவை விளைவிக்கும். விலகிச் செல்வதாலும் பெரும் மாற்றம் வரும்.

சாய்ந்த பூமி அச்சு
        சாய வைத்த நிலவு
காய்ந்து மாரிப் பருவம்
        காண வைத்த வரவு .....(8)
பூமியின் சுழற்சி அச்சு (23.5 பாகை) சாய்ந்து போக நிலவு தான் (அதன் மோதல்) காரணம். அதனால் தான் காயும் பருவமும் (கோடை) மாரிப் பருவமும் (மழை) பூமியில் அமைந்தன.

விசும்பின் தூசு நாமே
        விண்ணின் மைந்தர் தாமே
துசும் புயிரின் வினையால்
        தோன்றிய உயிர் வளியே .....(9)
விசும்பின் (space) தூசு (dust) நாம். அதனால் நாம் விண்வெளியின் பிள்ளைகள். அதே சமயம் சைனோ பாக்ட்ரீயா (cyno bacteria) என்ற நுண்ணுயிரியின் விளைவால் தான் பூமியின் காற்று மண்டலத்தில் (atmosphere) ஆக்சிசன் என்ற உயிர் வளி அதிகமாகி உயர் உயிரிகள் (தாவரங்கள், விலங்குகள்) தோன்ற வழி வந்தது. அவ்வகையிலும் நாம் அத்துசும்புயிரியின் மைந்தர்கள் தாம்.

விண்ணும் மண்ணும் ஒன்றே
        விளக்கும் அணுக்கள் நன்றே
விண்மீன் ஒளிக் கற்றை
        விரிக்கச் சொல்லும் பற்றை .....(10)
விண்ணிலும் மண்ணிலும் உள்ள ஒற்றுமையை அணுக்களின் தன்மை விளக்கும். விண்மீன்கள், வெளி கிரகங்கள் இவ்வற்றின் கட்டமைப்பு, உள்ளடக்கத்தை அவை பிரதிபலிக்கும் ஒளிக்கற்றை விரித்தால் (spectrum) அக்கிரங்களுக்கும் நமக்கும் உள்ள உறவைக் காட்டும்.

பொங்கும் குழம்பு பூமி
        பொறுக்கு தட்டிய ஓடு
த‌ங்கும் அழிவின் ஆட்சி
        தடுக்க முடியா வீழ்ச்சி .....(11)
பூமி உள்ளே பொங்கும் தீக்குழம்பாக உள்ளது. மேலே காய்ந்த ஓடாக (தீக்காயத்தின் மேல்) நிலம் உள்ளது (plate tectonics). என்றும் அழிவின் ஆட்சி தான் முடிவில். அந்த வீழ்ச்சியை நம்மால் தடுக்க முடியாது.

உயிர்போய் எங்கே முடியும்
        ஓடி எப்படித் தப்பும்
உயிருக் குண்டு உபாயம்
        உனக்கும் எனக்குமே அபாயம் .....(12)
உயிர் தோன்றியது. எனவே எப்படியும் அழியும். எங்கே போய்த் தப்பும் என்று கவலைப் படுகிறோம். 'உயிர்' பிழைத்துக் கொள்ளும். அதற்குப் பல வழிகள் உள்ளன. பூமியின் வரலாற்றில் அது பல முறை நிகழ்ந்துள்ளது (mass extinction). ஆனால் நீயும் நானும் (மனிதர்கள்) இருப்போமா? புரிந்து நடந்து கொள்ளாவிடில் நமக்குத் தான் அபாயம், உயிருக்கன்று. 

பின் (பெரிய) குறிப்பு:

பல ஆண்டுகளாக இலக்கிய வீதி இனியவன் அய்யா என்னை இளைஞர்களுக்கு நம்பிக்கையும் வழிகாட்டுதலும் கொடுக்கும்படியாக எழுதத் தூண்டிக் கொண்டு இருந்தார். என் தாய் மாமா மகன், இளம் வயது முதல் தோழன் இராசாராமும் அவ்வப்போது இதை வலியுறுத்தி வந்தான்.

ஆனால் நமக்குத் தெரிந்த அரைகுறையில் என்னத்தை எழுதுவது என்ற தயக்கமே இருந்து வந்தது. ஒரு வழியாக 2004 இல் 'நம்மை அறிந்தால்' என்ற தலைப்பில் ஒரு நூல் எழுத ஆரம்பித்தேன். கடிதம், கட்டுரை, கவிதை(!), உரையாடல், நாடகம், போட்டி, நகைச்சுவை எனக் கலவையாக எழுத முனைந்து எல்லாம் இணையாக வளர்ந்தன.


'நம்மை அறிந்தால்' என்ற தலைப்பு நம்முடைய அடிப்படை, பூர்வீகம், பரிணாம வளர்ச்சித் தொன்மை இவற்றை எண்ணி வைக்கப் பட்டது. அந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் நம்மை வழிப்படுத்திக் கொள்ள இயலாது. அறிவியலை முதன்மையாகக் கொண்டே அன்றைய சிந்தனைகளின் வேர்கள் இருந்தன என்றாலும் மெய்மையியல் கருத்துகளின் சாயல் கொஞ்சம் இருக்கவும் செய்தது.

அந்நூலுக்காக எழுதப்பட்டதே 'அறிவே செயலே அதுவே' என்ற உரையாடல். அதை ஏற்கனவே உங்களில் பலர் படித்திருக்கலாம். அது மேலெழுந்த வாரியாக ஆன்மீகத்தைக் கிண்டல் செய்வது போல் இருந்தாலும் படிப்பவர் மனதைப் பொறுத்து 'மறைந்து இருந்தே காட்டும் மர்மத்தை' உணரலாம்.

அந்நூலுக்காக அறிவியல் கருத்துகளைக் கொண்டு கவிதை(!) எழுத முனைந்த போது வந்தது தான் 'எத்தனை நாள் நம் காட்சி'. கவிதை 20-01-2004 இல் எழுதப் பட்டது. கவிதை விளக்கமும் இக்குறிப்பும் 24-04-2008 இல் எழுதப் பட்ட

நூல் கால்வாசி எழுதிக் கொண்டிருக்கும் போதே 'நமக்குப் புத்தி போதவில்லை. இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குப் புத்தி கொள்முதல் செய்து விட்டுப் பிறகு எழுதுவோம்' என்று ஒதுக்கி வைக்க நேர்ந்தது.

2005-இன் தொடக்கத்தில் Alexander Technique என்ற body posture exercise கற்றுக் கொண்ட போது நமக்கு நம் உடலின் அன்றாட செயல்களைப் (உட்காருவது, எழுவது, படுப்பது, நடப்பது, நிற்பது...) பற்றிக் கூடச் சரியாகத் தெரியாமல் தப்பும் தவறுமாகச் செய்து கொண்டு வந்ததை உணர்ந்ததும் நூல் நின்று போனதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

2005-இன் மையத்திலிருந்தே ஆன்மீகக் கருத்துகளை ஆய்வு செய்து வந்த போது 'நமக்கு நூல் எழுதத் தகுதியோ, அறிவோ, அனுபவமோ இல்லை' என்று தெளிவாயிற்று. 2006, 2007 களில் அது மேலும் முன்னேறிப் 'புத்தி கொள்முதல் செய்யக் கிளம்பி உள்ள புத்தியும் பறி போனதாக' ஆயிற்று. அதனால் தமிழ் உலகத்தில் அரைகுறை 'அறிவாளி' பிரபலமான எழுத்தாளர் ஆவது ஒன்று குறைந்தது.



இடையிடையே கருத்துகள் பொங்கி வந்தாலும் நண்பர் தென்னை.கணேசன் வேண்டுகோளுக்காக மட்டுமே எழுதப் பட்டது. இப்போதும் 'கூர்த்த அறிவெல்லாம் கொள்ளை கொடுத்த' நிலை தான் என்றாலும் எல்லா(ர்) உளறல்களுடன் இந்த உளறலையும் கடலில் விட்ட சிறுநீராகக் கலப்பதில் தவறில்லை என்று புரிகிறது. எல்லாம் அத(வ)ன் செயல்!

இன்னும் சில குப்பைக் கிளறல்கள் உள்ளன; கூட்டி(க் குறைத்து) வெளியே தள்ளும் வேளை வரும்.

கூர்த்த அறிவு அத்தனையும் கொள்ளை கொடுத்து உன் அருளைப்
பார்த்தவன் நான் என்னை முகம் பாராய் பராபரமே!
              

            - பராபரக் கண்ணி - தாயுமானவர்

Thursday, 24 March 2011

போகிற போக்கிலே பூனைக் குட்டி

2009-05-22

இது என்னங்க 'போகிற போக்கிலே பூனைக் குட்டி'?

அதுவா, பூனைக் குட்டிக்குச் சில அறிவுரைகள் சொல்லத் தான்.

பூனைக் குட்டி நல்லா தானே இருக்குது. அதுக்கு ஒன்னும் அறிவுரை தேவைப் படலயே.

அது தான் பொறுக்கல‌. அது எந்த அறிவுரையும் தேவைப் படாம நிம்மதியா இருக்கு. அப்படி வாழ்வது வாழ்க்கையா என்று சில அறிவுரைகள் சொல்லி அதன் அடிமைத் தூக்கத்தைக் கலைக்கனும்.

நல்ல தொண்டு தான்!

பூனைக் குட்டிப் பத்து

போகிற போக்கிலே பூனைக் குட்டி – நீ
புரிந்து கொள்வாய்ப் பூனைக் குட்டி
சாகிற சாக்கிலே பூனைக் குட்டி - நம்
சட்டை மாறுமே பூனைக் குட்டி    (1)
வாழ்க்கையை வாழ்வதும் புரிந்து கொள்வதும் ஒரே நேரத்தில் நடப்பவை. சாவு என்ற பெயரில் நம் வேடம் மாறும்.

பொல்லா உலகம் பூனைக் குட்டி – கூடிப்
போட்டி போடும் பூனைக் குட்டி
நில்லாப் பொருளைப் பூனைக் குட்டி - நாடி
நிற்கா தலைவோம் பூனைக் குட்டி    (2)
நிலைக்காதவற்றைக் கணக்கின்றிச் சேர்க்கப் போட்டி போட்டுக் கொண்டு உழல்கிறோம்.

விருப்பும் வெறுப்பும் பூனைக் குட்டி – திரை
விளையாட் டல்லவோ பூனைக் குட்டி
கருத்துக் கப்பல் பூனைக் குட்டி - கரை
கடக்க வல்லதோ பூனைக் குட்டி    (3)
விருப்பும் வெறுப்பும் ஒன்றை ஒன்று சார்ந்து விளையாடுகின்றன. கருத்துகளே எல்லாம். அதன் பிடியிலிருந்து விடுபட அஃது உதவாது. அதன் எல்லையை மட்டுமே புரிந்து கொள்ள உதவும்.

அடிமை மிடிமை பூனைக் குட்டி – ஆடும்
ஆட்டம் மாறும் பூனைக் குட்டி
விடிவை வேண்டிப் பூனைக் குட்டி - தேடும்
வேட்கை வீணே பூனைக் குட்டி    (4)
விடுதலை அடிமைத்தனம் என்பன வடிவில் மாறி மாறி வருகின்றன. எனவே விடிவு என்று தேடுவதும் ஒரு வகை அடிமைத் தனமே.

எலியும் புலியும் பூனைக் குட்டி – ஊரில்
என்று முள்ளதே பூனைக் குட்டி
வலிமை மெலிமை பூனைக் குட்டி - பேரில்
வகுத்த‌ வரைவே பூனைக் குட்டி    (5)
வலியோரும் மெலியோரும் எப்போதும் இருப்பர். அஃது இயல்பு. அவை நம் வரையறைகளே.

வாலைப் பிடிக்கப் பூனைக் குட்டி - சுற்றி
வலம் வருவாய்ப் பூனைக் குட்டி
காலைப் பிடிக்கப் பூனைக் குட்டி - நெற்றிக்
கண்முன் திறக்கும் பூனைக் குட்டி    (6)
நம்மைப் புரிந்து கொள்ள முற்படுவது பூனை தன் வாலைப் பிடிக்க முயல்வது போலாகும். நம் அடிப்படையைப் (காலை) புரிந்து கொண்டால் அதுவே (ஞானக்) கண் திறந்ததாகும்.

அறிவும் உணர்வும் பூனைக் குட்டி – வரும்
அடங்கி அடங்கிப் பூனைக் குட்டி
செறிவும் விரிவும் பூனைக் குட்டி - தரும்
சிறப்பு என்றுமே பூனைக் குட்டி    (7)
அறிவும் உணர்வும் மாறி மாறி ஒன்றுக்கு ஒன்று அடங்கி வரும், வர வேண்டும். பகுப்பும் (விரிவு) தொகுப்பும் (செறிவு) ஆய்வில் சிறப்பைத் தருவன.

குதிக்கும் உள்ளம் பூனைக் குட்டி – முடி
கொட்டிட ஒடுங்கும் பூனைக் குட்டி
உதிக்கும் உண்மை பூனைக் குட்டி - அடி
உயர்ந் தொளிரும் பூனைக் குட்டி    (8)
இளம் உள்ள எழுச்சி காலப் போக்கில் அமைதியுறும். அப்போது அடிப்படையான உண்மை உள்ளத்தில் உயர்ந்து ஒளிரும்.

வேகிற வரைக்கும் பூனைக் குட்டி – மனம்
வீழ்ந்து எழுமே பூனைக் குட்டி
ஆகிற தாகிடும் பூனைக் குட்டி - தினம்‌
ஆளுமே அமைதி பூனைக் குட்டி     (9)
உடல் வெந்து போகும் காலம் வரை மனம் ஓயாது அலைந்து திரியும். என்றாலும் ஆவது ஆகும் (நடக்கும்) என்ற அமைதி மனதை ஆளும்.

கலங்கும் மனதைப் பூனைக் குட்டி - உற்றுக்
கண்டிட மறையும் பூனைக் குட்டி
விலங்கும் விடையும் பூனைக் குட்டி - பற்று
விளங்க வெளிதான் பூனைக் குட்டி    (10)
இன்பத்தையும் துன்பத்தையும் உறும் மனதை உற்று ஆய்ந்தால் அஃது இல்லாதொழியும். பந்தம் அதற்கு விடிவு என்பன, 'பற்றினால் எல்லாம்' என்பது விளங்கிடும் போது, வெட்ட வெளிதான் எனத் துலங்கும்.



பூனைக் குட்டிப் பத்து முற்றிற்று.

வாழும் இயக்கம் வழுக்கா இயக்கம்

2010-01-30


10
உலகெங்கும் இது வரை எழுந்த சமுதாய சீர்திருத்த இயக்கங்கள் பின்னடைவே அடைந்துள்ளன. அவை குறுகிய கால அளவில் வேறுபட்ட விழுக்காடுகளில் வெற்றி அடைந்திருந்தாலும் நீண்ட காலத்தில் நீர்த்துப் போய் விட்டன; திரிந்து போய் விட்டன.
20
மக்கள் உரிமைக்கு, விடுதலைக்கு குரல் கொடுத்தவை மக்களை நசுக்குபவையாக மாறி விட்டன. அன்பையும் அமைதியையும் போதிக்கும் மதங்களும் அதன் நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
30
எனவே அவை தந்த பாடங்களைக் கொண்டு, நீண்ட கால அளவில் தொடர்ந்து மக்கள் பெருங் கூட்டம் ஒன்று பட்ட ஆற்றலாக விளங்க இயலாத நடைமுறையைக் கணக்கில் கொண்டு, ஒரு சாத்தியமான, வழுக்கலுக்கு இடம் கொடுக்காத எதிர்ப்பாற்றலைக் கொண்ட ஒரு தமிழ் நாட்டு இயக்கத்திற்கு எவ்வகையான கூறுகள் இருக்க வேண்டும் என்று கீழ்க்கண்டவை, சிந்தனைக்கும் கலந்து பேசுவதற்கும் பரிசோதனை செய்து வளர்த்தெடுப்பதற்கும் முன் வைக்கப்படுகின்றன.
40
இவைபெரியார் மையம் நண்பர்கள் பின்பற்றியவை, பின்பற்ற வேண்டும் என்று திட்டமிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டவை. வாசகர்கள் தங்கள் கருத்துகளைச் சேர்க்க வேண்டுகிறோம்.
50
இச்சமுதாயப் பணி தலைமுறை தலைமுறைக்கும் தொடர வேண்டியது. நம் வாழ்நாளில் முன்னேறி எதிர்பார்க்கும் முடிவுகளைக் கண்டு விட வேண்டும் என்று அவசரப் படக் கூடாது. இதில் தெளிவும் உறுதியும் இருப்பது அவசியம்.
60
நம்முடைய நோக்கம்: தமிழ் மொழி, இன, நாட்டு நலன் குறித்த கோரிக்கைகள், திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் ஓர் ஆரோக்கியமான மதிப்பை (market value) ஏற்படுத்த வேண்டும்.
70
இதை எப்படிச் செய்வது என்று இன்று நமக்குத் தெரியாது (சில யோசனைகளுக்கு மேல்) என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே அனுபவம் உள்ளவர்களையும் ஆராய்ச்சி செய்தோரையும் கலந்து கொள்வதுடன் செயலாளிகள் கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் வளர்த்தெடுத்து தொடர்ந்து பரிசோதனை, ஆய்வுக்கு உட்படுத்திச் செல்ல வேண்டும்.
80
தமிழ்நாட்டு இயக்கங்களும் கட்சிகளும் இம்மதிப்பை வாக்குகள் ஆக்க‌ப் போட்டி போடும் நிலை வர வேண்டுமானால் இம்மதிப்பை உருவாக்கும் அமைப்பு தேர்தல் அரசியலில் பதவிக்கு நிற்கக் கூடாது. எந்தக் கட்சி சார்பும் இருக்கக் கூடாது.
90
குறிப்பிட்ட தலைவர் வழி காட்டுதல், குறிப்பிட்ட இசம் போன்ற பற்று, அடையாளங்களைத் தவிர்க்க வேண்டும். திறந்த மனதுடன் எதிரானவை என்று எண்ணும் கருத்துகளையும் காழ்ப்பின்றி சிந்தித்து, கலந்து பேச வேண்டும்.
100
தமிழர் என்ற ஒரு அடையாளத்தைத் தவிர வேறு அடையாளங்கள், சார்பு தேவையில்லை. எல்லார்க்கும் பொதுவான திருவள்ளுவர், திருக்குறள் போன்ற அடையாளங்கள் கூடத் தேவையில்லை. திருக்குறளாயினும் தேவராம் ஆயினும் பைபிள், குரான், பகவத் கீதை என்றாலும் பயன்படும் கருத்துகளை எங்கிருந்தும் எடுத்துக் கொள்ள வேண்டும். யார் தமிழர் என்பதில் தமிழ் மொழி, இன, நாட்டு நலன் மீது (மற்ற மொழி, இன, நாட்டு வெறுப்பின்றி) அக்கறை கொண்டவர் என்பதும் அந்தந்தக் கிளை நிறுவனம் இயங்கும் பகுதியில் வாழ்ந்து வருபவர் என்பதும் போதுமானதாகும். தமிழில் பேச எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. தமிழ் தாய்மொழியாக வீட்டு மொழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இப்படிச் சொல்வதால் தமிழ் தெரியாத மற்ற மொழி, இனத்தினர் ஆலோசனைகளைப் பெறக் கூடாது என்று பொருள் அன்று. அப்படிப்பட்டவர்களையும் அணுகிப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்கக் கூடாது.
110
இது சமுதாயப் (பொதுநலப்) பணி என்பதை விட முதன்மையாக முன்னணிச் செயலாளிகள் தங்களைச் சீர்திருத்திக் கொள்ளும் (சுயநலப்) பணி என்ற பார்வை அவசியம். இது தீங்கு பயக்கும் 'தொண்டு', 'தியாக', 'தலைமை' மனப்பான்மைகளை வளர்க்காது.
120
இயக்கத்தின் அசையும் சொத்துகளும் (முன்னணி செயலாளிகள்) அசையா சொத்துகளும் பரவலாகத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தனித்து இயங்கும் வண்ணம் வைத்து நடத்த வேண்டும். மைய அதிகாரமும் கிளைகளின் அதிகாரங்களும் ஒன்றை ஒன்று வளப்படுத்தும் விதத்தில் அமைக்கப் பட வேண்டும். மையம் வீழ்ந்தாலும் விலை போய் விட்டாலும் கிளைகள் புதிய மையத்தை அமைத்துக் கொள்ளும் தன்மையில் அவை கருத்து, பொருள் வலிமையில் தனித்தியங்கும் வண்ணம் விளங்க வேண்டும்.
130
இயக்கத்தின் செயலாளிகள் முதலில் தங்கள் தனி வாழ்க்கையை ஒழுங்கு படுத்திக் கொண்டு தங்கள் சொந்தப் பொறுப்பில் இயக்க வேலைகளில் ஈடுபட வேண்டும். யாரும் யாரையும் உயர்வாகவோ தாழ்வாகவோ பேசுவதைத் தவிர்க்க வேண்டும். ஒப்புக் கொண்ட வேலையைச் செய்யத் தவறும் போது கேள்வி கேட்பது சரி. 'கோழை', 'வீரர்' போன்ற பேச்சுகள் தவறு. யாரையும் வற்புறுத்துவதும் கூடாது. வேலையில் பங்கேற்காமல் வெறும் பேச்சு பேசுபவரைப் பகைத்துக் கொள்ளாமல் அவரருக்குரிய இடத்தில் அவரை வைத்து நடத்த வேண்டும். வேலைத் திட்டத்தின் வெற்றி தோல்வியைப் பற்றி அதில் ஈடுபடாதவர் பார்க்கும் பார்வை பல சமயங்களில் உதவும்.
140
இயக்கம் தேர்தலில் நின்று பங்கெடுக்காமல் புறக்கணிக்க வேண்டும். தேர்தலை வெறுத்துப் புறக்கணிக்காமல் யாருக்கு ஆதரவு என்று முடிவு எடுத்துப் பங்கெடுக்க வேண்டும். இதில் ஒவ்வொரு தொகுதியிலும் வெவ்வேறு கட்சி, தனி நபர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அளவுக்குக் கிளை நிறுவனங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.
150
தமிழர் என்ற அடையாளத்தை நடைமுறைச் சாத்தியமாக எல்லாத் துறைகளிலும் வளர்த்தெடுக்க வேண்டும். இதில் கருத்து ஒத்தும் வரும் மற்ற அமைப்புகளுடன் உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். வராத தமிழர்களை, அமைப்புகளைப் பகைத்துக் கொள்ளக் கூடாது.
160
இயக்கத்தின் பொறுப்பில் உள்ள‌ செயலாளிகள் பிற கட்சிகளில் உறுப்பினராக இருக்கலாம். ஆனால் பொறுப்பு வகிப்பதோ, தேர்தலில் போட்டியிடுவதோ கூடாது. அப்படி விரும்பினால் இயக்கத்தின் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். அப்படிச் செல்வோரைப் பழிப்பதோ தூற்றுவதோ கூடாது. அவர்களை (இப்போதோ, வரும் காலத்திலோ) எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றே சிந்திக்க வேண்டும்.
170
இயக்கத்தை மேம்பட்ட தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்க வேண்டும். இணைய தளம், மின்னஞ்சல், கைத்தொலைப் பேசி, காணொளிக் கருத்தரங்கு போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் காலம், பொருள், ஆற்றல் திறனாகப் பயன்படுத்தப் பட வேண்டும். இயக்கத்தின் செயலாளிகள் இத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாளுவதில் நன்கு பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டும்.
180
தீக்குளித்தல், உண்ணா நோன்பு இருத்தல் போன்றவற்றைப் பாராட்டவோ, புகழவோ, ஊக்கமளிக்கவோ செய்யக் கூடாது. இவை காலாவதியாகி விட்டன என்பதை இன்னும் நாம் உணர்ந்து கொள்ளவில்லையா? அப்படி இறந்தவர்களுக்கு நினைவு நாள் கொண்டாடுதல் கூடாது. மக்களிடையே இந்தக் கருத்துக்குப் பெரிய அளவில் ஆதரவு வரும் வரை இதைப் பொது மன்றத்தில் பேசாமல் இருப்பது நல்லது.
190
சிலவற்றை வெளிப்படையாக எதிர்க்க வேண்டும். சிலவற்றை வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும். சிலவற்றை சிலகாலம் வரை வெளிப்படையாக எதிர்க்கவோ ஆதரிக்கவோ கூடாது.
200
மக்கள் ஒரே சீரான தேவையுடையவராக இல்லை. மக்களுடைய தேவைகள் அரசியல், வணிகப் பயன்குழுக்களால் உருவாக்கவும் ஊதவும் திரிக்கவும் உடைக்கவும் படுகின்றன. அதைக் கணக்கில் கொண்டு முதலில் இயக்கச் செயலாளிகள் இத்தகைய பொய்த் தேவைகளுக்கு அடிமையாகாமல் இருப்பது முக்கியம். சமுதாயத்தில் வாழும் போது, குடும்பம், பிள்ளைகள் படிப்பு, பொழுது போக்கு, திருமணம் என்பவனவற்றிற்காக  வளைந்து நெளிந்து கொடுக்காமல் இத்தகைய தேவைகளைப் பிடிவாதமாகத் துறக்க முற்படுவதும் குடும்பம் சுற்றத்தினர் நண்பர்களிடையே வற்புறுத்துவதும் கூடாது. எடுத்துக்காட்டாக உடை என்பது அதற்குள்ள அடிப்படைப் பயனுக்கு அப்பால் எப்படி எல்லாம் பொய்த் தேவைகளாக வளர்ந்துள்ளது என்பதைக் காணலாம். என்றாலும்ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிக்கேற்ப அப்பொய்க்குச் சமுதாயத்தில் இருக்கும் செல்வாக்கைக் கணக்கில் கொண்டு நாமும் அப்படி வேடம் போட்டு நடிக்க வேண்டியுள்ளது. இது தான் உண்மை. இதற்கு அப்பால் எங்கோ என்றோ எட்டப் போவது என்பது இன்றைய அளவில் கொள்கையாக‌ உள்ள உண்மையே. பொய்த் தேவைகளுக்கு அடிமையாகாமலும் பொய்த் தேவைகளைப் புறக்கணித்து 'உலகத்தோடு ஒட்டி ஒழுகத் தெரியாத‌வரா'காமலும் ஓடிக் கொண்டே ஒய்வு கொள்வதும் வாழ்ந்து கொண்டே வழியைத் திருத்துவதும் தான் இன்றைய தேவை.
210
கருத்து வேறுபாட்டால் பகைத்துக் கொள்ளாமல் விலகிக் கொள்வற்கு நல்ல ஆரோக்கியமான வழிமுறை வைத்திருக்க வேண்டும்.
220
இயக்கச் செயலாளிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எழுத்து வடிவில் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்ள வேண்டும். அது போல் பொறுப்புகள் வரையறுக்கப் பட வேண்டும். எழுத்துகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருப்பதும் தீது. எழுதாமல் எதையும் வரையறுக்க முயல்வதும் உதவாது.
230
புகழ் ஆசை, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, கோபம், சலுகை செய்தல் போன்ற குணங்களை நாம் துறந்து விட முடியாது. அவற்றைக் கண்காணிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் பழக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு மாறாக நான் அப்படி இல்லை; அவை என்னைப் பாதிக்காது என்று மனப்பால் குடிக்கக் கூடாது. சளி, காய்ச்சல் போல் இவை நமக்கு வருவது இயல்பானது. சளி, காய்ச்சலுக்குப் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தாலும் தொற்றிக் கொள்கிறது. தொற்றிக் கொண்ட பின் மருத்துவம் செய்து கட்டுப்படுத்தி, குணப்படுத்திக் கொள்கிறோம். எல்லா (கருணை, அன்பு... உள்பட‌) குணங்களுக்கும் எதிர்மறைப் பக்கங்கள் உள்ளன என்பதைப் புரிந்து கொண்டு தற்காப்பும் வந்த பின் மருத்துவமும் மேற்கொள்ள வேண்டும். சமுதாய சீர்திருத்தம் என்பது அகம் புறம் இரண்டு தளங்களிலும் ஒன்றோடு ஒன்று உறவாடி, ஊக்கமளித்து நடக்க வேண்டியதாகும். இரண்டும் முக்கியம்.
240
செயற்குழு ஆலோசனைக் குழு என்று இரண்டு குழுக்கள் வைத்துக் கொள்ளலாம். பெரிய கட்டமைப்புகளும் பொறுப்பு, பதவிகளையும் வளர்த்துக் கொள்ளக் கூடாது. தேவையைப் பொறுத்து ஒவ்வொரு துறைக்கும் (அரசியல், சமயம், உடல்‍‍-மன வளம்...) செயற்குழு ஆலோசனைக் குழு என்று பிரித்துக் கொள்ளலாம்.
250
கலை, பொழுது போக்கு நிகழ்ச்சிகளைத் தவிர்த்து கருத்தரங்கு, மேடைபேச்சுகள் போன்றவற்றில் விசில் அடித்தல், பேச்சின் இடையிடையே கை தட்டுதல் போன்றவற்றை நிறுத்த வேண்டும். பேசுபவர் கருத்து கேட்பவர் கருத்தைக் கவர்ந்தால் அதைக் குறிப்பு எடுத்துக் கொண்டு சிந்தித்துப் பார்க்கும் பழக்கம் வேண்டும். அதைப் பற்றிக் கேள்வி கேட்கும் முனைப்பு வேண்டும். கூச்சல் போட்டு ஆரவாரம் செய்து ஆர்ப்பரிப்பது சிந்திப்பதைக் காட்டவில்லை. நமக்கு பிடித்தால், சரி என்று பட்டால் அது ஏன் என்று கேள்வி எழுப்பும் தன்மை, பண்பு வேண்டும்.
260
சில‌ சொற்கள் பாராட்டு போதும். சில‌ சொற்கள் கண்டிப்பு போதும். அன்றாட வாழ்வில் இயக்கச் செயலாளிகள் அதைக் கடை பிடிக்காத வரை பிறருக்குச் சொல்லும் தகுதி தனக்கு இல்லை என்று தன்னைத் தானே அளந்து கொள்ள வேண்டும்.
270
இயக்கச் செயலாளிகள் தங்களைத் தொடர்ந்து செம்மைப் படுத்திக் கொள்ளவும் வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். இயக்கச் செயலாளிகள் நடைமுறைச் சாத்தியமான மகிழ்வான நிறைவான வாழ்க்கை வாழ்வதே இயக்கத்திற்குப் பெரிய விளம்பரம், ஆழமான வேர்.
280
உடலிலிருந்து கழிவுப் பொருள் நீங்குவது போல் இயக்கத்தின் தன்மைக்கு ஒத்து வாழ இயலாதவர்கள் தாங்களாகவே வெறுப்பின்று வெளியேறும் படி இயக்கம் இயங்க வேண்டும்.
290

300